Showing posts with label சாயி லீலா. Show all posts
Showing posts with label சாயி லீலா. Show all posts

Friday, April 29, 2016

வீணாக சந்தேகப்படாதே!


காகா மகாஜனி நம்பிக்கையே உருவானவர்,  அவரது முதலாளி டக்கர் நம்பிக்கை இல்லாதவர்.  பாபாவை சோதிக்க நினைத்து சீரடிக்கு காகாவுடன்  பயணப்பட்டார். வரும் வழியில் காகா பாபாவுக்கு திராட்சைகளை வாங்கினார். தனது முதலாளியுடன் சீரடி வந்து பாபா தரிசனத்திற்காகக் காத்திருந்தார்.
தர்கட் என்ற பக்தரை சந்தித்த டக்கர்,  “இங்கு ஏதாவது அற்புதங்கள் நிகழ்கின்றனவா? என்று கேட்டார். சாயி தரிசனத்திற்காக வந்திருப்பதாகவும், அற்புதங்கள் நிகழ்கிறதா என பார்ப்பது தன் வேலையல்ல, ஆனால் பிரார்த்தனைகள் இங்கு கேட்கப்படுகின்றன என்று தர்கட் பதில் கூறினார்.
காகா கொண்டுவந்திருந்த திராட்சையில் ஒரு சிலவற்றை பாபா டக்கருக்குக் கொடுத்தார். அவருக்கு திராட்சை பிடிக்காது. அதிலும் கழுவப்படாத திராட்சைகளை சாப்பிடுவது அருவருப்பாக இருந்தது. ஆனால் பாபாவால் தரப்படுகிறதே என்ற எண்ணத்தில், அதை வாங்கி சம்பிரதாயத்திற்காக வாயில் போட்டுக் கொண்டார். அதில் கொட்டைகள் வேறு இருந்தன. அவற்றை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
பாபா ஞானியாக இருந்தால், தனக்கு திராட்சை பிடிக்காது என்ற விக்ஷயம் தெரியாதிருக்குமா? என்ன ஞானி இவர் என்று நினைத்தார். அவர் எதிர்பாராத வகையில் மேலும் சில திராட்சைகளை பாபா கொடுத்து, சாப்பிடச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
அவருக்கு ஆச்சரியம்! இப்போது சாப்பிட்ட திராட்சையில் விதைகளே இல்லை. அவருக்கு பாபா செய்த அற்புதங்கள் புரிந்தன. ஆனால் மேலும் அதை சோதிக்கவும், உறுதிப்படுத்தவும் நினைத்து, பக்கத்தில் இருந்த தர்கட்டிடம், ”எந்த வகை திராட்சையை வைத்திருக்கிறீர்? ” என்று கேட்டார்.
”விதையுள்ள திராட்சை” என்று தர்கட் பதிலளித்தார்.
அப்போதும் டக்கருக்கு பாபாவை சோதிக்க விருப்பம். தன் நம்பிக்கையை வளர்க்க பாபா இந்த அற்புதத்தைச் செய்திருந்தால், அல்லது அவர் உண்மையான ஞானியாக இருந்தால், இந்த திராட்சையை முதலில் காகாவுக்குக் கொடுக்கட்டும்
என நினைத்தார். இந்த எண்ணத்தையும் அறிந்த பாபா, காகாவிடம் தொடங்கி திராட்சை பிறருக்கு விநியோகம் செய்யப்படட்டும்  என ஆணையிட்டார்.
இப்போது டக்கருக்கு பாபாவின் மீதிருந்த நம்பிக்கை அதிகமானது. ஆரத்தி முடிந்து பாபாவின் அனுமதிக்காகச் சென்றார். இவரை காகா பாபாவுக்கு அறிமுகப்படுத்தும்போது, தன்னுடைய எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.
இவர் எப்படி உன் எஜமானராக இருக்கமுடியும்? இவருக்கு வேறு ஒரு எஜமானர் இருக்கிறார் என்று கூறி விட்டு, ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். செல்வம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தன. மன வேதனைகளும் இல்லை. ஆனாலும் தேவையற்ற கவலைகளையும் பாரங்களையும் தன் மீது போட்டுக் கொண்டு, மன அமைதியை இழந்து அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். ஒரு முறை கவலையை இறக்கி வைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது.
ஐயோ பாவம் அவன்!  அவனுக்கு உதவி செய்ய இரக்கம் கொண்டேன். இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் மீது நம்பிக்கையை தயவு செய்து வைப்பாயாக. வீணாகச் சுற்றுவதைக்காட்டிலும் எதன் மீதாவது நம்பிக்கை வைத்து அதைப் பற்றிக்கொள் என்று வழி காட்டினேன் என்று கூறினார்.
இந்த கதை தனக்காக சொல்லப்பட்டது என்றும், பகவானை சோதிக்கக்கூடாது என்றும் டக்கர் புரிந்துகொண்டார்.

