Showing posts with label ஸ்ரீ சாயி தரிசனம். Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயி தரிசனம். Show all posts

Friday, May 4, 2018

அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா எடுத்துரைத்தது



நீங்கள் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங் கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது   என்றார் மகான் சீரடி சாய்பாபா..
பசியோடிருக்கும் ஒருவனுக்கு வயிறு நிறை, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் போதும் என்று சொல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்கு மீண்டும் பசிக்கவே செய்யும். பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.
நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.. வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது. அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம். ஆதலால் நண்பர்களே நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணி யாற்றுவோம்.
ஓம் ஸ்ரீசாயிராம்.

Wednesday, May 2, 2018

அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்


ஆலமரத்தின் மீது அமர்ந்து அதன் பழத்தை சாப்பிடும் பறவைகள், அந்த மரத்தின் மீது தான் எச்சமிடும். என் மீது எச்சமாகிவிட்டதே என்று மரம் பறவைகளை விரட்டுவது கிடையாது. அப்படியே, துரோகிகள் நம்மிடம் இருந்துகொண்டே துரோகம் செய்யும்போதும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணி முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஒன்று நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். அல்லது அவர்கள் திருப்தி அடைய வேண்டும். உங்களுக்கு கேடு நினைப்பவர்கள் உங்கள் கர்மாக்களைக் குறைப்பவர்கள். அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள். - 
ஸ்ரீ சாயி தரிசனம்

Friday, April 27, 2018

பொறுமை இழக்காதே!


ஆலமரத்தின் மீது அமர்ந்து அதன் பழத்தை சாப்பிடும் பறவைகள், அந்த மரத்தின் மீதுதான் எச்சமிடும். என் மீது எச்சமாகிவிட்டதே என்று மரம் பறவைகளை விரட்டுவது கிடையாது. அப்படியே, துரோகிகள் நம்மிடம் இருந்து கொண்டே துரோகம் செய்யும் போதும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணி முடிந்ததும் சென்று விடுவார்கள். ஒன்று நீங்கள் அனைத்தையும் இழக்கவேண்டும். அல்லது அவர்கள் திருப்தி அடைய வேண்டும். உங்களுக்கு கேடு நினைப்பவர்கள் உங்கள் கர்மாக்களைக் குறைப்பவர்கள். அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள். 
                                                                                                                          ஸ்ரீ சாயி தரிசனம்

Wednesday, August 10, 2016

பாபா வழி ஆன்மிகம்

நிறைய பேர் பாபா வழி ஆன்மிகம் என்று நுழைந்து அவதிப் படுகிறார்கள். நீங்கள் எப்படி?
(என்.சித்ரா, அம்பாசமுத்திரம்)
பயணி ஒருவன் நகரத்திற்குள் நுழைந்து, வழியில் தென் பட்ட அந்தணர் ஒருவரிடம் பின்வருமாறு விசாரித்தான்.
இந்த நகரத்தில் மிக உயர்ந்தவை எவை?’  எனக் கேட்டான்.
கள் மரங்கள் என்றார் அந்தணர்.
அதிகமாகத் தருபவர் யார்?’ எனக் கேட்டான்.
 பிறரது துணிகளைத் துவைக்கும் சலவைக்காரன்தான் அதிகமாகத் தருபவன். தினமும் காலையிலேயே நகர மக்களின் துணிகளை வாங்கி வெளுத்து, சாயமேற்றி மாலையில் தருகிறான் என்றார்.
நகரத்தில் யார் அதிக புத்திசாலி எனக் கேட்டான் பயணி.
நகரத்திலுள்ள எல்லோருமே பிறரது பணத்தையும்,மனைவிகளையும் திருடுவதில் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றான்.
சரி, இப்படிப்பட்ட நகரத்தில் எப்படி வாழ்கிறீர்கள்?’  எனக் கேட்டான் பயணி.
என்ன செய்வது சாக்கடையில் பிறந்து, சாக்கடையில் வாழ்ந்து சாக்கடையிலேயே இறந்து, சாக்கடையை நச்சாக மாற்றும் புழுவைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
மக்கள் அதிகமாக கள் குடிப்பவர்களாகவும்,  பிறரை ஏமாற்றித் திருடுகிறவர்களாகவும், பிறர் மனை நாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கூறினார்.

எது சிறந்தது?


