Showing posts with label ஸ்ரீ சாயியின் குரல். Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயியின் குரல். Show all posts

Saturday, June 2, 2018

துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........



அன்பு குழந்தையே ! 

உன்னை தேற்றுவதற்காகவும் , உதவிகள் செய்வதற்காகவும் இதோ நான் உன்னோடுதான் இருக்கிறேன்.  இப்போது நீ மெல்ல மெல்லத் தளர்ந்து விட்டாய். வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. சுற்றி இருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது. கர்மா என்று எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை, விதி என்று தள்ளி விடவும் முடியவில்லை என்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகிறாய்.
என் குழந்தாய் பொறுமையாக இரு. சகித்துக்கொள் .நம்பிக்கையுடன் இரு. என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். என் வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன் . உன் மனதிலுள்ள சகல துக்கங்களும் மாறும். இதுவரை சதா காலமும் நீ துன்பத்தை நினைத்துக்கொண்டு இருந்ததால் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. இதை மாற்ற இனி எப்போதும் என் நாமத்தையே உச்சரித்து வா. அது உனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அந்த மாற்றம் உன்னை என்னிடத்திற்கு அழைத்துவரும் .அப்போது உன்னை தூக்கித் துடைத்து உனது துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........
--சாயியின் குரல்.

Thursday, May 24, 2018

எது வந்தாலும் நீ கலங்காதே



"அன்புக் குழந்தையே!. சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே, கலங்காதே. தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து  நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நீ நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். எப்போதும், எல்லாவற்றுக்காகவும் சந்தோஷமாக இரு! நான் உன்னோடு இருப்பதால் நீ அனைத்தையும் ஜெயிக்கப்போகிறாய். நான் உனக்கு ஜெயம் தருவேன் கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே அது உன் பூர்வ ஜென்ம கர்மா இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு நான் பார்த்து கொள்கிறேன் கவலைப்படாதே  நான் உன்னோடு இருக்கிறேன். பயப்பாடதிரு. பலம் கொண்டு திடமான மனதோடு இரு .  உன்னை ஒரு போதும் நான் கை விடவே மாட்டேன் . உன்னை விட்டு விலகுவதும் இல்லை கை விடுவதும் இல்லை. நீ கலங்காதே எது வந்தாலும் நீ கலங்காதே, சோதனையைத் தருகிற நான் அதை தாங்கும் சக்தியையும் தருவேன் தப்பிக்கிற வழிகள் பலவற்றையும் உருவாக்கி அளிப்பேன். உனக்கு பின் இருப்பது நான். உன்னை கைவிட மாட்டேன்.."!

Tuesday, May 15, 2018

நம்பினால் உனக்கு எல்லாம் ஜெயமே



என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு நம்பிக்கை இல்லாப் பின்னடைவு. நீ என் மீது நம்பிக்கை வைத்துள்ளாய். ஆனால் உன் வாழ்வில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் சோர்ந்து போய் இருக்கிறாய். இதனால் மனதிலும் உடம்பிலும் சத்து இன்றியும், நம்பிக்கை இல்லாமல்  இருக்கிறாய். ஏதோ வாழ்க்கை நடக்கின்றது என்றே ஓடுகிறாய்.
உனக்கான தீர்வு உன்னிடம் உள்ளது. என்னால் என் வாழ்வில் புத்துணர்வுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்ச்சித்து, நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று நீ நம்பினால், உனக்கு எல்லாம் ஜெயமே.
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகிப் போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Tuesday, May 1, 2018

சாயியின் குரல்


பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும் இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்............................ சாயியின் குரல்

Saturday, April 28, 2018

என் நாமத்தை மறவாதே!


பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும் இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்............................ சாயியின் குரல்

Sunday, July 30, 2017

எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது

 அன்பு குழந்தையே!
 உனது கவலைகளுக்கு காரணம், உனது கர்மவினை என்றேன், நீயோ நான் ஏதும் பாவம் செய்யவில்லையே, எந்த வகையிலும் தவறு செய்யவில்லையே என்றாய், நீ இந்த ஜென்மத்தில் எதையும் செய்யவில்லைதான், ஆனால் இதற்கு முந்தைய ஜென்மங்கள் எப்படி இருந்தன என்பது உனக்கு தெரியாதே! அதன் விளைவுகளாகக் கூட இந்த துன்ப நிலை என்பதை நீ உணர்ந்து கொள்ளலாமே! 
பழைய ஜென்ம விஷயங்களைச் சொல்லி என்னை சமாதானபடுத்த நினைக்காதீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை சொல்லிவிடுங்கள் என நீ கேட்கலாம். இறைவனின் திருவிளையாடல் உனது வாழ்வில் நடப்பதற்காகவும் நீ துன்பத்தை ஏற்கவேண்டிய நிலை உள்ளது என்பதை மறக்காதே! அப்படியானால் என் கஷ்டம் தொடர்கதையாக இருக்கப் போகிறதா, என கேட்க தோன்றுகிறதா! நிச்சயமாக இல்லை. 
எப்போது நீ என்னை உறுதியாகப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தாயோ, அப்போதே நீ விடுதலையின் படியில் காலை வைத்துவிட்டாய் என்பதை உறுதியாக நம்பு. அப்படியானால் உனக்கு விடுதலை உறுதியல்லவா. 
இந்த சாயி உம்முடைய வியாதியையும் வலியையும் பிரச்சினை போன்ற எதையும் நிர்மூலமாக்கி விடுவான். அனைவர் மீதும் கருணைகொண்ட இந்த பக்கீர் அன்புடன் உன்னையும் பாதுகாப்பான். இப்போது நீ பிரச்சனைகள் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம், துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம். அதைப்பற்றி வருத்தப்படாதே! அமைதியாயிரு! நம்பிக்கையோடு என் நாமத்தை இடைவிடாது சிந்திப்பவர்கள் துக்கப்படுவது இல்லை. என் மீது விசுவாசம் கொண்ட உனது துக்க நாட்களை முடித்து வைக்க எனக்கு வெகுநேரம் ஆகாது. எனது ஆலய படிகளில் கால் வைத்த பிறகு நீ சுகத்தின் மீதுதான் சவாரி செய்யப்போகிறாய். எனது நாமம் உனது உள்ளத்திலும், எனது யோக சக்தியான உதி உன் நெற்றியிலும் இருக்கும் வரை எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது................................ சாயியின் குரல்




Sunday, May 28, 2017

அன்புக் குழந்தையே!


அன்புக் குழந்தையே!
 நீ என்னை அறியும் முன்பாகவே உன்னை அறிந்திருந்தேன்.உன்னை பற்றிய விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும் . நான் பூர்வத்திற்கும் முந்தியவன்.
மனதைத் தேற்றிக்கொள், கர்மத்தின் தீவிரம் உன்னை பாடாய்ப்படுத்துகிறது. இனி அது நடக்காது ,  நடக்கவும் விடமாட்டேன். உனது துன்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளை கட்டி, பூர்வ காலம் முதல் நிர்மூலமான அனைத்தையும் மீண்டும் எடுத்துத் தந்து தலைமுறை தலைமுறையாக பாழாகிப் போனவைகளை மீண்டும் புதுப்பிப்பேன். இனி உனக்கு நிரந்தரமான வெளிச்சமாக இருப்பேன். நீ சந்தோஷமாக இரு. துக்கத்தை விடு. எத்தனை வந்தாலும் ஒரு நாள் முடியபோகிறது என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்போது நடக்கும் நிகழ்வுகள் நின்றுபோகுமா ? நாளையும் தொடருமா ? என்று ஏன் குழம்புகிறாய். நடந்ததும் நடப்பதுவும் நடக்கப்போவதும் ஆகிய எதுவும் உன் கைகளில் இல்லை. உன்னால் நடந்ததுமில்லை .எதற்குமே பொறுப்பாளியாக இல்லாமல் வெறும் சாட்சியாக உள்ள நீ ஏன் குழம்பிக்கொண்டிருக்கிறாய்? எங்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வுகளை தேடிக்கொண்டு ஓடுவதேன்? உனக்குள்ளேயே என்னை வைத்துக்கொண்டு என்னைத் தேடி ஊர் ஊராக ஓடுவதும் என் பெயரை மறந்து மற்றவற்றை உச்சரிப்பதும் ஏன்? என்னை நினைப்போருக்கு தலைமுறை தலைமுறையாக நான் துணை நிற்பேன். நீ என் பிள்ளை என் தாசன் நான் திரிந்துகொண்டவன்.என்னால் தேர்வு செய்யப்பட்டவன். உன்னை நான் எப்படி கைவிடமுடியும்? இதை யோசித்து பார்........................சாயியின் குரல்

