குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இதேபோல கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள்.இந்தக் குடி யார் குடியைக் கெடுக்கும் தெரியுமா? நமது வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வதை கெடுத்துவிடும்.
Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts
Thursday, May 15, 2014
கோபம் தவிர்!
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இதேபோல கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள்.இந்தக் குடி யார் குடியைக் கெடுக்கும் தெரியுமா? நமது வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வதை கெடுத்துவிடும்.
Friday, May 2, 2014
முக்தி மார்க்கம்
முக்தி அடைவதற்காக நான்கு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை.
இதில் சரியை என்பது தாச மார்க்கம். பகவானுக்கு அடிமை செய்து அவன் பதத்தை அடைய நாடுவது. இதை சாலோகம் என்பார்கள். ஒழுக்கமாக நடந்து வழிபடும் இந்த நிலையால் சாலோகம் என்னும் நிலையான பகவானின் உலகத்தை அடையலாம்.
சற்புத்திர மார்க்கத்திற்கு கிரியை என்று பொருள். தனது வழிபடு கடவுளை அகத்தும், புறத்தும் பூசித்து வழிபடுகிற நிலைதான் சற்புத்திர நிலை. இதை கிடைய என்பார்கள். இதனால் சாமீபம் கிடைக்கும். இறைவனின் அருகிலிருக்கலாம்.
யோக மார்க்கத்திற்கு சக மார்க்கம் என்று பெயர். இதனால் சாணுபம் என்ற பதவி கிடைக்கும். அதாவது இறைவனின் திருவுருவம் போன்ற ஓர் உருவம் தாங்கி, இறை இன்பத்தை நுகர்தல்.
ஞானம் என்பது இறுதி நிலையான சன்மார்க்கம். இதையே சாயுஜ்ஜியம் என்பார்கள். அதாவது இறைவனோடு இரண்டாகக்கலந்து பிரியாது அவனைப் பெறுகிற நிலை.
மூன்று நிலைகளில் இறைவனின் பதத்தை அடையலாம். இறுதி நிலையில் பர முக்தி கிடைக்கும்.
Monday, March 31, 2014
தன்னம்பிக்கை வேண்டும்
எல்லா இதழ்களிலும் சாயி பக்தி, தன்னம்பிக்கை என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே, இது உங்களுக்குப் போரடிக்கிற விக்ஷயமாகப்
படவில்லையா?
(ஆர். காண்டீபன், சென்னை - 33)
உலகப்பற்றில் உழன்று கிடப்பவனிடம் சிறிது சிறிதாக வைராக்கியத்தைப் பற்றியே பேசிக்
கொண்டிருந்தால் அவனுக்கு உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தணிகிறது. என்று பகவான்
ராமகிருஷ்ணர் கூறுவார்.
நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தும்போது, பக்தி குறைவானவர்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை
ஏற்பட்டு வலிமை ஏற்படுகிறது.
சாயி புத்ரன் பதில்கள்
Thursday, March 6, 2014
பக்தர்கள் கவனத்திற்க்கு
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் தினந்தோறும் காலையில் திறக்கப்படுகிறது. பன்னிரண்டு
மணிக்கு ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது. மாலையில் தினமும் நாலரை
மணிக்குத் திறக்கப்பட்டு எட்டு மணி ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது.
இந்த நேரங்களில் யார் வேண்டுமானாலும் வந்து பாபாவை விருப்பம் போல வழிபடலாம்.
மேல் மாடி தியானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் அமைதியாக அமர்ந்து
வேண்டுதல் செய்யலாம், தியானம்
செய்யலாம், பாபாவின் நாம சங்கீர்த்தனம்
செய்யலாம்.
சாயி வரதராஜனை எதிர்பார்த்து வருவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். சாயி பாபா
மட்டுமே இங்கு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாபாவை
நம்பி இங்கு வந்த பக்தர்கள் இதுவரை வீணானதில்லை. எனவே, பாபாவை மட்டும் நம்பி வாருங்கள், சாயி வரதராஜன் இருந்தால் அவரிடம் பிரார்த்தனை
செய்துகொள்ளலாம்.
