Showing posts with label சீடன் – சித்தன். Show all posts
Showing posts with label சீடன் – சித்தன். Show all posts

Saturday, February 15, 2014

சைவ உணவு உயர்ந்ததா?


சீடன்: சைவ உணவு உயர்ந்ததா?

சித்தன்: உணவில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று இல்லை. பொதுவாக உணவு பிரம்மம் என்கிறார் பாபா. அதனால்தான் அவர் இத்தகைய தர்க்கத்தில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
     கொல்லாமை நல்ல செயல்தான். ஆனால் அதை மட்டுமே போதித்த சில சமயங்கள் வளரவே இல்லை. செரிப்புத் தன்மை குறைந்த முதியோர், வியாதியஸ்தர்கள், குழந்தைகளுக்கு சைவ உணவு நல்லது.
     காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளைத் தரும் செடி கொடி மரங்களுக்கும் உயிர் உண்டு. இவைகளைப் பறித்து, உரித்து அரிந்து உண்பதும் ஒருவகை உயிர் வதைதான். ஞானிகள் இதனால்தான் இலைகளை சாப்பிடாமல் சருகுகளையும், கீழே உதிர்ந்து விழுந்த பழங்களையும் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். பாபா உணவு விக்ஷயத்தில் தீவிரமாக எதையும் சொல்லவில்லை.
     அவர் சொன்னதெல்லாம் அன்னதானம் செய் என்பதும், பொறுமையாய் இரு, நம்பிக்கை வை, விடா முயற்சி செய். நாம ஜெபம் செய், உணவில் நிதானம்காட்டு என்பனவற்றையே. இவற்றால் ஒரு மனிதன் விவேகம் வைராக்யம் பெறுவான். பின் எல்லாவற்றிலும் அவனே சிறந்த முடிவு எடுப்பான். நல் வாழ்க்கை வாழ்வான் என்பதுதான் பாபாவின் வழிகாட்டும் முறை. இவை எல்லாம் மிக மிக எளிய சாதனம். கஷ்டமில்லை, செலவில்லை. இப்படிப்பட்ட சாதனத்தை நம் பாபாவைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.
     கண்டதையெல்லாம் யோசித்து மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே. அனைத்திலும் உன் மனம் சொல்லும் முடிவை எடு. மற்றவரின் போதனைப் படி நடக்க முயற்சித்தால், ஒருவேளை உன்னால் முடியாவிட்டால் கடவுளை விட்டே போய் விட நேரிடும். ஆகவே, உன்னைத் திருப்தி செய், கடவுளை முழுமையாக நம்பி வாழ்க்கை வாழ். எல்லாம் நன்மைக்கே என்றிரு.

கு. இராமச்சந்திரன்.


சீடன் – சித்தன் பதில்கள்

Tuesday, January 14, 2014

சீடன் – சித்தன்

சைவம் - அசைவம்

சீடன்:
சைவ உணவு , அசைவ உணவு இதைப் பற்றிய கருத்து என்ன?
சித்தன்:
        பாபாவின் வழி எப்போதுமே தனி வழி.  ஆன்மீகத்தில் கூட அவர், உனக்கு யாரைப் பிடிக்குமோ அவரை வணங்கு என்றார்.  யாரையும் எதற்காகவும் அவர் வற்புறுத்தியதே இல்லை.  ஆகவே, அவர் எப்போதும் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவராகவே இருந்தார்.   இராமகிருஷ்ண பரமஹம்சரும், கஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்டவர்கள்தாம்.
        எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன் என்றார் பாபா.  எல்லா உயிர்களும் கடவுளின் சொரூபம்.  ஆகவே உணவுக்காக்க் கொல்லுதல் என்பது கொடுமையானதுதான்.  ஆனால் இன்றைய உலகில் 75 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
     ஓர் உயிர் இன்னொரு உயிரை உண்டு வாழ்கிறது.  இதுதான் நிதர்சனமானது.  உலகில் எதுவெல்லாம் சாத்தியமாக உள்ளதோ அதைச் செய்துதான் வாழவேண்டும்.
     ஆன்மீக சாதனை செய்வதற்க்கும் பக்தி செலுத்தவும் ஒரு மனிதன் தன் உடம்பையும் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும்.  அதற்கு அவன் எதைச் சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடலாம்.  ஆனால் உண்பதில் உடலுக்கும் மனதுக்கும் நிதானம் வேண்டும்.

ஆகவே பாபா உண்பதில் எந்த வரைமுறையும் சொல்லாமல் அவரவர் விருப்பத்திற்க்கே விட்டுவிடுகிறார்.  ஆனால் உண்பதில் நிதானம் வேண்டும் என்கிறார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...