Sunday, March 12, 2017

சாயியின் குரல்


ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
என் அன்பு குழந்தையே உன் அப்பாவாகிய நான் உன்னை விட்டு எங்கே போவேன் உன் மனதில் ஏற்பட்ட மாறுதல்கள் நீ உணர்கிறாயா அதை உன் செம்மைப்படுத்த நான் செய்கின்ற முதல் தளம் ஓவ்வொரு தளமாக உன்னை செம்மைப்படுத்தி பெருமிதப்படுத்துவேன் உன் கண்ணீர் எல்லாம் உன் சிரிப்பின் முத்துகளாக மாற போகின்றது என்னில் மேலும் உனக்கு நம்பிக்கையும் வேண்டும் உன் கனவில்  என் மண்ணில் நீ இருந்தாய் அதற்கான அர்த்தம் என் மண்ணில் நீ நுழைந்து உன் கஷ்ட காலங்கள் முடிவுக்கு வரப்போகும் நேரம் வந்துவிட்டது இந்த நேரத்தில் தான் உன் நம்பிக்கை உறுதி பொறுமையும் சோதிக்கும் படியாக இருக்கும் இந்த நேரத்தை கடக்க நான் உன் நிழலாக இருக்கிறேன் விரைவில் என்னை சந்திக்கும் பேரானந்ததை நீ உணர்ந்து மகிழ்ச்சியின் உச்சியில் அமர வைக்கபோகிறேன் இந்ந ராமா நவமி உன் வாழ்க்கையில் ஆனந்தத்தை ஆறாக பேரருவியாக கடலாக உணரபோகிறாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன் விலகிக் போகும்படி நான் செய்விடுவதும் இல்லை ஏன்னென்றால் நீ  என் அன்பு குழந்தை
இப்படிக்கு
உன் சாய் அப்பா

Wednesday, August 3, 2016

இப்போது உனக்கு சாதகமான சூழ் நிலை உருவாகியுள்ளது!



