Monday, September 26, 2011

சாயியின் குரல்



மகளே! என்னோடு பேசு!

என் அன்பு மகளே!


                    உன் சுந்தர முகத்தின் அழகையும் அதிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் என் பெயரையே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் உதடுகளையும், என்னையே சுவாசமாக்கி உள்ளிழுத்து வெளிவிடும் உன் மூக்கினையும், என் நாமத்தையே சுவை என்று கூறும் உன் நாக்கினையும் என் பெயரைக் கேட்டதும் சிலிர்ப்படைந்து உருகும் செவிகளையும் எனது முத்தங்களால் நான் ஆசீர்வதிக்கிறேன்.
என் மகளே! 

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம்



                      சாயி பாபா கோயில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத் தருவது போன்றவற்றைச் செய்கிறார் பாபா. சில சமயம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வை தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...