Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Saturday, June 9, 2018

குரு சேவை



குரு சேவை மிகக் கடினமானது.  ஆகையால் முன்னமே நன்றாக யோசித்து குருசேவைக்கு முற்பட வேண்டும். கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம்.  ஆனால், மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும்.
குரு பக்தியினால் எல்லாமும் பெற முடியும்.  சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும்.  ஜபங்கள், அனுஷ்டானங்கள் நீண்ட நாள் செய்தால்தான் பயன் பெற முடியும்.  ஆனால் குருபக்தியின் பயன் உடனே கிடைக்கும்.

தவங்கள், அனுஷ்டானங்கள், யக்ஞங்கள்,  தானங்கள் ஒரு வேளை பயனில்லாமல் போகலாம்.  ஆனால் குருபக்தி கண்டிப்பாக பயன் கொடுக்கும்.  அதுவுமில்லாமல் குருவிடம் பக்தி உள்ளவனுக்கு யக்ஞங்கள் தானங்கள் செய்த பயனும் வரும்.
குருபக்தி சுலபமானது,  கடினமில்லாதது.  ஆனால் மனதை திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும்.
ஸ்ரீகுருவிற்க்கு எவன் ஒருவன் குருபக்தியுடன் சேவை செய்வானோ அவன் வீட்டில் ஸ்ரீகுரு கல்ப விருட்சமாய் வேண்டியதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
குருவை சேவிப்பவனுக்கு நரகமே இல்லாதபோது கஷ்டங்கள் எப்படி வரும்.  குரு சேவையினால் நான்கு வித புருஷார்த்தங்கள் கிடைக்கும்.  குரு சேவை செய்யும் கரங்கள், குருவை நாடி வரும் பாதங்கள்குருவை வணங்கும் சிரம் எவ்வளவோ புண்ணியம் செய்தவை.- 

Saturday, June 24, 2017

குருவே பிரசன்னமாவார்


தேகத்தையும், மனத்தையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அவரையே அனுதினமும் தியானிக்க வேண்டும். தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும்,  அவரே இருக்க வேண்டும். அப்போது எங்கு பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார். அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி, ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும். இவ்விதமாக குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும்  (நிர்குண சாகாரத்தில்) ஒன்றாகச் சேர்ந்தே இருப்பார்கள். குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க வேண்டும். அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும். குருவின் பாதங்களே சரணம் என்றிருந்தால் குருவே பிரசன்னமாவார்.

Monday, August 3, 2015

குருவின் கிருபை!



குருவின் க்ருபா அல்லது கருணை அவர்களுக்குள் அன்பு, தியாகம், சகிப்புத் தன்மை, ஆகியவற்றை உருவாக்கும். சிறிதளவு பேச்சு, பார்வை, தொடுதல் ஏன்? எண்ணத்தில்கூட பக்தர்களுக்கு தீட்சை அளித்து, அவர்களை வல்லமை பெறச் செய்துவிடுவார்கள். ராம கிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு எழுச்சியூட்டியது இப்படித்தான்.

Sunday, July 19, 2015

குருவின் பெருமை

காசி ஷேத்ரம் நிவா சச்ச
ஜாஹ்னவீ  சரணோதகம்
குருர் விச்வேச்வர:  சாட்சாத்
தாரகம் பிரஹ்ம -  நிச்சய:

                               குரு கீதை

குருவினுடைய வாசஸ்தலமே காசி ஷேத்திரம். பாத தீர்த்தமே கங்கை. குருவே சாட்சாத் தாரகப் பிரம்மமாகிய விச்வேச்வரர். ஆகவே, குருவைத் தொழுதால் சகல பாவங்களும் தீர்வதோடு, மோட்ச லோகமும் நமக்கு சித்தியாகும்.

Friday, July 17, 2015

அன்பான குருவை நாடுங்கள்!