என் அன்புக் குழந்தாய்!
கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகள் உன் மனதுக்கு நிம்மதியில்லாத பல விக்ஷயங்களை உனது வாழ்க்கையில் ஏற்படுத்திவிட்டது. திரும்ப வராதவாறு கைவிட்டுப் போனவைகளால் கவலையும் கண்ணீருமாக வாழ்க்கைக் கழிந்தது. உனது துன்பங்களுக்கு அளவே இல்லாதது போன்ற நிகழ்வுகளால் பெரிய சங்கடங்களுக்கு ஆளாகி துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாய்.
தனிப்பட்ட இழப்பு தவிர, உன்னைப் புரிந்து கொள்ளாதவர்களால் நீ அனுபவித்த துன்பங்களும் மிகப் பெரிதாகவே இருந்தன. தொல்லைகளும் தொடர்ந்து உன்னைத் துரத்தி வந்ததால் நீ சோர்ந்து உட்கார்ந்து விட்ட காலங்களே அதிகமாக இருந்தது.
ஒரு வாய் உணவைக்கூட உன்னால் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இழப்புகளை சந்தித்தாய். மனம்விட்டுக் கதறி அழக்கூட முடியாதபடி வாயைக் கட்டிப் போட்டு உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த உனது நிலையை மாற்ற எவ்வளவோ போராடி வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?
விதி மிகவும் வலியது; கர்ம வினைகள் மிகவும் கொடுமையானவை. அவற்றின் வேகத்திற்கு ஈடுதர முடியாமல் எவ்வளவோ கேடுகள் நிகழ்ந்துவிட்டன.
என்னை உண்மையாக வணங்கி வந்தபோதும், முற்றிலும் கர்மத் தளையிலிருந்து மீட்க இயலாமல் சங்கடங்களோடு உன்னை வழி நடத்திவந்தேன்.
அந்தளவுக்கு பூர்வ வினைகள் உன்னைத் துரத்தி வந்தன. அவற்றையெல்லாம் பொடி செய்து உன் மனதுக்கு ஆறுதலை வழங்குவேன். நிச்சயமாக நீ நினைத்த விக்ஷயங்களை ஆறுதலாக அளித்துக் காக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.
அதற்கு முன்பாக சில விக்ஷயங்களை உனக்கு நான் தெளிவு படுத்தியாக வேண்டும். செய்யவேண்டாம் என எச்சரித்த பல விக்ஷயங்களை நீ செய்தாய். போக வேண்டாம் என உன் மனதிற்குள் நான் போராடிப்பார்த்த பல விக்ஷயங்களை மீறி, நன்மை நடக்கும் என நினைத்துப் போனாய். மிஞ்சியது இழப்பு மட்டும் தான்.
இழந்த பிறகுதான் இந்த இடத்திற்கு வந்ததால் தான் இழப்பை சந்தித்தேன். எனது உயிர் போன்ற பொருள் என்னை விட்டுப் போய் விட்டது எனத் துடித்து தினம் தினம் நொந்துகொள்கிறாய்.
என் குழந்தாய்! போனது போகட்டும். விதி உன்னை கொண்டு வந்து இப்படி தள்ளி விட்டது. இனியும் போனதைப்பற்றி நினைத்துக் கொண்டிராதே. வேறு வழியில் அது நிச்சயம் உன்னிடம் திரும்பி வரும்.
உனது மனதை தேற்றிக்கொள்ள இவ்வளவு காலம் அவகாசம் தந்தேன். நீ உனக்குள் ஆலோசனை செய்து கொள்ள அவகாசம் கொடுத்தேன். போனது திரும்ப வரப்போவதில்லை. ஆகவே, அதை நினைத்து வேதனைப்படாதே. எனக்காக நீ இதற்கு முன்பு செய்த அதே சேவைகளை தொடர்ந்து செய்ய உன்னை தயார் படுத்திக்கொள்.
உன்னைப் போன்ற உத்தம பக்தர்களால் நிறைய நன்மைகள் மனித குலத்திற்கு நடக்கவேண்டியது இருக்கிறது. எனவே, உனது துக்கத்தையும் என் மீதுள்ள கோபத்தையும் விட்டுவிட்டு எழுந்து வா!
உறவுகளால்; மோசம் போனாய் என்பதை மறந்து விடாதே. இவ்வளவுக்கும் அவர்களுடைய பொறாமை எண்ணங்களும் அவர்களுடைய கெடுமதியும் உனது இழப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன. உனது வீழ்ச்சியை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அது நடந்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருப்பேனா?
