Tuesday, February 28, 2017

ஷீரடி சாயி நாதர் கவசம்மனமுருகி படிப்போர்க்கும்….உள்ளம் தன்னில் வைப்போர்க்கும் …இன்னல்கள் யாவுமின்றி நற்பலன்கள் அனைத்தும் கூடி ஷீரடி சாயி பாபாவின் அருள் எப்பொழுதும் உண்டென்று உணர்த்துமாம.

ஷீரடி நாதனை மனதினுள் இருத்தி
மனதை நாமும் ஒரு நிலைப் படுத்தி
வாழ்க்கை முறையை சரிவர திருத்தி
வேண்டிய யாவையும் அவனிடம் கேட்போம்

உச்சன் தலை முதல் விரல் நுனி வரைக்கும்
ஒவ்வாரு அங்கமும் அவன் இசை பாட
நம்மை மறந்த உலகினில் தவழ
“சாய்”யும் வருவான் நம் உடலுக்குள் நுழைய

துன்பங்கள் யாவையும் ஒரு புறம் தள்ளி
நம் உடம்பில் ஒரு வித தென்றலை வீசி
பரஸ்பரம் அமைதியை நிலவச் செய்து
அவன் வரவை உணர்த்தும் ஒரு வித செயலிது

உயிர்கள் அனைத்திடம் அன்பை செலுத்தி
எல்லோர் இடத்திலும் பாசம் வைத்து 
நல்ல காரியங்கள் நாமும் செய்தால்
நம்முள் பாபா இருப்பதை உணர்வோம்

எங்கும் எதிலும் இருப்பவன் சாயி
பார்க்கும் பொருள்களில் இருப்பவன் சாயி 
உணரும் உணர்வில் இருப்பவன் சாயி
நம் நிழலாய் இருப்பவன் ஷீரடி சாயி

அழைத்த உடனே ஓடியும் வருவான்
என்றும் நம்மை பார்த்துக் கொண்டு இருப்பான்
செய்யும் செய்கையில் ஒளிந்து கொண்டிருப்பான்
அவனே ஷீரடி வாசனாய் இருப்பான்

ஷீரடி மண்ணை தொட்டு வாருங்கள்
அவன் பாதம் தன்னை தொட்டு வணங்குங்கள்
நாமும் அவனுடன் கலந்து விடுவோம்
நம்மை நாமே மறந்து விடுவோம்

அலைபாயும் மனதை அவனிடம் தந்து
மகிழ்ச்சி கடலில் நாமும் மிதந்து
புதுவித தெம்பும் நம்முடன் கலந்து
அவனும் அமர்வான் நம் மனதினில் வந்து

ஷீரடி வாசனின் நாமத்தைச் சொன்னால்
எல்லாச் செய்கையும் நலமாய் முடியும்
அவனை நாமும் மனதால் நினைத்தால்
உடனே வந்து அரவணைத்திடுவான்

அவனே கதி என்று நாமும் இருந்தால் 
வேண்டிய அனைத்தையும் அவனிடம் சொன்னால்
அள்ளிக் கொடுப்பான் நொடியில் வந்து
அவனே எங்கள் சாயி நாதன்

ஜெய ஜெய சாயி
ஓம் ஸ்ரீ சாயி
சற்குரு சாயி
துவாரகா மாயீ

வினைகளை தீர்க்கும் வித்தகன் வருக
குறைகளை கலையும் குருவே வருக
சஞ்சலம் அகற்றிட சீக்கிரம் வருக
எங்கள் பாபா வருக வருக

பாவங்கள் யாவும் பனிபோல் மறையும்
நன்மைகள் எல்லாம் நம்மை நாடும்
எல்லாம் வல்லவன் அவன் பெயர் சொன்னால்
நம்மைக் காத்து நல்லது செய்வான்

ஒருமுறை அவனை நாமும் நினைத்தால்
நம் இல்லம் தேடி அவனும் வருவான்
அவனின் பாதங்கள் நம் வீட்டினுள் படவே
ஜன்ம பலன்களை நாமும் பெறவே

புண்ணிய ஷேத்திரம் ஷீரடி தானே
பாபா வசிப்பதும் ஷீரடி தானே 
நம்மை அழைப்பதும் ஷீரடி தானே
புனிதப் பயணம் ஷீரடி தானே

