Friday, January 31, 2014

குணங்களற்ற பிரம்மம்


குணங்களற்ற  பிரம்மம் எப்படி குணங்களோடு கூடிய விஷயமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?

கே.சூரிய நாராயணன், சென்னை – 45.

காரண காரியத்திற்க்காக பரப்பிரம்மம் சத் – சித் - ஆனந்தம் என்கிற சச்சித்தானந்தமாக மாறும்போது, மாயை செயலாற்ற ஆரம்பித்து சத்துவ குணம் , ராஜஸ குணம், தமோ குணம்  ஆகிய குணங்களுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  தமோ குணத்தால் ஜடப்பொருட்களும், ரஜோ குணத்தால் ஜீவராசிகளும், சத்துவ குணத்தால் புத்தியும் தோன்றியது என்பார்கள் ஞானிகள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

நரசிம்ம சுவாமி - தொடர் பாகம் 3

நரசிம்ம சுவாமி சேலத்தில் வாழ்க்கை
     வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து பாடம் கற்பித்தச் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர் . நரசிம்மர் மற்றச் சிறுவரைப் போல அல்லாமல் மிகவும் புத்திசாலியாகவும் , துறுத்துறுப்பானவராகவும் இருந்தார் . பள்ளியில கூறப்பட்ட பாடங்களில் இருந்த அப்பியாசங்களை தானே சோதனை செய்து பார்த்தால் ஒழிய நம்ப மறுத்தார் . நமக்குத் தெரியாத , புரியாத , நம் அறிவுக்கு அப்பாற்பட்டதை தெரிந்து கொள்ள முயன்றார் . உலக நிகழ்வுகளை படிக்கத் துவங்கியவர் மனதை அமைதி இன்மை ஆக்ரமித்தது .
     இயற்கையிலேயே உடல் வலிமை கொண்டிருந்தவர் புதுமையாக எதையேனும் செய்ய நினைத்தார் . தன்னை சுற்றி உள்ள நண்பர்கள் சோம்பேறித்தனமாக , துடிப்பின்றி , எந்த பிரச்சனைக்கும் முடிவு காண முடியாமல் தவித்தபடி இருந்ததைக் கண்டார் . ஆகவே அவர்களுடன் தாமும் சேர்ந்து இருந்தால் எங்கே தாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோமோ என பயந்தார் . மந்தமாக இருப்பது தற்கொலைக்கு சமம் என நினைத்தார் .
     அவருடைய பெற்றோர்களான அங்கச்சியம்மாளும் வெங்கடகிரி ஐயரும் அவரை பக்தி மார்க்கத்தில் வைத்து வளர்த்திருந்தனர் . செல்வந்தர்கள் என்றாலும் தாராள மனம் படைத்தவர்கள் . தம் தோட்டத்தில் விளைந்த தேங்காய் ,மாங்காய் போன்றவற்றை தம் உபயோகத்துக்கென வைத்திருந்தது போக மீதியை நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் , வேலையாட்கள் என அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள் . தம்முடைய வாழ்வில் பின்னாளில் அது குறித்துக் கூறிய நரசிம்மசுவாமி தன்னுடைய தாயாரிடம் இருந்தே ஒருவர் தன வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய சமூக தர்மத்தை தாம் கற்று அறிந்ததாகக் கூறினார் .
     நரசிம்மசுவாமியின் தந்தை பக்தி மார்க்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்ததினால் மாலை வேளைகளில் நண்பர்கள் , அக்கம்பக்கத்தினர் வேலையாட்கள் என அனைவரையும் அழைத்து ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி சொற்பொழிவு ஆற்றுவார் . அது போல பண்டிகை நாட்களிலும் சாதுக்கள் , சன்னியாசிகளை வீட்டிற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றுமாறுக் கூறுவார் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து எடுத்த காட்சிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார் .
     அதனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த நரசிம்மசுவாமிக்கும் சாதுக்கள் , சன்னியாசிகளின் மீது தன்னை அறியாமலேயே ஒரு ஈடுபாடு ஏற்பட்டது . அனைவரும் அந்த சாதுக்கள் , சன்னியாசிகளுக்குக் கொடுத்த மரியாதையை கண்டவருக்கு தாமும் அவர்களைப் போல சாதுவாக , சன்னியாசியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
     நரசிம்மசுவாமியின் தந்தை மூட நம்பிக்கைகளைக் கொண்டவர் அல்ல.  தம் மதத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களையும் தம் வீட்டில் நடைபெற்ற பஜனைகளில் , பூஜைகளில் கலந்துக்கொள்ள அழைப்பதில் பாகுபாடே காட்டவில்லை . அது குறித்து பின்னர் நரசிம்மசுவாமி கூறிய பொழுது தம்முடைய வாழ்வில் தூய்மையான வாழ்வை கடைப்பிடித்தத்தின் காரணம் தம்முடைய தந்தையிடம் இருந்து அவற்றைக் கற்று அறிந்ததுதான் என்றார் .