சத்சங்கம் சிறந்ததா? தவ யோகம் சிறந்ததா?
(ஆர். கார்த்திக், காஞ்சீபுரம்)
ஒருமுறை வசிஷ்டருக்கும், விசுவாமித்திரருக்கும் இடையே தவம் வலிமையுள்ளதா? சத்சங்கம் வலிமை உள்ளதா என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  தீர்த்துக்கொள்ள ஆதிசேக்ஷனை அணுகினார்கள்.
பூமி பாரத்தைத் தாங்கிக் கொண்டு என்னால் எப்படி சிந்திக்கமுடியும்? யாராவது இதைக் கையில் வாங்கிக்கொள்ளுங்கள், சிந்தித்து தீர்ப்பு கூறுகிறேன் என்றார் ஆதிசேக்ஷன்.
பதினாயிரம் ஆண்டு தவ வலிமைகளை தந்து பூமியை கையில் வாங்கி னார் விசுவாமித்திரர். பூமி பாரத்தை அவரால் தாங்கமுடியவில்லை. பூமி ஆடத் தொடங்கியது. அவரது கைகள் நடுங்கின. உடனே வசிஷ்டர், தனது சத்சங்கத்தில் அரை கண நேரத்தின் பலனை அர்ப்பணித்து பூமியை வாங்கி நீண்ட நேரம் கையில் வைத்திருந்தார். நேரம் ஆக ஆக பொறுமை இழந்த விசுவாமித்திரர், இவ்வளவு நேரமாகியும் இன்னும் தீர்ப்பு கூறவில்லையே! எனக் கேட்டார். தீர்ப்பின் முடிவைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார் ஆதிசேக்ஷன்.

Tuesday, August 9, 2016

எனது நாமம் உன்னை கரை சேர்த்து விடும்!

