Showing posts with label ஷீரடி பாபா. Show all posts
Showing posts with label ஷீரடி பாபா. Show all posts

Friday, June 13, 2014

மனித நேயமிருந்தால் மனிதனும் தெய்வமாகலாம்! பகுதி 1

20144



சமீபத்தில் ஒருநாள், பாபாவுக்கு சேவை செய்கிற முகம்மது என்ற தம்பி என்னைப் பார்க்க வந்திருந்தார். பேச்சிடையே, ”உங்களைப் பற்றி சொன்னால் தவறாக நினைக்கக்கூடாது,  நிறைய பக்தர்கள் பாபாவை விட உங்களையே சார்ந்திருப்பது போலத் தெரிந்ததால் உங்களை சுத்தமாகப் பிடிக்காது. இதனால் நான் கோயிலை விட்டே ஒதுங்கி யிருந்தேன். பிறகுதான் படிப்படியாக புரிய, இப்போது  வாரா வாரம்  வருகிறேன்”  என்றார்.



     ”எல்லோரும் என்னை சார்ந்திருக்க விரும்பமாட்டார்கள். ஒரு சிலர் அப்படியிருப்பார்கள். இவர்களை இதற்காக நான் கடிந்துகொள்வதில்லை. மாறாக, என்னை சார்ந்திருப்பது அவர்களுக்கு நல்லது என நினைப்பேன்! ” என்றேன்.



     ”எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார் அவர்.



     ”இருபது வருடங்களாக, இப்படிப்பலரை அணுகி ஏமாந்திருக்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு சக்தியிருப்பதாக நினைத்து, என் வாழ்க்கை மாறும் எனச் செல்வேன். ஏமாந்த பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்வேன். இவர்களை நான் புறக்கணித்தால் ஒருவேளை அவர்கள் என்னைப் போல் மற்ற இடங்களுக்குச் சென்று ஏமாந்து போவார்கள். எனது சாயி பக்தர்கள் இப்படி ஏமாறுவதை நான் விரும்பமாட்டேன். அவர்களை என்னிடம் வரவழைத்து தன்னம்பிக்கையை தரும் வழிகளை போதிப்பேன். அதனாலேயே, என்னைப்பின்பற்றி நடக்கிற மக்களை நான் அரவணைத்து அவர்களுக்கு எல்லாமாகத் தெரிகிறேன்!



     உதாரணத்திற்கு, பாலாஜி ஓர் உதாரணம்.  வாழ்வில் சாதிக்க வேண்டிய அவர், சோகத்தோடு வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து வந்தார். அவர் வேண்டியதை தருகிறேன் என்று கூறி, என் வசப்படுத்தி, வாழ்க்கையைப் புரிய வைத்து அனுப்பினேன். இன்றைக்கு சாதனையின் உச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்.



     நான் கடவுளல்ல, அக்கறையுள்ள தந்தை. சகோதரன்!  “ என்றேன்.



     ”என் மனதில் இருந்ததைக் கேட்டதற்காக என் மீது வருத்தம் இல்லையே?” என்றார்  அவர்.



     ”நிச்சயமாக இல்லை. புட்டபர்த்தி சாயி பாபாவை பேட்டி காண வந்த ஒரு பத்திரிகையாளர், திடீரென அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துவிட்டார். இது உண்மையான தலைமுடிதானா என்பதை அறிந்து கொள்ளவே இப்படி செய்ததாகத் தனது செயலுக்குக் காரணம் கூறினார்.



     அவர்மீது, புட்டபர்த்தி சாயிபாபா கோபித்துக்கொள்ளவில்லை. மாறாக, ”உங்களை எனக்குப்பிடித்திருக்கிறது. உண்மையை இப்படி சோதித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்!”  என்றார்.



