Monday, August 17, 2015

நீ வெற்றி பெறுவாய்!

தினத்தியானம் 7
நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது. பாபாவினை முழுமையாக நம்பு என்று சொல்லவும்                        சத்சரித்திரம் 29:11
நீ வெற்றி பெறுவாய்!
மும்பையின் புறநகர்ப் பகுதியான பாந்த்ரா என்ற நகரத்தில் ரகுநாத் ராவ் தெண்டுல்கர் என்ற சாயி பக்தரும், அவரது மனைவி சாவித்ரி, மகன்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.
மூத்த மகன் பாபு மருத்துவம் படித்துவந்தான். தேர்ச்சி பெறவேண்டும் என்பது அவனது லட்சியம். ஆனால் ஜோதிடரை அரூகி, தேர்ச்சி பெறுவேனா என்று கேட்டான்.
ஜோதிடர் பாபுவின் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் அமர்ந்திருந்த இடம் ஆகியவற்றைப் பார்த்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவாய், இந்த ஆண்டு கிரக நிலை சரியில்லை என்று கூறிவிட்டார். சிரமப்பட்டு படித்தது எல்லாம் பயனின்றிப் போய்விடப்போகிறது என்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன என்று பாபு மனம் உடைந்தான்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பாபுவின் தாயாரான சாவித்ரி, க்ஷPரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தபோது, பாபாவின் பாதங்களில் தலை வைத்து, ஜோதிடர் சொன்ன விக்ஷயங்களை சொன்னாள்.
இதைக் கேட்டு்  “நான் சொல்வதை மட்டுமே அவனை செய்யச் சொல்லுங்கள். ஜாதகத்தை சுருட்டி  மூலையில் வைத்துவிட்டு, அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள். வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா என்று பையனிடம் சொல்லவும். பையனிடம் நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டா, அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது, பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்”  எனக் கூறி அனுப்பினார்.
பாபாவே சொல்லிவிட்டார் என்ற சந்தோக்ஷத்தில் பையன் தேர்வு எழுதச் சென்றான். கேள்விகள் சுலபமாக இருந்தன. நன்றாக எழுதிவிட்டான். ஆனால் வாய்வழியாக கேட்கப்படும் தேர்வுக்குப்போக மட்டும் பயம். இதனால் தேர்வுக்குப் போகாமல் இருந்துவிட்டான்.
தேர்வு நடத்திய அதிகாரிக்கு பாபு வராமல் போனது ஆச்சரியமாக இருந்தது. பாபுவின் நண்பர் ஒருவரை அழைத்து, பாபு தேர்ச்சி பெற்றுவிட்ட விக்ஷயத்தைச் சொல்லி, வாய் வழி தேர்வுக்கு வராமல் நின்றுவிட்ட தற்கான காரணத்தைக் கேட்டு, அதில் கலந்து கொள்ளுமாறு சொல்லிஅனுப்பினார்.
நண்பர் வந்து சொன்னதும், அதிக சந்தோக்ஷம் அடைந்த பாபு, தாமதிக்காமல் வாய் வழித் தேர்வில் கலந்துகொண்டு, அந்த ஆண்டு வெற்றி பெற்றான்.
ஆகவே, என் அருமை குழந்தையே!
 நீ பாபாவின் மீது நம்பிக்கை வைத்து, சந்தேகப்படாமல் தேர்வை எழுது. பாபா வெற்றி தருவார். எழுதிவிட்ட தேர்வு முடிவைப் பற்றி கலக்கப்பட்டுக் கொண்டிருக்காதே. பாபா பார்த்துக்கொள்வார்.
அதற்காகத்தானே அவர் உனது இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். உனது வேலை அடுத்த தேர்வுக்குத் தயாராவது மட்டும்தானே தவிர, பயப்படுவது அல்ல. இந்த சரித்திர வார்த்தைகள் பள்ளிக்கூட தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என நினைத்துக் கொள்ளாதீர்கள், வாழ்க்கை என்ற பாடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனை என்ற பரீட்சைக்கும் பொருந்தும்.
சோதனை வரும்போது மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் எதிர்கொள்ளுங்கள். வருவது வரட்டும் என நினையுங்கள். பாபா பார்த்துக்கொள்வார். அவர் மீது முழுமையான நம்பிக்கையை மட்டும் வையங்கள். அனைத்தும் சுபமாக, சுகமாக முடியும்.
பிரார்த்தனை
சமர்த்த சத்குருவே, தேர்வுக்காகப் படிக்கிற இந்த வேளையில் அனைத்தையும் நினைவில் நிறுத்த, படித்தவை தேர்வில் வந்து, நான் நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற துணையிருக்குமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறோம். அருள் செய்வீராக.

