Showing posts with label பாபா ஒரு அற்புத மகான். Show all posts
Showing posts with label பாபா ஒரு அற்புத மகான். Show all posts

Tuesday, May 24, 2016

என்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள்

பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர் தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார். வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்புவித்துவிட்டு, வீட்டைத் துறந்து ஷீர்டி சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார். பாபா அவர் தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார். அதை அவர் இவ்வாறாகச் செய்தார். அவருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி கோரினார். மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துசென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார். ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கைமுறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி அவரைத் தேற்றினார்.
ஒரு நாளைக்கு மூன்று முறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பாபாவின் சொற்களை நம்பி மான்கர்மச்சிந்த்ரகட்டுக்கு வந்தார். இன்பமான காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது. அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதி  நிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள். ஆனால் மான்கரைப் பொறுத்தமட்டிலோ, தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அதை அவர் பெற்றார். பாபா தாமே அவர்முன் தோன்றினார். மான்கர் அவரைப் பார்த்தது மட்டுமல்லாது தான் ஏன் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் கேட்டார்.
பாபா பதில் அளிக்கையில், "ஷீர்டியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன. உனது நிலையற்ற மனதை அடக்கவே இங்கு உன்னை அனுப்பினேன். நான் ஷீர்டியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய். பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய். இப்போது நீ கண்ணார ஷீர்டியில் கண்ட அதே மனிதர்தானா இவர் என்று தீர்மானித்துக்கொள். இந்த காரணத்திற்காகத்தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார்.
குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர் மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார். புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார். ஆனால் அவர் டிக்கெட் பெற புக்கிங் ஆபீசுக்கு சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார். விரைவில் அவரால் டிக்கெட் பெற முடியவில்லை.
அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்?" எனக் கேட்டார். மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார். அவர், "தயவுசெய்து என்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று சொன்னார். மான்கர் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார். மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை. ஸ்டேஷனைவிட்டு வண்டி போகும்வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால் அவரைப்பற்றி எவ்விதச் சுவட்டையும் அவர் காணவில்லை.
இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது காட்சியாகும். மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஷீர்டிக்குத் திரும்பி பாபாவின் ஏவலையும், சேவையையும் செய்துவந்தார். அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார். பாபாவின் முன்னிலையிலேயே அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் நல்லதிர்ஷ்டம் படைத்திருந்தார்.
அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்.

Tuesday, September 24, 2013

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 7



சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் - பாகம் 7

தேனி. எம். சுப்பிரமணி


(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(ஆறாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
            உண்மைப் பொருள்களைப் பகுத்துணரும் விவேகம்நிலையற்ற பொருட்களின் மேல் பற்றின்மை போன்ற தத்துவத்தை தனது தட்சிணைஉதி ஆகியவற்றின் வழியாக அவர் தெளிவாகவே அறிவுறுத்தினார். தட்சணையை அவர் கேட்டுப் பெற்றார். உதியை அதற்குப் பதிலாகத் திருப்பி அளித்தார். அதாவது தட்சணை மூலம் இவ்வுலகத்தின் மேல் பற்றின்மையையும்உதி மூலம் உண்மையை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டினார். 

                          உலகத்தின் உறவுகளிடம் பற்று கொண்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனை அடைய வழிகாட்டிய சாயிபாபாசீரடிக்கு வரும் போது தன்னுடன் கொண்டு வந்த செங்கல்லை மட்டும் மசூதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மசூதியில் இரவு நேரத்தில் அந்த செங்கல் மீது சாய்ந்து கொண்டுதான் இருக்கையில் அமர்வார். அவர் இதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருந்தார். 

            ஒரு நாள் சாயிபாபா இல்லாத நேரத்தில்தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் அந்த செங்கல்லைத் தன் கையில் எடுத்தான். அது அவனிடமிருந்து கை தவறிக் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. இதை சாயிபாபா அறிந்ததும்அந்த செங்கல்லின் இழப்பு குறித்து பெரிதும் கவலை கொண்டார்.