நோய் நொடிகளை அறவே அகற்ற
எவ்வித இன்னலும் அண்டாதிருக்க
அவனும் தருவான் தக்க மருந்தை
அதுவே உதி என்று பெயரும் பெறுமே

கோதுமை மாவின் மகிமையை சொன்னவன்
அதனின் மூலம் ஊரைக் காத்தவன்
தெய்வப் பிறவியாய் நம்முடன் கலந்தவன்
அவனே எங்கள் சாயி ஆனவன்

ஒவ்வொரு நொடியும் நம்முடன் இருப்பான்
உடலில் ஓடும் உதிரத்தில் இருப்பான்
உணர்ச்சிப் பிழம்பில் கலந்து இருப்பான்
பேசும் சொற்களில் இனிமையாய் இருப்பான்

குருவின் மகிமையை சொன்னதும் அவன்தான்
குருவாய் என்றும் ஆனவன் அவன்தான்
பக்தியுடனே நாமும் சொல்வோம்
சற்குரு சாயி என்று பாடுவோம்

பாபா என்றால் மன பாரம் குறையும்
பாபா என்றால் மலர்ச்சி பொங்கும்
பாபா என்றால் மனமது மயங்கும்
பாபா என்றால் சகலமும் அடங்கும்

ஜென்ம ஜென்மமாய் பந்தத்தில் இருப்பான்
உயிருனுள் மூச்சாய் கலந்தும் இருப்பான்
நீரில் எரியும் விளக்கிலும் இருப்பான்
எங்கள் சாயி அனைத்திலும் இருப்பான்

அவனின் புகழை என்றும் போற்றுவோம்
அவனின் நாமம் சொல்லி மகிழுவோம்
அகிலத்தைப் படைத்த அவனை வணங்குவோம்
சாயி நாதா என்று சொல்லுவோம் 

சாந்த முகத்துடன் என்றும் இருப்பான்
புன்னகை தவழ நம்மைப் பார்ப்பான்
விழிகளில் கருணையை தேக்கி வைப்பான்
அன்புக் கரங்களால் நம்மை அணைப்பான்

அவனைப் பற்றிய கீதம் படித்து
பலவகை ஆரத்தி நாமும் எடுத்து
வியாழக்கிழமை விரதம் இருந்து
மனதால் அவனை தியானம் செய்வோம்

ஆதியும் அந்தமும் எல்லாம் அவனே
வாழ்க்கையில் நிகழும் சகலமும் அவனே
உலகை இயக்கும் சக்தியும் அவனே
எங்கள் ஷீரடி வாசனும் அவனே

தூய உள்ளத்தில் வந்து அமர்வான்
நல்ல எண்ணத்தில் ஒன்றி இருப்பான்
அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டால்
மனதினில் ஆனந்த தாண்டவம் ஆடுவான்

பிறவிப் பயனை புரிந்திடச் செய்வான்
ஆனந்தம் என்றும் கிடைத்திடச் செய்வான்
கவலைகள் அற்ற வாழ்க்கையை தருவான்
ஷீரடி வாசா என்றால் வருவான்

உடனே சொல்வோம் அவனின் பெயரை
விரைந்து பெறுவோம் நற்பலன்கள் பலவும்
அவன் பாதம் தொட்டு வணங்கி வருவோம்
நம்மை அவனுள் என்றும் காண்போம்

இதனைப் படித்தால் புண்ணியம் பெறுவீர்
சகல சௌபாக்கியம் அனைத்தையும் பெறுவீர்
வாழ்வில் என்றும் நிம்மதி பெறுவீர்
பாபா என்றால் மன அமைதியும் பெறுவீர்

சாயி சரணம் சாயி சரணம்
எங்கள் பாபா சரணம் சரணம்
ஷீரடி வாசா சரணம் சரணம்
சற்குரு சாயி சரணம் சரணம்

Monday, February 27, 2017

அழுவீர்கள்..ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்படவைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -
---ஸ்ரீ சாயி-யின் குரல்