என்னைப் பார்க்க வாரும்!

ராம் லால் மும்பையில் வசித்துவந்த பஞ்சாபி பிராமணர். பாபாவை பார்த்திராத அவரது கனவில் தோன்றி, என்னைப் பார்க்க வாரும் என அழைத்தார் சாயி பாபா.
அந்தக் கனவு அவர் மனதில் பதிந்தது. தன்னை அழைத்தவர் யார்? எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரது குணம் எப்படி? என்னைப்பார்க்க வாரும் என அழைத்தாரே, எப்படி அவரை தரிசிப்பது என நினைத்தார். அவருக்குப் போக விருப்பம்தான். போகும் இடம்தான் தெரியாது.
பிற்பகல் வேளையில் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையில் படம் ஒன்றைப் பார்த்துத் திடுக்கிட்டார். கனவில் பார்த்த அதே உருவம். கடைக்காரரிடம் விசாரித்த போது, அது சீரடியில் இருக்கும் சாயி பாபா என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார். சீரடிக்குப் புறப்பட்டுச்சென்றார். பாபா மகாசமாதி அடையும் வரை அங்கிருந்து, பாபாவுடன் வாழும் பாக்கியம் பெற்றார்.
சீரடிக்குப் பக்கத்தில் ரகாதா என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள குசால் சந்த், சந்த்ரபான் சேட் ஆகியோரை பார்ப்பதற்காக பாபா அந்த ஊருக்கு அவ்வப்போது வருவார். ரகாதா செல்லமுடியாத சூழலில் பாபாவுக்குக்கு சால் சந்தைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
தீட்சிதரிடம்,  “குதிரை வண்டியில் ரகாதாவுக்குச் சென்று குசால் பாவுவை அழைத்து வாரும். அவரை சந்திக்க மனம் ஏங்குகிறது. பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. பாபா உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆகவே, வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்”   எனக் கூறி அனுப்பினார்.
மதிய வேளைக்குப் பிறகு தீட்சிதர் இந்தத் தகவலை ரகாதா சென்று குசால் சந்த்திடம் கூறினார். உடனே குசால் சந்த்,  “இப்போதுதான் தூங்கி எழுந்தேன். எனது கனவிலும் பாபா இதைத்தான் சொன்னார். எனக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. எனது குதிரை வண்டி இல்லாமல் என்ன செய்வது என யோசனையாய் இருந்தேன். இந்த விக்ஷயம் பற்றி இப்போதுதான் என் மகனிடம் கூறி அனுப்பினேன். அவன் கிராம எல்லையைக்கூட தாண்டியிருக்கமாட்டான், நீங்கள் வந்துவிட்டீர்கள்!”  என்றார்.
”நீங்கள் வருவதாக இருந்தால் எனது குதிரை வண்டி தயாராக இருக்கிறதுளூளூ என தீட்சிதர் கூறியதும், மகிழ்ச்சியுடன் குசால்சந்த் சீரடிக்கு வந்தார். பாபாவும், குசால்சந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தப்பட்டார்கள். பாபாவின் லீலையை நினைத்து குசால் சந்த் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உங்களையும் பாபா கூப்பிடுகிறார், செல்லுங்கள்.

Sunday, August 16, 2015

உடனே சீரடிக்கு வாரும்!



தினத்தியானம் 6
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.     
                                                                                                                                                          (அத்:  30!114)
உடனே சீரடிக்கு வாரும்!

சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் 114 வசனத்தில், பாபாவினுடைய சித்தம் அதாவது மனவிருப்பம் பற்றி எழுதப்பட்டுள்ளது.  பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது, அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பது. இதுதான் பாபாவின் விருப்பம். வேண்டிக்கொண்டதுமே உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாக ஆரம்பிக்கும். ஆனால், உங்கள் தேவைககளைப் பெறுவதற்கு ஒருமுறையாவது நீங்கள் சீரடிக்குப் போய் வரவேண்டும். சீரடிக்குச் சென்று திரும்பி வந்தால் ஒரு சிறப்பானத் துவக்கம் நிச்சயமாக ஏற்படும்.
நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ், அவரது மகள் ரேகாவுடன் என்னுடன் சீரடிக்கு வந்தார்கள். தொழில் செய்து, சிலரிடம் சிக்கிக் கொண்ட பணத்தை திரும்பப் பெறமுடியாமல் பணக்கஷ்டத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார் ரமேஷ்.
என்னோடு வரும்போது,  ”நீங்கள் சீரடிக்குச்சென்று பாபா அற்புதத்தைப் பெற விரும்பினால், அவர் எனக்கு உதவி செய்வார் என ஆழமாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நிச்சயம் நமக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்!” எனக் கூறினேன்.
எல்லோரும் எனது வார்த்தையை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், யாருடைய கஷ்ட காலங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ, யாருக்கு பாபாவின் ஆசீர்வாதம் பலன் தரவேண்டும் என அவரால் முடிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர் நிச்சயமாக என் வார்த்தையை ஏற்றுக்கொள்வார் என்பது எனக்குத் தெரியும்.
பூனா ரயில் நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்திருந்த பேருந்தில் நள்ளிரவு 12 மணி நேரத்திலும் இதைத்தான் வலியுறுத்தினேன். அப்போது ரமேஷ்: ”பதினெட்டு ஆண்டுகளாக வராத பதினெட்டு லட்ச ரூபாயில், பாதியளவு தொகை என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வந்துள்ளது” என்றார்.
சீரடிக்கு வந்து தான் விருப்பங்கள் நிறைவேற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள் தந்து விடுவதுதான் சாயி பாபாவின் லட்சியம். தனது பக்தர்கள் தன்னிடம் வேண்டிக் கொண்ட பிறகு அவர்களைக் காக்க வைக்க அவரால் முடியாது.
ஆகவே, அவர்கள் வேண்டிக்கொண்டதும் பலன் தர ஆரம்பித்து விடுகிறார். ரமேஷ் சீரடிக்குள் கால் பதித்த அன்று, மொத்த தொகையில் 75 சதவிகிதம் அளிக்கப்பட்டதாகத்தகவல் வந்தது. மிகவும் உற்சாகமாகிவிட்டார்.
சனி தோக்ஷ நிவர்த்தி யாகம் செய்தபோது, வன்னி சமித்துகளை ரமேஷ்தான் ஏற்பாடு செய்து தந்தார். இப்போது தீவிர ஆன்மீகவாதியாகி விட்டார்.
சாய் ராம், நான் எவ்வளவோ முறை வேண்டுதல் செய்திருக்கிறேன், உங்களோடும் சீரடி வந்துள்ளேன், ஆனால் என் வேண்டுதல்கள் ஏன் கேட்கப்பட வில்லை எனக் கேட்பாரும் இருப்பார்கள் அல்லவா?
இறைவன் கொடுக்கிறான், கர்ம வினை தடுக்கிறது என நான் அடிக்கடி கூறுவேனே, அது தான் உங்கள் விக்ஷயத்திலும் நடந்துவருகிறது. கர்ம வினையின் தாக்கம் பொடிப்பொடியாக தீவிரமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும்.
தரிசனத்திற்கு அழைக்கிறார்
பாபாவின் அனுமதியில்லாமல் யாரும் சீரடியில் கால் வைத்துவிட முடியாது. அவரது அனுமதி பெற்றவர்கள் செல்வதை யாரும் தடுக்கவும் முடியாது. போகும் வழியிலேயே அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பிரச்சினைகளை, மன வருத்தங்களை உண்டாக்கி அழைத்துச் சென்று, முழுமையான நிவாரணத்தை அளிப்பார்.
சீட் கிடைக்காது, சரியான பராமரிப்பு கிடைக்காது, பேருந்தில் இடம் கிடைக்காது, தரிசனத்தின் போது பிறர் இடிப்பார்கள்.. இப்படியெல்லாம் பல தொல்லைகள் வரும்போது நாம் எரிச்சலடைந்து விடுவோம். இது தவறானது. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விக்ஷயங்களைக் கொடுத்து பாபா நமது பாவங்களை பாதி வழியிலேயே விலக்குகிறார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால்,நடக்கிற அனைத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.
பாபா கூப்பிட்டு நாம் சென்றுவந்த பிறகு, அவரது நினைவிலேயே இருப்போமானால், வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
பிரார்த்தனை
சமர்த்த குருவே, உங்களை தரிசிக்க நான் சீரடிக்கு வருகிறேன். எனது கஷ்டங்கள்அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விடுவீராக. இன்னல் சூழ்ந்த நிலையை மாற்றி ஆசீர்வதிப்பீராக.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...