Showing posts with label சாயி தரிசனம். Show all posts
Showing posts with label சாயி தரிசனம். Show all posts

Tuesday, May 31, 2016

பாபாவின் பல் உள்ள கோயில்

இலங்கையில் கண்டி என்ற இடத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, பூனாவில் சிவாஜிநகரில் உள்ள பாபா கோயிலிலும் பாபாவின் பல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை உருவாக்கியவர் தாமு அண்ணா என்று பாபாவால் அழைக்கப்பட்ட பக்தர். அகமத் நகரில் வசித்த இவர் பூனாவுக்கு தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
அவரது மகன் நானா சாகிப் பூனாவில் இரண்டு அறைகள் உள்ள ஓர் வீட்டை வாங்கியிருந்தார். இதை 1945-ம் ஆண்டில் வழிபாட்டுத்தலமாக மாற்றினார்.  பாபாவின் படத்தை அங்கு வைத்து வழிபாடு செய்து வந்தார்கள். நாளடைவில் கூட்டம் பெருகியதை அடுத்து அருகிலேயே கோயில் உருவானது.
கேட் என்ற இடத்தில் காவல்துறையில் வேலை பார்த்துவந்த நிக்காம் என்பவரை நானா சாகேப் வேலையிலிருந்து வருமாறு கேட்டுக்கொண்டார்.  அவரிடம் கோயில் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஒருநாள் நிக்காமின் கனவில் பாபா தோன்றி, என்னுடைய பல் ஒன்று நிப்பாட் என்ற இடத்தில் வாழும் மாதவ ராவிடம் உள்ளது, அதை வாங்கி வந்து கோயிலில் வைத்துக்கொள் என்று கூறினார்.
அவ்வாறே, மாதவ ராவ் கனவில் தோன்றிய பாபா, பூனாவிலிருந்து வரும் பக்தரிடம் பல்லைக்கொடுத்து அனுப்பு என்று கூறினார்.
இதனால் பக்தரின் வருகையை எதிர்நோக்கி மாதவ ராவ் காத்துக் கொண்டிருந்தார். நிக்காம் வந்து தனது கனவை மாதவ ராவிடம் சொன்னதும், அவர் அதிர்ச்சியடைந்தார். தனது கனவிலும் பாபா இதே தகவலைகூறியதைத் தெரிவித்து,  பல்லை அவரிடம் ஒப்படைத்தார்.
1950  ம் ஆண்டு இந்தப் பல்லையும் பாபா போட்டோவையும் அந்த ஆலயத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும், ஒப்பற்ற சாயி பக்தருமான பூஜ்ய குரு நரசிம்ம சுவாமிஜி ஸ்தாபிதம் செய்து வைத்தார். இவற்றுடன் பாபா புகைப்பிடிக்க பயன்படுத்திய சில்லிம் குழாயும் வைக்கப்பட்டது.

தகவல்: கே. குமார், சென்னை – 5

Thursday, May 5, 2016

உய்வதற்க்கு என்ன வழி?

ஐயா, பல ஆண்டுகளாக எங்கள் ஆச்சாரங்களை விட்டுவிட்டோம். நாங்கள் கடைத்தேற முடியாது என்று பிறர் சொல்லக்கேட்டு மனம் வலிக்கிறது. நாங்கள் உய்வதற்கு என்ன வழி எனக் கூறமுடியுமா?
( விக்னேஷ்வரன், கொரட்டூர்)
குல ஆசாரங்களை விட்டுவிட்டவர் பாமர நிலை அடைகிறார். பாமரர்கள் அதாவது வேதத்தையும், தெய்வத்தையும் அறியாதவர்கள் உய்வதற்கு ஒரே வழி அவனது பாதங்களைப் பற்றிக் கொள்வது ஒன்றே! அதைச் செய்ய என்ன வழி எனக் கேட்டால் அவனை வழிபடுவதே ஆகும். நீங்கள் இறைவனை வழிபட்டாலே போதும், முக்தி பெற்றுவிடுவீர்கள்.

யோக நிலையின் பலன்

யோக நிலையால் பலன் என்ன?
(பி.ஆர். சத்யசீலன், மதுரை)
யோகநிலை என்பது மோன நிலையாகும். அதாவது மவுனமாக அமர்ந்து தன் மனதை ஓரிடத்தில் குவிக்கிற நிலையாகும். இதை மனம் ஒருமுனைப்பட்ட நிலை என்றும் கூறலாம். இந்த நிலையை அடைந்துவிட்டால், ஒருவனுடைய கர்மப்பலன் அவனுக்கு எதிரானதாக இருந்தாலும், அவன் அதர்மம் செய்கிறவனாக இருந்தாலும், இவற்றின் தாக்கம் குறையும்போது அவனை பிரம்மத்தோடு இணைத்துவிடும்.
இந்த நிலையை அடைவதற்கு உடம்பையும், மனத்தையும் நமது விருப்பத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதற்கு கடுமையான பயிற்சி தேவை. இதைத்தான் பாபா ”தண்டால் எடு” என குறிப்பிட்டார்.
சிறிது சிறிதாகப் பழகி மனதை ஒருமுனைப்படுத்திக்கொள்வதற்கு சாதனை என்றும், இதைச்செய்பவனுக்கு சாதகன் என்றும் பெயர். சாதனையை நிறைவேற்றும் நிலையில் மனதில் பற்று இல்லாத தன்மை தோன்றும். இது தோன்றியதும் வைராக்கியம் தோன்றும். வைராக்கியம் ஏற்பட்ட பிறகுதான் நமது கர்ம வினை தடுத்தாலும் கடவுளை நம்மிடமிருந்து பிரிக்க முடியாத நிலை தோன்றும். இதுவே யோகநிலையால் விளையும் பலன் ஆகும்.


நம்பிக்கை வை





உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும், வீழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.
                                                                                                                   சீரடி சாயிபாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...