கூட்டுப் பிரார்த்தனைக்கான கடிதங்களை உண்டியலில் சேர்க்காமல் பாபாவின் திருவடிகளில்
அல்லது மையத்தின் மேலாளர் திரு. பாஸ்கரன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
கூடுமானவரை வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு பூக்கள் வாங்கி பணத்தை விரையம்
செய்வதற்கு பதில், பிஸ்கெட்,
இனிப்புகள் போன்றவற்றை வாங்கி
நைவேத்தியம் செய்து வைத்தால், அவற்றை
முதியோர் இல்லங்களுக்கும், அனாதை
விடுதிகளுக்கும் சேர்ப்பித்து மற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தைச் சேர்க்கலாம்.
கோயில் கட்டலாம் வாருங்கள்!
திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி
கோயில்களை உருவாக்கி, நற்பணிகளைச்
செய்திட உருவாக்கப்பட்ட
சீரடி சாயி
சமதர்ம சமாஜ; அறக்கட்டளையின்
புதிய சீரடி சாயி
பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர் -
ரத்தின மங்கலம் - கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013
ஞாயிற்றிக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக்
கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம்
பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின்
வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக
எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி ”மாணவ
ஞான கணபதி ஆலயமாக”
இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல்
கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ
அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி
வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம்
இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும்
மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக்
கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.
மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை
அணுகவும்
சாயி வரதராஜன்
Sunday, March 2, 2014
பக்தர்கள் கவனத்திற்க்கு
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் தினந்தோறும் காலையில் திறக்கப்படுகிறது. பன்னிரண்டு
மணிக்கு ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது. மாலையில் தினமும் நாலரை
மணிக்குத் திறக்கப்பட்டு எட்டு மணி ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது.
இந்த நேரங்களில் யார் வேண்டுமானாலும் வந்து பாபாவை விருப்பம் போல வழிபடலாம்.
மேல் மாடி தியானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் அமைதியாக அமர்ந்து
வேண்டுதல் செய்யலாம், தியானம்
செய்யலாம், பாபாவின் நாம சங்கீர்த்தனம்
செய்யலாம்.
சாயி வரதராஜனை எதிர்பார்த்து வருவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். சாயி பாபா
மட்டுமே இங்கு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாபாவை
நம்பி இங்கு வந்த பக்தர்கள் இதுவரை வீணானதில்லை. எனவே, பாபாவை மட்டும் நம்பி வாருங்கள், சாயி வரதராஜன் இருந்தால் அவரிடம் பிரார்த்தனை
செய்துகொள்ளலாம்.
கூட்டுப் பிரார்த்தனைக்கான கடிதங்களை உண்டியலில் சேர்க்காமல் பாபாவின் திருவடிகளில்
அல்லது மையத்தின் மேலாளர் திரு. பாஸ்கரன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
கூடுமானவரை வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு பூக்கள் வாங்கி பணத்தை விரையம்
செய்வதற்கு பதில், பிஸ்கெட்,
இனிப்புகள் போன்றவற்றை வாங்கி
நைவேத்தியம் செய்து வைத்தால், அவற்றை
முதியோர் இல்லங்களுக்கும், அனாதை
விடுதிகளுக்கும் சேர்ப்பித்து மற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தைச் சேர்க்கலாம்.
Thursday, February 20, 2014
கடவுள் உங்களை கவனித்து வருகிறார்.
சமர்த்த ராமதாசர் தனது இரு சீடர்களிடம் ஆளுக்கு ஒரு கோழியைக் கொடுத்து,
இதை யாரும் பார்க்காதபடி வெட்டி
எடுத்துவாருங்கள் என்றார்.
சீடர்கள் இருவரும் காட்டுக்குச்
சென்றனர். ஆளில்லாத இடமாகப் பார்த்து ஒரு சீடன் ஒரு கோழியைக் கொன்றான். இன்னொருவனோ
நாள் முழுக்கத் தேடிப் பார்த்துவிட்டு, அப்படிப்பட்ட இடமே இல்லை என்று சொல்லியபடி, கோழியுடன் குருவிடம் திரும்பினான்.
கோழியைக் கொன்ற சீடன், ‘ஐயா, இதை நான் கொல்லும்போது யாருடைய கண்களும் பார்க்கவில்லை’’ என்றான்.
