Showing posts with label குழந்தை வரம் தருவார் பாபா. Show all posts
Showing posts with label குழந்தை வரம் தருவார் பாபா. Show all posts

Monday, January 7, 2013

பாபா செய்த அற்புதம்


பாபா செய்த அற்புதம்

குழந்தை வரம் தருவார் பாபா

திருப்பூரைச் சேர்ந்த கஸ்தூரி அம்மா மகன் திரு ராஜமாணிக்கம், சாயி பாபா தனக்குச் செய்த அற்புதங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிற அனுபவத்தின் தொடர்ச்சி.......
இதன் முதல் பகுதியினை படிக்க இங்கே சொடுக்கவும்
இதன்  இரண்டாம் பகுதியினை படிக்க இங்கே சொடுக்கவும்

திருமதி கஸ்தூரி அவர்களின் மகன் திரு ராஜமாணிக்கம் தொடர்கிறார்.

சென்னை குரோம்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறுப்பாளராகவும், அதில் பேராசிரியராகவும் இருந்து வருகிறேன். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  கடவுள் மேல் நம்பிக்கை வைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தொடர்ந்து வந்தேன்.

‘சாயிபாபாவிடம் விரதமிருந்து வேண்டுதல் செய்.  பலிக்கும்’, என்று அம்மா கூறினார். விரதம் இருக்க முடிவெடுத்தேன்.  அப்போது என் நண்பர் ஒருவர் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, எப்படியோ எனது தொலைபேசி என்ணைக் கண்டுபிடித்து கோவையில் இருந்து போன் செய்தார்.

அவரது விசாரிப்பின் போது எனக்கு குழந்தையில்லை என்று தெரிந்ததும், ‘நீ  பாபாவின் விரதத்தினை அனுசரி.  உனக்கு நிச்சயமாக குழந்தைப் பேறு கிடைக்கும்.  குழந்தைப் பேறில்லாமல் இருந்த எனக்கு அருள் புரிந்த பாபா உனக்கும் அருள் புரிவார்’, என்றார்.  அம்மா சொன்னதும், எனது பழைய நண்பரின் போன் தகவலும் ஒன்றாக எனது நம்பிக்கையினை தூண்டியது.

இவரைஒ போலவே லண்டனில் வசித்து வரும் எனது நண்பர் ஐயம் பெருமாள், ஆண்டு தோறும் தவறாமல் சீரடிக்குச் செல்வார்.  அவர் இந்தியா வந்தபோது, எனது நிலையினை அறிந்து, சீரடிக்குச் சென்றபோது எனக்காக ஒரு பாபா சிலையினை வாங்கி வந்து என்னிடம் கொடுத்து, ‘இதை வைத்து பூஜை செய், பாபாவின் அருளால் குழந்தைப்பேறு கிடைக்கும்’, என்று வாழ்த்தினார். அத்துடன் பாபாவின் சமாதியில் வைக்கப்பட்ட மாலையினையும் அளித்தார். இன்னமும் அந்த மாலை என் வீட்டில் உள்ளது.

நானும், என் மனைவி ஜெய ஷீலாவும் சாயி விரதத்தினை துவக்கி 2012 ஜனவரி 12ம் நாள் முடித்தோம்.  அடுத்த பரிசோதனைக்கு டாக்டரிடம் சென்றபோது என் மனைவி கருவுற்று இருப்பதை டாக்டர் உறுதி செய்தார்.

எல்லோரும் பெண் குழந்தை பிறக்கும் என்றனர். அம்மாவும் பாபாவிடம் வேண்டினார்.  அவரே நம்ப முடியாத ஆச்சரியமாக அழகிய ஆண் குழந்தை செப்டெம்பர் 12ம் நாள் பிறந்தது, அவனுக்கு சாயி சஷாந்த் என்று பெயர் வைத்துள்ளோம்.

குழந்தை பிறப்பதற்க்கும், எனது அம்மாவின் உடல்நிலை தேறவும் சரியாக இருந்தது. இன்றைக்கு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருக்கிறது.

ஒவ்வொன்றிலும் அற்புதங்களைச் செய்கிற பாபா, சக்திக்கு மீறிய செலவினையும் அதை சமாளிக்க தேவையான சக்தியினையும் அளித்திருக்கிறார். 