Tuesday, December 31, 2013

சாயி லீலை

     
    ஒருமுறை நாசிக்கி­ருந்து, புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு பக்தருமான பாபு ஸாஹேப் துமால் என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே சிர்டீக்கு வந்தார்.

      சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக்கொண்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தார்.

     திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாடவேண்டிய அவசியம் இருந்தது.   அவர் அவ்வாறு திட்டமிட்டுக்கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம், எது உசிதமில்லை என்று பாபாவுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்துவிட்டார்.

       அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் சிர்டீயில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப்போடப்பட்டுத் தாமதமேற்பட்டது.

     துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே சிர்டீயில் தங்கவைக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

      நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்கமுடியாத வயிற்றுவ­லி அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப்போடப்பட்டது. வக்கீல் துமாலைப் பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்டது.

    துமாலுக்கு ஸாயீயின் ஸஹவாஸம் (கூடவசித்தல்) என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமா­ன் கட்சிக்காரருக்கோ கவலையிலி­ருந்து விடுதலை கிடைத்தது. ஸாயீயின்மீது வைத்த விசுவாசத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது.

    பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். அவருடைய வேலையும் திருப்திகரமாக முடிக்கப்பட்டது. இதுவே ஸாயீயின் லீலை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

     இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார்.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

Tuesday, October 29, 2013

நம் கவனம் அவன் மீது



ஹரி கநோபா என்பவர் சாய் லீலைகளைப் பற்றி கேள்விப்பட்டு,
அவற்றை நம்பாமல் சாயியை தாமே நேரில் சென்று சோதிக்க நினைத்தார்.  அதன் பொருட்டு அவர் சில நண்பர்களுடன் மும்பையிலிருந்து  கிளம்பி சீரடி வந்தார். அவர் தலையில் அழகிய ஜரி வேலைப்பாடு செய்த பாகை அணிந்திருந்தார் மற்றும் புத்தம் புதிய பாத அணியும் அணிந்திருந்தார்.
பாபாவை சற்று தொலைவில் கண்டதும் அவரை அருகில் சென்று வணங்க எண்ணிய அவர்,  புதிய பாகையையும் பாத அணியையும் கழற்றி ஓரிடத்தில் வைத்தார். ஆனால் அவர் முழு கவனமும் அவற்றின் மீதே அவருக்கு இருந்தது.
 பாபாவை நமஸ்கரித்து விட்டு திரும்பியவர், அவரது விலை உயர்ந்த பாத அணி தொலைந்திருக்க கண்டு திடுக்கிட்டு, மனம் ஒடிந்து மதியம் உணவு அருந்த அமர்ந்தார்.
அப்போது மராத்திய சிறுவன் ஒருவன் அவரது பாத அணிகளை ஒரு குச்சியில் சொருகியபடி வருவதைக் கண்டார்.
வந்த சிறுவன் நேராக அவரிடம் வந்து "உங்கள் பெயர் ஹரியா? கநோபாவின் மகனா? என்று கேட்க. அதற்க்கு ஆம்என்று ஹரி கநோபா பதில் அளித்ததும்,  அவரிடம் அந்த பாத அணியை அச்சிறுவன் தந்தான்.
எப்படி நீ என் பெயரினை கண்டு பிடித்தாய்? என்று ஹரி அச்சிறுவனிடம் கேட்டார்.
        அதற்கு அவன்,  பாபா அவர்கள் என்னிடம் இந்த காலணியை தெருவில் எடுத்துக் கொண்டு போய் " இங்கு கநோபாவின் மகன் இருக்கிறாரா? ( ஹரி கா பேட்டா ) அவர் ஜரி தலைப்பாகை அணிந்திருப்பார் ( ஜரி கா பேதா ) என்று கூவி, உனக்கு திருப்தி அளித்தால் உரியவரிடம் சேர் " என்று சொன்னதாக கூறினான்.
ஹரி கநோபா "நான் ஜரிகை தலைப்பாகை அணிந்திருந்ததை எல்லோரையும் போல் பாபாவும் பார்த்திருப்பார். ஆனால் நான் கநோபாவின் மகன் என்று எப்படி அறிந்தார்?   எனவே பாபா யாவும் உணர்ந்த , அறிந்த மகான் என்பதில் ஐயமில்லை என்று வியந்தார்.
  இறைவனை வணங்கும்போதும் இறை உருவாகிய குருவை வணங்கும்போதும் நம் கவனம் அவன் மீதுதான் இருத்தல் வேண்டுமே அன்றி நம் மறுமைக்கு உதவாத பொருட்கள் மீது இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி அவன்  மீது அளவற்ற நம்பிக்கை வைத்தல் வேண்டும்.சந்தேகம் என்பதே கூடாது.