      நரசிம்மசுவாமி வாழ்க்கை முறையை வடிவமைத்ததில் அவருடைய தாயாரின் பங்கு மிகவும் அதிகம் . தன்னுடைய மகன் பக்தி மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடல்களை பாடிக் காட்டுவார் . ஊரில் எந்த சாதுக்கள் , சன்னியாசிகள் வந்தாலும் அவர்களை தம் வீட்டிற்க்கு அழைத்து விருந்து உபசாரம் செய்வதை நரசிம்மசுவாமியின் பெற்றோர்கள் ஒரு நியமமாகவே வைத்து இருந்தனர் . சிருங்கேரி சுவாமிகளும் காரைக்காலில் இருந்த சுரக்காய் சுவாமிகளும் நரசிம்மசுவாமியின் மனதில் பெரும் இடத்தை பிடித்து இருந்தனர் . ஆதி சங்கராச்சாரியாரின் அவதாரமாகக் கருதப்பட்ட சிருங்கேரி சுவாமிகளிடம் சிறு வயதில் அவர் சென்று இருந்த பொழுது ஸ்வாமிகள் நரசிம்மசுவாமி கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தாராம் . அதன் பின் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்மபாரதி அங்கிருந்து சென்று விட்டார் . அப்போதுதான் அந்த சிருங்கேரி ஸ்வாமிகள் தரையில் தம் பாதங்கள் படாமல் வேக வேகமாகச் செல்வதை நரசிம்மசுவாமி கவனித்தார் . அவரை தாம் சிறு வயதில் சந்தித்த பொழுது அவர் நேருக்கு நேர் பார்த்த பார்வையில் இருந்த காந்த சக்தியை தம் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாகக் கருதியதாகவும் அதை தம்மால் மறக்கவே முடியாது எனவும் நரசிம்மசுவாமி கூறினார் .
     1882 ஆம் ஆண்டில் அவருக்கு பூணூல் போடப்பட்டது . காயத்ரி மந்திரத்தை தந்தை வெங்கடகிரி ஓத , வீட்டு வைதீகர் சந்தியாவந்தனத்தைக் கற்றுக் கொடுத்தார் . தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்துகொண்டும் வேத பாடசாலையில் ருத்ரம் , சமகம் , ஸ்ரீசூக்தம் போன்றவற்றையும் கற்று அறிந்தார் . பக்கத்து வீட்டில் இருந்த அலமேலு என்ற பெண்மணி அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்தார் .
     நரசிம்மசுவாமியுடைய தாயார் தினமும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிய பின்னால் , பசுவுக்கு சிறிது உணவு தந்தபின்னரே உணவு அருந்துமாறு அவரிடம் கூறி இருந்தாள். அதற்குக் காரணம் கேட்டபொழுது , மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாம் உணவு அருந்துவது பாவம் என்றாளாம் அங்கச்சியமாள் தினமும் ஏழைகளுக்கும் தானம் செய்வது உண்டு .
     அப்படி ஒரு நாள் ஒருவருக்கு பிச்சை போட்டதை,  நரசிம்மர் கண்டித்தார் . அநத ஆள் அதற்குத் தகுதியானவன் அல்ல என அவர் கூறியபோது , அவருடைய தாயார் அவரிடம் , நரசிம்மா, தானம் கேட்டு வருபவன் தகுதியானவனா, இல்லை தகுதி இல்லாதவனா எனத் தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை . தானம் கேட்டு வரும் எவருமே கடவுளின் அவதாரமே , ஆகவே அவர்களுக்கு தானம் தருவது நமது கடமை என்றாளாம் .
     அது போலவே சமூகத்தினால் கீழ் ஜாதியினர் , தீண்டப்படாதவர் என ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய தாயார் உதவி வந்தாள் . அது குறித்து பின்னர் கூறிய நரசிம்மசுவாமி தம்மிடம் உள்ளவற்றை கொடுப்பவரே கடவுள்.  அதைச் செய்யாமல் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் பேய்களுக்கு சமம் என்றார் . தனது தாயார் அங்கச்சியம்மாள் கடைப்பிடித்து வந்த அந்தக் கொள்கையே கர்மயோகம் என்றார் . மனித ஜீவன்களை சிவபெருமானாகக் கருதி அதை தம்முடைய வாழ்விலும் கடை பிடிப்பவர் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் . அவர்களே புனிதமானவர்கள் என்ற தத்துவார்த்தமான உண்மையையும் புரிந்து கொண்டார் .
     அக்கம்பக்கத்தினர் உதவி கேட்டு வந்த பொழுதெல்லாம் உதவ அவருடைய தாயார் தயங்கியதே இல்லை . ஒருமுறை அடுத்த வீட்டில் இருந்தவள் சுகம் இன்றி இருந்த போது தம் வீட்டில் சமையலை முடித்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் பொய் சமைத்து கொடுத்தவளிடம் நரசிம்மர் அம்மா நீ சுயநலம் பிடித்தவளாக இருக்கின்றாயே . முதலில் அவளுக்கு சமைத்துப் போட்டுவிட்டு வந்து அல்லவா  நம் வீட்டில் சமைக்க வேண்டும் என்ற பொழுது அவருடைய தாயார் கூறினாராம் , நான் அப்படிச் செய்து இருந்தால் அவர்கள் சாப்பிடப் போகும் முன், அந்தச் சமையல் ஆறிப் போய்விடாதா ? ”. அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழப் பதிந்தன .
     அப்படிப்பட்ட விசாலமான மனது கொண்ட தாயார் அவருக்கு குருவாக இருந்தாள் . பிற்காலத்தில் நரசிம்மசுவாமி தன்னைப் பற்றி அதிகம் கூறிக் கொண்டது இல்லை . மாறாக தம்முடைய தாய் தந்தையின் வாழ்க்கை நெறியும் தத்துவமும் தம்மை நல்ல முறையிலான வாழ்கையை அமைத்துக் கொள்ள எப்படி எல்லாம் உதவின என்பதை அடிக்கடி கூறுவது உண்டு . சேலத்தில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவர் மேல் படிப்பு படிக்க சென்னைக்குச் சென்றார் .

