Showing posts with label பக்தர்களின் அனுபவங்கள். Show all posts
Showing posts with label பக்தர்களின் அனுபவங்கள். Show all posts

Saturday, October 26, 2013

பக்தர்களின் அனுபவங்கள்

பக்தர்களின் அனுபவங்கள்

ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.

பாபா: (அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
             
கொடுத்து) உங்களுக்கு தலைவலி இல்லையா?

பக்தை : இருந்தது. இப்போது நின்றுவிட்டது.
               (
தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).

பாபா: இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.

பக்தை: நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.

பாபா: சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பக்தை குழப்பமடைந்தார்.

பாபா: உங்கள் வீட்டில் என்ன பூஜை.

பக்தை: கணபதி பூஜை.

பாபா: உங்கள் தாயார் வீட்டில்?

பக்தை: கணபதி. நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும், பழங்களும், தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.

பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன. ஆகவே நீங்கள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.

பக்தை : பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை  தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர். அது சரிதானா?

பாபா: உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி  எறிவீர்களா? அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.

நன்றி

Thursday, October 24, 2013

பாபாவின் பக்தர்களின் அனுபவங்கள்.

திரு. பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)
டிசம்பர் 13. 1936

        தொழுநோய் (அது வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா, இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால், தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.

         என் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.
பாபா: அந்த புத்தகங்கள் என்ன என அறிவாயா?
நான்: தெரியாது
பாபா: அவை உன் கணக்குகள், நான் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான்: என் கணக்கா, பாபா?
பாபா: ஆம். இங்கே உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ. 16க்குப் பின் வருமா?
நான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.
அவர் கணக்குப் புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்குத் தான் என தெரியவந்தது. 'ஆம். பாபா. இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி?' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.

-
ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள். 

Wednesday, October 23, 2013

பாபா அளிக்கும் படிப்பினை

பாபா அளிக்கும் படிப்பினை

பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர்,பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்குச் சென்றார்.

    அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும்,அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,
"
இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்".

     பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார்,என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். பாபா சீரடியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ சீரடிக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?  
இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும் தாயன்பும் புரிந்தது.

      இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே.

      அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும்,பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!

     ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.  
 அனைத்தையும் இயல்பாகவே அறியும் பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே. 

நன்றி

பக்தர்களின் அனுபவங்கள்

அப்துல் ரஹீம் ஷம்சுதீன் ரங்காரி  - செப்டம்பர் 11, 1936.

1913-
ல் என் ஷிர்டி விஜயத்தின் போது.

பாபா : நீ எங்கிருந்து வருகிறாய்?
நான் : தானா
பாபா : எதற்காக?
நான் : என் மனைவிக்கு தொண்டையில் வீக்கம், முதலியன.
பாபா : அவளை மசூதிக்குள் வரச்சொல்.

நான் அவளை மசூதிப் படிகளில் ஏற்றி அழைத்து வந்தேன். அவள் பாபாவை வணங்கினாள். அவர் அவள் கையைத் தொட்டு, "குதா அச்சா கரேகா" (அதாவது கடவுள் நன்மை செய்வார்) எனப் பகன்றார். அவர் கேட்காமலேயே நான் அவரிடம் ரூ.1-4-0 அளித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு ஊதி வழங்கினார். அதன் பின்னர் 2 மணி நேரம் தங்கினேன். என் மனைவியின் வீக்கம் விரைவாக வடிந்து கொண்டிருந்தது.

மேலும் அவர் சொன்னார்: நீ நேற்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நான் : ஏன்?
பாபா : சங்கீர்த்தனம் நடந்தது. இரவு முழுவதும் நான் அழுதேன். அவர்கள் என் மீது வசை பாடினார்கள்.
நான் :  ஏன் அவர்கள் தங்கள் மீது வசை பாடவேண்டும்?
பாபா : நான் "வசை பாடினார்கள்" என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் நீ புரிந்துகொள்வாய்.

நான் : "வசை பாடினர்" என்றால் உண்மையில் புகழ் பாடினர் என நான் எண்ணினேன்.

(
சில மகான்கள் புகழ்ச்சியை இகழ்ச்சி எனப் பேசுவதன் மூலம் அதை தாங்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை காண்பிக்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள பஜனையில், முழுவதுமே பாபாவை உயர்வாக புகழ்ந்து பாடியிருக்க வேண்டும்; அதை இகழ்ச்சி போலவே பாவித்து அவர் அதை பொருட்படுத்தாமலிருந்திருக்க வேண்டும். மேலும் இந்த புகழ் மாலையில், பகவானிடம் இறங்கச் செய்யத்தக்க பிராத்தனைகளுடன் நெஞ்சை உருக்கும் இன்னிசை கலந்து விடும். அதனால் பாபா அழுவார்).

