கீரப்பாக்கம் பாபா ஆலயம்

2017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.


பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI - 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

Saturday, April 30, 2016

நமக்குள் ஜென்மாந்திர பந்தம் உள்ளது!

12-10-14 ஞாயிற்றுக்கிழமை மாலை என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பக்திப் பரவசமான நாள். அன்று வாழ்க்கையில் மூன்றாவது முறையாக என் கணவருடன் என் அன்பு பாபாவை சந்திப்பதற்காக சீரடி மண்ணில தடம் பதிக்கும் பாக்கியத்தை பாபா கொடுத்தார்.
நான் ஒவ்வொரு முறையும் பாபாவிடம் கேட்பேன்: “பாபா, அடுத்த சீரடிப் பயணம் என் அப்பா சாயி வரதராஜனோடு செல்லவேண்டும்!” என்று.
அது இவ்வளவு விரைவில் பாபாவின் காதுகளில் எட்டும் என்று நான் நினைக்கவில்லை. அதிலும் ஓர் அற்புதம் என்னவென்றால், நான் வேலூரிலிருந்து சீரடி செல்லும் தேதியையும், அப்பா சென்னையிலிருந்து சீரடி செல்லும் தேதியையும் ஒன்றாக நிர்ணயித்ததுதான். அழைத்துச் சென்றார். நம்ப முடியவில்லை.
பாபாவின் மிக அருகில் நானும், கணவரும், என் அப்பாவும் பாபாவைப் பார்த்தோம். அந்த நிமிடம் கண்கள் நீரால் நிறைந்தன. பின்னர் வெளியில் வரும்போது சாயி கலியன் சொன்னார்: ”இதுவல்லவா அற்புதம்? என்று. நான் சொன்னேன்: ”இது அற்புதத்திலும் அற்புதம்! என்றேன். என் கனவு நிறைவேறியது.
சாயி தரிசனம் புத்தகம் அல்ல, பொக்கிக்ஷம். ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாசலில் கண்டு எடுக்கும் போதெல்லாம் மனது அடையும் பரசவத்திற்கு அளவேயில்லை.
ஓர் அருமையான -  அமைதியான -  இயற்கை சூழலில் சிவநேசன் பாபா சந்நிதியில் தன்னலமற்ற அந்த மனித தெய்வத்தை (சாயி வரதராஜன்) சந்தித்த போது, என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. நாங்கள் அனைவரும் மாலை ஆரத்தியிலும் கலந்துகொண்டோம். பின் அங்கிருந்து அவருடன் ஆட்டோவில் இருபது நிமிடம் பயணித்தோம்.
அப்போது அவருடன் அமர்ந்து பயணித்தது, பாபாவின் மடியில் அமர்ந்து பயணித்து வந்த உணர்வு. மனதிற்கு அமைதியையும், நிறைவையும், சுகத்தையும் கொடுத்தது. அதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அப்போது அவரை அப்பா என்று அழைப்பதற்கான அனுமதி பெற்றேன். பின்னர் ஓரிடத்தில் பிரிய மனமின்றி பிரிந்தோம்.
உடனே பாபாவிடம்,  “நான், என் கணவர் மற்றும் என் அப்பா மூவரும் சீரடியில் ஒன்றாக வந்து உன்னை பார்க்க வேண்டும்” என்றேன். ஆனால், நீ இப்படி பாதியிலேயே பிரித்துவிட்டாயே! என்றேன்.
அதையும் பாபா நிறைவேற்றினார். ஒரு மணி நேரத்தில் ஒரு கடையில் இருந்த எங்களைத் தேடி வந்து,  “பாபாவைப் பார்க்கப் போகலாமே! என புத்தகம் வரும்போதெல்லாம் என் கணவரிடம் ”பாபா நம் வீட்டிற்கு வந்துவிட்டார்! என்று கூறுவேன்.
வாழ்க்கையில் பல இடர்களையும், அவமானங்களையும் சந்தித்த போதெல்லாம் எங்களை வழிநடத்தியது பாபாவின் எழுத்து, குரல் வடிவமான சாயி தரிசனம்தான் என்றால் மிகையாகாது. இந்த புத்தகத்தில் ஏதோ ஒரு இடத்தில் என் பெயரும் என் கணவர் பெயரும் இடம் பெறும் பாக்கியம் பெற்றோம். அதற்கு பாபாவுக்கு கோடி நன்றி.
