கீரப்பாக்கம் பாபா ஆலயம்

2017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.


பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI - 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

Friday, April 14, 2017

கலங்காதிரு


என்னை நோக்கி நீ வேண்டுதல் செய்யத் துவங்கிய அந்த நேரத்திலேயே உனக்கு பதில் தரும் வேலையை துவங்கிவிட்டேன் என்பதையும்,அதனால் தான் நீ சோதனைகளை அனுபவிக்கிறாய் என்பதையும் உனக்குப் பலமுறை அறிவுறுத்தி வைத்திருக்கிறேன்.இப்போது அதை நினைவு படுத்துகிறேன். கலங்காதிரு, தாமதம் ஆனாலும் தப்பாமல் கிடைக்கும்.       சாயிதரிசனம்

Thursday, April 13, 2017

மிக எளிய வழி


நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அகங்காரம் அற்றவனாகவும், மிகவும் பணிவுடனும் இருப்பாயாக. எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக. அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றின் இடையே நீ எனது ஒளியைக் காண இயலும். இதுவே பக்தியை அடைய மிக மிக எளிய வழியாகும்

Wednesday, April 12, 2017

எல்லாம் கடந்தவர் பாபா!


பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.
ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார். பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.
பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.
பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை. ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.
ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.
இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான், எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.
பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.
ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.

Tuesday, April 11, 2017

எப்போதும் துன்பம் நேராது"நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன்  நானே... எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...   உலகத்தின் ஆதாரம் நானே..  எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

Monday, April 10, 2017

உன் சாய்அப்பா உன்னுடன் தான் இருக்கிறேன்


என் அன்பு குழந்தையே

உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை உன்னால் உணர முடியவில்லையா , உன் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய் அதற்கான வழியை நான் உன் மனதில் இருந்தபடி உனக்கு அருளுவேன் , என்னால் முடியவில்லை ,எனக்கு இது வராது , என்னால் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களை உடைத்து எரி

உன் சாய் அப்பா உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். இன்று கோபத்தில் என்ன பேசினாய் என்பதை உன்னால் உணர முடியவில்லை.  உன் மனதில் இருந்து நானே உனக்கான பதிலை உன்னிடம் கூறிக் கொண்டே தான் இருப்பேன் அதை உணர்ந்து நட, மாயை என்பது ஒரு பொய்யான தோற்றம் அதில் நீ மாட்டிக்கொள்ளும் நிலையில் இருக்கிறாய் அதில் இருந்து வெளியே வர உனக்கு நான் உதவி செய்கிறேன் அதை உணர்ந்து கொஞ்சம் ஜாக்கிரதையா நட

உன் சூழ்நிலை உனக்கான வலியை தருகிறது என்று அழுகிறாய் ஆனால் அது வலியை தருவது அல்ல வாழ்க்கை என்பது எளிது ஆனால் யதார்த்தை நீ புரிந்து கொண்டால் தான் அது சாத்தியம் அதை புரிய வைக்கவே சில கசப்பான நிகழ்வகள் உனக்கு நிகழ்கிறது

உன் சாய் அப்பா எப்போதும் துணையாக இருப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என் பிள்ளையான உனக்கு நல்ல காலம் நெருங்கிவிட்டது அதனால் தான் பிரச்சனை உனக்கு பெரிதாக தெரிகிறது

ஒரு பிரச்சனை முடியும் தருவாயில் தான் அது தீவிரம் அடையும் ஒரு நல்ல முடிவுக்காகத் தான் உனக்கு இது நிகழ்ந்து இருக்கிறது.  உன் அன்பு உண்மையானது .  அதில் ஏன் நீ குழம்புகிறாய்

சாய்ராம் சாய்ராம்

Sunday, April 9, 2017

நில்! கவனி! செல்!


“சீரடியில் காலை வைத்த சிந்தனையாளர்கள் கவலைப்படுவதில்லை” என்று பாபா அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற கோயில்களுக்கும் சீரடியில் அமைந்துள்ள சமாதி மந்திர் என்ற கோயிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் வாழ்ந்து உடலைத் துறந்தவர்களின் சமாதிகளே அமைந்துள்ளன. அதாவது புதைக்கும் இடம் என்று இதனைக் கொள்ளலாம்.
கவலைகள், கஷ்ட நஷ்டங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என எதை அனுபவித்து வந்தாலும் அவற்றை இத்தலத்திலேயே புதைத்துவிட வேண்டும்.. என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
துவாரகாமாயியில் கால் வைத்ததும் உங்கள்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வந்துவிடும் என பாபா உறுதியாகக் கூறியிருக்கிறார். நீங்கள் சீரடியில் அனைத்தையும் புதைத்து விட்டு, ஆனந்த மயமான துவாரகாமாயியில் கால் வைத்து பாபாவை சேவித்துச்செல்லுங்கள், அதன் பின் நிச்சயம் நன்மை மட்டுமே நடப்பதை அனுபவமாக அறிவீர்கள்.

Saturday, April 8, 2017

எங்கும் எதிலும் நானே!


ஒருமுறை திருமதி தர்கட் சீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் பரிமாறப் படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்கு வந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித் துண்டை விட்டெறியவும் அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக் கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.
பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது ஸாயி பாபா அவளிடம் “அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவு பெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் உட்கார்ந்து கொண்டு நான் பொய் பேச மாட்டவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கம் கொள்வாய். முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக. இதை நன்றாகக் கவனித்துக் கொள்” என்று கூறினார்.
அவள், எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினாள்.
இதற்கு பாபா, “அந்த சுவை மிகு ரொட்டியை உண்டு நான் மனப் பூர்வமாகத் திருப்தியடைந்து இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேளைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.
நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே துவைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப் போல் எனக்கு சேவை செய்” என்று கூறினார்.

Friday, April 7, 2017

என் வாக்கு பொய்யாகாது


புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளை பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகு தானே உள்ளே வந்து வாழ்க்கையை நடத்துகிறாய். அப்படி தான் குழந்தையே! உனது பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான் உன் செயல்படும் போதும் உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசுபட்டிருக்கிறாய். உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம் பிரச்சினை என்று பேதலித்து வருகிறாய். அவற்றையெல்லாம் நான் மெதுவாக செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத்தெரிகிறது. சோதனைக்காலம் வரும்போது நீ பயப்படாதே! கலங்காத! நான் உன் தந்தை! உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதை போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களை கடிந்துகொண்டு நடத்துகிறேன். இதை புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.......ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய‌ ஜெய‌ சாய்!!

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்