Showing posts with label சாயிபுத்ரன் பதில்கள். Show all posts
Showing posts with label சாயிபுத்ரன் பதில்கள். Show all posts

Wednesday, August 10, 2016

பாபா வழி ஆன்மிகம்

நிறைய பேர் பாபா வழி ஆன்மிகம் என்று நுழைந்து அவதிப் படுகிறார்கள். நீங்கள் எப்படி?
(என்.சித்ரா, அம்பாசமுத்திரம்)
பயணி ஒருவன் நகரத்திற்குள் நுழைந்து, வழியில் தென் பட்ட அந்தணர் ஒருவரிடம் பின்வருமாறு விசாரித்தான்.
இந்த நகரத்தில் மிக உயர்ந்தவை எவை?’  எனக் கேட்டான்.
கள் மரங்கள் என்றார் அந்தணர்.
அதிகமாகத் தருபவர் யார்?’ எனக் கேட்டான்.
 பிறரது துணிகளைத் துவைக்கும் சலவைக்காரன்தான் அதிகமாகத் தருபவன். தினமும் காலையிலேயே நகர மக்களின் துணிகளை வாங்கி வெளுத்து, சாயமேற்றி மாலையில் தருகிறான் என்றார்.
நகரத்தில் யார் அதிக புத்திசாலி எனக் கேட்டான் பயணி.
நகரத்திலுள்ள எல்லோருமே பிறரது பணத்தையும்,மனைவிகளையும் திருடுவதில் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றான்.
சரி, இப்படிப்பட்ட நகரத்தில் எப்படி வாழ்கிறீர்கள்?’  எனக் கேட்டான் பயணி.
என்ன செய்வது சாக்கடையில் பிறந்து, சாக்கடையில் வாழ்ந்து சாக்கடையிலேயே இறந்து, சாக்கடையை நச்சாக மாற்றும் புழுவைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
மக்கள் அதிகமாக கள் குடிப்பவர்களாகவும்,  பிறரை ஏமாற்றித் திருடுகிறவர்களாகவும், பிறர் மனை நாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கூறினார்.

எது சிறந்தது?


சத்சங்கம் சிறந்ததா? தவ யோகம் சிறந்ததா?
(ஆர். கார்த்திக், காஞ்சீபுரம்)
ஒருமுறை வசிஷ்டருக்கும், விசுவாமித்திரருக்கும் இடையே தவம் வலிமையுள்ளதா? சத்சங்கம் வலிமை உள்ளதா என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  தீர்த்துக்கொள்ள ஆதிசேக்ஷனை அணுகினார்கள்.
பூமி பாரத்தைத் தாங்கிக் கொண்டு என்னால் எப்படி சிந்திக்கமுடியும்? யாராவது இதைக் கையில் வாங்கிக்கொள்ளுங்கள், சிந்தித்து தீர்ப்பு கூறுகிறேன் என்றார் ஆதிசேக்ஷன்.
பதினாயிரம் ஆண்டு தவ வலிமைகளை தந்து பூமியை கையில் வாங்கி னார் விசுவாமித்திரர். பூமி பாரத்தை அவரால் தாங்கமுடியவில்லை. பூமி ஆடத் தொடங்கியது. அவரது கைகள் நடுங்கின. உடனே வசிஷ்டர், தனது சத்சங்கத்தில் அரை கண நேரத்தின் பலனை அர்ப்பணித்து பூமியை வாங்கி நீண்ட நேரம் கையில் வைத்திருந்தார். நேரம் ஆக ஆக பொறுமை இழந்த விசுவாமித்திரர், இவ்வளவு நேரமாகியும் இன்னும் தீர்ப்பு கூறவில்லையே! எனக் கேட்டார். தீர்ப்பின் முடிவைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார் ஆதிசேக்ஷன்.

Friday, August 5, 2016

விதண்டா வாதம்




விதண்டா வாதம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
( வி. சுமித்ரா, மதுரை-2)
நாம் என்ன சொன்னாலும் கேட்காமல் தான் பிடித்ததையே வலியுறுத்திப் பேசுபவர்களை விதண்டாவாதம் செய்பவர்கள் என்கிறோம். விதண்டா வாதம் என்றால் என்ன தெரியுமா? சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சர்ச்சை பற்றிய விதிகள் மூன்று. அவை ஜல்பம், விதண்டா, வாதம் ஆகியவை. ஒரு விக்ஷயத்தைப் பேசும்போது, அதில் நியாய தர்மம் இருக்கிறதா, நியாய தர்மத்திற்கு ஏற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் தனது கட்சிக்கு வலுவூட்டப் பேசுவதும், எதிர்கட்சியைக் கண்டித்துப் பேசுவதும் ஜல்பம். எதிர் தரப்பை கண்டிப்பதற்கு மட்டும் பேசுவது விதண்டா. தன் தரப்பு, எதிர்தரப்பு என்று பேதம் பார்க் காமல் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நியதிக்குள் கட்டுப்பட்டு செய்யப்படும் சர்ச்சைக்கு வாதம் என்று பெயர்.
விதண்டா வேறு, வாதம் வேறு என்பது தெரிகிறதா?

Sunday, July 10, 2016

ஜெயிக்க வேண்டும்

எப்போதும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்திப் பேசுகிறீர்கள். இதற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?
(கே. சங்கர், கீழ்க்கட்டளை, சென்னை)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திறமை, வெற்றி, தீர்மானிக்கிற திறன், சத்வகுணம் ஆகியவற்றை தனது வடிவங்களாகக் குறிப்பிடுகிறார். இந்த நான்கு பண்புகளும்தான் ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கிறது. திறமையில்லாதவனிடம் நிலையற்ற மனம் இருக்கும். தீர்மானிக்கத் தெரியாதவன் குழப்பவாதியாக இருப்பான். வெற்றி பெறத் தகுதியற்றவனிடம் தன்னம்பிக்கை இருக்காது. சத்வ குணம் இல்லாதவன் மனதில் அமைதி யிருக்காது. இவை அனைத்தும் இருந்தால் இறைவனை அடையலாம் என்பதாலேயே நான் இவற்றை வலியுறுத்துகிறேன்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...