Showing posts with label உபயோகமான குறிப்புகள். Show all posts
Showing posts with label உபயோகமான குறிப்புகள். Show all posts

Tuesday, August 2, 2016

ஐந்து பிறவிகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் பல பிறவிகள் உண்டு. சில பிறவிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது முதல் பிறவி. இயற்கையானது உணவு வழியாக குழந்தைக்கு சக்தியைத் தருகிறது. கல்வி கற்க பள்ளிக்குச்செல்கிறான் அல்லவா? அது இரண்டாவது பிறவி.
வித்யா தேவியின் கர்ப்பத்தில் இருக்கிறான். இயற்கை மற்றும் தாய் தந்தையர் வித்யா தேவியின் கர்ப்பத்திற்குச் சக்தி அளிக்கிறார்கள். மூன்றாவது லட்சுமி தேவியின் கர்ப்பத்தில் வாசமாக இருக்கிறான். இதற்குத் தேவையான சக்தியை வித்யா தேவி அளிக்கிறாள். அவன் பொருள் சேர்த்து பிறர்க்கும் அளித்து, தானும் பயன்படுத்துகிறான். நான்காவதாக, அவன் உமா தேவியின் கர்ப்பத்தில் வாசம் செய்கிறான். உமா என்றால் ஞானம் என்று பொருள். ஞானத்தை அடைய அவனுக்கு வித்யா தேவி, லட்சுமி தேவி ஆகியோர் உதவுகிறார்கள். அதன் பிறகு அவன் ஐந்தாவது பிறவியை அடைகிறான். அதுதான் பரமாத்ம சொரூபமாவது.
பிரம்மச்சாரி
நிறைய பேர் கல்யாணமாகாதவனை பிரம்மச்சாரி என்கிறார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும் தன்னிடம் வைத்திருப்பவன் பிரம்மச்சாரி கிடையாது. பிரம்மத்தை அறிந்தவன், தன்னுள் இருக்கும் பிரம்மத்தை எப்போதும் வணங்குபவனே பிரம்மச்சாரி. அவன் எப்படியிருப்பான் என்றால், வெளியே காண்கிற அனைத்தையும் தன்னுள் காண்பான். தன் சொந்த நலனைப் புறக்கணித்து சமூகத்திற்கு உதவுகிறவனாக இருப்பான். உறுதியான மனதுடன் மக்கள் சேவைக்காக தன்னை தயார்படுத்திக்கொள்வான். உழைப்பின் பலன் தெரிகிற வரையில் உழைப்பான் . இருப்பவன் பிரம்மச்சாரி. துன்பம் வந்தாலும் தொடர்ந்து அதை எதிர் கொண்டு மகிழ்ச்சியுடன் சேவையை முடிப்பான்.
தர்மம், தவம் இரண்டையும் கலந்த வாழ்க்கையை வாழ்வான். கடவுள் பக்தர்கள், பக்தர்கள் அல்லாத வர்கள் ஆகிய இரு தரத்தாரையும் கடவுளாக பாவித்துத்தொண்டு செய்வான். இந்த லட்சணங்கள் உள்ளவனே பிரம்மச்சாரி.

Friday, June 13, 2014

சர்ப்ப தோஷம் நீங்க…..

naga-thosam



கால சர்ப்ப தோக்ஷம், நாகதோக்ஷம் போன்றவை முற்பிறவியில் நாகத்தைக் கொன்றவர்களுக்கும், கொல்ல உடந்தையாக இருந்தவர்களுக்கும் வருவதாக நம்பப்படுகிறது. இதனால் இந்தப் பிறவியில் இவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்காது. இதைத்தவிர்க்க எளிய வழி, சுக்ல பட்சத்தில் வருகிற சஷ்டி திதியில் விரதமிருந்து, காய்ச்சாத பாலை நைவேத்தியம் செய்து, நாகராஜ பூஜை செய்யவேண்டும். விரத தினத்தில் தரையில் படுப்பதும், விரதமுடிவில் பிராமண போஜனம் செய்து தட்சணை தருவதும் பலன் தரும் என அக்னி புராணம் கூறுகிறது.

Monday, February 25, 2013

திசைகளும் தீபங்களும்




                  நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?

                தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

               மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.  சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.  

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது.  எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட
புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்?

எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்...?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.  இது பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்



Thursday, February 21, 2013

நலம் தரும் குத்து விளக்கு



             'குத்து விளக்கு' தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு  அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில்ஊற்றும் நெய் - நாதம், திரி - பிந்து, சுடர் - அலை மகள், சுடர் – கலைமகள்,  தீ –  மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.  இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
               பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
                   குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.  ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.
                 திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள் விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

               இது பற்றி மேலும் விபரம் அறிய  இங்கு செல்லவும். 


குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...