Showing posts with label சாயிபாபாவின் ஆரத்தி. Show all posts
Showing posts with label சாயிபாபாவின் ஆரத்தி. Show all posts

Friday, August 4, 2017

சாயி ஆரத்தி பாடல்கள்

சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர் பீமா என்பவர் மிகவும் முக்கியமானவர். 1911ம் ஆண்டு, அவர் முதன் முதலாக  சீரடிக்கு வந்து பாபாவின் கமலப் பாதங்களில் சரணடைந்தார். பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்திப்பாடல்களை இயற்றினார். எல்லா ஆரத்திப்பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார். அதன் படியே இன்றும் ஆரத்திப்பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது.
சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில்  பாபாவை போற்றி பாடப்பட்டவை மொத்தம் 16. மீதி 14 பாடல்கள் மகாராஷ்ட்ர மாநிலத்தில், எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள். இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்கனின் அடியவர்களால் இயற்றப்பட்டவை. உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் எழுதிய 2 பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தன ஸ்வாமியின் ஒரு பாடல். மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷ சூக்தத்திலிருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்ட்ர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.
பாபாவைப் போற்றிபாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜாலும் இயற்றப்பட்டவை. இந்தப் பன்னிரெண்டு (9+3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவுடன் கூடப் பழகிய ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள். 1905ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார். பாபா இந்தப் பாடலை, உதி பாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார். பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்ற பாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல். மொத்தமுள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்க்குதத்திலும் மற்றொன்று இந்தியும் சமஸ்கிரதமும் கலந்தது.
இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குச் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.

Thursday, August 3, 2017

சாயிக்கு ஆரத்தி



ஆர்த்தி என்பது சுலபமாக பக்தியை வெளிகாட்ட, அக்னியோடு சம்பந்தப்பட்ட ஒரு வழிபாடு. சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆர்த்தி, நடைபெறுகிறது. அதிகாலையில் 4.30 மணிக்கு காகட ஆர்த்தி, மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி, மாலையில் ஆதவன் மறையும் போது  தூப் ஆரத்தி,  இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தி.
சீரடிசாய்பாபா ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அவதாரம். கங்கா யமுனை, வாரணாசி ஆகிய நதிக்கரைகளில் சூரிய அஸ்த்தமத்தில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஆரத்தி மூலமாக சத்குருவை வங்கினால், வாழ்வில் ஒழுக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும்.  இந்த ஆர்த்தியில் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. ஆர்த்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்தபுத்தி சுறுசுறுப்படையலாம்.
 காலையில் எழுந்து சாய்ராமை நினைத்து உலகும் நாமும் நலமாக இருப்பதற்க்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கையில் நிலவும் துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மதியவேளை ஆரத்தி உதவி செய்கிறது. மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப்ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாடம் நடக்கும் நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம். இந்த நான்கு ஆர்த்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செய்யும் அதுவே சாயின் வழி.
உலகெங்கும் உள்ள சாய்பாபா தலங்களில் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தங்கள் வீட்டு சத்சங்கங்களில் ஆரத்தி செய்கிறார்கள். சீரடியில் தினமும் சுமார் 30 லட்சம் பேர் சீரடிசாயின் ஆரத்தியில் பங்கு கொள்கிறார்கள்.
உலகில் எங்கெல்லாம் சாய் ஆர்த்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் கூறியுள்ளார். நீங்களும் ஒரு நாள் இந்த ஆரத்தியை செய்து பாருங்கள். உங்கள் உள்ளம் புத்துணர்வு பெற்றதுபோல் மாறிவிடும்.
1940ஆம் ஆண்டு சீரடி சாய்பாபாவுக்கு முதல் முதல் எழுதப்பட்ட ஆரத்திப்பாடல் ஆரத்தி சாய்பாபாஇந்த பாடல் நன்றாக இருக்கின்றது இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று பாபா ஆசீர்வதித்தார்.
நானாசாகிப்பின் மகளுக்கு கடுமையான பிறசவ வேதனை அப்பொழுது ஆரத்தி சாய்பாபா பாடலை பாடியவுடன் சுகப்பிரசவம் ஆயிற்று இந்த பாடலுக்கு ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்று கூறினார் நானாசாகிப்.

Wednesday, August 2, 2017

சீரடி சாயி ஆரத்தியின் வரலாறு

இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. பூசைகள் முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது இடைப்பட்டக் காலத்தில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறலாம்.
1909ம் ஆண்டு தான் முதன்முதலாக, சீரடியில் பாபாவின் முன்பு மக்கள் ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டபோது, முதலில் நண்பகல் ஆரத்தி மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சாவடி ஊர்வலம் ஆரம்பித்தவுடன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது. துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி) ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.
பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை,  அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட சம்மதித்தார். முதன் முதலாக நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவரான இவர்,  ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் என்பவர் பாபாவிற்கு ஆரத்தி காட்ட அனுமதிக்கப்பட்டார். பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.

Thursday, June 22, 2017

ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே!





ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே
ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே
பரமானந்த சுகத்தினை அளிப்பாயே
தயையுடன் எமக்கருள் செய்வாயே
துக்க, சோக, சங்கடம் தீர்த்தருள்வாயே
வாழ்வில் ஆனந்தம் பொங்க அருள்வாயே
என் மனதில் உன்னை நினைத்ததுமே
அக்கணமே வந்து அநுபவம் தந்தாயே
உந்தன் திருஉதி நெற்றியில் இட்டதுமே
அனைத்து தொல்லைகள் தொலைந்தனவே
சாயி நாமமே தினமும் ஜபித்தோமே
நொடியிலும் உம்மை யாம் பிரியோமே
வியாழக்கிழமை உன்னை பூஜித்தோமே
தேவா! உன் கிருபையால் நலம்அடைந்தோமே
ராம, கிருஷ்ண, ஹனுமான் ரூபத்திலே
அழகு தரிசனம் எமக்களிப்பாயே
பல மத முறையில் பூஜித்துமே
பக்தர் குறை கேட்டருள் புரிவாயே
சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
சாயிதாஸனின் ஆரத்தி பாடுபவனுமே
சர்வ சுகம், சாந்தி வளம் பெறுவானே. (ஆரத்தி)

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...