பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய
இவர், இந்து
முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து
இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த
மலர்களை அருகிலிருந்த
கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும்
முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.
Showing posts with label பாபா ஒரு அற்புத மகான். Show all posts
Showing posts with label பாபா ஒரு அற்புத மகான். Show all posts
Sunday, May 29, 2016
Friday, May 27, 2016
நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா)
''இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா) என்று.
உங்கள் மனம் திருப்தியடையும்வரை பார்த்து
நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்’ என்று பாபா கர்ஜித்தார்.
அன்பு பாபாவின்
இன்றய அருள்வாக்கு!!!
இறுதி வரை படியுங்கள் அன்புறவுகளே..நன்மை உண்டாகும்.
முஸ்லீம் என்று
நினைத்தால் அவருக்குக் காது குத்தப்பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு ஸுன்னத் செய்யப்பட்டிருந்தது.
அவதார புருஷரான ஸாயீ ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர். ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்துகொண் டிருக்கிறது.
தேஹாபிமானம்
இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.
பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது
அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட
நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார்.
இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது; சங்கும் மணிகளும் முழங்கின; அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச்சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு
சொல்லமுடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு
சம்மதம் இல்லாதவை).
மசூதியில் ஸதா
பஜனை நடந்தது; அன்னதானமும் நடந்தது; ஹிந்துக்கள் அவருக்குப் பாதபூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?
முஸ்லீமாக
இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினிஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?
இவ்விதமாக மக்கள்
வியந்துபோனார்கள். இது எவ்வாறு நடக்கமுடியும் என்று நேரில் கண்டுகொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே
நடந்துகொண்டார்கள். தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப்போனார்கள்.
ஸதாஸர்வ காலமும்
ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவென்றோ முஸ்லீமென்றோ
எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம்; பிற்படுத்தப்பட்டோரிலும் பிற்படுத்தப்பட்டவராகவும் இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம்; ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவுகூடப்
பிரமாணம் (மதிப்பிடும் அளவை - சான்று) ஆகாது.
.
Monday, September 23, 2013
சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 6
சீரடி சாய்பாபா ஒரு
அற்புத மகான் - பாகம் 6
தேனி. எம். சுப்பிரமணி
(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
இதுபோல், கோபர்காங்வின்
ஆய்வாளராக இருந்த கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும்
அவருக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. அவருக்கு சாய்பாபாவின் அருளினால் ஒரு ஆண்
குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு சீரடியில்
சிறப்பான ஒரு திருவிழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதைச் சீரடி
சாயிபாபா பக்தர்களாக இருந்த சிலரிடம் தெரிவித்தார். அவர்களும் இதற்கு
சம்மதித்தனர். இதை பாபாவிடம் தெரிவித்து அதற்கான அனுமதியையும் ஆசியையும் பெற்றனர்.
இந்த விழாவை இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்களுக்கும் சேர்ந்த ஒரு
பொது விழாவாக அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இசுலாமியப் பண்டிகையான
உரூஸ், ஸ்ரீ ராம நவமி தினத்தன்றுதான் வருகிறது என்பதைப் பாபாவிடம் பேசி
முடிவு செய்தனர். இவர்கள் திருவிழா கொண்டாட விரும்பிய நிலையில், சீரடி ஊருக்குத்
தண்ணீர் அளித்துக் கொண்டிருந்த இரண்டு கிணறுகளில், ஒன்றில் தண்ணீர் வற்றிப்
போய் விட்டது. வற்றிப் போன அந்தக் கிணற்றில்தான் நல்ல தண்ணீர் இருந்தது. இன்னொரு
கிணற்றுத் தண்ணீர் உப்பு நீராகும். சாயிபாபாவிடம் இது பற்றித் தெரிவித்தனர். அவர்
அங்கிருந்து அந்த உப்புத் தண்ணீர் கிணற்றுக்குச் சென்றார். அந்தக் கிணற்றில் சில
மலர்களை வீசினார். அந்தக் கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறியது.
