Showing posts with label ஆன்மீகம் பல்வகை. Show all posts
Showing posts with label ஆன்மீகம் பல்வகை. Show all posts

Thursday, June 22, 2017

பக்குவம் என்பது என்ன?



ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன? அடைந்த பின் காணும் நிலை என்ன?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
ஒன்று…
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்’ கென்று சத்தம்  உண்டாகிறது. குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
இரண்டு….
ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும்.சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும்,  முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும். கடைசியாகத் தயிர் பரிமாறும்போது,  அதை உண்ணும் `உஸ் உஸ்’ என்ற சத்தம்தான் கேட்கும்.
மூன்று…
தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும். ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.
நான்கு…
புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம் அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான். அந்த மொழியில் விற்பன்னனோ,  தன் தாய் மொழியில் பேசும்போது,  அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.
ஐந்து…
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத் தெரியாத `ஓ’ என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.
ஆறு…
சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் `பட்பட்’ என்ற சத்தம் உண்டாகும்.அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.
பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.

Tuesday, June 28, 2016

ஆஸ்திகனும் நாஸ்திகனும்

ஆஸ்திகனும் நாஸ்திகனும் இரு நண்பர்கள். ஒருவர் ஆஸ்திகர், மற்றவர் நாஸ்திகர். ஒரு நாள் நாஸ்திகர் சொன்னார்: ”நண்பா நீர் தியாகி. பக்தி, தர்மம், தெய்வம் இவற்றுக்காக உலக வாழ்வின் வசதிகள் சகலத்தையும் மறந்துவிட்டீரே, உமது திடமான  கொள்கை ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன்”.
ஆஸ்திகர் பதில் சொன்னார்: ” நண்பரே நீர் தானே என்னைவிடப் பெரிய தியாகி. உமது கொள்கைக்காக நீர் பலரும் போற்றிவரும் தெய்வத்தையே தியாகம் செய்து விட்டீரே, இது மேலான காரியம்”.
வேதாந்த லஹரி

Monday, June 27, 2016

தீர்த்த யாத்திரை

ஒருவர் பற்றற்று தனியாக தீர்த்த யாத்திரை செய்தால் அவனுக்கு பிரம்மாதி தேவர்கள் வேண்டிய உதவி செய்வார்கள். ஒரு திவ்ய ஷேத்திரத்தில் மரணம் அடைந்தால் அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் ஒரு புண்ணியத் தலத்தில் உயிரை விடத் தீர்மானித்து அந்த ஷேத்திரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த பிறகு அங்கு ஜீவன் பிரியாமல் சிறிய பாபத்தின் பலனாய் வேறு இடத்தில் இறந்துவிட்டால், அவன் மறு ஜென்மத்தில் காவிரிக்கரையில் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து,சாஸ்திரங்களிலும் வல்லவனாகத் திகழ்ந்து நல்ல ஒழுக்கத்துடன், தெய்வ, குரு பக்தியோடு வாழ்ந்து இறுதியில் நல்லுலகைச் சேர்வான்.
108 திவ்ய ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றுக்கு யாத்திரை செல்கின்றவன் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு கோதானம் செய்கிற பலனை அடைகிறான். ஏதாவது காரணத்தால் பாதியில் வீடு திரும்பினால் அவன் திரும்பிய ஒவ்வொரு அடிக்கும் பசுவைக் கொன்ற பாவம் செய்த தோக்ஷத்தைப் பெறுகிறான்.
ஆதலால் தீர்த்த யாத்திரை முழுமையாகச் செய்து திருத்தலங்களில் பகவத் தியானத்திலும் பாகவத சேவையிலும் செலவிட்டு பிரசாதங்களை பக்தியோடு உண்டு, புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதனால் அவனுடைய இல்லற வாழ்வில் செய்த பாபங்கள் அழிகின்றன.
தீர்த்த யாத்திரை செல்கையில் ஒரு பாவச்செயலைச் செய்தால் அதற்கு விமோசனமே கிடையாது.

Tuesday, June 21, 2016

துவார பாலகர் ரகசியம்





கோயில்களில் நான்கு துவாரபாலர்களை வைத்திருப்பார்கள். இதன் பொருள் என்ன தெரியுமா? சாந்தம், ஆத்மா, அநாத்மா, விவேகம் என்பதை உணர முதலாவது.
தனக்குக் கிடைக்காத பொருட்களில் ஆசை இல்லாமல் பூர்வ கர்ம வசப்படி தனக்குக்கிடைத்ததில் திருப்தியடைந்து சந்தோஷமாக வாழ் என்பதற்கு இரண்டாவது.
பிரம்ம ஞானிகளுடன் நட்பு கொண்டு வாழ் என்பதை உணர்த்த மூன்றாவது துவார பாலர்.
பந்தத்தை அறுத்து மோட்சத்தை தரும் ஆத்ம விசாரணையைத்தேடு என்பதை உணர்த்த நான்காவது துவார பாலர்.

Saturday, June 18, 2016

அடியாரால் அழிபவையும் வருபவையும்



ஈச னடியார் இதயங் கலங்கிடத்தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகுமே நந்நந்தி யாணையே. என்பது திருமந்திரப் பாடல்.
இறைவனுடைய அடியார்கள் யாராயினும் அவர்கள் மனம் நோகுமாறு பக்தர் நடக்கக்கூடாது. அவ்வாறு நடப்பது என்பது வலிய கெட்டவைகளுக்கு அழைப்பு விடுவதற்குச்சமமாகும்.
இதை உணர்ந்த அந்த கால அரசர்கள் ஆன்மிகத்திற்கு வழிவிட்டார்கள். தடை ஏதும் செய்யவில்லை. தெரியாதவர்கள்தான் இறை அடியார்களை மனம் நோகச் செய்து வீணே வாழ்வைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
ஓர் அடியார் மனம் நொந்தால் தேசமும், நாடும் அதன் சிறப்பும் அழிந்துவிடும் என்று திருமந்திரம் கூறுகிறது. தேசம் என்பது இந்தியா என்றால், நாடு என்பது மாநிலம்.
இந்திரனது அரசபோகம் போன்ற சிறப்பு உடையது ஆயினும் அவையாவும் அழிந்து போகும். மன்னரின் சிறப்பும் நாசமாகும். இது சிவபெருமான் மீது ஆணை என்று கூறுகிறது திருமந்திரம்.
அடியார் இதயத்தில் இறைவன் நிறைந்து இருப்பதால் அவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள். அவர்களை பூஜிப்பது செல்வம் பெருகும், நல்ல வீடு வாசல் அமையும். பசு பால் பாக்கியம் பெருகும். நோய்கள் அணுக மாட்டா. தர்மப் பலன்கூடி கர்மப்பலன் தேயும். இவை அடியார்களால் வரும் நன்மைகள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...