………தொடரும்

நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 1
நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 2

நன்றி:

http://shirdisaibabatamilstories.blogspot.in


Thursday, January 30, 2014

பிரார்த்தனையின் சக்தி


பிரார்த்தனையின் சக்தி பற்றிக் கூறுங்கள்    - கே காந்திமதி, கோவை

இறைவனிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்வதுதான் உண்மையான பிரார்த்தனை.  நம்பிக்கை என்பது ஒரு உண்மையான சக்தியை, அதனுடைய கருணையை அறிந்து கொள்வதாகும்.  உன்னத சக்தி என்பது ஒரு பக்தனைப் பொறுத்தவரை மிகவும் அந்தரங்கமான சமாச்சாரம்.

அவன் எத்தனைக்கு எத்தனை நம்பிக்கை வைக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதில் ஆர்வமுடையவனாகிறான்.

அவனுடைய சரணாகதி முழுமையடைகிறது.  பக்தனின் அகந்தை முற்றாக நீங்குகிறது.  எல்லாம் அவன் சித்தம் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறது.


இப்படித் தன்னை ஒப்புவித்துக்கொள்கிற நிலையில் விண்ணப்பம் கிடையாது.  பேரம் கிடையாது.  அது சுயநலத்தை ஒரேயடியாக அழித்துப் போடுகிற காரியமாகும்.

பிரார்த்தனை என்பது விருப்பங்கள் பற்றிய சிந்தனை அல்ல.  அது நமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை மேலே கொண்டு வருவதும், அதன் மூலம் நமக்கு வலிமையளிப்பதும் ஆகும்.  அந்த வலிமை நமது சோம்பலைப் போக்கும்.  தடைகளை அகற்றும். ஆன்மீகப் பாதையில் தென்படும் அத்தனை எதிர்ப்புச் சக்திகளையும் ஓசைப்படாமல் வென்று விடும்.  இதுவே பிரார்த்தனையின் சக்தி

தேவநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் இருந்து

சாயி புத்ரன் பதில்கள்



சாயிதரிசனம் இதழிலிருந்து

கோயில் கட்டலாம் வாருங்கள்!

திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை உருவாக்கி, நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ; அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  - ரத்தின மங்கலம்  - கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றிக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக் கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின் வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி மாணவ ஞான  கணபதி ஆலயமாக இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல் கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ  சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக் கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.
மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை அணுகவும்..



சாயி வரதராஜன்

ஆன்மீக ஞானம்


பாபாவிடம் நான் ஆன்மீக ஞானம் கேட்கிறேன். அவர் அதைத் தாமதப்படுத்துகிறார்.  ஞானத்தைப் பெற வழி சொல்லுங்கள்.

பா.கேசவன்  புலியூர்

ஆன்மீக ஞானம் என்பது வெளியில் இருந்து அறிந்து கொள்வதால் வருவதல்ல.  தன்னைப் பற்றிய சிந்தனையே ஆன்ம ஞானத்தைத் தரும்.  அதை அனுபவமாக்கிக்கொள்ளவேண்டும்.

ஞானத்தை விட தியானமே சிறந்த்து என்று பகவத் கீதை கூறுகிறது. ஞானத்தைப் பெறுவதற்க்கு முன்பு பாபாவை தியானித்துப் பழகுங்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, மனம் ஒன்ற ஒன்ற உங்களுக்கு ஞானம் வந்துவிடும்.  ஆன்மாவை வேண்டுகிறவன் ஆத்ம ஞானம் அடைகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. முயற்சி செய்யுங்கள்


சாயி புத்ரன் பதில்கள்

Wednesday, January 29, 2014

வில்வ மரம்

வீட்டில் வில்வ மரம் நல்லதா?

எங்கள் வீட்டில் பூஜைக்காக விலவ மரம் வைத்து பெரிய மரமாக வளர்ந்துள்ளது.  தேக்கு மரம் ஒன்றும் உள்ளது. வில்வ மரமும் தேக்கு மரமும் வீட்டிலிருப்பது நல்லது இல்லை என்று கூறி வீட்டினை விற்க இயலாமல் தடை ஏற்படுகிறது. இது உண்மையா? எங்கள் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்....

ஏ.பத்மினி வேலூர்

எங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படித்தான் வில்வ மரம் வளர்கிறது என வீட்டை விற்றுவிட்டார்கள்.  அந்த வீட்டின் முகப்பில் ஒரு சிறிய கடை வைத்திருந்தவர் அந்த வீட்டினை வாங்கினார்.  சில காலத்திற்க்குள் கடையும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. வில்வ மரத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தில் மிகப் பெரிய பிளாட் கட்டியுள்ளார்.. அதாவது அந்த அளவிற்க்கு அவருக்கு வசதியும் வந்திருக்கிறது.

