Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Sunday, February 10, 2013

பாதம் எது? சிரசு எது?




ஒரு நாள் பிற்பகல் பக்தர் ஒருவர் ரமண மகரிஷியிடம், ‘சுவாமி, எனக்கு ஒரு விருப்பம்….என் தலையினை தங்களது திருவடியில் வைத்து வணங்கிட வேண்டும்’ என்றார்.

‘ஓ அதுவா! ஆனால்…எது தலை, எது கால்?’ , என்று கேட்டார் ரமண பகவான். அன்பர் பதிலேதுமின்றி அமைதியானார்.

சற்று நேரம் கழித்து ,  ‘நான் என்ற அகந்தை உணர்வே சிரசு, அகந்தை கரையுமிடமே குருவின் பாதம்’ என்றார் ரமணர்.

Saturday, February 9, 2013

படித்ததில் பிடித்தது,



பதினெட்டு சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?


          சித்தத்தினை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள்.  அடியார்களை வழிபடுவதும் ஆண்டவனை வழிபடுவதும் ஒன்றே.  தாராளமாக வழிபடலாம்.

Friday, February 8, 2013

படித்ததில் பிடித்தது



சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்து விடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?

          சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம்.  தூய்மையும் நமது வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்கு தகுந்தாற்போல் அடுத்த முறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.

Thursday, February 7, 2013

படித்ததில் பிடித்தது



பிரதோஷ வேளையில் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?


          பிரதோஷ வேளையில் வழிபட கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க இயலாத நிலையில் வீட்டில் இருந்தே வழிபடுங்கள்.

          பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாய நம, நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம்.  தேவார திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

Wednesday, February 6, 2013

படித்ததில் பிடித்தது




ஆடம்பர பக்தி. எளிய பக்தி….இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?


          விருப்பு வெறுப்பினைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு அவருக்கு கிடையாது. பக்தி என்பது அவரவர் மனதினைப் பொறுத்த விஷயம்.  ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ, எளிமையாகச் செய்தால் பலன் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை.

மன்னர் கட்டிய கோயிலை விட பூசலார் நாயனார் கட்டிய மனக் கோயிலினையே சிவன் விரும்பி ஏற்றுக்கொண்டதாக பெரிய புராணம் சொல்கிறது.  பொருளாதாரம் ஆரம்பித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள்.  இல்லாவிட்டால் எளிமையாக வழிபடுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு  செய்தால் இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

Monday, February 4, 2013

படித்ததில் பிடித்தது,



அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே, இது உண்மையா?


          சற்று கூட உண்மை இல்லை. அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது. இங்கு ஒரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். அகத்தியர் தனது ஜோதிட காவியம் எனும் நூலில் திதி பலன்களை கூறும் போது அம்மாவாசைக்கான பலன் மட்டும் அவரால் அளிக்கப்படவில்லை.

அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்பதற்க்கு ஜோதிட பூர்வமாக எந்த ஆதாரங்களும் இல்லை.  ஆனால் இந்த பொய்யான கருத்து எப்படியோ மக்களிடையே பரவி விட்டது.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...