நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Sunday, July 31, 2016

நான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்!

Srishirdisaibaba Trust Sskottai's photo. அன்புக் குழந்தையே!
நான் அனைத்தையும் கவனித்துத்தான் வருகிறேன். என் கண்களில் இருந்து எது தப்ப முடியும்? ஆனால் உங்கள் தவறுகளை கனிவுடன் மன்னிக்கிறேன். ஆரம்ப காலம் முதல் நீங்கள்  என் மீது உண்மையான அன்பு வைத்து என்னை உங்களது குழந்தை போல பாவித்ததை நான் மறந்துபோகவில்லை, உங்கள் மீது நான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்.

 நீ என்றைக்கோ முன்னேறி வாழ்வின் உச்சத்தை தொட்டு இருக்க வேண்டும். உனது பிடிவாத குணம், முரட்டு சுபாவம் ஆகியவை நிம்மதியற்ற வாழ்வை தந்துவிட்டது. சொர்க்கத்தை உருவாக்க நினைத்த நீ சந்தர்ப்பவாத குணத்தால் ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்.  அதை நினைத்து என் மனம் பதைக்கிறது. கெட்டவர்கள் கெடுபலனை அனுபவிப்பார்கள் ஆனால் நல்லவர்களாகிய நீங்களும் கெடுபலன் அனுபவிப்பது ஏன்?
இந்த வாழும் காலத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள். கவலைகளை தூக்கி எறி.  எதை எடுத்துக் கொண்டு போகப்போகிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் என் போக்கில் விடு. சிந்தனையை என் பக்கம் திருப்பு. செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...................... சாயியின் குரல்

ஸ்ரீ சாயியின் குரல்எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். குறி சொல்பவர்களையும், ஜோதிடம் கணிப்பவர்களையும் நாடாதீர்கள். கோவில் பூசாரிகளையும், கோவிலுக்குள் துணிகரமாக என் திரு முன்னர் உங்களை தங்கள் காலடியில் விழ வைக்கும் துன்மார்கரிடமும் ஓடாதீர்கள். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.
-                                                                                                                        -ஸ்ரீ சாயியின் குரல்

சாயியின் குரல்

வெயில் அடிக்கிறது என்று நிழலுக்காக மரத்தடியில் ஒதுக்கினால், மரம் முறிந்து மேலே விழுவது போல எல்லா இடங்களிலும் துரதிருஷ்டம் உன்னை துரத்துகிறது. நமது தேவைகளும் ஆசைகளும் நம்மை இப்படி பட்ட நிலைக்கு இழுத்து சென்றுவிட்டன. இதனால் நாம் சிக்கலில் சிக்கிக்கொண்டோம், ஆகவே விதியை நொந்துகொள்வானேன். மதி சரியாக இருந்திருந்தால் இந்த கதிக்கு ஆளாயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! குழந்தையே உனக்கு இளைப்பாறுதல் என்பதே இல்லை, எந்த பக்கத்தில் இருந்து எப்போது திகில் தரும் நிகழ்வுகளும் செய்திகளும் வருமோ என்கிற பயம் உன்னை சூழ்ந்து இருக்கிறது. உறவினர்களோ வாழ்வில் பொறுப்பு அற்றவர்களாக நடந்துகொண்டு இதோ உன் உள்ளத்தை காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறார்கள். உன் கண்ணீரின் வலிமை அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இதோ நான் சீரழிந்து நிற்கும் உன் வாழ்க்கையை மாற்ற உன்னை தேடி வந்திருக்கிறேன். வெகு காலமாக நான் உன் பக்தியை கண்டு வியந்து மெச்சி வருகிறேன். நான் அன்பும் கருணையும், இரக்கமும் உருக்கமும் உள்ளவன் என்று உன்னால் கொண்டாடப்படுவேன்................................                                                . சாயியின் குரல்

Saturday, July 30, 2016

சத்குரு சாய் நமோ நம

நெஞ்சில் உனை நினைக்க இன்பம் தருவோனே
தஞ்சம் நீயென வருவோரை என்றும் காப்போனே
வஞ்சம் சூது பகை முற்றாய் ஒழிப்போனே
பஞ்சம் பசி பட்டினி முழுதாய்ப் போக்குவோனே
கஞ்சம் இல்லாது உன்னருள் மிகத் தருவோனே
நெஞ்சில் உனைப் பதிப்போர்க்கு அருள் தருவோனே
அஞ்சேல் என அபயம் அளிப்போனே
அபயம் என உன் பத்ம பாதம் பணிந்தோமே..
ஓம் சாய் ....நமோ நம
.ஸ்ரீ சாய்.... நமோ நம
ஜெய ஜெய சாய் நமோ நம
சத்குரு சாய் நமோ நமஅனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்பிம்மா
ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய்....!

சாயியே சர்வமும்

சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்தி ரூபன், சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்...


மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்