ஜெய் சாய்ராம்.

Tuesday, December 18, 2012

நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!



நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!

காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித்தது!.....சாயி எப்படி சொன்னாரோ, அப்படியே நடந்தது. சாயியின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ளமுடியாதவை, துல்லியமானவை, அவருடைய திருவாய் மொழியின் படி குழந்தைகள் பிறந்தன.
                                        (சத்சரிதம்  அத்: 25:-102-103)


     வயதாகிவிட்டது...கருப்பையில் சிக்கல்.......கணவனிடம் பிரச்சனை, ஜாதகக் கோளாறு...இப்படி நிறைய சிக்கல்கள் இருக்கும்போது எப்படி எனக்கு குழந்தை பிறக்கமுடியும்?
      இப்படியொரு கேள்வி பாதிக்கப்படவர்கள் மனதில் இருக்கத்தான் செய்யும்.  ‘மனிதரால் கூடாதது, தேவனால் கூடும்என்கிறது பைபிள். கடவுளின் வாக்குப் பொய்ப்பது கிடையாது.  “காலப்போக்கில் பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. அவருடைய ஆசிவாதம் பலனளித்தது.
      சாயி எப்படி சொன்னாரோ அப்படியே நடந்தது.  ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ள முடியாதவை. துல்லியமானவை, அவரது திருவாய்மொழியின்படி குழந்தைகள் பிறந்தன என சத்சரிதம் (அத்: 25:-102-103) கூறுகிற்து.
      தாமு அண்ணாவை சத்சரித்திரம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது முழுப்பெயர் தாமோதர் ஸாவல் ராசனே.  அகமது நகரைச் சேர்ந்த இவரை தாமு அண்ணா என்பார்கள்.
      பாபாவின் மீது ஆழ்ந்த பக்தியுள்ளவர்.  சீரடியில் நடக்கும் ராம நவமி ஊர்வலத்தில் இரு கொடிகள் எடுத்துச் செல்லப்படும்.  அதில் ஒன்றை ஆண்டு தோறும் சாயிக்கு அர்ப்பணம் செய்தவர் தாமு அண்ணா.  இதற்க்குக் காரணம், பிறக்கவே பிறக்காது என்று எல்லோரும் கைவிட்ட பின் குழந்தை பிறந்ததுதான். இச்சேவையினை நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தாமு அண்ணா செய்து வந்தார். இன்னொரு கொடி நிமோண்கருடையது.
      குழந்தைப் பிறப்பதற்க்கு முன்பு தாமு அண்ணா நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
      அவருக்கு இரண்டு மனைவிகள்.  ஒரே குறை பிள்ளை எதும் இல்லாதது. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டனர். அப்படியும் குழந்தைப் பேறு எட்டாக்கனியாகவே இருந்தது.
      சிறந்த ஜோதிடர்களை நாடி அவர்கள் சொன்னபடியெல்லாம் நவக்கிரக
பரிகாரம் முதல் அனைத்தும் செய்ததுதான் மிச்சம், பலன் ஏதுமில்லை. ஆனால் இன்று இவரும் பெரிய ஜோதிட நிபுணர் ஆகிவிட்டார். வாரிசுக்காக ஞானிகள், சாதுக்களை தேடித் தேடி வணங்கினார். எதனாலும் பலனில்லாத நிலையில் குழந்தைப் பற்றிய எண்ணத்தையே விட்டுவிட்டார்.
      இந்நிலையில் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, 1895ம் ஆண்டு வாக்கில் சீரடிக்கு வந்தார். இவர் வரும் வழியில் கோபர்காமில் இருக்கும் போதே, சீரடியில் இருந்த சாயி, அவர் வருவதை அறிந்தார். குழந்தை வரம் வேண்டி வரும் தாமுவுக்கு நான்கு மாம்பழங்களை எடுத்து வைக்க நானாவிடம் சாயி கூறினார்.