     அப்படித்தான் உங்களையும் நான் நினைக்கிறேன். பெரும்பாலான கோயில்களுக்கு பக்தர்கள் குறி கேட்கச் செல்கிறார்கள். இங்கு நான் கவுன்சிலிங் தருகிறேன். பாபாவை வணங்க ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களை, இந்த கவுன்சிலிங்கில் ஆதாரத்தோடு தருவதால், இதை ஏற்கிற பக்தர்களின் வாழ்வில் வெற்றி தொடருகிறது.



     நான் கவுன்சிலிங் தொடர்பாக எழுதிய சில புத்தகங்களை வைத்துக்கொண்டு சிலர் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் இந்த பாமர மக்கள் போக முடியாது. மாறாக, பத்துப் பைசா செலவு இல்லாமல் நல்ல ஆலோசனைகளைத்தந்தால் அவர்கள் வாழ்க்கை ஸ்திரப்படும்.



     நான் பலதரப்பட்ட மக்களோடு ஒன்றிப் பழகி அவர்களின் பிரச்சினைகளை அறிந்தவன், அவர்கள் வெற்றி பெற்றதையும்,தோல்வியில் முடிந்து போனதையும் நேரடியாகப் பார்த்தவன்.



     என் அனுபவ அறிவை பலருக்கு, இதற்கு முந்தைய வாழ்க்கையில் காசுக்காக விற்பனை செய்துவிட்டேன். இப்போது, தோற்று களைத்து வருவோரின் முகத்தைப் பார்க்கும்போது, அவர்கள் நலன் பெற வேண்டும் என்ற விருப்பத்தால் தொடர்கிறேன். இதனால்தான் சீரடியில் கால் வைக்கிற சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை என்றார் பாபா! “  என்று கூறினேன்.



     பேச்சினிடையே லலிதா மாமி தன் கணவரோடு வந்ததால், முகம்மது விடைபெற்றுக் கொண்டார்.



 



சாயி வரதராஜன்



 



தொடரும்…….

Saturday, May 17, 2014

பாபாவின் போதனைகள்!

25125

யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.

அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார். நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும், எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.

இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டை யுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்.

Thursday, May 8, 2014

பாபாவின் அறிவுரைகள்- பகுதி 9

Image

பாபாவின் அமுத மொழிகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாபா நமது அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி, ஞானமும் செல்வமும் தருவார். லோகாதய இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக்கடினம். மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன.



ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன. அகங் காரம் என்னும் காற்று கடுமையாக வீசி, கோபமாகிய கடலைக்கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றி திரிகின்றன.



நான், எனது என்ற எண்ணங்களும், மற்ற சம்சயங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டுள்ளன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடு கின்றன. இவ்வளவு பயங்கரமாகவும், கொடுமையாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி அவற்றை அழிக்க வல்லவர். அவரது பக்தர்கள் இதைப் பற்றி பயம் அடைய வேண்டியதில்லை. நமது சத்குரு இந்தக் கடலை பத்திர மாகக்கடப்பதற்கு வேண்டிய படகுபோன்றவர்.



விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக்கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமும் இன்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங் களில் அசையும் அசையாப்பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி, வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற் றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங் கமாக நமஸ்கரிக்கிறோம்.

Wednesday, May 7, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 8

Image

ஒவ்வொருவரும் தனது ஆத்மாவை தூய்மையாக வைத்திருந்தால் நிச்சயம் நிம்மதியாக வாழமுடியும். உலகில் பிறந்தோருக்கு அவரவர் கர்மப்படி உரிய காலத்தில் மரணம் உண்டு. இறை கீர்த்தனையை முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்யும் போது அவருக்கு நிச்சயம் சாட்சாத்காரம் கிடைக்கும்.

Tuesday, May 6, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 7

Image

இறைவனைக் காண மனமே ஆதாரம். ஆனால் அது எளிதில் அடங்காது. முரட்டுத் தனமான அதை எப்படியும் அடக்க வேண்டும். தறிகெட்டு ஓடும் மனம் இறைவனிடம் ஒன்றுபடாதலால் பிறவியும் சம்சாரமும் தவிர்க்க முடியாதது ஆகிறது.



