Showing posts with label சாயி புத்ரன் பதில்கள். Show all posts
Showing posts with label சாயி புத்ரன் பதில்கள். Show all posts

Friday, July 15, 2016

விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும்



வீட்டுக்கு வரும் விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?
விமலா, திருநெல்வேலி
 
சாயி புத்ரன் பதில்கள்

நாம் எதிர்பாராமல் வந்து, நம்மிடம் உணவும் உபசாரமும் பெறும் விருந்தாளியானவர் நமக்கு அன்னதானம் செய்த பலனைத் தரக்கூடியவராவார். தேடி வந்து நமக்கு நன்மை செய்வதால் அவரையும் தெய்வத்துக்கு இணையாக பாவிக்க வேண்டும்.

Tuesday, July 12, 2016

பாபா மீது பக்தி வர என்ன செய்யலாம்?



என் கணவருக்கு பாபா மீது பக்தி வரமாட்டேன் என்கிறது, என்ன செய்யலாம்?
கே. அமிர்தா, செங்கல்பட்டு
சின்ன வயதில் நீச்சல் தெரியாதவரை கிணற்றில் தள்ளிவிட்டால் கைகால்களை உதைத்து திக்கித்திணறி கரை சேர்வார். இப்படி செய்ததால் தானே நீச்சல் கற்றாய் எனக் கூறலாம்.
கணவருக்கு பக்தி வரவேண்டும் என்றால், முதலில் அவர் மனம் கவரும் வகையில் மனைவி நடந்து கொள்ள வேண்டும். தனக்காக இல்லாமல் போனாலும், மனைவிக்காக அவர் பூஜை செய்ய ஆரம்பிப்பார். நாளடைவில் அவரே சாயிக்கும், மனைவிக்கும் சிறந்த பூசாரி ஆகிவிடுவார்

Sunday, July 10, 2016

அரக்கர் என யாரைச் சொல்கிறார்கள்





அரக்கர் என யாரைச் சொல்கிறார்கள். அரக்கர் இனம் தனியாக இருந்திருந்தால் டைனோசரை  கண்டுபிடித்த அறிவியல், அரக்கரையும் கண்டு பிடித்திருக்குமே!
எம். கோதண்டம், சென்னை - 33

சாயி புத்ரன் பதில்கள்
அரக்கர் இனம் எனத் தனியாக ஒன்றில்லை. நம்மில் அகம்பாவம் கொண்டு தன்னையே எப்போதும் உயர்வாக நினைப்பவர், கர்வம் உள்ளவர், சுயநலக்காரர், துஷ்டர், சுகபோகி, காமாந்தகர், முன்கோபி, அக்கிரமத்தில் அதிக ஈடுபாடுகொண்டவர், கொடூர குணம் படைத்தவர், தன் வழிபாடு, கடவுளைத் தவிர பிறரை ஏற்காதவர் என்ற இந்த அம்சங்களை தன்னிடம் கொண்டுள்ளவரையே அரக்கர் எனக் கூறினார்கள்.

Saturday, July 9, 2016

சாயி பக்தரிடம் ஏன் இந்த முரண்பாடு?



ஒரு பாபா கோயிலுக்குச் சென்றபோது,       அழுக்கு உடையுடன் வந்த ஒருவரை அவரது  ஆடைக்காகவும், குளிக்காமல் வந்தமைக்காகவும் அங்கிருந்தவர்கள் விரட்டினார்கள். இது சரிதானா? இன்னொரு சமயம் பாபா தனக்குக் கோணி தந்ததாகக் கூறிய சாமியார் ஒருவர், குளு குளு ஒட்டலில் அறை எடுத்துத் தரவேண்டும், கொசுக்கடியைத் தாங்கமுடியாது என்று அடம்பிடித்தார். இதுவும் சரியானதுதானா? சாயி பக்தர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
ப்ரவீணா, சென்னை - 92

சாயி புத்ரன் பதில்கள்
உள்ளே அழுக்கை வைத்துக்கொண்டு மனத்தை பக்தியால் சுத்தப்படுத்தி குளிக்காதவர்கள்   இப்படி நடந்துகொள்வது உண்டு. பாபா கூட தொடர்ந்தாற்போல எட்டு நாட்களுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பார், கோணிப்பை ஆசனம் வைத்திருப்பார் என சத்சரித்திரம் கூறுகிறது. அவரையும் வெளியே இவர்கள் அனுப்பி விட்டால் நல்லது.
காசு பணத்திற்காகவும் கவுரவத்திற்காகவும் கோயில் நடத்தினால் இப்படித்தான் நடக்கும். கோணிப்பையுடன் குளுகுளு அறைதான் வேண்டும் என்று கேட்டவரை சாமியார் என்று கூறுகிறீர்கள். சாமியார் அப்படித் தான் இருப்பார். ஆன்மிகவாதிதான் அனைத்தையும் துறப்பார்.

Thursday, July 7, 2016

தவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா?



அந்தக் காலத்தில் விரும்பியதை அடைய தவம் செய்தார்கள். இப்போது அது சாத்தியம் இல்லை என்ற நிலையில், தவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா?
பி.நாராயணன், சென்னை - 76

சாயி புத்ரன் பதில்கள்

ஸ்ரீராமச்சந்திரருக்கு வசிஷ்ட முனிவர் கூறிய உபதேசம்: ஹே ராமா! எல்லா உயிரும் ஒன்று என எண்ணு. எல்லா உயிர்களின் பசியையும் மாற்று; உனது மனதில் இவர் பெரியவர், அவர் சிறியவர் என்ற பேதத்தை அகற்று. கோபத்தைத் தவிர்- இவைகளைப் பின்பற்றினால் அதைவிட பெரும் தவமில்லை. இதையே நான் உபதேசிக்கிறேன் என்றார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...