அடுத்தவன், ‘‘ஐயா, என்னை இந்த மொத்த உலகமும் கவனிக்கிறது. என் கண்களே என்னை கவனிக்கின்றது. அப்படியிருக்க,
இந்தக் கோழியை எப்படி, எந்த இடத்தில் கொல்வது எனத் தெரியாமல் திரும்ப கொண்டுவந்துவிட்டேன்!’’ என்றான்.
இந்த பதிலைக் கேட்டு ராமதாசர்
மகிழ்ச்சி அடைந்தார். மகனே, இந்த
உலகம் முழுவதும், கடவுள் உட்பட
உன்னை கவனித்தபடியே இருக்கிறார்கள். யாரும் உன்னை கவனிக்க வில்லை என கவலைப்படாதே!’ அஜhக்கிரதையாக
இருக்காதே! என்று கூறினார்.
பாபா அடிக்கடி சொல்வார், ‘‘சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின்
ஓசையைக்கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்து விடுவேன்.
உன் செயல்கள் நல்லதாகவும், உனது
நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விக்ஷயங்களையும் நானே உடன் இருந்து
கவனித்துக் கொள்வேன்!’’ என்பார்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விக்ஷயத்தைப் பற்றியோ கவலையே
படமாட்டோம்.
அனைத்தும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து அமைதியாக
இருப்போம். அமைதியாக, பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். கடவுள் உங்களை கவனித்து
வருகிறார்.
Saturday, February 15, 2014
சைவ உணவு உயர்ந்ததா?
சீடன்: சைவ உணவு உயர்ந்ததா?
சித்தன்: உணவில் உயர்ந்தது, தாழ்ந்தது
என்று இல்லை. பொதுவாக உணவு பிரம்மம் என்கிறார் பாபா. அதனால்தான் அவர் இத்தகைய
தர்க்கத்தில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
கொல்லாமை நல்ல செயல்தான். ஆனால்
அதை மட்டுமே போதித்த சில சமயங்கள் வளரவே இல்லை. செரிப்புத் தன்மை குறைந்த முதியோர், வியாதியஸ்தர்கள், குழந்தைகளுக்கு சைவ உணவு நல்லது.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளைத் தரும் செடி கொடி மரங்களுக்கும் உயிர்
உண்டு. இவைகளைப் பறித்து, உரித்து
அரிந்து உண்பதும் ஒருவகை உயிர் வதைதான். ஞானிகள் இதனால்தான் இலைகளை சாப்பிடாமல்
சருகுகளையும், கீழே உதிர்ந்து
விழுந்த பழங்களையும் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். பாபா உணவு விக்ஷயத்தில்
தீவிரமாக எதையும் சொல்லவில்லை.
அவர் சொன்னதெல்லாம் அன்னதானம்
செய் என்பதும், பொறுமையாய் இரு,
நம்பிக்கை வை, விடா முயற்சி செய். நாம ஜெபம் செய், உணவில் நிதானம்காட்டு என்பனவற்றையே. இவற்றால்
ஒரு மனிதன் விவேகம் வைராக்யம் பெறுவான். பின் எல்லாவற்றிலும் அவனே சிறந்த முடிவு
எடுப்பான். நல் வாழ்க்கை வாழ்வான் என்பதுதான் பாபாவின் வழிகாட்டும் முறை. இவை எல்லாம்
மிக மிக எளிய சாதனம். கஷ்டமில்லை,
செலவில்லை. இப்படிப்பட்ட சாதனத்தை நம் பாபாவைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.
கண்டதையெல்லாம் யோசித்து
மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே. அனைத்திலும் உன் மனம் சொல்லும் முடிவை எடு.
மற்றவரின் போதனைப் படி நடக்க முயற்சித்தால், ஒருவேளை உன்னால் முடியாவிட்டால் கடவுளை விட்டே போய் விட
நேரிடும். ஆகவே, உன்னைத் திருப்தி
செய், கடவுளை முழுமையாக நம்பி
வாழ்க்கை வாழ். எல்லாம் நன்மைக்கே என்றிரு.
கு. இராமச்சந்திரன்.
சீடன் – சித்தன் பதில்கள்
Wednesday, February 12, 2014
குரு மீது நம்பிக்கை
நிறைய பேர் ஒரு அடியவரை தரிசிக்கச் சென்று, அவர் இல்லை என்று கண்டால், அவருக்குப் போன் செய்து ‘‘ஐயா, உங்களுக்காக சிறிது காணிக்கை எடுத்து வந்திருக்கிறேன்,
பெற்றுக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்பார்கள்.