திருவிழா ஊர்வலத்துக்காக கோபால்ராவ் குண்ட் சாதாரணமான ஒரு
கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். அதே சமயம் நானா சாஹேப் என்பவர் அழகிய பூ
வேலைப்பாடுகளுடன் மற்றொரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். இரண்டு கொடிகளுமே
தயாரிக்கப்பட்டு விட்டதால் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்து
வரப்பட்டு சாயிபாபாவினால் “துவாரகமாயி” என்று அழைக்கப்பட்ட மசூதியின் இரு மூலைகளிலும் அந்தக் கொடிகள்
ஊன்றப்பட்டன.
இத்திருவிழாவில் கோர்ஹாலாவைச் சேர்ந்த சாயிபாபாவின்
இசுலாமியப் பக்தரான அமீர்சக்கர் தலாலுக்கு சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த வேண்டும்
என்கிற எண்ணம் ஏற்பட்டது. சாயிபாபாவை முகமதிய ஞானியராகச் சிறப்பிக்கும் வகையில்
இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப்
பொடியும் “தாலி” எனும் தட்டுக்களில் வைத்து, இசையுடனும், நறுமணப்
பொருட்களின் வாசனையுடனும் எடுத்து வரப்பெற்று கிராமம் முழுக்கக் கொண்டு சென்றனர்.
கடைசியாக மசூதிக்குச் சென்று திரும்பி அந்த சந்தனப் பொருட்களை “நிம்பா” என்னும்
குழிகளில் கொட்டினர்.
இப்படி ஒரே நாளில், இந்துக்களின் கொடி
ஊர்வலமும், இசுலாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலமும் எவ்விதப் பிரச்சனைகளுமின்றி
அருகருகே கொண்டு செல்லப்பட்டன. இந்த விழா வருடந்தோறும் படிப்படியாக மாற்றமடைந்து
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 8ல் தொடங்கி ஐந்து
நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மாறிவிட்டது.
பாபா இந்துவா அல்லது இசுலாமியரா என்ற கருத்து வேறுபாடு
பலருக்கும் இருப்பது உண்டு. இந்துக்களின் ஸ்ரீ ராம நவமித் திருவிழாவைப் போல் இசுலாமியர்களின்
சந்தனக்கூடு விழாவையும் அவர் அனுமதித்தார். கோகுலாஷ்டமியின் போது “கோபால்காலா” திருவிழாவை உரிய
முறைப்படி செய்வித்தார். “ஈத்” திருவிழாவின் போது இசுலாமியர்களின் நமாஸ் தொழுகையை தமது மசூதியில்
அனுமதித்தார். அவருக்கு இந்து வழக்கப்படி காது குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்
இசுலாமியர்கள் வழக்கப்படி சுன்னத் செய்து கொள்ளவில்லை. ஆனால் சுன்னத் செய்யும்
வழக்கத்தை அவர் ஆதரித்தார். இசுலாமியர்களுக்கான மசூதியில் அவர் வாழ்ந்தார்.
இந்துக்களைப் போல் “துனி” எனும் அகண்ட நெருப்பை எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.
மேலும் இசுலாமிய சமயத்திற்கு விரோதமான மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார். அதாவது திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.
மேலும் இசுலாமிய சமயத்திற்கு விரோதமான மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார். அதாவது திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.