ஆகவே, வீட்டை விற்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உங்கள் மகனின் விருப்பப்படி பிளாட் கட்டுங்கள்.  கடனும் அடையும்.  பொருளாதாரமும் மேலோங்கி வளரும்.  ஒரு வேளை கண்டிப்பாக அந்த மரத்தை எடுத்தே ஆகவேண்டும் என்றால் இன்னொரு வில்வக்கன்றை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தபிறகு இதை எடுக்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.  அருகில் உள்ள சிவன் கோயிலில் கேட்டு செயல்படுங்கள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

Tuesday, January 28, 2014

நரசிம்ம சுவாமி - தொடர் பாகம் 2

நரசிம்ம சுவாமி பிறப்பும் இளம் பருவமும்
     தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள பவானி என்ற இடம் வெகு காலமாகவே புனிதத்தலம் என கருதப் பட்டு வந்த இடம் ஆகும். அங்குள்ள சங்கமேஷ்வர் மற்றும் பவானி தேவியை வணங்கி துதிப்பதற்கு நாடு முழுவதும் இருந்தும் பல பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருவதுண்டு. அவர்களின் எண்ணிக்கையோ சொல்லி மாள முடியாது. காவேரி, பவானி மற்றும் குப்தா காமினி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தை திருவேணி சங்கம் என்று கூறுவார்கள்.
     ஸ்ரீவத்ச கோத்திரத்தை சேர்ந்த வெங்கடகிரி ஐயர் மற்றும் அவருடைய மனைவியான அங்கச்சி அம்மாள் என்ற பிராமணத் தம்பதியர் சங்கமேச்வரர் மற்றும் பவானி தேவியை வணங்கி தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி வந்தனர். ஒருமுறை அவர்களைச் சந்தித்த சாது ஒருவர் அவர்களை அங்குள்ள ஷோலங்கர் நகருக்கு சென்று நரசிம்மரை தரிசித்தால் அவர்களது வேண்டுகோள் நிறைவேறும் என்று கூற,  அவர்களும் ஷோலங்கருக்குச் சென்று அங்கு நரசிம்மரைத் துதித்தனர்.
     அவர்களுடைய வேண்டுகோள் பலித்தது. அங்கச்சியம்மாள் கருத்தரித்தாள். 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதியன்று, சிராவண பஞ்சமி தினத்தன்று மாலை வீட்டில் இருந்த மாடுகள் வெளியில் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சேர்ந்த கோதுலி முகூர்த்த வேளையின் பொழுது, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை விசித்திரமான சூழ்நிலையில் பிறந்தது.
     கருத்தரித்து இருந்த அங்கச்சியம்மாள்,  வீட்டின் பின் புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது,  எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, எவருடைய துணையும் இன்றி,  வீட்டின் முற்றத்திலேயே நரசிம்மசுவாமி என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை பிறந்தது.
     தான் பிறக்கும் இடம் வீட்டிற்கு உள்ளே இல்லாமல் அனைவருக்கும் பொதுவான இடத்தில் , பரந்த வெளியில், ஆகாயத்தின் கீழே பிறக்க எண்ணியதின் விளைவே அது. மெல்லிய காற்று இதமாக வீச, பவானி ஆற்றில் சலசலத்து ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர் அற்புதமான ஒலி ஓசை எழுப்ப, அந்த இடமே ஒரு அமைதியான சூழ்நிலையை தந்து கொண்டு இருந்தது.
     பிறந்த குழந்தை நரசிம்மர் தந்த பரிசு என எண்ணிய பெற்றோர்,  அதன் எடைக்கு எடை தங்கமும் வெள்ளியுமாக ஷோலங்கர் ஆலயத்துக்குக் கொடுத்தனர். குழந்தை ராம பிரானின் நட்சத்திரமான கடக ராசி, புனர்வசுவின் நான்காம் பாதத்தில் பிறந்ததினால், அதனுடைய தந்தை அதற்கு ராமநாதன் எனப் பெயர் இட்டார். ஆனால் அங்கச்சி அம்மாள் கேட்டுக்கொண்டதினால் நரசிம்ம பெருமாளின் நினைவாக இருக்கட்டும் என நரசிம்மர் எனப் பெயர் வைத்தார்.
     அப்படிப்பட்ட புனிதமான நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதி சங்கரர், ரமண மகரிஷி, போன்றவர்கள். அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்தவர்கள் அது பிற் காலத்தில் பெரிய மகானாக இருக்கும் என்றனர்.
     பவானி ஆற்றின் பக்கத்தில் பெரிய நிலப் பரப்பில் தேங்காய், மாங்காய் என்று பல மரங்கள் இருந்த தோப்புடன் கூடிய இடத்தில் அவருடைய தந்தையின் வீடு இருந்தது. அவர் பெரிய வழக்கறிஞ்ஞர்.
     காலம் ஓடியது. மிகவும் குறும்புக்காரராகவும், புத்திசாலியுமாகவே நரசிம்மர் வளர்ந்து வந்தார். வீட்டிற்கே ஆசிரியர் வரவழைக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்பட்டன. நரசிம்மர் தனது நண்பர்களை அழைத்து வந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பார். மற்ற சிறுவர்களிடம் வேலையும் வாங்குவார்.
     நரசிம்மர் இயற்கையிலேயே தலைவரைப் போலவே இருந்தார். மற்றவர்களை அடக்கி ஆண்டார். ஆனால் அவர் எவருக்கும் அடங்க மாட்டார். எவருடனும் சண்டைக்குப் போக மாட்டார், ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார். நீதி மறுக்கப்பட்டால் அவரால் அதை ஏற்க முடியாது. அதனாலேயே பல சமயங்களில் அவர் உணர்ச்சி வசப்படுவார். தன்மானமும் தனித்தன்மையையும் கொண்டவராக இருந்ததினால்தான் அவரை எவராலும் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் மற்றவர்களுடன் அதிகம் பழகியதும் இல்லை.
     அவருடைய தாயார் அவருக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததாலும், அவருக்கு தலைக்கனம் ஏற்படவில்லை. எத்தனை வேலை செய்தாலும் முகம் அதே பொலிவுடன் இருந்தது அவருக்கு இயற்க்கை தந்திருந்த பரிசு. சிறுவராக இருந்தாலும் முதிர்ந்த அறிவு கொண்டு இருந்தார்.
     நரசிம்மருக்கு மூன்று வயதான பொழுது அவருடைய தாயாருக்கு இன்னொரு மகன் பிறந்தார். அதற்கு லஷ்மணா எனப் பெயரிட்டனர். ஆனால் விதி விளையாடியது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயதான பொழுது அவனை எவரோ கடத்திச் சென்று, அதன் உடம்பில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அதை கொன்று போட்டுவிட்டுச் சென்று விட்டனர். அது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
     லஷ்மணாவின் மரணத்துக்குப் பின் பவானி நதிக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை நரசிம்மர் கால் தவறி பவானி நதியில் விழுந்துவிட , அதை வயலில் வேலைப் பார்த்து வந்த ஒருவர் காப்பாற்றினார்.
     அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்,  அந்தக் குழந்தை ஒரு கண்டத்தில் இருந்து தப்பி விட்டதினால், எண்பது வயது வரை உயிருடன் இருக்கும் எனவும், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை தந்தார். அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை பிற்காலத்தில் பலரது வாழ்வை நிர்ணயிக்கப் போகும் மனிதராக இருப்பார் என்றும் அதனால் ஒருவேளை அவர் குடும்பத்தை விட்டு விலகி இருக்கவும் கூடும் என்றும் கூறினார். ஏற்கனவே ஒரு குழந்தையை பறி கொடுத்து விட்டதினால் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை.
     அவருடைய தாயாருக்கு அப்போது வயது முப்பத்தி எட்டு ஆயிற்று. அவருடைய பெற்றோர்கள் சங்கமேஷ்வரரிடமும், பவானி தேவியிடமும் தம்முடைய மகன் சன்னியாசியாக மாறிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு, அதற்காக இனி தாம் இருவரும் சன்னியாச வாழ்க்கை வாழ்வதாக சபதம் ஏற்றுக் கொண்டனர்.
அதே நேரம் வெங்கடகிரி ஐயர் ஜோதிடரின் ஆலோசனைப்படி வீட்டை விற்றுவிட்டு அந்த ஊரின் அருகில் இருந்த சேலத்தில் சென்று வசிக்கலானார். அங்கு சென்று தன்னுடைய வக்கீல் தொழிலை தொடர்ந்தார்.