Sunday, February 26, 2017

இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது


நம்பிக்கையோடு முயற்சி செய். எதற்காக முயற்சி செய்கிறாயோ அதற்காக பொறுமையாகக் காத்திரு. உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன். நேர்மையோடு நீ செய்யும் எல்லா காரியத்தையும் நான் முடித்துத் தருவேன்.
இதைத்தான் தபோல்கர், நான் சாயி சரிதம் எழுத பேனாவை எடுத்தபோது, பாபாவே அதைச் செய்கிறார். நான் எழுத முடியாத நிலையில் இருந்தேன். ஆனாலும் பாபாவின் அருள் ஊமையை பேச வைக்கிறது . முடவனை மலை ஏற வைக்கிறது. புல்லாங்குழலிருந்து வரும் இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது.
----ஸ்ரீ சாய் தரிசனம்

Friday, February 24, 2017

நிச்சயம் உயர்த்துவார்.


நீ கைவிடப்பட்டு, பாழடைந்த நிலையிலிருந்தாலும் பயப்படாதே.. உன்னில் தீபம் ஏற்றுவதற்காகவே, பாபா உன்னிடம் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு. நீ பிரகாசம் அடைவதும் உறுதி.. மற்றவர்களைவிட உயர்வதும் உறுதி. பாழடைந்த உன்னைத் தூக்கிப் பலர் போற்றும் நிலைக்கு நிச்சயம் உயர்த்துவார்.

Sunday, February 19, 2017

உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்


அன்புக் குழந்தையே!
ஐயோ, பாபா நீயே கதி என கிடக்கிறேன். அப்படியிருந்தும் இதுவரை யாரும் அனுபவிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உடனே தீர்வு கொடுக்க மாட்டாயா? இன்னும் எப்படி நான் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை எனக் கேட்கலாம்..
மகனே, போர்களத்தின் மத்தியில் நான் அர்ஜூனனுக்கு வெற்றியை உடனே தந்துவிடவில்லை. அண்ட சராசரங்களையும் வியாப்பித்து நிற்கும் நான் கவுரவ சேனைகளை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டிருக்க முடியாதா? மாறாக குழப்பத்தில், பயத்தில் இருந்த நண்பனுக்கு உபதேசம் செய்தேன். நான் சூத்திரதாரியாக இருப்பேன், உனக்கு வழியையும் காண்பிப்பேன், உன் பக்கத்திலேயே இருப்பேன். விடிவுகாலம் வருமா வராதா என யோசிப்பாய். வடநாட்டிலிருந்து தென்னிலங்கை நகருக்கு சீதையை கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுவிடுவேன் என்று ஸ்ரீராமன் நம்பினான். எப்படியும் ஸ்ரீராமன் தன்னை மீட்டுவிடுவான் என ஜானகி நம்பினாள். இந்த நம்பிக்கை தான் அவர்களை மிகப்பெரிய துயரங்களையும் சகிக்க வைத்து பின்னாளில் அதுவே மிகப்பெரிய சாதனையாகவும் சரித்தரமாகவும் மாறியது. ஆகவே தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடாதே. என் மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பதில் கடன் கஷ்டம் பிரச்சினை என பலவற்றின் மீது கவனத்தை செலுத்துவதால் கர்ம பந்தம் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறது. உனது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர விரும்பினால் பரிபூரண நம்பிக்கையை என் மேல் வை. எது நடந்தாலும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற முழுமையான நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது உனக்கு விடுதலை தருவேன். என்னை சரணடைந்தவனுக்கு எந்த காலத்திலும் துன்பம் வராது. இன்பமே பெருகும். நீ எப்படி நடந்துக்கொள்ள போகிறாய் என்பதை தீர்மானிக்க உனக்கு நேரம் தருகிறேன். யோசித்து முடிவு செய்... உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்.............. ...... சாயியின் குரல்

Saturday, February 18, 2017

உன்னை விடுவிப்பேன்


எனது லீலைகளை நீ ஆர்வமோடும் அன்பு கலந்த இதயத்தோடும் கேட்கிறாயா? நல்லது. என்னை நாடி வந்தவர்கள் தங்கள் வாழ்வில் வளம் பெற்றதை கேள்வியுற்றாயா? நல்லது.
இவ்வளவு செய்த தந்தையாகிய நான், நீ வேண்டுகிற எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிற நான் மிச்சம் உள்ள வேண்டுதல்களையும் நிறைவேற்றி தர மாட்டேனா? இதற்கா என் மீது இத்தனை கோபம், அவ்வளவு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டாயே! ஏன் இந்த குழப்பம்? பதற்றம்? வீணான கவலை? அனைத்தையும் விடுத்து உன் வேலைகளில் கவனம் செலுத்து. நான் உனக்காக வேலை செய்கிறேன்.