இதேபோல பாபாவிடம் ஒரு பெண்மணி
நிறைய பணம் எடுத்துக்கொண்டு வந்து, தனக்கு
குருவாக இருக்குமாறு வேண்டியபடி நான்கு நாட்கள் நின்றிருந்தாள். பாபா பக்தர்களிடமிருந்து
தட்சணை என்ற பெயரில் பணம் வாங்குகிறார் என்பதை அறிந்திருந்ததால், காரியத்தை சுலபமாக சாதிக்க நினைத்தாள்
அவள். அவளிடம் எந்த
தட்சணையையும் கேட்டாரில்லை. நான்காவது நாள், அவள் பொறுமையிழந்தவளாக, பாபா நான் இங்கே ஒரு குருவை நாடி வந்து
காத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு குருவாக இருந்து உபதேசம் செய்து வையுங்கள் என்றாள்.
யாரும் உனக்கு குருவாக
முடியாது. நீ யாரை குருவாக மதித்து அவர் மீது நம்பிக்கை வைக்கிறாயோ அவர்தான் உன்
குருவாக இருக்கமுடியும். இந்த பானையை எடுத்துக் கொண்டு அதை உன் குருவாக நினைத்துக்
கொள். உன்னுடைய இலட்சியம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதைப் பார் என்றார்.
குருவை பணம் கொடுத்து வாங்கமுடியாது.
அப்படி நினைப்பது பாவம். எனவே, காசு
கொடுத்து குருவை அழைக்காதீர்கள்.
Sunday, February 9, 2014
பக்தர்கள் கவனத்திற்க்கு
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் தினந்தோறும் காலையில் திறக்கப்படுகிறது. பன்னிரண்டு
மணிக்கு ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது. மாலையில் தினமும் நாலரை
மணிக்குத் திறக்கப்பட்டு எட்டு மணி ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது.
இந்த நேரங்களில் யார் வேண்டுமானாலும் வந்து பாபாவை விருப்பம் போல வழிபடலாம்.
மேல் மாடி தியானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் அமைதியாக அமர்ந்து
வேண்டுதல் செய்யலாம், தியானம்
செய்யலாம், பாபாவின் நாம சங்கீர்த்தனம்
செய்யலாம்.
சாயி வரதராஜனை எதிர்பார்த்து வருவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். சாயி பாபா
மட்டுமே இங்கு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாபாவை
நம்பி இங்கு வந்த பக்தர்கள் இதுவரை வீணானதில்லை. எனவே, பாபாவை மட்டும் நம்பி வாருங்கள், சாயி வரதராஜன் இருந்தால் அவரிடம் பிரார்த்தனை
செய்துகொள்ளலாம்.
கூட்டுப் பிரார்த்தனைக்கான கடிதங்களை உண்டியலில் சேர்க்காமல் பாபாவின் திருவடிகளில்
அல்லது மையத்தின் மேலாளர் திரு. பாஸ்கரன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
கூடுமானவரை வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு பூக்கள் வாங்கி பணத்தை விரையம்
செய்வதற்கு பதில், பிஸ்கெட்,
இனிப்புகள் போன்றவற்றை வாங்கி
நைவேத்தியம் செய்து வைத்தால், அவற்றை
முதியோர் இல்லங்களுக்கும், அனாதை
விடுதிகளுக்கும் சேர்ப்பித்து மற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தைச் சேர்க்கலாம்.
Friday, February 7, 2014
மனிதப் பிறப்பெடுத்து என்ன பயன்?
ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, ஒரு விவசாயி
தன்னுடன் தனது தோட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். போகும்போது தனது பசுவை ஓட்டி
வந்து தோட்டத்தில் கட்டிவிட்டு, என்
தாகத்திற்கு இளநீர் வெட்டித் தந்தார். பருகிக்கொண்டே நினைத்தேன், எப்போதோ ஊற்றிய நீரைக் குடித்த தென்னை, தாகத்திற்காகத் தான் சேமித்து வைத்த பயனான
இளநீரைத் தந்தது. இதோ இந்த பசுவோ,
நல்ல புல்லாகப் பார்த்து தன் வயிறு முட்ட மேய்கிறது. இதுவும் பாலாக, தான் அனுபவித்த பயனை பிறருக்குத்
தந்துவிடுகிறது. ஓரறிவு உள்ள புல்லோ, தன்னையே பிறருக்காகத் தருகிறது. பகவானே, நான் மனிதப் பிறப்பெடுத்து என்ன பயன்? யாருக்கும் லாபமின்றி, சுயநலத்தோடு பிறரது சொத்துக்களை அனுபவிக்கிறேனே என
நினைத்துக்கொண்டேன்.