உனது கண்கள் பார்க்கப் பார்க்க அவர்களை நான் படுத்தும் பாடுகளைக் கண்டு, நீயே என்னிடம் அவர்களை விட்டுவிடு என கெஞ்சும் அளவுக்குச் செய்வேன் என்பதை மறந்துவிடாதே!
நண்பர்கள் உனக்கு ஆறுதலாக இல்லை என்பதை புரிந்துகொள். தங்கள் தேவைக்காக உன்னை அணுகி அலைந்தவர்களும் சோதனைக் காலத்தில் உன்னை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்பதை மனதில் வை.  நேரமும் உனக்கு அனுகூலமாக இல்லை. அதனால் பல வழிகளில் நீ திண்டாட வேண்டியிருந்தது. இப்போதுதான் உனக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இனி நீ விரும்பினால் உனக்கு நன்மை நடக்கும்.
என் குழந்தாய்! கடந்த காலத்தில் உனக்கு நான் செய்த நன்மைகளை பட்டியல் போட்டுப் பார். உன்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடலாம் என்றிருந்த எல்லா நிலைமைகளில் இருந்தும் உன்னை விடுவிக்கும் உபாயங்களைச் செய்தேன்.
நீ என்னிடம் வேண்டி வேண்டி கேட்டுக்கொண்ட ஒரு சில முக்கிய விக்ஷயங்கள் மட்டும் தாமதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பெறும் காலம் வெகு விரைவில் வந்துகொண்டிருக்கிறது.
வாழ்க்கை கழியக் கழிய மனிதர்களுக்கு ஏற்படும் இயல்பான பயம் உன்னையும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. யாரை சதம் என்று நினைத்தாயோ அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு உன்னை விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். தங்கள் செயல்பாட்டால் உங்களை ஆள நினைத்து கோபித்துப் போயிருக்கிற அவர்களைப் பற்றி கவலைப்படாதே. திரும்பவும் வருவார்கள்.
உன்னைப் பயன்படுத்தி எடுத்துக் கொண்டவர்கள் திருப்பித் தரும் நாளும் மிக விரைவில் வந்து கொண்டுள்ளது. ஊராரை எல்லாம் நம்புகிறாய். வீட்டில் உள்ளவர்களை அதைப் போலவே நம்பு. உன் மீதுள்ள எரிச்சல் காரணமாக நான் கிழிக்கப்படுகிறேன், தூக்கி எறியப் படுகிறேன். உடம்பெல்லாம் வலியாலும் தாங்க முடியாத வேதனையாலும் துடிக்கிறேன்.
இதற்குக் காரணம், நீ என் உபதேசத்தை சரியாகக் கடைப்பிடிக்காததுதான் என்பது என் வருத்தம். நீ எனது உபதேசத்தைக் கடைப்பிடித்தால் முதலில் உனது குடும்பத்தை நேசிக்கத் துவங்கு. வீட்டில் உள்ளவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வது எப்படி என்பதைப் பற்றி யோசி. உன்னைப் பார்க்க யாராவது வந்தால் உடனடியாக பதற்றமோ, கோபமோ படாதே! அவர்கள் செய்த துரோகம், மோசடி போன்றவற்றை எண்ணிக் கொண்டிராதே!
எல்லாமும் என்னுடைய அனுமதியுடன் நடந்தது என நினைத்து அவர்கள் மீது அன்பு காட்டு. அன்பு காட்ட முடியாவிட்டாலும் மரியாதை செலுத்து. இதைப் பற்றி உனது வீட்டில் விவாதித்து குடும்ப நிம்மதியைக் குலைத்துக் கொள்வானேன்!
உருக்குலைந்த நிலையில் நிற்கிற உனது நிலையை மாற்றி நிச்சயமாக செப்பனிடுவேன். சீர்திருத்தம் செய்து உன்னை வெளிக்கொண்டு வருவேன்.
உன்னைச் சூழ்ந்திருக்கிற கிரக தோக்ஷங்களை சீர் படுத்தி சாதகமான நிலைகளை உண்டாக்குவேன். உனக்காக வேலை செய்யும் வாய்ப்புகளை எனக்கு நானே உண்டாக்கிக் கொண்டு காத்திருக்கிறேன்.