இந்த பழங்கள் நானாவின் பெயருக்கு ராலே என்ற சப் கலெக்டரால் அனுப்பப்பட்டவை.  இவற்றினை பாபாவின் பாதங்களில் பக்தியுடன் சமர்ப்பிக்க நானாவிடம் சப்கலெக்டர் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாபாவின் முன்னால் மாம்பழங்கள் பிரிக்கப்பட்ட போது அதில் சுமார் முன்னூறு பழங்கள் இருந்தன.  பாபா அனைத்தையும் நானாவிடம் ஒப்படைத்துவிட்டார்.  ஆனால் நானாவோ நான்கு பழங்களை எடுத்து கொலம்பா எனப்படும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுவிட்டு மீதியினை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவர் அதை பாத்திரத்தில் போடுல்போதே, ‘இவை தாமு அண்ணாவிற்க்குஎன்றார் பாபா.
இரண்டு மணி நேரம் முடிந்து பாபாவிற்க்கு பூஜை செய்ய நிறைய பூக்களுடன் வந்த தாமுவிற்க்கு மசூதியில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.  அவரிடம் பழத்தைக் கொடுத்த பாபா, “இவற்றை சாப்பிட்டு சாவாயாக! என்று கூறினார். இதைக் கேட்ட தாமு திகைத்துப்போனார்.  அருகிலிருந்த மகல்சாபதி, ‘பாபாவின் காலடியில் இறப்பதும் அனுக்கிரகமே!என்றார்.  இதனால் ஊக்கம் பெற்ற தாமு அண்ணா பழங்களை சாப்பிட முயன்றார்.
அவரைத் தடுத்த பாபா, “இவற்றை நீயே சாப்பிட்டு விடாதே. உன் இளைய மனைவிக்குக் கொடு. எட்டு குழந்தைகள் பிறப்பர்.  4 ஆண் 4 பெண்.  முதலில் இரண்டு ஆண்.  மூத்தவனுக்கு தவுலத் ஷா, இரண்டாமவனுக்கு தானாஷா என்று பெயரிடு!என்றார்.
அவர் ஏற்கனவே குழந்தை பிறக்காது என்று விட்ட எண்ணத்தை விட்டு குருவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை வைத்தார்.  சாயியின் உறுதிமொழியினையும், ஆசிர்வாதத்தினையும் கேட்டதும் அவருடைய மனதில் புது ஆசையும் நம்பிக்கையும் துளிர்விட்டன. வீட்டுக்கு வந்த தாகு, அவரது டைரியில் பாபா சொன்ன பெயர்களை குறித்து வைத்துக்கொண்டார்.  நாளடைவில் அதை மறந்துவிட்டார்.
       ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. ஆம், பாபா கூறியவாறே ஆண் குழந்தையும் பிறந்தது.  முதல் குழந்தையினை தூக்கிக்கொண்டு சீரடிக்கு வந்த தாமு அண்ணா, ‘குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? எனக்கேட்டார்.  
        ‘நான் முன் சொன்ன பெயரினை மறந்து விட்டாயா?  டைரியின் மூன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்திருக்குறாய்.  போய்ப் பார்!என்றார் பாபா. அதன்படியே பெயரிடப்பட்டது.
பாபா சொன்னார்: 
என்னுடைய வார்த்தைகளை பிரமாணமாக நம்புங்கள்.      
 நான்    இந்த பூதவுடலை நீத்த பிறகும்,  சமாதியிலிருந்து என்னுடைய எலும்புகளும் உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும்.
      நான் மாத்திரம் அல்லன், எனது சமாதியும் உங்களிடம்
பேசும்.
      எவர் எனது சமாதியை சரணடைகிறாரோ அவருடன் அது ஊஞ்சலாடும்.
      நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள்.  நீஙக்ள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதை நீஙக்ள் கேட்பீர்கள்.
     விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும், சுயனலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்