சாயிபாபாவின் அற்புதங்களைக் கண்ட, இந்து சமயத்தில் அதிகமான பற்றுடையவர்கள் (பிராமணர்கள், வேத சாத்திரங்கள் கற்ற அறிஞர்கள்) பலர் சாயிபாபா முன்பு தங்கள் வைதீக முறைகளை விட்டுவிட்டு, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினர். சாயிபாபா தன்னிடம் அருளாசி பெற வருபவர்களிடமிருந்து தட்சிணையைப் பெற்றார். தட்சிணை மூலம் பெறப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை தர்மத்திற்கும், மீதமுள்ள தொகையை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார். அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் “துனி” எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார். இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது. அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த உதியின் மூலம் சாயிபாபா எதைத் தெரிவித்தார்? இவ்வுலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் நிலையற்றது. பஞ்சபூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடல் அனைத்து இன்பங்களையும் அடைந்த பின்னர் இறுதியில் சாம்பலாக்கப்படும். இந்த உடல் சாம்பலாகப் போகும் உண்மையைத் தன் பக்தர்களுக்கு உணர்த்தவே அவர் உதியை வழங்கினார். “பிரம்மம்” ஒன்றே உண்மையானது. பிரபஞ்சம் எனப்படும் இவ்வுலகம் நிலையற்றது என்றும், தாய், தந்தை, மக்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள் அனைத்தும் உண்மையில் நம்முடையது அல்ல. இவ்வுலகிற்குத் தனியாக வந்த நாம், தனியாக இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
(தொடரும்)
நன்றி: தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான
தொடரின் ஐந்தாம் மகான்
Sunday, September 22, 2013
சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 5
சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 5
தேனி. எம். சுப்பிரமணி
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு
சொடுக்கவும்)
பாபா சீரடியில்
கோதுமை மாவை அரைத்த நிகழ்வு சாதாரணமானதாக இருந்தாலும் அது மிகப்பெரும் தத்துவத்தை
உணர்த்துகிறது. அவர் கோதுமையை அரைக்கவில்லை, பாவங்கள், உள்ளம், உடல்
போன்றவற்றின் துன்பங்களையும், தன்
அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரு கற்கள் அவர் திருகையில்
இருந்தது. இதில் கர்மம் கீழ் கல்லாகும். பக்தி மேல் கல்லாகும். திருகையின்
கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச எனும் மூன்று குணங்களைச் சேர்ந்த நமது
எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அகங்காரம்
போன்றவைகளைத் துகள்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது
தன்னை உணர்தல் என்பது முடியாதென்பதே பாபாவின் கருத்தாகும்.
ஒருநாள் சீரடியில் பலத்த மழையும், காற்றும்
சேர்ந்து அடித்தது. பாபாவின் மேல் பற்று கொண்ட மகல்சபாதிக்கு தூக்கம் வரவில்லை.
பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. அவர் கொட்டும் மழையில்
நனைந்தவாறு பாபா அமர்ந்திருக்கும் வேப்ப மரத்தடிக்கு வந்தார்.
அங்கு பாபாவின் உடல் மணலாலும், இலைகளாலும்
மூடியிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன மகல்சபாதி பாபாவின் உடலை மூடியிருந்த மணல்
மற்றும் இலைகளை அகற்றினார். அங்கு பாபா நடந்த எதுவும் தெரியாமல் தியானத்தில்
இருந்தார். பாபாவை நிஷ்டையில் இருந்து எழுப்பினார். இதைப் பார்க்க மக்கள் அங்கு
கூடிவிட்டனர்.
“பாபா, நீங்கள் கொட்டும் மழையில் இந்த வேப்பமரத்தின்
அடியில் இருப்பதற்குப் பதிலாக அருகிலுள்ள மசூதியில் கூட தங்கியிருக்கலாமே...?” என்றார்.
உடனே பாபா, “எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் எதுவும் தேவையில்லை” என்று மறுத்தார்.
உடனே பாபா, “எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் எதுவும் தேவையில்லை” என்று மறுத்தார்.
“நீங்கள் இப்படிச் சொன்னால், நாங்களும் எங்கள் வீட்டிற்குச் செல்லாமல்
உங்களுடனே இருக்கிறோம்.” என்று அவர்கள் சேர்ந்து
சொன்னார்கள். அவர்களின் அன்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும்
பாபா மசூதியில் தங்க சம்மதித்தார்.
