Skip to main content

Posts

!!வெளியே வா..!!

மகனே மகளே,  உன்னை தேடி நான் வர  போகிறேன் நீ விரும்பும் தோற்றத்தில் இது காலத்தின் கட்டாயம்.  என்னை பார்த்த உடனே ஆனந்தத்தில் அழுவாய் உனது கண்ணிரை நான் சிந்தவிடமாட்டேன்.  என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்..
ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு  வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? 
 !!வெளியே வா..!! 
அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை.  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்.  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.
உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அது போல் எவனது நாவில் சாய்ராம் என்ற உச்சரிப்பு  உயிருடன் கலந்து  எவனது நாவில் வருகிறதோ அப்போதே அவன் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்  நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும்  பரிட்ச்சைதான் நீ படும் வேதனை.
உண…
Recent posts

கூட்டுப்பிரார்த்தனை விபரம்

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில், மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளிலும், கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வியாழக்கிழமைகளிலும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மதியம் அன்னதானம் நடைபெறுவதால், பக்தர்கள் மதிய உணவினை கோயிலில் சாப்பிடலாம். கண்டிகை வரை திரும்பிச்செல்ல டாக்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகளைப் பற்றி விவரமாக தெரிந்து வருவது இன்னும் சிறப்பாக இருக்கும். கீரப்பாக்கம் பாபா ஆலயம் வருவதற்கான வழிகள்: தாம்பரத்திலிருந்து கீரப்பாக்கம் வர பேருந்து எண் 55D உள்ளது. காலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு பேருந்து உள்ளது. பயண தூரம் 17.4 கி.மீ. வண்டலூர் – கேளம்பாக்கம் வழித்தடத்தில் உள்ள கண்டிகைக்கு, தாம்பரத்தில் இருந்து பல பேருந்துகள் உள்ளன. கண்டிகையில் இருந்து கீரப்பாக்கத்திற்க்கு ஆட்டோ மூலம் வரலாம். வாகனங்களில் வருவோர் கண்டிகையில் இருந்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் வழியாக வந்து வலது பக்கம் பார்த்தால் மலையில் பாபா கோயில் தெரியும்.  கூடுவாஞ்சேரியிலிருந்தும் கீரப்பாக்கத்திற்க்கு பேருந்து வசதி உள்ளது. பேருந்து இல…

கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.

குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட,  அவர் பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள், அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.
சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.
சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.

விரும்பிய வேஷத்தை அணிந்து.......

விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும்.


 ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

ஓம் சாயிராம்

பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள்

மகா யோகி பாபா

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்!!!