நீ என்னிடம் வேண்டுகிற வேண்டுதல்களை கேட்டேன். நீண்டகாலமாக உன் வாழ்க்கையை சிதைத்து வருகிற பிரச்சனையிலிருந்து விடுதலை கேட்கிறாய். இதுவரை எத்தனையோ சங்கங்களில் இருந்து உன்னை காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும். உனது உன்னதமான நிலையை தாழ்த்தி, களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரக நிலைகள் ஆகட்டும், உன் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்களால் ஏற்பட்ட தாங்க முடியாத பாதிப்பையாகட்டும் நான் சுலபமாக நிவர்த்தி செய்தேன். ஆனால் நீயோ இன்னும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். கவலைபடாதே. அனைத்திலிருந்தும் உன்னை விடுவிப்பேன்.

நீண்டகாலமாக நீ அனுபவிக்கும் வேதனைகள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. இப்போது உள்ள எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீ விரைவில் முழுமையாக விடுதலைய
டைய உள்ளாய். இன்னும் சில மாதங்களுக்குள் புதிய மாறுதல் உன் வாழ்க்கையில் நிகழத்தொடங்கும் அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள்! - சாயியின் குரல்

Friday, February 17, 2017

நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்


தர்மத்தை பற்றி பாபா, நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள். தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Thursday, February 16, 2017

சுபீட்சம் உண்டாகும்


உனது வருமானத்தில் முதல் பைசாவை எனக்கு அர்ப்பணம் செய். அதனால் நீ நிறைய சம்பாதிப்பாய். சம்பாதித்தவை உன்னைவிட்டு நீங்காமல் இருக்கும்.

உணவின் முதல் கவளத்தை என்னை நினைத்து சாப்பிடு. உனக்கு பிடித்தமானதை முதலில் எனக்கு அர்ப்பணம் செய்.

உன் முதல் குழந்தையை எனக்கு தத்தம் செய். நான் அந்தக் குழந்தையை வைத்து நிறைய வேலைகளை வாங்க வேண்டியிருக்கிறது.

அப்போது உனது குடும்பம் சுபீட்சமாக மாறும், மக்கள் உன்னை புகழவார்கள்.

ஸ்ரீ சாயி-யின் குரல்.

Wednesday, February 15, 2017

தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.


பாபா எப்பொழுதும் தனது பக்தர்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.

பாபா பக்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற விஷயம். தன் பக்தனுக்கு அருளை மட்டுமின்றி பொருளையும் நம்மை கேட்க வைத்து கொடுக்கிறார், அழவைத்து தீர்வு தருகிறார். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். தனக்காக வேண்டிக்கொள்ள வரவழைத்து பிறருக்காக வேண்ட வைக்கிறார்.

தந்தையாக, தாயாக, சகோதரியாக, சகோதரனாக,பிள்ளையாக, நண்பனாக எல்லா உறவு முறைகளிலும் அவர் உதவத் தயாராக இருக்கிறார். ஆனால் உணர்வுகளை சேதப்படுத்தும் எந்த வடிவத்தையும் அவர் ஏற்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாபா நான்கு வழிகளை (தவம், தானம், கேள்வி, யோகம்) நமக்கு கற்பித்து, ஐந்து புலன்களை தாமாக அடங்க வைத்து ஆறுதலைத் தருகிறார். ஆத்மார்த்தமாக அவரை வணங்கும்போது அவற்றை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
--ஸ்ரீ சாயி தரிசனம்

Tuesday, February 14, 2017

மந்திரத்தியானம்

தியானத்தின் போது சிலர் மணிகளை உருட்டி மந்திரத்தியானம் செய்கிறார்களே!  எப்படி உருட்டுவது? அது எப்படி பலன் தரும்?
                                  