உண்மை எது உண்மையற்றது எது என்பவற்றைக் கண்டு அறிவதே விவேகம் ஆகும். ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் பண்டரிபுரம் போய் வருவதில் என்ன அர்த்தம் உண்டு. ஸ்ரீ ஹரியைப் பற்றி அறியாமல் அங்கு சென்று வருவதே பிறரது மதிப்பைப் பெறச் செய்யப்படுவதேயன்றி, பக்தியோடு செய்யப்படுவதே அல்ல.



புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியம் பிறர் இன்பம் கண்டு தான் இன்புறுவதே. பிறர் துன்பம் கண்டு தான் இன்புறுவதைப் போன்ற பாவம் வேறு இல்லை. ஒருபோதும் அதுபோல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

Monday, May 5, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 6

Image

இன்பமும் துன்பமும் அவரவருடைய மனநிலையைப்பொறுத்தது. இது மாயை மற்றும் பூர்வ கர்மாவின் பலனேயாகும். மாயையின் தோற்றத்தாலேயே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற ஆறு வகை விரோதிகள் உருவாகிறார்கள்.



பித்தமும் செல்வமும் ஒன்றுதான். ஆரோக்கியத்திற்கு பித்தமும் அவசியம்தான். அது போலவே செல்வமும். உடல் உள்ளவரை செல்வமும் தேவை. ஆனால் அதற்கு அடிமையாகி லோபியாக மாறி விடக்கூடாது. தர்மசிந்தனை உள்ளவனாக இருக்கும் அதே நேரத்தில் வீண் செலவும் செய்யாமலிரு.



கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அசைகின்ற அசையாத எல்லாப்பொருட்களிலும் இருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் உறைந்துள்ளதை நினைவில் கொண்டால் நம்முள் அன்பு தானாக ஊற்றெடுக்கும். அன்பு நம்மிடம் பெருகும்போது எல்லாமே நமக்குக் கிடைக்கும்.

Sunday, May 4, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 5

Image

சம்சாரம் என்பது காமம் குரோதம் ஆகியவற்றினுடைய செயலேயாகும். எங்கு ஓடி ஒளிந்தாலும் சம்சாரத்தை விட்டுத்தப்பிக்கமுடியாது. பூர்வ கர்மாவின் பலன்களாலேயே இவ்வுலகில் குழந்தை பிறப்பதும் அதன் உறவினர் இறப்பதுமாகும். படைப்புக்கடவுளான பிரம்மனாலும் மாற்றமுடியாது.

பூர்வத்தில் செய்த நல்ல வினை தீவினையின் பலனை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். கர்மங்களினுடைய பலனாக உருவானதே இந்தப் பிறவியின் உடல். இதுவே தேகப்பிராப்தம் என்று அழைக்கப்படுகிறது. செல்வந்தன் வீட்டு நாய் மெத்தையில் படுத்து இருக்கும். வறியவன் வீட்டு நாய் குப்பையில் படுத்திருக்கும். இதுதான் தேகப்பிராப்தம்.

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 4

Image



எது இன்பமாக் தெரிகிறதோ உண்மையில் அது இன்பம் ஆகாது. துன்பதும் அது போலத்தான். உலக வாழ்க்கையில் ஈடுபடுகிற மனிதன் எதை இன்பமென்று நினைக்கிறானோ அது உண்மையான இன்பமாக இருக்கமுடியாது. அது நிலையானதுமல்ல. இன்பம் துன்பம் இரண்டுமே மாயைதான்.

ஒவ்வொருவரும் அவரவர்க்குக் கிடைத்திருக்கும் தேகப் பிராப்தத்தைக் கொண்டு திருப்தி அடைவதே விவேகம். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தவனாய், விருப்பு வெறுப்பற்றவனாய், துக்கத்தையும் சுகத்தையும் சமமாகப்பாவிக்கும் எண்ணம் கொண்டிருப்பதே சிறந்த இல்வாழ்க்கையாகும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...