Showing posts with label சாயி பாடல்கள். Show all posts
Showing posts with label சாயி பாடல்கள். Show all posts

Thursday, May 17, 2018

புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா



புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
அன்னையைப் போல காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
மந்திரமானது உன் பெயர் பாபா
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
மண்ணுயிருகெல்லாம் தலைவன் பாபா
பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
திவ்விய மூர்த்திகள் வடிவே பாபா
தீவினை அகற்றிடும் திருவே பாபா
கௌவிய பாவம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சீரடி மண்ணில் தோன்றிய பாபா
செய்தாய் பற்பல அற்புதம் பாபா
பூவடி தந்து அருள்வாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தாய் மடி தேடித் தவித்தோம் பாபா
தாங்கிட வந்தாய் நீயே பாபா
ஆதரவான உறவே பாபா
 சர்வேஸ்வரனே சாயி பாபா

பரம் பொருள் நீயென அறிந்தோம் பாபா
பக்தியின் உன்னைத் தொழுதோம் பாபா
கரங்களை நீட்டி காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
தடைகளை நீக்கும் பேரருள் பாபா
தன்னிகர் இல்லா எங்களின் பாபா
இடர்களைக் களையும் வரம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
குழந்தையின் உள்ளம் கொண்டாய் பாபா
குறைகளை நீக்கும் குருவே பாபா
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா
விளைந்திடும் பயிராய் பயன் தரும் பாபா
எழுந்திடும் கதிராய் சுடர் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நீரினில் தீபம் ஏற்றிய பாபா
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

பூரணமான அருளே பாபா
பூமியைக் காத்திட பிறந்தாய் பாபா
யார் உனைப் போற்றிலும் பலன் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
 ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா
அடியவர்கெல்லாம் அருள் தரும் பாபா
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா
வரும் வினை யாவும் போக்கிடும் பாபா
தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
காலையில் விழித்ததும் உன் முகம் பாபா
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
பாலென உள்ளம் படைத்தவன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நாளையப் பொழுதை நலமாய் பாபா
நடத்திட அருளும் இறைவா பாபா
தாழ்பணிந்தோமே அன்புடன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
உதியில் நோயைப் போக்கிடும் பாபா
உலகோர் போற்றிடும் பகவான் பாபா
நீதியை மண்ணில் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணைவரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
எளியவர்கெல்லாம் எளியோன் பாபா

ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா
தலைமுறைக் காக்கும் தயாபரி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
நிலைத்தரும் நிம்மதி நின்பதம் பாபா
நினைவுகளெல்லாம் உன் வசம் பாபா
சலனத்தை வெல்லும் சக்தியே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சுடுமணல் பாதையில் நிழல் தரும் பாபா
சூழ்ந்திடும் இருளை விலக்கிடும் பாபா
கடலென கருணைக் கொண்டாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
விடைத்தெரியாத விளக்கம் பாபா
விண்ணும் மண்ணும் ஆள்வது பாபா
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
அடைமழை நாளில் குடையாய் பாபா
அன்பரைக் காத்திட வருவாய் பாபா
சரணடைந்தோமே உன்னிடம் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
இமயத்தைப் போலே உயர்ந்தாய் பாபா
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
சமயத்தில் வந்து உதவிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

Thursday, May 10, 2018

சீரடி மண்ணில்.....



சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ
சாயி மகராஜ் ஆலய விளக்கின்
திரியாய் இருப்பேனோ
சாய்ராம் ஒலியை எங்கும் பரப்பும்
காற்றாய் இருப்பேனோ
சாயி மேனியை வடிக்கும் உளியாய்
நான் இனி பிறப்பேனோ

சாயியைச் சேரும் பண்ணீர்த் துளியாய் மறுபிறப்பெடுப்பேனோ
சாயியைத் தீண்ட நாளும் தேயும்
சந்தனமாவேனோ
சாயியின் கழுத்தை அலங்கரித்திடவே
துளசியாய் பிறப்பேனோ
சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ



சாயியின் கோயில் உதியாய் மாறிட
விறகாய் எரிவேனோ
சாயியின் தீர்த்த கிணற்றில் ஊறும்
சிறுதுளியாவேனோ
சாய் புகழ் மீட்டும் வீணையின் நரம்பாய்
நான் இசைத்திருப்பேனோ
சாய் பஜன் பாடும் பக்தர்கள் கையில்
மிருதங்கமாவேனோ



சாய்வழிபாடு ஆரத்தி நேரம்
கற்பூரமாவேனோ
சாய் எனும் சொல்தான் கேட்கும் இடத்தில்
என் உயிர் சுமப்பேனோ
சீரடி மண்ணில் ஓர் துளியாக
நான் இனி பிறப்பேனோ
பாபா காலடி பட்ட இடங்களிலெல்லாம்
வணங்கியே கிடப்பேனோ !

Wednesday, May 9, 2018

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்



நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின், எவ்விடத்திலும்,ந்நேரத்திலும், எதனாலும், எவ்வித இடையூறும் நேராவண்ணம், ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.

ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு

1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க

2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க

3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க

4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீஸாயி நாதனென்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க

5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க

6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க

7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க

8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீஸாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீஸாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீஸாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீஸாயி உடனே காக்க

9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீஸாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீஸாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீஸாயி சித்தன் காக்க.
 ஓம்ஸ்ரீசாய்ராம்

Sunday, July 9, 2017

அதிகாலை ஆரத்தி



அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --குரு சாயிராமா

உனது பாதம் சரணடைந்தோம் உனது நாமம் பாடுகின்றோம்
உனது பாதம் சரணடைந்தோம் உனது நாமம் பாடுகின்றோம்
வினைகள் நீக்கும் உந்தன் பார்வை
உனையே நோக்கும் எங்கள் வாழ்க்கை -பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --- குரு சாயிராமா

சித்தம் என்னும் விளக்கை ஏற்றி
பக்தி நெருப்பை பற்றவைத்தோம்
சித்தம் என்னும் விளக்கை ஏற்றி
பக்தி நெருப்பை பற்றவைத்தோம்
ஷீரடியின் செல்வமே நீ
யோக நித்திரை நீங்குவாயே --பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க -- குரு சாயிராமா

எமது தாயும் தந்தையும் நீ இதயம் வாழும் தெய்வமும் நீ
எமது தாயும் தந்தையும் நீ இதயம் வாழும் தெய்வமும் நீ
அருளும் பொருளும் அள்ளித்தருவாய்
புனித முனிவா நேரில் வருவாய் ---பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --குரு சாயிராமா

தேவர் மூவர் தேடி வந்த போற்றிப் பாடி புகழுகின்ற
தேவர் மூவர் தேடி வந்த போற்றிப் பாடி புகழுகின்ற
சாயிநாதா சத்யதேவா  ஆலவாக சுப்ரபாதா   
                                                        --  பாபாவே சாயிராமா 
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க - குரு சாயிராமா

Thursday, April 28, 2016

ஓம் சாயி நமோ நமஹ

ஓம் சாயி நமோ நமஹ,
ஸ்ரீ சாயி நமோ நமஹ,
ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ,
சீரடி சாயி நமோ நமஹ,
சத்குரு சாயி நமோ நமஹ,

துவாரகமாயி சரணம்,
சமர்த்தசாயி சரணம்,
சச்சிதானந்தா சரணம்,
சாயிராமா சரணம்...


ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்...

ஓம் ஷீர்டிவாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்...

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்...

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரக மாயி வாசினம்..
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.........

Thursday, August 13, 2015

தத்த சாயி வசிய மந்திரம்




                     தத்த சாயி வசிய மந்திரம்

ஓம்  ஸ்ரீ தத்த அவதூதா! - சகல ரூப சஞ்சாரா!
அத்ரி அனுசுயா சம்பூதா! - அனகா ரிஷ்ட ப்ரதாயா!
பக்தப் பிரியாயா ! பரமேஸ்வராயா!
சம்ரட்சணாயா மம வயம்
சத்குரும் குரும் ஸ்வாகா!

அத்வயானந்த ரூபாயா ! யோகமாயா, யோகி ராஜா
சுத்த புத்யாத்ம ரூபாயா ! சச்சிதா னந்தாயா !
ருத்ர பிரம்ம சிவ ரூபாயா ! சாயி நாதாயா!
ஸ்ரீ ஸ்ரீ  தத்தாத்ரேயா மம வயம்
சத்குரும் குரும் ஸ்வாகா!

சகல பாப விமோசனாயா ! சங்கட நிவாரணாயா
சமஸ்த லோக ரட்சகாயா ! சகலாத்ம மோக்ஷகாயா
பக்தாரிஷ்ட வினாஸாயா ! பூர்ண பிரம்ம ஸ்வரூபாய
ஸ்ரீ ஸ்ரீ  தத்த சாயிநாதாயா மம வயம்
சத்குரும் குரும் ஸ்வாகா!

சர்வலோகா ரட்சகாயா ! சரணாகத வத்சலாயா
பூர்வ கர்ம நாசநாயா ! புண்ய வரதாயா!
சகல சித்தி ப்ரதாயா ! சத்குரு ராஜாயா
சாயி தத்த அவதூதாயா மம வயம்
சத்குரும் குரும் ஸ்வாகா!

புத்ர வரப்பிரதாயா ! புண்ய மாதா சம்பூதா!
வம்ச வ்ருத்திவர  தாதாயா ! வரத ராஜாயா!
ருணவிமோசன காரகாயா!  ஸ்ரீ தத்த காருண்யாயா !
ஸ்ரீ  சாயி நாதாயா மம வயம்
சத்குரும் குரும் ஸ்வாகா!

பாபாவுக்கு மலர் அர்ச்சனை செய்யும்போது ஸ்வாகா என்ற பதத்தை நீக்கி, தம் நமாமி என்ற பதத்தை சேர்த்துக் கொள்ளவும். ஹோமம் செய்யும் போது ஸ்வாகா என்பதைச் சேர்த்து தம் நமாமி என்ற பதத்தை நீக்கவும்.
குருதேவர் அருளிய மந்திரம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...