.........தொடரும்

மனிதன் ஏன் இறைவனாக முடிவதில்லை?

சாயிதரிசனம் இதழிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பற்றி புரிந்துக்கொள்கிற மனிதன், ஏன் முழுக்க முழுக்க இறைவனாக முடிவதில்லை?

எஸ்.ஆர்.கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்

நம்முடைய மேதைத்தனம் , சாஸ்திர ஞானம், பிரசங்கம் போன்றவை ஆத்மாவைப் பற்றியும், அதனுடைய இயல்பைப் பற்றியும் நமக்கு நன்றாக போதிப்பதால் நாம் அதைப் பற்றி அறிந்துக்கொள்கிறோம்.  இது ஆத்ம ஞானமல்ல....ஆத்மா பற்றிய அறிவு மட்டுமே....

இந்த அறிவை நடைமுறைப்படுத்துவது தான் ஆத்மஞானம்.  அதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அதைத்தவிர வேறு எண்ணங்கள், ஆசைகள் மனதில் இருக்கக்கூடாது.  பாவ காரியங்களில் ஈடுபடக்கூடாது.  எந்த பந்தத்திலும் சிக்கிக்கொள்ளக்கூடாது. மனதில் எப்போதும் நிரந்தரமான அமைதி இருக்க வேண்டும். சூழல்களில் சிக்கி கவலைக்கு இடம் தரக்கூடாது.  ஒரு செயலைச்செய்தால் அந்த செயலுக்கான பலனில் பற்று வைக்கக் கூடாது, பலனை எதிர்பார்க்கவும் கூடாது.  செய்யக்கூடாதவை என நமது சாஸ்திரங்கள் எவற்றையெல்லாம் தடை செய்கின்றனவோ அவற்றையெல்லாம் விலக்க வேண்டும்.  இதற்கு மேல், பாவச்செயல்களை விலக்கி, குருவின் பாதங்களில் பணிந்து கிடந்து தியானத்தில் மூழ்கிக்கிடக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் ஆத்ம ஞானம் சித்திக்கும்.  அவனே இறைவனாகவும் முடியும்.  நாம் அப்படியிருக்க முடிவதில்லை.  ஒரு நிமிடம் கடவுள் போலிருக்கிறோம்.  மறுமுறை மிருகமாகி விடுகிறோம்.  கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவைதான் மனிதன்

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

Monday, January 27, 2014

கோயில் கட்டலாம் வாருங்கள்!

திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை உருவாக்கி, நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ; அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  - ரத்தின மங்கலம்  - கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றிக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக் கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின் வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி மாணவ ஞான  கணபதி ஆலயமாக இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல் கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ  சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக் கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.

மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை அணுகவும்


சாயி வரதராஜன்

தீர்வு தந்த தலம்

என் பெயர் கீதா.  சென்னை சந்தோஷபுரத்தில் வசிக்கிறேன்.  என் மகன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் மறுத்துவந்தான்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக போகாத கோயில்களே இல்லை,  வேண்டாத தெய்வமும் இல்லை, நாடாத ஜோதிடர் இல்லை, செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம்.  இருப்பினும் மகனின் சம்மதம் மட்டும் கிடைக்கவில்லை.

எல்லாவற்றையும் விட்டு விட்டு சாயிவரதராஜனுடன் சீரடி சென்று வந்தேன்.  அவரது சாயி தரிசனம் புத்தகத்தை படித்த்தினால் எழுந்த உந்துதலினால் 04-07-2013 அன்று புதுப் பெருங்களத்தூர் சீரடி சாயி பிரார்த்தனை மையம் சென்று, மகனுக்கு திருமணம் செய்து வைப்பது பாபாவின் பொறுப்பு என்று மனம் உருகி வேண்டி சீட்டு எழுதி பாபாவின் பாதத்தில் வைத்து வழிபட்டு வந்தேன்.

நான் முற்றிலும் எதிர்பார்க்காத அதிசயம் நிகழ்ந்தது. 07-07-2013 அன்றே எனது மகன் திருமணத்திற்க்கு சம்மதித்து, பெண் பார்த்து உடன் 15-07-2013 அன்று நிச்சயமும் பாபாவின் திருவருளால் நிகழ்ந்தேறிய அற்புத்த்தைக் கண்டேன்.

இதைத் தொடர்ந்து 07-11-2013 வியாழக்கிழமை அன்று என் மகன் திருமணம் நடைபெற்றது. என் மகன், மருமகளுடன் பிரார்த்தனை மையம் வந்து பாபாவிற்க்கு நன்றி தெரிவித்து காணிக்கை செலுத்திவிட்டு வந்தோம்.

இந்த அற்புத்தினை சாயி தரிசன வாசகர்களுக்குத் தெரிவிக்கவும், பெருங்களத்தூர் பாபாவிற்க்கு நன்றி சொல்லவும் நான் கடமைப்பட்டு உள்ளேன்.

திருமதி கீதா
சந்தோஷபுரம் 


சாயிதரிசனம் இதழிலிருந்து

Sunday, January 26, 2014

மாறாத பிரேமை


ஒரு முறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால் , அவர் ஜன்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார்.  மாறாத பிரேமையை அல்லாமல் வேறெதையும் வேண்டாதவர் அவர், நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடி வருகிறார்.  அந்த நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்கு குறுக்கே நிற்கமுடியாது.  சதா சர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்.  அவர் எங்கு எவ்வாறு எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது.

அவரது செயல்கள் புரிந்துக்கொள்ளமுடியாதவை.  பத்துத்திசைகளிலும் வியாபித்திருக்கும் கற்பகத் தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளி வீசுபவர் பாபா.  கற்பனை செய்தும் பார்க்க முடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளிப்பவர்.




சாயிதரிசனம் இதழிலிருந்து

Saturday, January 25, 2014

நரசிம்மசுவாமி - தொடர் பாகம் 1


நரசிம்மசுவாமி

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ சாயிபாபா கோயில் சென்றவர்கள் அனைவர் மனத்திலும் நிறைந்திருப்பவர் நரசிம்மசுவாமி.  சாயி மகிமைகளை நாடெங்கும் ஏன் அகிலமெங்கும் பரப்பியதில் முக்கியமானவர்களில் ஒருவர்.

சாயி சமாதி அடைந்தும் பன்னிரண்டு ஆண்டுகள் வரை அவர் புகழ் மிகப் பெரிய அளவில் பரவவில்லை.  ஏனெனில் சாயியே இப்பணியினை நரசிம்மசுவாமிக்கு ஒதுக்கியிருந்தார் போலும்.       சாதாரணமாக நாமும் பல கடவுளை வழிபடுகிறோம்.  அதற்கு ஒரு பெரிய விலையினை கடவுளிடம் பேரம் பேசுகிறோம். கேட்ட பலன் கிடைக்காவிட்டால் உடனே அடுத்த கடவுள். அங்கும் பேரம்.  ஓட்டம்...ஓட்டம்... அப்படியொரு ஓட்டம்...கடைசியில் நான் எத்தனையோ கடவுளை கும்பிட்டும் பலனில்லை என்று புலம்ப மட்டும் தவறுவது இல்லை.  ஆனால் இந்த மனிதரோ...ஞானம் தேடி புறப்பட்டார்.  மிகப்பெரிய தேடுதல்....குருவைத் தேடினார்..தேடினார்... என்ன ஒரு தேடல்... இனி அதை பார்ப்போமா....

