Showing posts with label சாயி சத்சரித்திரம். Show all posts
Showing posts with label சாயி சத்சரித்திரம். Show all posts

Thursday, November 23, 2017

விவரிக்கமுடியாத சக்தி

     சொற்களால் விவரிக்கமுடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. ஸச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்வி­ருந்து நிவிர்த்தியடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுபட்டவரோ, எவர் முழுமுதற்பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்துவிட்டாரோ, அவர் தூய ஆனந்தத்தின் உருவமாவார்.
      வேதம் ''ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற்பொருள்)” என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தகஞானிகளும் இதைப் போதிகளில் (புராணங்களில்) படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை சிர்டீயில் அனுபவிக்கிறார்கள்.
      தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்கவேண்டும்.
     ஆத்மஞானிகளுக்கோ இதுவிஷயத்தில் ஆதங்கம் ஏதுமில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் நித்தியமாக விடுதலையடைந்தவர்கள்; ஆனந்தமானவர்கள்; ஸதா சின்மய (தூய ஞான) ரூபமானவர்கள்.
     பாபா எல்லாருக்குமே அதிஷ்டானமானவர் (அடித்தளமானவர்). அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்.
     அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர்.
      உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப்பட்டது. பக்தர்களுடைய மனத்தின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக்கொண்டார்.
      சிர்டீயில் இருப்பதுபோல் தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாகச் சுற்றிவந்தார். இந்த அனுபவத்தைத்தான் ஸாயீ எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார்.
     பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக்கொண்டார். எல்லாரிடமிருந்தும் இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்களவாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள்.
      சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர்; சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர்ó; சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தைக் கொடுத்தனர்.
      சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவ­ங்கத்தின்மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

எங்கும் நிறைந்தவரே பாபா!

    அணிமா சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.   
       அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
      அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமகாசித்திகளும் நவநிதிகளும், அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையே.
     புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி — அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார்.
        பார்வைக்கு அவர் ஷிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார்.
    அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.
  அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பகிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அவரது அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Friday, December 2, 2016

சத்சரித்திரத்திலிருந்து



சத்சரித்திரம் 43வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.
சாவடியில் ஒளிந்த ரூபம், மசூதியில் பிரம்ம ரூபம்., சமாதியில் சமாதி ரூபம், மற்றெல்லா இடங்களிலும் சுக சொரூபம்.
ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்கு பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும் அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும் பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Sunday, June 26, 2016

இலவசம் வேண்டாம்






யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப்பெற்றுக்கொள்ளாதே. 

யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி.

மற்றவர்களிடம் வேலை வாங்கிக்கொள். ஆனால் அவர்களின் உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்.

சத் சரித்திரம்: அத்: 19-246-247

Saturday, June 25, 2016

உங்கள் நலம் கவனிக்கப்பட…..






உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.

சாயி பாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழு மனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்பட்டு அவனது நலம் பாபாவால் கவனிக்கப்படுகிறது.

(அத்தியாயம் - 25)

என்னைப் பார்த்தால் ஞானம் வரும்… தொட்டால் அனுபவம் கிடைக்கும்…..