நீ செய்த எவ்வளவோ தவறுகளை அது சின்னதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் மன்னித்து உன்னை திரும்பத் திரும்ப சேர்த்துக் கொண்டதைப் போல, நீயும் பிறரது குறைகளை மன்னித்து நடந்து கொள். உனது வாயிலிருந்து தவறுதலான வார்த்தைகள் எதுவும் புறப்பட வேண்டாம்.
எல்லா பிரச்சினைகளும் சரியாகவேண்டும் என்றால் முதலில் தம்பதியருக்குள் பரஸ்பர புரிந்து கொள்ளுதல் வேண்டும். எல்லா மனக்கவலைகளும் மாற வேண்டும் என்றால் இந்த இருவருக்குள்ளும் இருக்கிற அன்பு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
நட்டங்களும் தோல்விகளும் மறக்கப்பட வேண்டும் என்றால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி அடுத்தக்கட்ட செயலில் இறங்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் வாழ்க்கையின் மீது நம்பிக்கை பிறக்கும். இல்லா விட்டால் வாழ்வே சூன்யமாகத் தெரியும். வாழப் பிடிக்காது. எரிச்சல் வரும், கோபம் வரும். யாரைப்பார்த்தாலும் விலகிப் போகத் தோன்றும்.
உனது தலைக்குப் பின்னால் உன்னைப்பைத்தியம் என்று பேசியவர்களும் இருக்கிறார்கள் என்பதை உனக்கு இப்போது தெரியபடுத்துகிறேன். அந்த அளவுக்கு உனது செயல்களும், பேச்சும் இருந்தன. அதை விட்டுவிடு. உன்னில் புதிய மாற்றத்தை உண்டாக்கு.
உணவில் தாதுச்சத்துக்கள் குறைவதால் உடலை இயக்குகிற ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், மன நிலை மாறுதல்களுக்கும் காரணமாக அமைந்து உன்னைப் பாடாய்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டால் உடம்பை சீராக கவனித்துக் கொள்வாய். உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள். அதை நான் தரவேண்டும் என்றால் அல்லது நீ பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனைதான் உள்ளது. அது, வேறு எதிலும் நாட்டத்தைக் காட்டாத ஈடுபாடு. இந்த ஈடுபாட்டை என் மீது செலுத்தி வேண்டுதல் செய். அப்போது நடக்கும். வேண்டுதல் செய்யும்போது ஏற்படுகிற ஒரு துளி அவநம்பிக்கையும் உனது வேண்டுதலை தள்ளிவைத்துவிடும்.
தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய், கொஞ்சுகிறாய். காரியம் கைகூடிய பிறகு அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாத போக்கு உன்னிடம் காணப்படுகிறது. என் பக்தர்களில் எவர் என்னிடம் கடன் பாக்கி வைக்காமல் இருக்கிறாரோ அவர் மீது எனக்கு பிரியம் அதிகம். அவர் எனக்கு சந்தோக்ஷத்தை அளிக்கிறார்.
எனக்கென்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா, நான் ஏன் விசாரப்பட வேண்டும்? எல்லாம் உனக்காகத்தான்.. இந்த விசாரத்தை என் தலை மேல் ஏற்றிக் கொள்கிறேன்.
உன் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடுகிறேன். ஆனால் உனது மனதில் தோன்றும் ஏதோ ஒரு கலக்கத்தின் காரணமாக வேண்டுதல் நிறைவேறாமல் போகிறது.
இப்போது நீயும் நானும் ஒரு தீர்மானித்துக்கு வருவோம். நீ என்னை சரணடைந்திருப்பது உண்மை தான். கூடவே இன்னொன்றையும் செய். அதாவது உனக்குப் பிடித்தமான உணவுப் பண்டத்தை விரதம் நிறைவேறும் வரை விட்டுவிட வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயமாக உனக்கு காரிய சித்தியாகும்.