சற்றே குட்டையான உருவம், தோளில் தொங்கிய ஜோல்னா பை இடுப்பில் தூய வேட்டி, வழுக்கைத் தலை, மிடுக்கான நடை இவையே அவர் உருவம். ஜோல்னா பையில் சீரடியில் இருந்து கொண்டு வந்திருந்த விபூதி, அவரே எழுதி இருந்த கை அடக்க சாயி அஷ்டோத்திரமாலை பிரதிகள். போஸ்ட் கார்டு அளவு சாயி பாபா படம். அவைகளையே தம்மிடம் வந்த தமது பக்தர்களுக்கு அவர் கொடுத்த பரிசுகள். 'சாயி பாபா பரிபூரண சித்திரஷ்டு' என்று வாய் முணுமுணுத்தபடியே இருந்தவாறு வாழ்ந்து வந்த அந்த மகான் சாயி பக்தர்களின் மனதில் என்றும் இருப்பவர்.

1940 ஆம் ஆண்டுவரை சாயி பாபா பற்றியோ சீரடி பற்றியோ பலருக்கும் தெரியாது. ஆனால் இன்றோ உலகின் அனைத்து இடங்களிலும், மூலையிலும் முடுக்கிலும் சாயி மன்றங்கள் நிறுவப்பட்டு , சாயி காலட்சேபங்களும்,  சேவைகளும் தொடர்கின்றன .

சாயிபாபாவின் பெயர்களைக் கொண்டு தொழிற்கூடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அந்த நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது என்றால் அதன் காரணம் 1956 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் துவங்கி, அனைத்து இடத்துக்கும் நடைபயணம் மேற்கொண்டு , கிராமம் கிராமமாக பயணம் செய்து சாயி அற்புதம் குறித்து பிரசாரம் செய்து வந்த நரசிம்மசுவாமியின் தொய்வற்ற முயற்சிகள்தான்.


அவர் சிறியதோ இல்லை பெரியதோ என்ற பாகுபாடே இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்தார். ஆகவே நாம் சாயிநாதருக்கு நம் பணிவான வணக்கங்களை தெரிவிப்பதற்கு முன் அவருடைய ஆத்மார்த்தமான சீடரான நரசிம்மசுவாமிக்கும் வணக்கங்களை செலுத்துவது அவசியம். ஆமாம் அந்த நரசிம்மசுவாமி யார், அவருடைய பெற்றோர்கள் யார், இந்த அளவு அவரால் எப்படி சாயிநாதர் பிரச்சாரம் மேற்கொள்ள முடிந்தது என்ற அனைத்துக்கும் விடை காண நான் செய்த முயற்சியே இந்த கதை. 

இனி தொடர்ந்து வரும். படியுங்கள்.

நன்றி:
http://shirdisaibabatamilstories.blogspot.in

Friday, January 24, 2014

நடப்பதெல்லாம் அவன் செயல்


பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபட வேண்டும்.  சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே.

அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிராரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள்.

நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும்.  எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள்.  இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள். 


சாயிதரிசனம் இதழிலிருந்து

Thursday, January 23, 2014

முழுமையான நம்பிக்கை



பாபா நமக்குள்ளிருந்து செயல்படும்போது குதர்க்கமான எண்ணங்கள் நம்முள்ளிருந்து எழலாம்.  அவற்றை அறவே விடுத்து அவரது திருப்பாதங்களை முழுமையாக சரணடைந்து விடுங்கள்.  ஒருமுகப்பட்ட மனத்தில்தான் சாயி சிந்தனை தொடரும்.  இதைத்தான் சாயி நம்மைச் செய்ய வைக்கிறார்.  நம்மால் எடுத்த எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நிறைவேறிவிடும்.

சதா நேரமும் சாயி சாயி என்று நினைப்பீர்கள் என்றால், அவர் உங்களுக்குப் பலவித அனுபவங்களை அளிப்பார்.  அவர் விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார்.  பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார்.  பக்தருக்குத்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள முழுமையான நம்பிக்கை வேண்டும்.


சாயிதரிசனம் இதழிலிருந்து

Wednesday, January 22, 2014

கூப்பிட்டு உதவி செய்வார் பாபா!


பாபா எவர்களுக்கு எல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடம் எல்லாம் பலவிதமான மாறு வேஷங்களில் தோன்றுகிறார்.  கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.  அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.  எவர் இந்த நாட்டிலும், வெளி நாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திக்கொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலவீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.


சாயிதரிசனம் இதழிலிருந்து

Tuesday, January 21, 2014

விசுவாசம்


யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ, அந்த புண்ணியசாலிகளே என்னை அறிந்துக்கொள்கிறார்கள், என்னை வழிபடுகிறார்கள்.  ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களேயானால் நான் என்னுடைய அருளால் ஏழு கடல்களுக்கு அப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்.  எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.