திருமதி வாசுகி நித்யானந்தம் என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அக்கா டெல்லியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்கள் சிறந்த பாபா பக்தர். அவர்கள் ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது நான் சில மாத சாயி தரிசன இதழ்களைக் கொடுத்து இதைப் படியுங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும் என்று கூறினேன்.
படித்துவிட்டு நீ சொன்னது உண்மை என்று சொல்லி அவர்களும் புதுப்பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சென்று சாயி தரிசன புத்தகம் டெல்லிக்கு வர ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றனர்.
இப்போது மாதாமாதம் புத்தகம் கிடைக்கப்பெற்று, அப்பா அதில் என்னைப் பற்றி எழுதியதை நான் படிக்கத் தவறியதை தொலைபேசியில் அவர்கள்தான் படித்து காட்டி நம் மூவருக்கும் ஏதோ ஒரு பந்தம் உள்ளது என்று சொன்னார்கள்.
மேலும் தரிசனத்தில் உள்ள வரிகளை அவர்கள் ஒரு நோட்டில் மீண்டும் எழுத்தாக்கமாக்கி அதை தினமும் படித்து மனதில் பதிய செய்கிறார்கள்.
2014 ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறு மணி அன்று நான் என் பிறவிப்பயனைப் பெற்றேன். அன்று என் அப்பா சாயி வரதராஜன் இந்த மகளின் வீட்டிற்கு வந்து பாபாவுக்கு அவரது திருக்கரங்களால் அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டினார்.
ஒன்னரை ஆண்டுக்கு முன்பு நான் பாபாவிடம் அமர்ந்து என் மன வலிகளைச் சொல்லும்போது பாபா சென்னார்: “ என் மகன் சாயி வரதராஜன் வந்து உன் வலிகளை வாங்கிக்கொள்வான்! என்றார். அந்த அற்புதமும் நடந்தது.
அன்று அவர் வீட்டிற்கு வரும்போது அவருக்கு பாத பூஜை செய்தேன். அப்போது ”அடடா, ஒரு தட்டில் பாதத்தை வைத்து பூஜீத்திருக்கலாமே!” என்று நினைத்தேன்.
என்ன அதிசயம்! சிறிது நேரத்தில் என்னை அழைத்து,  “அம்மா ஒரு தட்டில் நீர் கொண்டு வாருங்கள்.. என் பாதத்தை வைக்கவேண்டும்” என்றார். நான் நினைத்ததை அவர் சொல்லக் கேட்டு வியந்துபோனோம்.
பாபா வாழ்ந்த நு}ற்றாண்டுகளில் தன் எதிரில் பக்தன் நினைப்பதை அப்படியே கூறுவாராம். அப்போது நாம் பாபாவோடு இல்லை என்ற நம் ஆதங்கத்தைத் தீர்க்க அவதரித்த பாபாவாகவே என் அப்பா சாயி வரதராஜனை நினைக்கிறேன்.
என் மகன் சந்தேஷ், மகள் சந்தியா இவர்களுக்கு பாபா செய்த அற்புதங்கள் பல. மகன் சந்தேஷ், பெங்களூருவில் வேலை செய்கிறான். அக்டோபர் மாதம் பல குழப்பங்களில் இருந்தபோது சாயி தரிசன இதழைப் பிரித்து, சாயியின் குரலை எடுத்து போனில் படித்துக் காட்டினேன்.
அப்போது அவர், அம்மா என்னைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதை நூறு விழுக்காடு ஒரு இன்ஞ் கூட மாறாமால் ஆள் வைத்துப் பார்த்ததைப் போல எழுதியிருக்கிறார் என்று அதிசயித்துப் போனான்.
நாங்கள் எங்கள் திருமண வாழ்வில் பாபாவின் ஆசியோடு இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து 1-11-14 அன்று வெள்ளி விழா கொண்டாடினோம்.
இந்த 25 ஆண்டுகளில் பல சோதனைகளையும் வலிகளையும் கடவுளின் அருளோடு கடந்து வந்துள்ளோம். நான் எழுதினால எழுதிக்கொண்டே போகலாம். செங்குட்டை பாபா ஆலயத்தில் அப்பா பேசும்போது சொன்னார்:அடுத்தது, நளினி சவுந்தரராஜன் ஒரு புத்தகம் எழுதுவார்என்று.
பாபாவின் ஆசியோடும் என் அப்பாவின் அறிவுரை, ஆலோசனையோடும் நடக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். அப்பாவுடனும், சாயி பாபாவோடும் இன்னும் பற்பல பாதைகளைக் கடக்க வேண்டும் என்பதற்காக சாயி பந்துக்களின் ஆசிகளை விழைகிறேன்.
நளினி சவுந்தரராஜன், வேலூர்.