சாயி வீரமணி,
சைதாப்பேட்டை
Monday, January 13, 2014
பரமஹம்சர்
ஒரு
யோகியின் சரித்திரம் எழுதிய பரமஹம்சர் எத்தனையோ மகான்களையும் குருமார்களையும்
சந்தித்தார். அவர்கள் தாங்கள்
படித்தவற்றையும், அறிந்தவற்றையும் கூறியதைக்கேட்டு திருப்தியடையாமல் தானே இறைவனின்
தயையை , அருளை உணர வேண்டும், அனுபவிக்கவேண்டும் – அப்போதுதான் இறைவன் இருக்கிறான்
என்பதை நம்பமுடியும் என விடாப்பிடியாக முயற்சித்து இறைய்ருளை அனுபவத்தவர். தான் பிரார்த்தித்த எல்லாவற்றையும் இறைவன்
அருளினான் என்று அறுதியிட்டு பரமஹம்சர் சொன்னார்.
Saturday, January 4, 2014
உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு விதமான குருமார்கள் இருக்கிறார்கள். பாபா போன்று மேலிருந்து இறங்கி வந்தவர்கள்
மற்றும் கடும் முயற்சி செய்து கீழிருந்து
மேல் நிலைக்குச் சென்றவர்கள்.
துறவிக்கும் சன்னியாசிக்கும் உள்ள வேறுபாடு:
துறவி:
தன்னிடமுள்ள
சொத்து சுகம், பந்த பாசம், உறவு புகழ் என
அனைத்தையும்
உதறித்தள்ளி விட்டு கடவுளைத் தேடுபவன் துறவி.
துறவி
ஒழுங்கு முறைகளைப் பின்பற்றமாட்டான்.
சன்னியாசி:
தனது
புலன்களின் செயல்களில் பற்று வைக்காமல் அதன் ஆசையைத் துறந்து விட்டு இறைவனை நாடுபவன் சன்னியாசி.
சன்னியாசி
அனைத்து ஒழுங்கு முறைகளையும் பின்பற்றியாக வேண்டும்.
Friday, January 3, 2014
கடவுளும் குருவும் எதற்காக?
கர்மாவை
அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்றால் கடவுளும் குருவும் எதற்காக?
கர்மா என்பது கடந்த காலத்தின் பயன்கள். போன ஜென்மத்தில் நாம் செய்தவற்றின் விளைவுகளை
இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம்.
இருவர் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஒருவன்
படித்தான். ஒருவன் ஏதோ வந்து போனான். படித்தவன் கலெக்டர் ஆனான். படிக்காதவன்
இளநீர் விற்கிறான். அன்று படித்ததின் பலனை, படிக்காததின் பலனை இன்று
அனுபவிக்கிறார்கள். இதுதான் கர்ம பலன்.
அன்று இதன் அருமை தெரியவில்லை, மன்னித்து
என்னை கலெக்டர் ஆக்கு கடவுளே என்றால் கடவுள் என்ன செய்ய முடியும்? நமக்கு கடவுள்
நிறைய வாய்ப்புகளைத் தருகிறார். அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்வதைப்
பொறுத்துத்தான் நம் கர்மா தீர்மானிக்கப்படுகிற்து. நன்மையும் தீமையும்
நம்மிடம்தான் இருக்கிறதே தவிர கடவுளுக்கும் இதற்க்கும் சிறிதும் தொடர்பில்லை.
