Thursday, June 30, 2016

திருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்

திருவொற்றியூரை அடுத்த சத்தியமூர்த்தி நகரில் வசந்தா மருத்துவமனை வளாகத்தில்       புதிதாக பாபா ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பாபாவின் ஆணைப்படி இந்த ஆலயத்தை டாக்டர் நந்திவர்மன் கட்டியுள்ளார். தன்வந்திரி சாயி பாபா என சாயி வரதராஜனால் பெயர் சூட்டப்பட்ட இந்த பாபா ஆலயத்திற்கு கடந்த மாதம் 19-ம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாயி தரிசனம் ஆசிரியர் ஸ்ரீ சாயி வரதராஜன், டாக்டர் செல்வபதி பாஸ்கரன், வேலூர் நடராஜன், எண்ணூர்ராமலிங்கம், வசந்தா உட்பட பல சாயி பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த ஆலயத்தை தரிசிக்கவிரும்பும் பக்தர்கள் டாக்டர் பி. நந்திவர்மன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
வசந்தா நர்சிங்ஹோம், அன்னை கங்கம்மாள் நகர்,சத்தியமூர்த்தி நகர் அருகில், திருவொற்றியூர் போன்: 9382890750

என்னை உணர்ந்து கொள்!

என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன் பாலும்நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம், என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக!  நீங்கள் தொலை தூரமோ, அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வு நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சி செய்தால், சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.    ஸ்ரீ சாயி பாபா
பாபாவுடன் ஒன்றி அவரைப் போல் ஆனவர்கள் சிவநேசன் சுவாமிகள், நரசிம்ம சுவாமிகள், விபூதி பாபா, கரூர் நரசிம்ம சுவாமிகள், ஆந்திர மாநிலம் பரத்வாஜ சுவாமிகள் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர். இவர்கள் சத்குருக்கள் என அழைக்கப்படும் தகுதியைப்பெற்றிருக் கிறார்கள். இவர்களிடம் வேண்டினாலே மிகப் பெரிய அற்புதங்கள் நடக்கும்.
பாபாவை அனைத்திலும் பார்த்த முதல் மனிதன் நெவாஸ்கர். தனது வீட்டில் நல்லப்பாம்பு ஒன்று வந்து சீறியபோது, அனைவரும் பயந்தார்கள். ஆனால் வந்திருப்பது பாபா என்று கூறி, பாம்புக்குப் பால் வார்த்தார். பாலை அருந்திய பாம்பு மறைந்தது

ஜெயிப்பது எப்படி?

வாழ்க்கையில் எல்லாம் துன்பங்களே தொடருகிறது. இதை எப்படி சமாளித்து ஜெயிப்பது?
(காயத்ரி, காஞ்சீபுரம் 2)
ஒரு துன்பம் இருக்கிறது என்றால் அதற்குக்காரணமும் இருக்கும். காரணத்தோடு வந்த துன்பத்தை வெல்ல வழியும் இருக்கும். உங்கள் துன்பம் எதனால் வந்தது என்பதைப் பற்றி முதலில் யோசியுங்கள். பிறகு அதை எப்படி வெல்வது என்கிற வழி பிறக்கும். தன்னம்பிக்கையோடு அந்த வழியைப் பின்பற்றினால் துன்பங்கள் ஒழிந்து போகும். ஆனால், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை  இழந்துவிடக்கூடாது. பிறரது உதவியை ஒரு கட்டத்திற்கு மேல் தேடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்


Wednesday, June 29, 2016

குருவை நம்பு!எனது நண்பர் ஒருவர், அவரது குருவிடம் அழைத்துச்சென்று இவர் எனது குரு. இவர் மீது நம்பிக்கை வைத்தால் எல்லாம் நடக்கும் எனக் கூறினார். அந்த குருவிடம் சென்றேன். ஆனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. இதனால் தவறு செய்து விட்டோமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
ஒருவர் குறிப்பிடும் குருவை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.
( கே.பி. குணசேகரன், திருச்சி 2)
ஒருவருக்கு குருவாக இருக்கிறவர் மீது இன்னொருவர் பக்தி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. அதாவது ஒருவரது குரு இன்னொருவருக்கு குருவாக இருக்க இயலாது.
சாயி பாபாவை வணங்குகிற எத்தனை பேர் ராகவேந்திரரை ஏற்றுக்கொள்கிறார்கள்? சீரடி சாயி பாபாவை சத்குருவாக ஏற்கிற எத்தனை பேர் புட்டபர்த்தி சாயி பாபாவை ஏற்கிறார்கள்? இது அவர்கள் குற்றமல்ல. பூர்வத்தில் விதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, குருவை அடையாளம் காணமுடியும். அவர் மேல் பக்தியும் ஏற்படும். இதில் தோக்ஷம் எதுவும் இல்லை. பயப்படவேண்டாம்.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...