அன்பு காட்டப்படும் இடத்தில் மிக சுதந்திரமாகவும்,  நெருக்கமாகவும் இருப்பதே உயிர்கள் வழக்கம். வணங்கும் இறைவனாக இருந்தாலும், அணுகும் குருவாக இருந்தாலும் அன்புள்ளவரானால் நமக்கு அருள் விரைவில் கிடைக்கும்.
இறைவன் யார் மீதும் பழியுணர்வு கொண்டிருப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதுமில்லை. நாம் கற்றும், கேட்டும் இருக்கிற விக்ஷயங்களை வைத்து இறைவன் இப்படிப்பட்டவர் என்ற ஒரு முடிவுக்கு வருவது தவறான நிலைப்பாடாகும்.
இறைவன் எப்போதும் அன்பாகவே இருக்கிறார். அவர் யாரையும் தண்டிப்பதும் இல்லை, யார் மீதும் குறை காண்பதும் இல்லை. ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதுமில்லை. அதேபோல, அவர் நமக்கு நோய்களையும், துன்பம், கவலை, கஷ்டம் போன்றவற்றையும் தருவதில்லை. இவை அனைத்தும் நம்முடைய தவறான எதிர்மறை சிந்தனைகள், நம் மீது நாம் கொண்டிருக்கும் தவறான பச்சாதாபம், கடவுள் பற்றிய தவறான கொள்கை போன்றவற்றால்தான் இவை நமக்கு வருகின்றன.
எண்ணம், சிந்தனை அனைத்தையும் நேர்மறையாக மாற்றி, கடவுளும் குருவும் நம்மீது மாறாத அன்புள்ளவர் என நினைத்து வாருங்கள், அனைத்தும் சாதகமாக மாறுவதை உணர்வீர்கள்.
அவர் உங்களோடு இருப்பதாக நினைத்து நடந்தால், தன்னம்பிக்கையும் தைரியமும் எப்போதும் உடன் இருக்கும். நன்மை, தீமை என்பவை மனதின் சிந்தனை வெளிப்பாடு ஆகும். நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர் களோ அது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குரு அல்லது கடவுள் உங்களுக்கு மிக நெருக்கமானவர், அன்பானவர், நீங்கள் எதைக்கேட்டாலும் தருவார் என நினைத்து அப்படியே நாடுங்கள். பதிலுக்கு குருவும் உங்களை அவ்விதமாகவே பார்ப்பார்.
சாயி பக்தரான நீங்கள், சாயி நாமத்தை உங்களுக்கு உரிய மந்திரமாக்கிக் கொண்டால், பாபா எல்லா நிலைகளிலும் பொறுப்பு எடுத்துக் காப்பார். இன்றைக்கு உங்களுக்கு கற்பிக்கிற பாடம் நாளைக்கு உங்கள் மூலம் பிறருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்து, எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை எதிர்த்துப் போராடக்கூடாது, மாற்ற முயற்சிக்க வேண்டும்.
உங்கள் குறையை, அல்லது உங்கள் மீது குறையை பிறர் சொன்னால் கோபிக்காமல், இதை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு நன்றிகூறி அவரை ஆசீர்வதிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் அவரையல்ல, உங்களை ஆசீர்வதிக்கிறீர்கள்.
தீங்கு செய்தவர் மீது கோபம் கொள்ளாமல், அவரை ஆசீர்வதிக்க வேண்டும். அவரை அடுத்த முறை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியின்றி அவர் பேசவும், நீங்கள் நடக்கவும் வேண்டும். இப்படியிருந்தால் உங்களில் சாயி நாமம் நன்றாக வேலை செய்கிறது என்று பொருள். இழந்தவற்றுக்காக அழாமல் அடுத்து கிடைக்கப் போகும் ஒன்றுக்காக செயல்படத் தொடங்க வேண்டும். இப்படி செய்தால் உங்களில் அவர் செயல்படுவதாகப் பொருள்.
இப்படியே ஒவ்வொரு செயலையும் மாற்றிக் கொண்டே வந்து, புதிய வாழ்க்கையை உண்டாக்கிக் கொள்ளவே, நாமத்தை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதே தீட்சையாகும்.
காயப்படுவது கர்ம நிகழ்வு. காயத்தை ஆற்றுவது கடவுள் தரும் வரம் அல்லது வாழ்க்கை. வாழ்வே கடவுள் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டால், எந்த நிலையிலும் நல்ல மாதிரியாக வாழ்வதைப் பற்றியே சிந்திப்பீர்கள். இந்த சிந்தனையே உங்களை வெற்றியாளராக மாற்றி, நல்ல எதிர்காலத்தை தந்துவிடும்.
சாயி பாபா செய்த பல அற்புதங்கள், அவருடைய வாழ்க்கை இவற்றை ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற பல விக்ஷயங்கள் அவற்றுள் புதைந்து இருப்பதைப் பார்க்கலாம்.
இந்த விக்ஷயங்கள் அனைத்தும் உங்களுக்குப் பலன் தரவும், சாயி நாமம் உங்களுக்கு மந்திரமாக அமைந்து உங்கள் வாழ்க்கையை மாற்றவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...