கீரப்பாக்கம் பாபா ஆலயம்

2017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.


பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI - 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

Friday, August 18, 2017

பூஜ்ய ஶ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் அனுபவம்....

ஸ்வாமிஜி ஓரிடத்தில் குறிப்பிடுகையில் பின்வருமாறு எழுதுகிறார்.  "நான் சீரடியில் பாபாவின் சமாதியின் முன்பு அமர்ந்துக்கொண்டு, பாபா என்னைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதினேன். பாபா உண்மையிலேயே என் குரு என்றால், அதற்கான அறிகுறிகளை அவர் எனக்குக்காட்டவேண்டும்  என்று தீவிரமாக நினைத்தேன். நேரிடையாக அல்லாவிட்டாலும்,  ஒருவேளை கனவில் கூறுவாரோ என்று எண்ணி, அந்த எண்ணத்தையும் தள்ளிவிட்டேன்.
"பாபா, உனக்காக அற்புதங்கள், உன்னிடம் செய்து காட்டவேண்டும் என்று நினைக்கிறாயா ?" என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அப்பொழுது சமாதி மந்திரில் ஒரு சிட்டுக் குருவி பறந்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். தான்தான் அந்த இடம் முழுவதற்கும் எஜமானர் என்ற எண்ணத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பாபாவின் சமாதியை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.
பாபா என்னைத் தன்னுடையவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அறிகுறியாக, அந்த சிட்டுக்குருவி என் தோள்கள் மீது வந்து அமரவேண்டும்  என்று நினைத்தேன் . என்ன அசட்டுத்தனமான எண்ணம்!!. அந்தச் சிட்டுக்குருவியின் மூலம் பாபா என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
இதோ! அந்தச் சிட்டுக்குருவி என் தோள்களின் மீது வந்து அமர்ந்தது. என் உடல் நடுங்கியது. அதன் பிறகு அது அருகில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பறந்து போய்விட்டது. நான் உணர்ச்சிப்பெருக்கால் திக்குமுக்காடிப் போனேன். நான் பெருமகிழ்ச்சி  பெற்று முழுமையான மனநிறைவைப் பெற்றேன். அந்த மாதிரித்தான் நான் என் குருவைக் கண்டேன் .பாபாவுக்கு இனணயானவர் "பாபாவே தான்".

Thursday, August 17, 2017

அக்கினி குண்டம்

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து உதிஎன்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த உதிமிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

குருஸ்தான்

பாபா தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து,  தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது, குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.                       

Thursday, August 10, 2017

ஷீரடியும் துவாரகாமாயியும்

ஷீரடியும் துவாரகாமாயியும்
*மஹா சமாதி எய்தும்வரை ஸ்ரீ சாயி வாழ்ந்து நடமாடிய ஷீர்டியும், துவாரகாமாயியும் நற்பேற்றுக்குரியவைகள்.
* யாருக்காக அவர் த்தனை தூரம் வந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கப்ட்டவர்கள்.
* முதலில் ஷீர்டி ஒரு குக்கிராமம்தான்.  ஆனால் அவர் தம் தொடர்பின் காரணமாக, பெரும் முக்கியத்துவத்தை எய்திற்று.  ஒரு தீர்த்தமாகவும், புனிதப் பயணத்துக்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது.
* ஷீர்டியின் பெண்மணிகளும் அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  அவர்பால் அவர்கள் கொண்டிருந்த முழுமனதான அன்பும், சிதையாத நம்பிக்கையும் நற்பேற்றுக்குரியது.
*அவர்கள் குளிக்கும்போதும், சோளத்தை அரைக்கும்போதும், பொடி செய்யும்போதும், மற்ற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் பாபாவின் புகழைப் பாடினார்கள்.  அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது.
*ஏனெனில் கேட்போரின், பாடுவோரின் மனங்களில் கொந்தளிப்பை அகற்றி சாந்தப்படுத்தக்கூடிய இனிமையான பாடல்களை அவர்கள் பாடினார்கள்.

                                                ஸ்ரீசாயிசத்சரிதம்   அத்யாயம்-39&50

ஞானிகள் அனைவரும் ஒன்றேஹரிபாவ் கர்ணிக் பாபாவை தரிசனம் பெற்று திரும்புகையில், ஒரு ரூபாய் காணிக்கை அளித்து வெளிவரும்போது, இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தஷிணை கொடுக்க எண்ணினார்.   ஆனால்  சாமா கூறியவாறு  அங்கிருந்து வெளியே சென்றார்
காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார்.  இங்கு நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து,  "எனது ஒரு ரூபாயைக்" கொடு என்றார்.  கர்ணிக் வியப்படைந்தார்.  மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார்.  சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்