கீரப்பாக்கம் பாபா ஆலயம்

2017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.


பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI - 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

Tuesday, May 31, 2016

தகுதியானவர்க்கே வாய்ப்பு

* சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். அது அவரவர் மனதிலேயே இருக்கிறது.
* அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்.
* இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும்.
*பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.
                                                                                                                            ஷீரடி பாபா

கட்டிலைச் சுற்றிவந்தார்

1930 ம் ஆண்டு டாக்டர் குஸ்தம்ஜி என்பவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பை பார்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். மயக்க நிலையில் இருந்த டாக்டர் ருஸ்தம்ஜியின் முன்பு ஒரு பக்கீர் தோன்றி என்னைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்று பதிலளித்தார் ருஸ்தம்ஜி.
முதலில் உன் உடல் நிலை தேறட்டும், அதன் பிறகு என்னைத் தெரியவரும் என்று கூறிய பக்கீர்,ஒருமுறை ருஸ்தம்ஜியின் கட்டிலை சுற்றி வந்து பிறகு மறைந்துவிட்டார். சற்று நேரத்தில் அவர் கண் விழித்துவிட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ருஸ்தம்ஜி பிழைத்துக்கொண்டதையும் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதையும் அறிந்து வியந்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ருஸ்தம்ஜி, தன்னை ஆசிர்வதித்த பக்கீரைக்காண ஏங்கினார், ஆனால் முடியவில்லை.
ஒருநாள் அவர் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பக்கத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நபரின் கையிலிருந்த புத்தகத்தில் தான் பார்த்த பக்கீர் படம் இருப்பதை அறிந்து இவர்தான் தன்னை காப்பாற்றினார் என சந்தோஷப்பட்டார்.
அதன் பிறகு சாயி பாபாவின் புத்தகத்தை வாங்கிப் படித்தார். 1949 ம் ஆண்டு சீரடி சமஸ்தானத்தின் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
ஒருமுறை இவரது மனைவி கண் வலியால் பாதிக்கப்பட்டபோது, டாக்டர்கள் எத்தகைய சிகிச்சை அளிப்பது எனத் திகைத்தார்கள். ருஸ்தம்ஜி தனது மனைவியை சீரடிக்கு அழைத்துவந்து பாபாவின் சமாதியை தினமும் சுற்றச் செய்தார்.
தனது கண்கள் குணமடைந்துவிட்டால், பாபா பல்லக்குக்கு அழகிய வேலைப்பாடு அமைந்த ஒரு துணியை அளிப்பதாக டாக்டர் மனைவி வேண்டுதல் வைத்தார். படிப்படியாக நோய் குணமடைந்துவிட்டது.

பரத்வாஜ் சுவாமிகள் எழுதிய சாயியின் திருவிளையாடல்கள் புத்தகம்

பாபாவின் பல் உள்ள கோயில்

இலங்கையில் கண்டி என்ற இடத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, பூனாவில் சிவாஜிநகரில் உள்ள பாபா கோயிலிலும் பாபாவின் பல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை உருவாக்கியவர் தாமு அண்ணா என்று பாபாவால் அழைக்கப்பட்ட பக்தர். அகமத் நகரில் வசித்த இவர் பூனாவுக்கு தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
அவரது மகன் நானா சாகிப் பூனாவில் இரண்டு அறைகள் உள்ள ஓர் வீட்டை வாங்கியிருந்தார். இதை 1945-ம் ஆண்டில் வழிபாட்டுத்தலமாக மாற்றினார்.  பாபாவின் படத்தை அங்கு வைத்து வழிபாடு செய்து வந்தார்கள். நாளடைவில் கூட்டம் பெருகியதை அடுத்து அருகிலேயே கோயில் உருவானது.
கேட் என்ற இடத்தில் காவல்துறையில் வேலை பார்த்துவந்த நிக்காம் என்பவரை நானா சாகேப் வேலையிலிருந்து வருமாறு கேட்டுக்கொண்டார்.  அவரிடம் கோயில் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஒருநாள் நிக்காமின் கனவில் பாபா தோன்றி, என்னுடைய பல் ஒன்று நிப்பாட் என்ற இடத்தில் வாழும் மாதவ ராவிடம் உள்ளது, அதை வாங்கி வந்து கோயிலில் வைத்துக்கொள் என்று கூறினார்.
அவ்வாறே, மாதவ ராவ் கனவில் தோன்றிய பாபா, பூனாவிலிருந்து வரும் பக்தரிடம் பல்லைக்கொடுத்து அனுப்பு என்று கூறினார்.
இதனால் பக்தரின் வருகையை எதிர்நோக்கி மாதவ ராவ் காத்துக் கொண்டிருந்தார். நிக்காம் வந்து தனது கனவை மாதவ ராவிடம் சொன்னதும், அவர் அதிர்ச்சியடைந்தார். தனது கனவிலும் பாபா இதே தகவலைகூறியதைத் தெரிவித்து,  பல்லை அவரிடம் ஒப்படைத்தார்.
1950  ம் ஆண்டு இந்தப் பல்லையும் பாபா போட்டோவையும் அந்த ஆலயத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும், ஒப்பற்ற சாயி பக்தருமான பூஜ்ய குரு நரசிம்ம சுவாமிஜி ஸ்தாபிதம் செய்து வைத்தார். இவற்றுடன் பாபா புகைப்பிடிக்க பயன்படுத்திய சில்லிம் குழாயும் வைக்கப்பட்டது.