நாம மந்திரத்தைச் சொல்லி முடித்த பிறகு ஒரு மணியாக உருட்ட வேண்டும். காயத்திரி மந்திரம் சொல்லும்போது முழுமையாக அந்த மந்திரத்தைச்சொன்ன பிறகே ஒரு மணியை உருட்டலாம்.
இரண்டாவது முறை மந்திரத்தை முழுமையாகச்சொன்னபிறகே அடுத்த மணியை உருட்டலாம்.
ஓம் சாயி என்ற வார்த்தையை மந்திரமாகச்சொல்லி ஒரு மணியை உருட்டலாம்.

ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ  சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:  சத்குரு சாயி நமோ நம

என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.

இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள்

ஓம் சாய் ராம்

Monday, February 13, 2017

நான் உன்னை கவனித்து கொள்கிறேன்


பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை.   "உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்"
                                                   ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
 பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்று போலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி.
உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

Sunday, February 12, 2017

சாயி ராம்சாயி ராம்! சாயி ராம்! என்று உதடுகளால் சொல்லி உள்ளத்தால் என்னைவிட்டு தள்ளி நிற்காதே! நான் உன் உள்ளத்தை பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்சை எடுக்கிறேன். என் குழந்தை உனக்காக! நீ வெறும் உள்ளத்தை கொடுத்தால் அதை மிகவும் உயர்ந்ததாக, பொக்கிஷம் நிறைந்ததாக நான் திருப்பித் தருவேன்.
—-ஷிர்டி சாயிபாபா

Saturday, February 11, 2017

ஷீரடி சாயி காயத்ரி மந்திரம்ஹிந்துக்களின் புனித மந்திரமான காயத்ரி மந்திரம் பழமையான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காயத்ரி மந்திரத்தின் பெருமையை விளக்கி இந்தியாவில் ராம கிருஷ்ண மடம் தனி புத்தகமே வெளியிட்டுள்ளது. அது போல நம் பாபாவை துதி பாடும் ஷீரடி சாயி காயத்ரி மந்திரம் இதோ :

ஓம் ஷீரடிவாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

Friday, February 10, 2017

பாபா நிகழ்த்திய அற்புதங்கள்அக்கல்கோட்டிலிருந்த ஒரு வழக்கறிஞர் தனது மாணவ நாட்களில் பாபாவைப் பற்றி தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பேசி வந்து பிற்காலத்தில் தனது ஒரே மகனை இழந்தார். தனது புத்திரனை இழந்தது பாபாவை அவமதித்ததாலே என எண்ணிய அவர் ஷீரடிக்கு வந்தார். பாபா அவரை ஆசிர்வதித்து, இறந்துபோன அவரது மகனின் ஆன்மாவை தாமே கொணர்ந்து வழக்கறிஞரின் மனைவியின் கர்ப்பத்தில் வைத்துவிடுவதாக அவருக்கு உறுதியளித்தார். அப்போதிலிருந்து பன்னிரெண்டு மாதங்களில் அம்மாது ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள்.

Thursday, February 9, 2017

நம்பியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஷிரடி சாய்பாபா


மும்பை பகுதியில் அமைந்த தானே என்ற பிரதேசத்தில் சோல்கர் என்றோர் அன்பர் வசித்து வந்தார். பாபாவின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அவர் மிகுந்த பரவசம் கொண்டார். அவர் வசதியில்லாதவர். உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை. தற்காலிக ஊழியராக இருந்த அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்றால் நிரந்தர ஊழியராக்கப்பட்டால், சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும் என்று யோசித்தார். பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி ஷிர்டி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு ஷிர்டியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்!