இன்றைக்கு வேண்டுமானால் விடுப்பு
எடுத்துக்கொள் ஆனால் நாளை வந்து நீதான் இந்த வேலையினை முடிக்கவேண்டும் என்று
அலுவலகத்தில் சொல்வார்களே, அதுபோலத்தான் குருவருளால் நமது கர்மா சிறிது
தள்ளிபோடப்டலாமே தவிர அதை ஒரு நாள் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
குருவும் கடவுளும் நம் சுமைகளை சுமக்க உதவி
செய்வார்கள். சுமை தெரியாமல் நடக்க வைப்பார்கள். நாம் களைப்படைந்தால் உதவி செய்து
இளைப்பாற்றுவார்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
சாஸ்திர விதி
வீட்டிலிருந்து ஒருவர் காணாமல் போய்விட்டால்
பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் பொறுமையாக இருக்கவேண்டும். அதன் பிறகும் அவர் வராவிட்டால், அவரை
இறந்ததாகக்கருதி அவருக்கு சிரார்த்த சடங்குகளைச் செய்ய வேண்டும்.
இதற்க்காக அவரது பிரதிமையாக களிமண்ணில்
பொம்மை செய்து அதற்கு சடங்குகளைச் செய்யவேண்டும்.
ஆண்டுதோறும் இந்த சடங்கினைத் தொடரவேண்டும்.
இது நமது சாஸ்திர விதி
Tuesday, October 15, 2013
பாரம் சுமப்பவர் அவர்!
நமது பூஜ்ய ஸ்ரீ
நரசிம்ம சுவாமிஜி அவர்கள் குழந்தைகளை இழந்த தவிப்பில் மன சஞ்சலத்தோடு வீட்டை
விட்டுக் கிளம்பி பல இடங்களில் அலைந்து, எங்கும் அவர்
எதிர்பார்ப்பு பூர்த்தியாக நிலையில் நேரடியாக சமாதி மந்திரில் குடியிருந்த
பாபாவிடம் போனார். அந்த இடத்தில் கால் வைத்ததுமே அவரது மனதில் அமைதி குடி கொண்டு
மனம் அடங்கிப் போனது. இனம் புரியாத சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தார். அதன்பிறகுதான்
சாயி பாபாவிற்க்கு இத்தகைய சக்திகள் இருக்கின்றன என உணர்ந்து இந்தியா முழுதும்
பிரச்சாரம் செய்து சாயி பக்தியினை வளர்த்தார்.
இங்கு இன்னொரு உண்மையினை தெரிந்துக் கொள்ள வேண்டும். எத்தகைய
பிரச்சன்னையாக இருந்தாலும் அது பாபாவின் அனுமதியோடு தான் வாழ்க்கையில் நுழைகிறது. என்ன நடந்தாலும்
சரி, பாரம் சுமர்ப்பவர் அவர் என்பதை நாம் பிரிந்துக்கொள்ளவேண்டும்.
பாரம் சுபர்ப்பவர் அவர! அவருக்குத்தான் மூச்சிறைப்பு ஏற்படவேண்டும். நாம் அவரோடு
சும்மாதான் நடக்கிறோம். கோமாளி மாதிரி….அய்யோ! அம்மா! முடியவில்லையே என
புலம்புவது வேடிக்கையாக இல்லையா?
எனவே கவலைப்படுவதை விட்டுவிடுங்கள். என்ன நடந்தாலும் என்னையும், என் பாரத்தையும்
சுமர்ப்பவர் அவர் என நினைத்து, பாபாவின் மீது சுமையினை
ஏற்றி வைத்துவிட்டு பிரச்சனையை உடனடியாக மறந்துவிடுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும்
பாபாவின் செயல்கள் வெளிச்சத்திற்க்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தால்
பிரச்சனை தீரும்.
Monday, October 14, 2013
என்ன செய்யவேண்டும்?
என்ன
செய்யவேண்டும்?
மன சஞ்சலம் அடிக்கடித்
தோன்றினால் மனத் தெளிவு இருக்காது. எடுக்கிற முடிவுகள், போகிற பாதை என
எதுவும் சரியாக இருக்காது. ஆகவே எப்போதும்
குழப்பத்தில் இருக்கவேண்டியிருக்கும். இதை முதலில் நாம் மாற்ற வேண்டும்.
இதற்க்கு அற்புதமான ஒரு உபாயத்தை பாபா கூறுகிறார். முதலில் உன் மனதை
ஏதாவது ஒன்றின் மீது செலுத்து. உனக்கு எதன் மீது அதிகப்
பிரியம் உண்டோ அதன் மீது மனதைச் செலுத்து. அப்போது மனம் குவிய ஆரம்பிக்கும். உன்
பிரச்சனைகள் தீரும் என்கிறார்.