எனது திருநாமத்தை ஆத்மார்த்தமாக ஒரு முறை கூறினால் கிடைக்கும் பலன் அளவுக்கு,  பரிகார பூஜை செய்வதால் பலன் கிடைப்பதில்லை என்பது பலருக்குத் தெரியாது.
பரிகாரம் என்பது ஏதோ ஒரு தோக்ஷ நிவர்த்திற்காகச் செய்யப்படுகிறது, நாம ஜெபமோ எல்லாத் தடைகளையும் நீக்குகிறது. இதை உணராதவர்கள் பணத்தையும் நேரத்தையும் பரிகாரத்திற்காகச் செலவிடுகிறார்கள். ஆனால், நீயோ அவ்வாறு செய்யாமல் எந்த இடத்தில் இருக்கிறாயோ அந்த இடத்தில் இருந்தபடியே எனது நாமத்தை ஆத்மார்த்தமாக உச்சரித்து வா. உனக்குள் மாற்றம் உண்டாகும். உனக்கும் மாற்றம் உண்டாகும்.
பரிகாரத்திற்கும் பக்திக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள். ஓர் அதிகாரியை நீயாகத் தேடிப்போய் சந்திக்க முடியுமா என்றால், சந்திக்க முடியாது.
சிபாரிசின் பேரில் சந்தித்தாலும் ஓரிரு வார்த்தைகளோடு உன்னுடைய சந்திப்பு முடிந்துவிடும். பெருமழை பெய்து உன் வீட்டருகே உள்ள கண்மாய் உடைகிறது என்றால், அந்த அதிகாரி உடனடியாக ஓடி வந்து, உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு, உன்னோடும் பரிவுடன் பேசுவார். உனது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தருவார்.
உனது கண்கள் என்கிற கண்மாய்க் கரை உடைந்து, கண்ணீர் வெள்ளமாய் பெருகும்போது நானும்,  உனக்கு வேண்டிய பிற இறை சக்திகளும் ஓடோடி வந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்வோம். உனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
உனது கண்கள் உடையும் அளவுக்கு கண்ணீர் வரவேண்டும் என்றால், அந்தளவுக்குப் பிரச்சினை தீவிரமாக இருக்கவேண்டும் அல்லது உனக்கு அதிக பக்தியிருக்க வேண்டும். பிரச்சினை இருந்தாலும், இல்லாமல் போனாலும் பக்தியை வளர்த்துக்கொள். எனது லீலைகளை மனதில் நினைத்து, உயர்ந்த நான், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்காக இறங்கி வந்த தியாகத்தை நினைத்துப் பார். அப்போது உன் உள்ளம் உருகும். பக்திப் பெருகும்.
எனக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. எத்தனையோ தோற்றங்களில் நான் அவதரித்து சேவை சாதித்துள்ளேன். உனக்கு எந்தத் திருநாமத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுகிறதோ அந்தத் திருநாமத்தையும், அந்த வடிவத்தையும் மனதில் பதிய வைத்துக்கொள். அப்போது உன் உள்ளம் உருகும்.
உச்சரிக்கும்போதே உள்ளத்தை உருக்குகிற இறை நாமம் பூர்வ புண்ணியத்தின் விளைவாக ஒருவருக்கு வாய்க்கிறது. இந்த ஜென்மத்தில் சாயி என்கிற திரு நாமம் உனக்கு வாய்த்திருக்கிறது. அதனால் இந்தப் பெயரைக்கேட்டதும் உருகுகிறாய். பொருள் தெரியாமல் நாம பாராயணம் செய்வதால் பலன் கிடைக்காது. ஆனாலும் சில நேரங்களில் நான் பல திருநாமங்களைப் பாராயணம் செய்யச் சொல்வேன். உதாரணமாக சாமா வுக்கு நான் அளித்த உபாயம் பற்றி கூறுகிறேன் கேள்.
ஒருமுறை சாமாவுடனும் மற்றவர்களுடனும் நான் எனது தர்பாரில் அமர்ந்திருந்தேன். அப்போது ராம பக்தரான ஒரு ராமதாசி, விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த திருநாமங் களை வாசிப்பதால் வரும் பலனை சாமாவுக்கு அளித்திட வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. உடனடியாக, எனக்கு வயிறு வலிப்பதாகவும், சூரணம் வாங்கிவருமாறும் ராமதாசியிடம் கூறி, அவரை கடைக்கு அனுப்பிவிட்டு, சாமாவிடம் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.
வேடிக்கையாக பக்தர்கள் மத்தியில் சண்டையை மூட்டிவிடுவேன் என நினைத்த சாமா, தனக்கும் ராம தாசிக்கும் இடையே சண்டை மூட்ட பாபா நினைக்கிறார் என எண்ணி, புத்தகத்தை வாங்க மறுத்தார். அதற்கான காரணம் பலவற்றைச் சொன்னார்.
நான் ஒரு பட்டிக்காட்டான், எனக்கு அதிலுள்ள சமஸ்கிருத எழுத்துக்களைப் படிக்கத் தெரியாது, அந்த ராம தாசி ஒரு கோபக்காரன். புத்தகத்தை எடுத்ததாக என்னுடன் சண்டைக்கு வந்துவிடுவான்! என்றார்.
நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதயத்தில் திருநாமத்தை வைத்திருந்தாலே போதும், பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதால், நீ புத்தகத்தை படிக்காமல் மார்போடு அணைத்துக்கொண்டாலே பலன் வந்துவிடும். ஆபத்துக் காலத்தில் அது மிகச்சிறந்த நிவாரணம் தரும் என்றேன்.
இதிலுள்ள திருநாமங்களில் தினம் ஒன்றை பாராயணம் செய்தாலே போதும், உனது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இறைவனே கீழிறங்கி வருவார். உனக்கு நன்மை நடக்கும் எனக் கூறினேன்.
உனது வழியில் என்னை நினைத்துக் கொள். நேரம் கிடைக்கும் போது நாம ஜெபம் செய். உண்மையாகவே எல்லா பாவத்திலிருந்தும் விடு தலையாகவும், நன்மைகளை அடையவும், மனத்தை தூய்மை செய்துகொள்ளவும், சடங்குகள் போன்ற பிற சாதனை முறைகளின்றி என் அருளைப் பெறவும் நாம ஜெபமே எளிய வழி. இதை சாமாவுக்குச்சொன்னதைப்போல உனக்கும் கூறுகிறேன்.
னி வரும் காலம் முழுதும் உனக்கு நன்மை தரும் வகையில் அமைய, ஆத்மார்த்தமான உணர்வோடும், உறுதியோடும், அன்போடும் என் திருநாமத்தை உச்சரிக்கத் துவங்கு. மாற்றம் நிச்சயம் வரும், நான் உனக்காக இறங்கி வருவேன். இது சத்தியமான வார்த்தையாகும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...