பாபாவைப் பூரணமாக நம்பிப் பிரார்த்தித்தவாறு தேர்வுக்குப் படித்து நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்வில் வெற்றிபெற்றார். அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சம்பள விகிதம் அமல்படுத்தப்பட்டு அவர் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை வேண்டுதலை நிறைவேற்றக் காத்திருப்பது சரியல்ல என்று சோல்கருக்குத் தோன்றியது. ஷிர்டி செல்லப் பணம் வேண்டுமே? யோசித்து ஒரு முடிவுசெய்தார். செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க சர்க்கரைக்கு ஆகும் செலவு மட்டுப்பட்டு அவரால் ஷிர்டி பயணத்திற்கான பணத்தைச் சிறிதுநாளில் சேகரிக்க முடிந்தது.
தான் சேமித்த பணத்தின் மூலம் ஷிர்டி வந்த அவர், பாபாவைப் பார்த்தது பார்த்தபடி நின்றார். மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பின் பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் சோல்கர். பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை அழைத்தார். அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்! என்றார் பாபா! கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வாக்கியங்களின் முழுப்பொருள் புரியவில்லை. ஆனால், புரிய வேண்டியவருக்கு அதன் உள்ளர்த்தம் முழுவதும் புரிந்தது.
தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை இரு கைகளால் தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்தார். ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்த போது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. இதென்ன? கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்று கேட்டார் அவர்முன் அமர்ந்திருந்த பக்தர். இரண்டுமில்லை. இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் பாபா! என்னது! பல்லிக்கு சகோதரியா? கேட்டவரின் தலை சுற்றியது. ஆனால், பாபா சொன்னபடி அந்த சகோதரிப் பல்லி ஷிர்டி வந்து சேர்ந்ததே, அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

Wednesday, February 8, 2017

தினமும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒதுக்குவது பெரும்பாலோருக்கு சவாலான காரியமே.
பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள். காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஓம் சாயிராம்.

Tuesday, February 7, 2017

அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்! தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே. அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார். அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார். அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

Monday, February 6, 2017

பேறுபெற்றவர் ஆவீர்"இந்த பாதங்கள் புராதனமானவை.உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும்.சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்"
 ---ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Sunday, February 5, 2017

தயாராக இருக்கிறார்


பாபா எப்பொழுதும் தனது பக்தர்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.

பாபா பக்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற விஷயம். தன் பக்தனுக்கு அருளை மட்டுமின்றி பொருளையும் நம்மை கேட்க வைத்து கொடுக்கிறார், அழவைத்து தீர்வு தருகிறார். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். தனக்காக வேண்டிக்கொள்ள வரவழைத்து பிறருக்காக வேண்ட வைக்கிறார்.

தந்தையாக, தாயாக, சகோதரியாக, சகோதரனாக,பிள்ளையாக, நண்பனாக எல்லா உறவு முறைகளிலும் அவர் உதவத் தயாராக இருக்கிறார். ஆனால் உணர்வுகளை சேதப்படுத்தும் எந்த வடிவத்தையும் அவர் ஏற்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாபா நான்கு வழிகளை (தவம், தானம், கேள்வி, யோகம்) நமக்கு கற்பித்து, ஐந்து புலன்களை தாமாக அடங்க வைத்து ஆறுதலைத் தருகிறார். ஆத்மார்த்தமாக அவரை வணங்கும்போது அவற்றை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
--ஸ்ரீ சாயி தரிசனம்

Saturday, February 4, 2017

அழுவீர்கள்..ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்படவைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -
---ஸ்ரீ சாயி-யின் குரல்

Friday, February 3, 2017

அப்பாவிடம் இருந்து மகனுக்காகபாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும்  இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்...........................

Thursday, February 2, 2017

நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது


அன்புக் குழந்தையே! 
நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது. என் குழந்தையே உன்னை வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பதால் ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன். யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவது நானே என்று அறிந்துகொள். சோதனை காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது. மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும்,  பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானபட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?, இனி பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்து துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கு நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................ சாயியின் குரல்🙏🏻

Wednesday, February 1, 2017

முதலில் ஓரடியை நீ எடுத்து வை


நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகப்படவேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உன்னை தயார்படுத்தும் வேலையில் இப்போது நான் ஈடுபட்டிருக்கிறேன். என்னை நோக்கி முதலில் ஓரடியை நீ எடுத்து வை. அடுத்து மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
—-ஸ்ரீ சாயி-யின் குரல்

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்