தகவல்: கே. குமார், சென்னை – 5

Monday, May 30, 2016

பாபாவின் அனுமதியில்லாமல்….

ஒரு முறை பாபாவை காணவந்த சிலர், அவரைப் புகைப்படம் எடுக்க
அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதலில் மறுத்த பாபா தனது பாதங்களை
மட்டும் படம் எடுத்துக்கொள்ளுமாறு பின்னர் கூறினார். இந்த அனுமதியை
வைத்து அவர்கள் பாபாவை முழுவதுமாகப் படம் பிடித்தார்கள். ஒருவர்
பாபாவின் அனுமதியின்றி பாபாவைப் படம் பிடித்தார். நெகடிவ்வைக் கழுவி பிரிண்ட் போட்டபோது படத்தில் பாபாவின் பாதம் மட்டும் பதிவாகியிருந்தது.
பாபா அனுமதியில்லாமல் படம் எடுத்தவரின் புகைப்படத்தில் அவருடைய
சொந்த குருவின் உருவம் பதிவாகியிருந்தது. இவை டாக்டர் கவாங்கர்
என்பவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: சாயியின் திருவிளையாடல் புத்தகம்

SAI BABA IS STILL ALIVE

அன்பு நண்பர்களே.
சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் மூலம் JAYA WAHI என்ற பெண்மணி எழுதிய SAI BABA IS STILL ALIVE என்ற புத்தகம் கிடைத்தது. பாபா தான் உயிரோடிருக்கும்போது எப்படி தன் அடியவர்களைக் காப்பாற்றி வந்தாரோ, அதேவிதமாக தான் சமாதி அடைந்த பின்னரும், இன்றளவும் அவர்களின் நலனைப் பேணி வருகிறார் என்பது நாம் உணர்ந்து, அறிந்ததே.
மிக சமீப காலங்களில் நடைபெற்றுவரும் புல்லரிக்க வைக்கும் அற்புதங்கள் சிலவற்றை மிக அழகாக இப்புத்தகத்தில் JAYA WAHI பதிவு செய்துள்ளார்.
இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது, தமிழ் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி அவர்கள் இந்த புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள் என அறிந்து அதற்காக அலைந்தேன். என் நண்பர்கள் சிலரும் அதற்காக முயற்சி எடுத்தனர்.
26 - ம் தேதி என் பிறந்த நாள் அன்று, நானும் என் மனைவியும் மயிலாப்பூர் பாபா கோவிலுக்கு சென்றிருந்தோம். தரிசனத்துக்குப் பிறகு என் மனைவி "சிவசங்கரியின் புத்தகம் இங்கு கிடைக்கிறதா, கேளுங்களேன்" என்றாள். நான் விசாரித்தேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஏனென்றால், அப்போதுதான் அந்த புத்தகம் வந்து, பேக்கிங்கைப் பிரித்துக் கொண்டிருந்தனர். முதல் புத்தகத்தை வாங்கி பாபாவின் பாதத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டேன்.
என் பிறந்த நாளன்று உன் சன்னதியில் கொடுக்க நினைத்தாயோ என் சாயி பகவானே..... பாபாவின் அற்புதங்களுக்கு அளவேது.
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். கீழே வைக்க மனதில்லை. அற்புதம். வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்

SAI BABA IS STILL ALIVE (Tamil)
By JAYA WAHI. Translated By
சிவசங்கரி
Published, Marketed and Distributed by
TIMES GROUP BOOKS
A division of Bennett Coleman & Co Ltd.
Times Annexe, 9-10, Bagadur Shah Zafar Marg.
NEW DELHI -110 002
www.tgb.indiatimes.com
விலை.. ரூபாய் 225

Sethuram Krishnamurthy  அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து


மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்