  சத்குரு ஸ்ரீ சாயியை நம்பி  வணங்குவோம்.

Saturday, October 19, 2013

சாயி லீலா


                    நாசிக் நகரில் காகாஜி வைத்யா என்பவர் இருந்தார். அவர்
சப்த ஸ்ரிங்கி மாதா ஆலயத்தில் பூசாரியாக  இருப்பவர். ஆயினும் பெரும் மனக்குழப்பத்திலும் அமைதியற்றும் இருந்தார். அன்னையை மனமுருகி வேண்டி நின்றார். அவர் கனவில் அன்னை தோன்றி "நீ பாபாவிடம் செல். மன அமைதி கிட்டும்" என்றார்.

                   பாபா யார்,எங்கிருக்கிறார் என்று அறிவதற்குள் அவரது கனவு கலைந்து விட்டது.எனவே அன்னை த்ரயம்பகேஷ்வர் எனப்படும் சிவனை, பாபா என்று சொல்லி இருப்பார் என அவராக எண்ணி த்ரய்ம்பகேஷ்வரம் சென்று  ருத்ரம் சொல்லல், அபிஷேகம் செய்தல் என்று நாட்களை கடத்தினார். அப்படியும் அவரது  மனம் அமைதி அடையவில்லையே என்று மீண்டும் அன்னையை வேண்டினார்..  அன்னை தோன்றி "நான் த்ர்யம்பகேஸ்வரை சொல்லவில்லை. சாய் சமர்த்தரை சொன்னேன்" என்ற போது,  மீண்டும் சாய் யாரென்று புரியாமல் காகாஜி தவித்தார்.

      ஆனால் சாயியை ஒரு பக்தர் காண விரும்பினால்,சாயியே  அவரைத் தன்னிடத்தே வரச்செய்ய வழியும் அவரே செய்தும் கொடுப்பார். அவர்  நினைத்தால்தான் மரத்தின் இலை கூட அசையுமன்றோ?

                     ஷாமா என்பவர் பாபாவின் பெரும் பக்தர்.  அவர் சிறு வயதில் நோயுற்றபோது அவர் தாயார் சப்த ஸ்ரிங்கி அன்னையிடம் வேண்டுதல் வைத்தார். தன் பிள்ளையை  காப்பாற்றினால் சன்னதிக்கு அழைத்து வருவதாக வேண்டினார்.  சிறிது காலத்திற்குப் பிறகு அன்னையின் மார்பகத்தில் தொந்தரவு ஏற்பட்ட போது .வெள்ளியில் மார்பகம் செய்து போடுவதாக வேண்டினார். ஆனால் வேண்டுதல்களை நிறைவேற்றவே இல்லை. இவைகளை அவர் இறக்கும் தருவாயில் தனது மகனுக்கு சொல்லி, இவைகளை நிறைவேற்ற சொன்னார்.
                    ஆனால் ஷ்யாமா இதை முற்றிலும் மறந்து விட்ட நிலையில்,  ஒரு சோதிடர் இதை நினைவுபடுத்தியதும் ஷ்யாமா பாபாவிடம் சென்று. "நீயே என் தெய்வம். அதனால் இந்த வேண்டுதலை உனக்கே செய்கிறேன் "என்றார்.

                      பாபா மறுத்துவிட்டு அவரை சப்த ஸ்ரிங்கி அன்னைக்கு காணிக்கையை செலுத்த சொல்லிவிட்டார். இவ்வாறு ஷ்யாமா காகாஜி இருக்கும் ஊருக்கே வந்து விட்டார்.. காகாஜி அவர் யாரென்று வினவியபோது,  ஷிரிடியில் இருந்து வந்ததாக சொன்னதோடு பாபாவின் லீலைகளையும் சொன்னார்.
                    இதைக்கேட்ட காகாஜி மகிழ்வுற்று ஷ்யாமாவுடன் ஷிர்டி சென்று சாய் நாதனை தரிசித்ததும் அந்த தரிசன இன்பமே அவரை சாந்தமாக்கிற்றுசில நாட்கள் இருந்து தரிசித்த பின்னர் பாபாவின் ஆசியுடனும் , உதியுடனும் அவர் அமைதியாக ஊர் திரும்பினார்.

                    நீயே எல்லாம் என்ற ஷ்யாமாவை அன்னை சப்த்ஸ்ரின்கியை தரிசிக்க அனுப்பியும் த்ரயம்பகேஸ்வறரை  தரிசித்த காகாஜியை  தன்னிடம் வரவழைத்ததும் அந்த பகவானின் லீலையன்றி வேறேது!
           ஓம் சாயி நமோ நம!
           ஸ்ரீ சாயி நமோ நம்!

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...