Showing posts with label சோல்கர். Show all posts
Showing posts with label சோல்கர். Show all posts

Monday, December 23, 2013

சிந்தனை செய்!



அன்பான சாயி பந்துக்களே!

     சில பக்தர்கள் சோல்கரைப் போல நானும் சர்க்கரை இல்லாமல் டீ, காபி சாப்பிடுகிறேன்.  ஆனால் பாபா நன்மை செய்யவில்லை என்று புலம்புகிறார்கள்.
     சோல்கர் தனது குடும்ப கஷ்டம் காரணமாக செலவைக் குறைக்கவும் வேண்டும், செலவிடுவது சுமையாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக , தனது தேவையைக் குறைத்து அந்தப் பணத்தினை மிச்சப்படுத்தி, சீரடிக்கு அந்தப் பணத்தில் வந்தார் என்பதினை கவனத்தில் கொள்ளுங்கள்.
     நீங்களும் சோல்கரைப் போல சர்க்கரை இல்லாத காபி குடித்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். தேவையற்ற செலவுகளைக் குறைத்து அந்தப் பணத்தினை சாயிக்கு செலவிட முன்வாருங்கள், பிரச்சனைகள் தீரும்.



சாயி வரதராஜன் 

Saturday, October 26, 2013

தேநீரில் சர்க்கரை


          ஸ்ரீ தாஸ்கனு அவர்கள்   கௌபினேச்வர்  கோவிலில் சாய் கீர்த்தனைகள் பாடிகொண்டிருந்தார்.  அதைக் கேட்டுக் கொண்டிருந்த சோல்கர் என்பவர், "பாபா! நான் ஏழை. என் அலுவலக தேர்வில் வெற்றி பெற்று நல்ல பதவி கிடைத்தால் ஷீரடி வருகிறேன்." என்று மனதில் வேண்டினார். அதே போன்று அந்த்த் தேர்விலும் வெற்றி பெற்று விட்டார்.
          ஆனால் ஷிர்டி செல்ல பணம் இல்லாததால் தினமும் தான் குடிக்கும் தேநீரில் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல், அந்த பணத்தை சேமித்து அதன் பின் ஷிர்டி சென்றாராம்
          தரிசனம் முடிந்ததும் பாபா,  சோல்கர் தங்கியுள்ள இடத்தை சேர்ந்த ஜோக் என்பவரிடம்   "இவருக்கு தேநீரில் நிறைய சர்க்கரை போட்டு இனிப்பாக அளியுங்கள் என்றாராம்"
         சோல்கர் திகைத்து மறுபடியும் பாபா காலடியில் விழுந்தாராம். பிறகு ஜோகிடம் சோல்கர் நடந்ததை சொன்னாராம்.
        பகவான் நம்மை நாம் எங்கிருந்தாலும் கவனிப்பதோடு நம்முள் புகுந்து நம் எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து ஆசி அளிக்கிறார் என்பது தெரிகிறதல்லவா?
         அற்புத செல்வர் சாய் நாதரின் திருவடிகளை வணங்குவோம்.

         ஜெய் சாய்ராம்!

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...