(சத்சரித்திரம் – 13-11-12)

Monday, January 20, 2014

எங்கும் எதிலும் நான்

வீட்டிலோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் எனது வெளிப்பாடுகளே.  அவர்கள் அனைவருக்குள்ளும் நான் உறைகின்றேன்.  பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ, அவை அனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன்.

ஆகவே , உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்காதீர்கள். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகா பாக்கியசாலி.


(சத்சரித்திரம் – 15-71-73)

ஸாயீ மஹானுபாவர்.


பரோபகாரமே உருவெடுத்துவந்த ஸாயீ மற்றவர்களின் நன்மைக்காகக் கடுமையாக உழைத்தார். ஒருபோதும் விரோதபாவத்தையே அறியாத அவர் இடைவிடாது நற்செயல்களிலேயே ஈடுபட்டிருந்தார். 
மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்தி­ருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள். 
பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோகக்ஷேமத்தை, குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான அனுபவத்தை அடையுங்கள். 
 இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாகக் கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும் அடையமுடியாத நிலை; குருகிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்துசேரும்.
             
அவரை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் கர்வத்துடன் வந்தவர்கள், கர்வபங்கமடைந்து தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுகமாக வீடு திரும்பினர். 
 இறையாண்மையால் ஸ்ரீஹரி பூரணமாக நிரம்பியிருப்பதுபோல, வெற்றி, செல்வம், கொடை, ஞானம், சாந்தி, பற்றற்ற நிலை ஆகிய ஆறுகுணங்களால் ஸ்ரீஸாயீ பகவான் நிரம்பியிருந்தார். 
 பிரபஞ்ச உணர்வால் நிரம்பிய ஸாயீ, நாம் அர்ச்சனையோ பூஜையோ பஜனையோ செய்யாமலேயே நமக்கு தரிசனம் அளிப்பது நம்முடைய வானளாவிய பாக்கியமே!

 பக்தியிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான் என்பது வழக்கு. ஆனால், நமக்கோ பக்தி குறைபடுகிறது. ஆயினும்,  இயல்பாகவே தீனர்களிடம் தயை காட்டும் ஸாயீ, மஹானுபாவர்.

Sunday, January 19, 2014

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு!

ஏற்கனவே என்ன நடந்த்தோ, என்ன நடக்கப்போகிறாதோ, அதற்க்கு ஏற்றவாறு வாழ்க்கை நடத்து!  எது பிராப்தம் என்று விதிக்கப்பட்டுள்ளதோ அதை புரிந்து கொண்டு நட! எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு! சஞ்சலத்திற்க்கோ, கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே!


(சத்சரித்திரம் – 13-3)

பாபாவிற்க்கு தட்சணை

ஆரம்பத்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்.
 பக்தரோ, பக்தரல்லாதவரோ, அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ துகாணியோ வைத்தால் அக்காசுக்குப் புகையிலையோ எண்ணெயோ வாங்கிக்கொள்வார்.       அவருக்குப் புகையிலையின்மேல் பிரேமை; பீடியோ அல்லது சிலீமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த ஸேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை.
 பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஆகவே அவர் கையில் சிறிது தட்சணைஎடுத்துக்கொண்டு சென்றார்.
 ஒரு தம்பிடி கொடுக்கப்பட்டால் பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக்கொள்வார். ஆனால், எவராவது இரண்டு பைஸா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக இருந்தது.      சில காலத்திற்குப் பிறகு, பாபாவின் மாஹாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் சிர்டீயில் குழுமியது. சாஸ்திர விதிகளோடுகூடிய பூஜையும் ஆரம்பிக்கப்பட்டது.
 சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் ஸமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.
மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குரு பூஜைக்கும் தட்சணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.
தட்சணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.
 அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்குப் பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே,தட்சணைநிறைந்த செல்வத்தை அளிக்கிறது.
 எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.
 தெய்வபூஜைக்கு தட்சணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போதும்தட்சணைகொடுக்கப்படவேண்டும்.  உலகியல் விவகாரங்களெல்லாம் பணத்தைக் கொடுத்தும் வாங்கியுமே நடக்கின்றன. தங்களுடைய புகழையும் கௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (க­ல்யாணம், கிருஹப் பிரவேசம் போன்றவை)        'ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தட்சணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தட்சணை கொடுக்கக்கூடாது?
 ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.
சிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்õ
 சிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் யானை, பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.
ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே­லி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர்.       சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.
 இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரண மக்களே.தட்சணைஅளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடைய வேண்டுமென்றே பாபா விரும்பினார்.
 ''யாகத்தால், தானத்தால், தவத்தால்' என்னும் தெளிவான சொற்களால் தட்சணை அளிப்பது ஒரு 'ஸாதனை யுக்தி என்று ஆத்மஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் போதனை செய்கிறது.
 அடியவர், உலகியல் நன்மைகளை விரும்பினாலும் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் தம்முடைய சொந்த நலனுக்காவும் தம் குருவுக்கு தட்சணை அளிக்க வேண்டும்.

 கருணாஸாகரமான ஸாயீநாதர், பேராசையால் பீடிக்கப்பட்ட மனித இனத்தை அவர்களுடைய நல்வாழ்வை மனத்திற்கொண்டு, கைகொடுத்துத் தூக்கி விடுதலை செய்கிறார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...