Showing posts with label உதி. Show all posts
Showing posts with label உதி. Show all posts

Wednesday, August 23, 2017

உதி





பாபாஅவருக்குத்தினமும் கிடைத்த ட்சணையிலிருந்து,  தர்மத்திற்கும்,  விறகு வாங்குவதற்கும் செலவழித்தார்.  அவர் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்த துனி என்ற புனித நெருப்பில் விறகை இட்டார்.  இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி' என்று அழைக்கப்பட்டது. 
பக்தர்கள் ஷீர்டியைவிட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த  உதி கொடுக்கப்பட்டது. இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே இதன் பொருள்.
உதி  உடல்-மன நோய்களைக் குணப்படுத்துகிறது. . .
உதி விவேகத்தையும், பின்னது (தஷிணை) பற்றின்மையையும் குறிக்கிறது.

Tuesday, August 22, 2017

எதையும் உதியாக நினைக்கலாம்!



பாபாவின் அடியவரான நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது.  அவர் பாபாவின் படத்தின் முன் நின்று, அவர் நாமத்தை ஜெபித்து பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக்கொண்டு வலிக்கும் இடத்தில் தடவியவுடன் வலி மறைந்து போய்விட்டது.
பிளேக் வியாதியுடன் உள்ள ஒருவரை குணப்படுத்த வேண்டி, அப்போது     வேறு இடத்திலிருந்த நானா சாஹேப் சந்தோர்க்கர்,  மண்ணை  உதியாக எண்ணி, சாயியை நன்கு வேண்டிக் கொண்டு, அருகிலிருக்கும் தன்  மனைவியின் நெற்றியில் இட்டார்.   ஆச்சரியப்படும் அளவில்  குணமாகியது. நோய் குணமாக வேண்டும் என்று நினைத்து,  எங்கிருந்து வேண்டுமானாலும், உதியை சாயியை நினைத்து  உபயோகப்படுத்தலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

Saturday, July 1, 2017

உதி உன் விதியையே மாற்றும்.


உதி என்பது வெறும் சாம்பல் அல்ல. அது நான் உங்களுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்த சக்தி வாய்ந்த பிரசாதம். அதைப் பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. என்னுடைய பரிபூர்ண  ஆசிர்வாதம் இருந்தாலொழிய உரிய நேரத்தில் அதாவது உங்களுக்கு  தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது. 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல் 'பாபாவின் உதியுடையோன் உயிருக்கஞ்சான் ' என்று சொல்லலாம். உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், என் உதியை, என்னை  வணங்கி நெற்றியில்  இட்டுக் கொண்டு , பின் சிறிது தண்ணீரில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். எந்த நல்ல காரியங்களுக்காக போனாலும் என் உதியை உன் கையோடு எடுத்துச்சென்றால் வெற்றி நிச்சயம். என் உதி உன் விதியையே மாற்றும்.

Tuesday, June 27, 2017

சாயியின் உதி

துவாரகாமாயீயில்  சாய் பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கிறது. அதில் விறகுக்கட்டை போட்டு எரித்துக் கொண்டிருந்தார். அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னிக் குண்டத்திலிருந்து 'உதிஎன்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார். அக்னி  குண்டத்திலிருந்து எடுக்கும் போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்லது. தினமும் குளித்தபின் உதியை நெற்றியில்  இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்தும் சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

உதி விதியை மாற்றும்


துகாராம் சீரடியில்  விவசாயம் செய்து வந்தார். 1912ம் ஆண்டு சீரடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு அங்கே வேலை கிடைக்கும் எனப் புறப்பட்டார்.
கோபர்கான் சாலையில் செல்லும்போது, பாபா அவரது கழுத்தில் தன் கையைப்போட்டு போகாதே என்றார். ஆனால் துகாராம்பாபாவின் வார்த்தையினை கண்டு கொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். 
வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் நிற்கவே இல்லை. தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது அவரே சொந்தக்காரர்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.
பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார். காய்ச்சல் நிற்கவில்லை. 45 நாட்கள் தொடர்ந்தது. உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்பச் சொன்னார். உதியை இட்டுக் கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...