நான் : கடவுளை துதித்து பாடும்போது, ஆண்டவனிடம் பக்தி செலுத்துபவன் அழுவான், சிரிப்பான் அல்லது கூத்தாடுவான்.
பாபா : அதேதான். நீ சொன்னது சரி. உனக்கென ஒரு  குரு உள்ளாரா?
நான் : ஆம். ஹபீ பலீஷா சிஸ்தி நிஜாமி.
பாபா : அதனால் தான் உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் ஷீரடிக்கு செல்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே சமாதியடைந்து விட்ட என் குரு வெளியே செல்லும் போதெல்லாம் இன்னிசையும் பின் தொடரும் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். - ஸ்ரீ சாய்பாபா பக்தர் அனுபவங்கள். 

நன்றி

மூலம்: http://www.shirdisaibabasayings.com

Friday, October 18, 2013

பாபா மீது கவனம்

       ஹரி கநோபா என்பவர் சாய் லீலைகளைப் பற்றி கேள்விப்பட்டு, எனினும் அவற்றை முழுமையாக நம்பாமல் நேரில் சென்று சாயியை சோதிக்க நினைத்தவர், நண்பர்களுடன் சேர்ந்து மும்பையிலிருந்து  கிளம்பி சீரடி வந்தார். அவர் தலையில் அழகிய ஜரி வேலைப்பாடு செய்த பாகை அணிந்திருந்தார். புத்தம் புதிய பாத அணியும் அணிந்திருந்தார்.
      பாபாவை சற்று தொலைவில் கண்டதும் அவரை அருகில் சென்று வணங்க எண்ணி, தனது  புதிய பாகையையும் பாத அணியையும் கழற்றி ஓரிடத்தில் வைத்தார். ஆனால் அவர் முழு கவனமும் அவற்றின் மீதே வைத்தார்.  பாபாவை நமஸ்கரித்து விட்டு திரும்பியவர் திடுக்கிட்டார். 
      ஆம். விலை உயர்ந்த அவரது பாத அணி தொலைந்திருக்க கண்ட அவர் மனம் ஒடிந்து மதியம் உணவு அருந்த அமர்ந்தார்.
      அப்போது மராத்திய சிறுவன் ஒருவன் அவரது பாத அணிகளை ஒரு குச்சியில் சொருகியபடி வருவதைக் கண்டார். அருகில் வந்த அந்த சிறுவன் "உங்கள் பெயர் ஹரியா? கநோபாவின் மகனா? என்றான். 
       ஹரி கனோப ஆம் என பதில் அளித்ததும் அவரிடம் பாத அணியை தந்தான். 
       ”எப்படி நீ கண்டு பிடித்தாய் என்று ஹரி கேட்ட போது.  அதற்கு அவன் பாபா அவர்கள் என்னிடம் இந்த காலனியை தெருவில் எடுத்துக் கொண்டு போய் " இங்கு கநோபாவின் மகன் இருக்கிறாரா? ( ஹரி கா பேட்டா ) அவர் ஜரி தலைப்பாகை அணிந்திருப்பார் ( ஜரி கா பேதா ) என்று கூவி உனக்கு திருப்தி அளித்தால் உரியவரிடம் சேர் " என்று சொன்னதாக கூறினான்.
      ஹரி கநோபா "நான் ஜரிகை தலைப்பாகை அணிந்திருந்ததை எல்லோரையும் போல் பாபாவும் பார்த்திருப்பார். ஆனால் நான் கநோபாவின் மகன் என்று எப்படி அறிந்தார்எனவே பாபா யாவும் உணர்ந்த , அறிந்த மகான் என்பதில் ஐயமில்லை என்று வியந்தாராம்.
      இறைவனை வணங்கும்போதும் இறை உருவாகிய குருவை வணங்கும்போதும் நம் கவனம் அவன் மீதுதான் இருத்தல் வேண்டுமே அன்றி நம் மறுமைக்கு உதவாத பொருட்கள் மீது இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி அவன்  மீது அளவற்ற நம்பிக்கை வைத்தல் வேண்டும்.சந்தேகம் என்பதே கூடாது.
            சத்குரு ஸ்ரீ சாயியை நம்பி  வணங்குவோம்.

பக்தர்களின் அனுபவங்கள்

திரு. பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)
டிசம்பர் 13. 1936

        தொழுநோய் (அது வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா, இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால், தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.

         என் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.
பாபா: அந்த புத்தகங்கள் என்ன என அறிவாயா?
நான்: தெரியாது
பாபா: அவை உன் கணக்குகள், நான் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான்: என் கணக்கா, பாபா?
பாபா: ஆம். இங்கே உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ. 16க்குப் பின் வருமா?
நான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.
அவர் கணக்குப் புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்குத் தான் என தெரியவந்தது. 'ஆம். பாபா. இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி?' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.

-
ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள். 

நன்றி

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...