நீ உனது குழந்தைகளைப் பற்றி நினைத்து வருந்தும் விக்ஷயங்களில் எனக்குப் பிடிக்காதது, அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள், இப்படி பேசுகிறார்கள், என்னை இப்படி சொல்லிவிட்டார்கள் என்பது. அவர்கள்தானே சொன்னார்கள்.. இருக்கட்டும் என ஏற்றுக்கொண்டு செல்லும் மனப்பக்குவத்தை நீ உண்டாக்கிக்கொள். அவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம், சபிக்கவேண்டாம். அவர்களைப் பற்றி வருத்தப்படவும் வேண்டாம். இப்படிச் செய்தால், அவை அவர்களுக்குச் சாபமாக முடியும் எனப் பல தடவை உனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன்.
என் மீதாயினும், குடும்பத்தின் மீதாயினும், பிள்ளை மற்றும் பிறர் மீதாயினும் நீ விதைக்க வேண்டிய முதல் விதை அன்பு. காரணம் இன்றி விளைவுகள் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள். நடப்பது அனைத்தும் எதேஷ்டமாக என்னால் நடக்கிறது. உனது பூர்வ கர்ம வினையால் தொடர்கிறது.
எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் ஓர் ஆளைப் போய் பார்க்கவேண்டியுள்ளது. அவனுக்கு செல்வம் செல்வாக்கெல்லாம் கொடுத்தேன். நிறைய பணத்தையும், பேசக்கூடிய திறத்தையும் தந்தேன். எல்லாவற்றையும் அனுபவித்து கர்வமாக வலம் வந்த அவன், தன்னுடைய பேராசையால், விட்டதைப்பிடித்து விடலாம் என்ற வெறியால் தப்பு மேல் தப்பு செய்து தர்ம சங்கட நிலையில் இருக்கிறான்.
கையில் இருந்ததெல்லாம் போயிற்று. விரும்பி வாங்கி வைத்திருந்த பொருட்களும், கட்டியிருந்த வீடும், தன்னை கம்பீரமாகத் தெரிய வைத்த மானம் மரியாதையும் போய்விட்டது. யாரெல்லாம் நாய் போல இவன் முன் குழைந்து நின்றார்களோ அவர்கள் எல்லாம் இவனை நாயைப் போல நடத்துகிறார்கள்: அடிக்கவும் செய்கிறார்கள். மரண பயத்தில் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.
எனது ஆலோசனைகளை விட்டுவிட்டதால் இன்று சீர்கெட்டு நிற்கிறான். புத்தி கெட்டுப் போனதால் புதுப் புது சிந்தனைகளுக்கு ஆளாகி செல்லாக் காசாக நிற்கிறான். கடன்காரர்களை சந்திக்க தைரியம் இல்லாமல் சாக்குப் போக்கு சொல்கிறான். கையில் பணம் இல்லாததால் விரக்தி நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டான்.
குடும்பத்தில் வறுமை, நோய், போராட்டம் என பல பிரச்சினைகள் தலை தூக்கிவிட்டதால் தலை நிமிர முடியாத நிலைக்கு ஆளாகி துயரத்திலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறான். நான் போய் என்னால் முடிந்தளவு உதவி செய்து விட்டு வருகிறேன். அதுவரை எனது நாமத்தை தியானம் செய்.
அப்புறம்.. அவரைக்காய் சாம்பார் வைத்து எடுத்து வா.. நீயும் நானும் சாப்பிடலாம். எது எதற்காகவோ அலைந்து அலைந்து எனக்கும் களைப்பாக இருக்கிறது. நானாவது பரவாயில்லை. நீ உனது உடம்பை ஜாக்கிரதையாகப்பார்த்துக்கொள். எனது உதியை பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டு காலையில் மாலையில் அருந்துவதை கட்டாயமாக்கிக் கொள்.
நல்லதை நினை, நல்லதையே செய், மகிழ்ச்சியாய் இரு, மன நிறைவோடும் இரு.. எல்லாம் போகிற போக்கில் தானாகச் சரியாகும்..
அன்புடன் அப்பா
ஸ்ரீ சாயி பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...