                            இன்று உடைந்தது சாதாரண செங்கலல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்து விட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் துணையுடன் நான் எப்போதும் ஆன்மத் தியானம் செய்தேன். அது என் உயிரைப் போன்று பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று புலம்பி அழுதார். ஒரு ஜடப்பொருளான செங்கல்லுக்கு சாயிபாபா ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிறார் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவரிடம் யாரும் இது குறித்துக் கேட்டுக் கொள்ளவில்லை. 


                                    மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் நிலையில் அவன் மனதை இந்த உலக விசயங்களிலிருந்து மீட்டு ஆன்மிக விசயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் மத சம்பந்தமான நூல்கள் பாராயணம் செய்யப்படுவது இந்து சமயத்தினரிடையே வழக்கத்திலிருக்கும் ஒன்று. கடவுளின் அவதாரமாக இருந்த சாயிபாபாவிற்கு இது தேவையற்றது எனினும் மக்களுக்கு வழிகாட்டும் விதமாக இவ்வழக்கத்தை அவரும் பின்பற்றினார். தாம் விரைவில் மரணமடையப் போகிறோம் என்பதை உணர்ந்துவஜே என்பவரை அழைத்துதம் முன்பு ராம விஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார். 


                                   வஜே முதலில் வாரம் ஒருமுறை அதைப் படித்தார். பின்னர் இரவும்பகலும் அதையே படிக்கும்படி சொன்னார். அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார். இப்படி பதினொன்று நாட்கள் சென்றன. பின்னர் மூன்று நாட்கள் படித்தார். ஆனால் வஜே மிகவும் களைப்பு அடைந்து விட்டார். அதன் பிறகு சாயிபாபா அவரைப் போகச் சொல்லி விட்டார். அதன்பிறகு ஆத்ம போதத்தில் மூழ்கியவராய் தன் மரணத்தை எதிர் கொண்டார். அன்றிலிருந்து தனது காலை சஞ்சாரத்தையும்பிச்சை பெற்று வரும் நியமத்தையும் நிறுத்தி மசூதியிலேயே தங்கி விட்டார். அந்த சமயத்தில்அவருடைய பக்தர்களில் சிலர் அவருடனேயே இருந்தனர்.


                                   1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் மகான் சாயிபாபா இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். சாயிபாபா மறைவுச் செய்தி சீரடி மக்களையும் அவர் மேல் அன்பும் பக்தியும் கொண்டிருந்த பகதர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில் சாயிபாபாவின் உடலை எப்படி அடக்கம் செய்வதுஎன்ற கேள்வி எழுந்தது. சிலர் சாயிபாபாவின் உடலை திறந்த வெளியில் அடக்கம் செய்து அதன் மேல் சமாதி கட்ட வேண்டும் என்றனர். சிலர் வாதாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் அடக்கம் செய்யக் கூடாது என்றனர். இந்தக் கருத்து வேறுபாடு முப்பத்தாறு மணி நேரம் தொடர்ந்து நீடித்தது. இறுதியாக வாதாவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் உடல் வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்குகள் அனைத்தும் பாலாசாஹேப் பாடே மற்றும் சாயிபாபாவின் மேல் அதிகமான பற்றுடைய அவருடைய பக்தர்களில் ஒருவரான உபாசினி ஆகியோராலும் செய்யப்பட்டது. 


                               சாயிபாபாவை இந்துக்களும்இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. 

                              சாயிபாபா நோய் தீர்க்கும் அற்புதங்களை நிகழ்த்தினார். குழந்தையில்லாத பலருக்கும் குழந்தை கிடைக்க அருளினார் என்றும்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு செய்த பல வகையான அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. இவையனைத்தும் சாயி அற்புதங்கள் (சாயிலீலைகள்) என்று இன்றும் போற்றப்படுகின்றன. அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாலும்தன்னிடம் (சீரடி) தேடி வருபவர்களுக்கு இன்றும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறார்.

             ஜெய் சாயிராம்!

(நிறைவு)
நன்றி: தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...