மசூதியில் தங்கியிருந்த சாயிபாபா இளம் பருவத்தில் தம் தலைமுடியை வளர்த்து வந்தாலும்
அதை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைப் பற்றிய பாதுகாப்பிலும் அதிக
ஆர்வம் காட்டிக் கொள்வதுமில்லை. ஆனால், அவர்
தங்கியிருந்த இடத்தினருகில் மலர்த் தோட்டம் ஒன்றை உருவாக்க விரும்பினார்.
இதற்காகச் சில மலர்ச் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். அந்தச் செடிகளுக்குத்
தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்காக வாமன் தத்யா என்பவரிடம் இரண்டு மண்பானைகளை
இலவசமாகப் பெற்றார். கிணற்றிலிருந்து நீர் இரைத்து, மண்
பானைகளில் ஊற்றி அவரே சுமந்து கொண்டு வந்து ஊற்றி மலர்ச் செடிகளைப் பாதுகாப்பாய்
வளர்த்து வந்தார்.
மண்பானைகளை அவர் தங்கியிருந்த வேப்பமரத்தடியில் வைத்திருப்பார். அந்த மண்பானைகள் நெருப்பில் சுடாத பானைகள் என்பதால் அது மறுநாள் பயன்படுத்த முடியாதபடி உடைந்து போய்விடும். இப்படியே தத்யா மூன்று ஆண்டுகளுக்கு தினமும் சுடப்படாத மண்பானைகளைக் கொடுத்து வந்தார். பாபா, சுடப்படாத மண் பானைகளில் நீர் கொண்டு வந்து அந்த இடத்தை அழகியப் பூந்தோட்டமாக உருவாக்கினார். அந்த இடத்தில்தான் தற்போது “பாபா சமாதி மந்திர்” உள்ளது.
சாயிபாபா பொதுவாக மக்களுடன் கலந்து பேசுவதில்லை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார். பகற்பொழுதில் வேப்பமரத்தடியில்தான் அமர்ந்திருப்பார். சில சமயம், கிராம எல்லையிலுள்ள வாய்க்கால் அருகிலிருக்கும் ஆலமரத்தடிக்குச் சென்று அமர்ந்திருப்பார். மாலை நேரங்களில் குறிக்கோளின்றி நடந்து செல்வார்.
பாபா பகற்பொழுதில் அவருடைய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். இரவில் உதிர்ந்து கொட்டும் மசூதியில் படுத்திருந்தார். இந்த சமயத்தில் பாபாவிடம், ஹூக்கா, புகையிலை, ஒரு தகர டப்பா, நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டு துணி, ஒரு குச்சி போன்ற சிறு சிறு உடமைகள் மட்டுமே இருந்தன. தலையிலுள்ள அச்சிறு துணி நன்கு முறுக்கப்பட்ட முடியைப் போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது. இத்துணி பல வாரங்களாகத் துவைக்கப்படாமல் இருக்கும். காலணி எதுவும் அவர் அணிவதில்லை. பெரும்பான்மையான நாட்கள் சாக்குத் துணி துண்டே அவருடைய ஆசனமாகும். ஒரு கௌபீனத்தை (கோவணத்தை) அணிந்திருந்தார். குளிரை விரட்டுவதற்காக புனித நெருப்பின் முன்னால் இடதுகையை மரக்கட்டைப் பிடியின் மேல் வைத்தபடி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். எப்போதும் “கடவுளே ஒரே உரிமையாளர்” எனும் பொருளில் “அல்லா மாலிக்” என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
பாபாசாஹேப் என்பவரின் தம்பி நானாசாஹேப் என்பவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தும் குழந்தைகள் எதுவுமில்லை. இதனால் பாபாசாஹேப், தன் தம்பி நானாசாஹேப்பை பாபாவிடம் ஆசி பெற்று வரும்படி அனுப்பினார். பாபாவிடம் அவர் ஆசி பெற்றுச் சென்ற ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் பாபாவின் சக்தி பற்றிய செய்தி அஹமத் நகர் வரை பரவியது. அதன் பிறகு சாயிபாபாவைப் பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
(தொடரும்)
நன்றி: தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில்
வெளியான தொடரின் ஐந்தாம் மகான்
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...