     பாபா தனது திருவாய் மொழியாகக்கூறிய இந்த வார்த்தைகளை முழுமையாக நம்புங்கள்.  அப்போது உங்களுக்கு சர்வ மங்களங்களும் விளையும்.
      எனக்குக் குழந்தைப்பேறுதான் இருக்கிறதே... எனக்கு இந்த தகவலால் என்ன பயன் என்று நினைக்காதீர்கள்.
      விசுவாசம் நிறைந்த இதயத்துடன் நீங்கள் கேட்பது நீங்கள் செய்கிற தொழிலில் லாபமாக இருக்கலாம்,  வாழ்வின் முன்னேற்றமாக இருக்கலாம்.  இப்போதுள்ள நிலையைவிட இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தரும் நிலையாகவும் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்து இதுவரை கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
      சமர்த்த (எல்லாவற்றையும் செய்யவல்ல) சாயியை சரணடைந்து காத்திருங்கள்.  பலன் நிச்சயம்!

-          சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்  வெளியான கட்டுரை.

Friday, December 7, 2012

பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம்

      
 பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம்
                  
         என் பெயர் சசிகலா. கணவர் பெயர் தண்டபாணி. எங்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. எவ்வளவோ மருத்துவ சிகிச்சைகள் செய்தும் பலனில்லை.
           இதன்பிறகு நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் மார்க் ஷீட் வாங்குவதற்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை வந்தேன். அன்று ஜூலை 20, 2011, வியாழக்கிழமை என்பதால் பாபாவை தரிசிக்க ஏராளமானோர் பயணம் செய்த அந்தப் பேருந்தில் தான் நானும் பயணம் செய்தேன். என் இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் அம்மா வந்து அமர்ந்தார். கொஞ்ச தூரம் சென்றதும் அவரிடம் “எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டேஎ. அவரும் “பாபா கோயிலுக்குப் போகிறேன்” என்றார்.
            பிறகு அந்த அம்மா வேறொருவரிடம் பாபா அற்புதத்தினைப் பற்றி கூறினார்கள். அவர்களது பையனுக்கு எவ்வளவோ முயன்றும் ஒரு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும், பையனோ படித்தால் அந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என கேட்பதாகவும் அதற்கு உதவிட வேண்டும் என்றும் பாபாவிடம் வேண்டுதல் வைத்தார்களாம். அனைத்து அட்மிஷனும் முடிந்த நிலையில், அந்த பையனுக்கு அதே கல்லூரியில் சீட் கிடைத்தது என்றும் சொன்னார்கள்.
              இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான், ‘எனக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை’ என்றேன். அந்த அம்மா, ‘நீ பாபாவை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம். ஒன்பது வாரத்திற்க்குள் உனக்குக் குழந்தைப்பேறு கண்டிப்பாக வாய்க்கும்’ என்றார்கள்.
               பாபா வடிவில் அந்த அம்மாவே வந்து சொல்வதாக நம்பி, அந்த நிமிடமே பாபாவை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன்.  பாபாவை நினைத்துக் கதறி அழுதேன். மனமுருக வேண்டினேன். இரண்டாவது வாரத்திலேயே கர்ப்பம் தரித்தேன். எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  சாய் கிருஷ்ணா என்று பெயர் வைத்துள்ளோம்.

                  எங்கள் ஊரில் ஆசிரியரான பாண்டியன் அவர்கள் மூலம் சென்னையிலுள்ள சாயி கலியன் என்ற சாயி பக்தர் அறிமுகம் ஆனார். எனக்காகப் பிரார்த்தனை செய்தார். பெருங்களத்தூரில் பாபா அற்புதங்களைச் செய்கிறார். நேர்ந்து கொண்டு, உனது கோரிக்கை நிறைவேறியதும் இடம் வாங்குவதற்க்கு உனது பங்களிப்பினை செலுத்து என்று கூறினார். கோரிக்கை நிறைவேறியது.  ஆகஸ்டு மாததத்தில் நானும் எனது கணவரும் புதுப்பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்க்கு வந்து, சாயி வரதராஜன் அவர்களை சந்தித்து இந்த அற்புதத்தைத் தெரிவித்து காணிக்கை செலுத்தினேன்.
                    எங்கள் சாயி கிருஷ்ணா பாபாவின் மடியில் அமரும் பாக்கியத்தினைப் பெற்றார். பாபாவினை முழு மனதோடு நம்பினால் வெற்றி நிச்சயம் என்பது என் அனுபவம்

த.சசிகலா, மேப்புலியூர், உளுந்தூர் பேட்டை.

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான ஒரு சாயி பக்தையின் அனுபவம். 

Friday, November 23, 2012

குழந்தை வரம் தருவார் பாபா

குழந்தை வரம் தருவார் பாபா
சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை



குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...