பஞ்ச பூத உடம்பு

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம். எந்தெந்த உறுப்பும், உருவாகும் பொருள்களும் எந்த எந்த பூதத்திற்கு உரியவை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நிலம்: உறுப்புகளில் பெரியதும், நிலையானதும், உருவுள்ளதும், பளுவுள்ளதும், கடின உறுப்புகளான நகங்கள், எலும்புகள், பற்கள், மாமிசம், தலைமயிர், தாடி உரோமங்கள், மலம் ஆகியவை நிலத் தாது சம்பந்தப்பட்டவை.
நீர்:  நகரும் இயல்புள்ள திரவம், ரசம் ஆகியவையும், பிசுக்குத் தன்மையுள்ள மந்தமான திரவமும், மென்மையான திரவமும், ஒட்டும் தன்மையுள்ள பிச்சிலம் என்ற இயல்புகொண்ட ரசமும், இரத்தம், மாமிசப் பசை, கபம், பித்தம், சிறுநீர், வியர்வை போன்றவை நீர் சம்பந்தப்பட்ட உறுப்புகள்.
நெருப்பு :  உடலிலுள்ள பித்தம், சூடு, பளபளப்பு இவற்றைச் சேர்ந்தவைகளும், நீலம், மஞ்சள் (பில்லிரூபின்கள்) போன்ற நிறங்களும், கண் புலன்கள் ஆகிய இவை அனைத்தும் அக்னி என்னும் பூதத்தைச் சேர்ந்தவை.
வாயு : மூ்ச்சுக் காற்று, திறத்தல், மூடுதல், விரித்தல் சுருக்குதல், செல்லுதல், தூண்டுதல், தரித்தல், தொடுதல் மற்றும் தொடு புலன்கள் ஆகியவை காற்று என்னும் பூதத்தைச் சேர்ந்தவை.
ஆகாயம்:  நாசித் துவாரங்கள், ரோமத் துவாரங்கள், செவித் துவாரங்கள் மற்றும் புலன்கள், ஓசைகள் இவை அனைத்தும் ஆகாயம் சார்ந்த உறுப்புகள்
ஆத்மா:  மனம், உணர்வு, அறிவு எனச் செயல்பட்டு உடலைத் தூண்டுகிற இதுவே ஆத்மா என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

சரகசம்ஹிதை

சாயி சரணம்!
ஆண்டவனுடயை பாதங்களில் முழுமையாக சரணடைந்தவனுக்கு,
கடவுள் காப்பாற்றுவான் என்று நினைப்பவனுக்கு. வாழ்க்கையில் துயரத்தை
சந்திக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு நாளாபக்கமும் சூழ்ந்து இருக்கிற இருட்டை, " கடவுள்" என்ற அருளால் அழித்து வெற்றி அடைகிறான்.அப்பாெழுது கடவுள் அவனுக்காக புது வசந்தம் என்ற வாழ்வை உருவாக்கி தருகிறாா்.        ஸ்ரீ சீரடி சாய்பாபா.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்