அது ஒரு வியாழக்கிழமை. அதிகாலை நேரத்தில் பிரார்த்தனை வேளையில் பாபாவுடன் சம்பாஷணை செய்துகொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தால் ஞானம் வரும், உன்னைத்தொட்டால் அனுபவமாகும் என்ற வார்த்தைகள் வந்தன. இது எப்படி சாத்தியமாகும் என நான் எண்ணவில்லை, மாறாக, என்னிடம் இனி புதிய சக்திகள் வரப்போகின்றன என நினைத்தேன்.
கூடவே ஒரு பயம், நான் என்னைத் தொட சாயி பக்தர்களை அனுமதிப்பதால் இரவு வேளைகளில் தாங்கமுடியாத உடல் உபாதைகளை அனுபவிக்கிறேன். அழலாம் போன்றிருக்கும் அந்த நிலையில் இனி இவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என நினைப்பேன்.
மறுகணம் மனம் மாறும். என்னை நம்பி வரும் இந்த பக்தர்களின் கர்மாவை வாங்குவதால் நான் அழிந்துபோனால்தான் என்ன? வீணே தரித்த உடல் எப்படியாவது போகட்டும். எனக்குள் நீ இருந்து பிறரை ஆசிர்வதிப்பதாக நினைத்துக்கொள்கிறேன், நடத்து.. எனக் கூறுவேன்.
அன்றைய தினம் பிரார்த்தனை மையத்திற்குச்சென்றேன். சத்சங்கம் செய்யும்போது, என்னைப் பார்த்தால் ஞானம் வரும் என்ற பதத்திற்குப்பொருள் சொல்ல ஆரம்பித்தேன்.
சத்குருவின் தரிசனம் இருதயத்தின் முடிச்சு களை அவிழ்த்து, புலனடக்கம் கிடைக்கச்செய்யும். முன்ஜென்மங்களில் சேர்த்த பாவ மூட்டைகளையும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்கும் (அத்: 10-9)
உடலில் நான் என்னும் உணர்வு இருக்கும் வரை மனிதவடிவில் ஒரு குரு தேவை. அந்த வடிவை எப்போதும் மனக்கண்ணில் பார்த்து வணங்கிக்கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் பக்தி தோன்றும்.
குருவின் பாதங்களில் ஞானம் இருக்கிறது, ஆகவே தலையைத் தாழ்த்தி குருவின் பாதத்தில் தலை வைத்து கண்கள் திருப்தியடையும்வரை அதை தரிசனம் செய்தால் ஞானம் வரும்.
சுருக்கமாகச் சொன்னால் இறைவனை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். இதுதான் பார்த்தல் ஆகும்.
எப்போதும் அவர் தொடர்பில் இருப்பதுதான் அவரைத் தொட்டுக்கொண்டிருப்பதாகும். தாய் ஆமையின் பார்வையால் குட்டி போஷாக்கு பெறுகிறது. தாயின் பார்வையைத் தாண்டிப்போனால் போஷாக்குக் கிடைக்காதல்லவா?
ஆகவே, எப்போதும் அவரது பார்வையில் நாம் படுமாறு இருக்கவேண்டும். பாபா பக்தர்களின் பூஜையை விரும்பி ஏற்பவர். சிலர் அரைத்த சந்தனத்தை அவர் நெற்றியில் இரண்டு விரல்களால் கோடுகளாக இடுவார்கள்;
சிலர் கஸ்தூரி சேர்த்து நெற்றியில் பட்டை போடுவார்கள். சிலர் பாதங்களைப் பிடிப்பார்கள், சிலர் கைகால்களை அழுத்தி விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு சுகானுபவம் ஏற்படும். பரவச உணர்வில் அவர்கள் பக்தி செய்வார்கள்.
ஞானிகள் தங்களால் நினைக்க முடியாத கண்ணனின் வடிவை, கோபியர் தங்களால் மறக்க முடியவில்லை என்று கூறியது எப்படி?
அவன் உடலைத் தொட்டுத் தொட்டு அனுபவித்த பாச உணர்வு என்னும் காரணம்தான். இப்படித்தான் சாயி பக்தர்கள் சாயியினுடைய உருவத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். அதை குற்றம் எனக் கருதுவதில்லை.
இவ்வாறு அவரை நினைப்பதாலும், அவரது தொடர்பில் இருப்பதாலும் ஒருவன் பக்தனாகி, தனது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறான்.,” இப்படித்தான் பிரவசனம் செய்தேன்.
சரி, இது பாபாவை நினைத்து அவருடைய தொடர்பில் இருப்பதால் வருவது. உன்னைத்தொட்டால், உன்னைப் பார்த்தால் என்று பாபா சொன்னாரே அதன் பொருள் என்ன என அமர்ந்து யோசித்தேன்.
நான் என்பது ஆத்மா. எனது ஆன்மாவை நான் உற்றுநோக்கினால் எனக்கு ஆன்மிக ஞானம் வரும் என்கிறார் பாபா. என்னைத் தொட்டால் அனுபவமாகும் என்கிறாரே அது என்ன?
இது பெரிய விஷயம். இடகலை நாடியின் வழியாக குருவருளுடன் புருவ மத்தியில் உள்ள சுழிமுனையை அடைந்து, மூலக்கனலை எழுப்பி மும்மலம் அறுத்து மூச்சுக்காற்றான நந்தியை இயக்கி ஆன்மஜோதியைத் தொடவேண்டும்.
அப்பா இது என்னால் முடியாது. நான் அற்பப்பாமரன், ஆளை விடும். என் ஆன்மாவாகிய தங்களை மட்டுமே நான் தொட்டுக்கொண்டு இந்தப் பிறவித் தளையைக் கடக்க வழிவிடும் என வேண்டிக்கொண்டேன்.
என் குழந்தைகளே, ஆன்மிகத்தில் தேறும் போது அவர் போதிக்கிற விஷயங்களில் ஞான அர்த்தம் தோன்றும். அது எல்லோருக்கும் பொருந்தாது. நீங்கள் இந்த சம்சார உலகில் வெற்றிகரமாக வாழ அவரை எப்போதும் நினைத்து, அவரது தொடர்பில் இருந்தாலே போதுமானது. மீதியை அவர் படிப்படியாகச்சொல்லித் தருவார்.
நான் எப்படி இறைவனை நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அவரது தொடர்பில் இருக்கிறேனோ அப்படி, ஒருவன் என்னுடைய தொடர்பில்  இருக்கும்போது நான் அவனுக்காக நிச்சயமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன். அவனது வேண்டுதல் அனுபவமாக மாறுவதற்கு என்னால் எது முடியுமோ அதைச் செய்வேன்.
ஒருவன் என்னை நினைப்பானேயாகில், எப்போதும் அவனது சிந்தை ஈஸ்வரனில் லயித்துவிடும். என்னைப் போல மாறவேண்டும் என எண்ணிக்கொண்டு செயல்பட்டால் அவன் சாயி பக்தனாகி விடுவான். இதைத்தான் பாபா சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...