Showing posts with label ஆரத்தி. Show all posts
Showing posts with label ஆரத்தி. Show all posts

Tuesday, August 1, 2017

ஆரத்தி ஒரு அறிமுகம்

ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர் வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது.
ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர் மற்றும் துறவிகளின் உருவச்சிலை முன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனையே ஆரத்தி எனப்படும்.
பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்க விட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ் ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும் மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள் ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.

Monday, October 14, 2013

ஸ்ரீ சாயி - ஆரத்தி

ஜீவன்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஓ! சாயிபாபா, 

தங்களுக்கு தீப ஆராதனை செய்கிறோம்.  

தங்களுடைய சேவார்த்திகளும், பக்தர்க்களுமான எங்களுக்குத் தங்கள் பாதாரவிந்தங்களில் அமைதியைக் கொடுங்கள்.  

ஆசைகளை அழித்து, எங்களது ஆத்மாவுக்குள்ளேயே தாங்கள் கலந்து, வேண்டுவோர்க்கு இறைவனைக் காட்டுகிறீர்கள். 

 பேரார்வத்துடன் விரும்பினோர்க்குத் தாங்கள் அனுபவங்களையும் அல்லது உணர்வுகளையும் கொடுக்கிறீர்கள். 

 ஓ! அன்புள்ளம் கொண்டோரே, 

தங்கள் சக்தி அத்தகையது. 

 தங்கள் திருநாமஸ்மரணை எங்கள் சம்சார பயங்களைப் போக்குகிறது.  

தங்களது லீலைகள் ஆழங்காண முடியாதவை.  

எப்போதும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அருள்கிறீர்கள். 

 இந்தக் கலியுகத்தில் சர்வவியாபியான, தத்தாவாகிய தாங்கள் சகுணப் பிரம்மமாக உண்மையில் அவதரித்தீர். 

வியாழக்கிழமை தோறும் தங்களிடம் வரும் பக்தர்களைக் கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்குங்கள்.

ஓ! இறைவனுக்கெல்லாம் இறைவனே!  

எனது செல்வங்கள் யாவும் தங்களது சேவையில் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.  

சாதகப் பறவைக்கு மேகங்கள் சுத்தமான நீரை அளிப்பதுபோல் இதைப் படிப்பவர்களுக்கு (இந்த ஆரத்திப் பாடல் சமகாலத்தில் வாழ்ந்த மாதவ் அட்கர் என்னும் அடியவரால் இயற்றப்பட்டது)  மகிழ்வுடன் உணவளித்துத் தங்கள் வாக்கை நிலைநிறுத்துங்கள்.  


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


நன்றி

மூலம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...