நீங்கள் பாபாவின் மீது உங்கள் மனதைச் செலுத்தினால் போதுமானது. அவர் இரக்கப்பட்டு
உங்கள் மனதை அமைதி நிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். அப்போது மனம் அமைதியடையும்.
Sunday, October 13, 2013
சஞ்சல புத்தியுள்ளவனின் நிலை
சஞ்சல
புத்தியுள்ளவனின் நிலை
சஞ்சல புத்தியுள்ளவன் எதையும் எளிதில் நம்ப மாட்டான். கடவுளைக்கூட நம்ப
மாட்டான். கடவுளை நம்பினாலும் கை மேல் பலன் கிடைக்கவேண்டும்
என்று எதிர்பார்ப்பான். அது கிடைக்காத போது உடனடியாக வேறு கடவுளைத் தேடி
ஓடுவான் அல்லது வேறு மதத்திற்குத் தாவுவான்.
எங்கும் அதே நிலை
என்பதை அறிந்த பிறகு அனைத்தையும் விட்டு விட்டு வெறுத்துத் திரிவான். அல்லது
தற்கொலை போன்ற முயற்சிகளில் ஈடுபடுவான்.
எல்லாமே
இருக்கிறது. தேவைகளுக்கு அவசியமே கிடையாது என்று இருந்தாலும்
கூட மனதில் அமைதியிருக்காது. எதையோ பறி கொடுத்ததைப்
போன்றஉணர்வு இருக்கும். தினமும் இதே எண்ணத்தில் தூக்கத்தைத்
தொலைத்துவிடுவான், என்னவோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு கூறுகிறது
என அடிக்கடி கூறுவான்.
இப்படிப்பட்ட
நிலையில் இருந்தால் இன்று முதல் கண்டிப்பாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
Wednesday, October 9, 2013
சஞ்சல புத்தி எப்போது ஏற்படுகிறது?
சஞ்சல புத்தி
எப்போது ஏற்படுகிறது?
எல்லாம் இருக்கும் போதும்
ஏற்படும், எதுவும் இல்லாத போதும் ஏற்படும். பொறுப்பில்லாமல்
வாழ்க்கையை ஆரம்பித்து நடத்தும் போதும், பொறுப்புடன் நடந்தும்
தோல்வியின் பாதையில் போகும்போதும் ஏற்படும். மனசாட்சியுடன்
நடந்து கொள்ளும்போதும் ஏற்படும். ஏதோ ஓர் எதிர்பார்ப்பு
மனதில் இருக்கும்போதும் ஏற்படும்.
அப்படியானால் எல்லா நிலைகளிலுமே சஞ்சல புத்தி ஏற்படுமா? என்றால்
நிச்சயமாக ஏற்படும்.
வாழ்க்கையில் நிறைய சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும்
தன்னிறைவோடு வாழவேண்டும் என்ற எண்ணத்திலாவது ஒருவர் வாழவேண்டும். இதற்காகத் தொழில்
செய்கிறோம். வேலைக்கு செல்கிறோம். நமக்கென கடமைகள் இருக்கின்றன. அது தனது
திருமணமாக இருக்கலாம், வீடு கட்டுவதாக இருக்கலாம், பிள்ளையின்
படிப்பாக இருக்கலாம், தொழிலை பெருக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம்
அல்லது வாழ்வில் முன்னேற ஏதோ ஒரு வழியாகவும் இருக்கலாம்.
அவற்றை சரியாகச் செய்ய வேண்டும் என்று முனையும் போது பிரச்சனையை
சந்திக்கிறோம்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது கொதிக்கிற எண்ணைய் போன்றது.
இளச்சூடாக இருக்கும் வரை இதமாக இருக்கும். கொதிக்க
கொதிக்கத்தான் உடல் வெந்து போகும்.
ஆமை இருக்கிறதே, அதைக்
கொல்வதற்காக ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைப்பார்கள். நீர் இளஞ்சூடாக
இருக்கும் வரை, இதமாக இந்தத் தண்ணீர் போல எங்கும் தண்ணீர்
இருக்காது என நினைத்து ஆமை கால்களை அகல விரித்து நீந்தத் தொடங்கும். சில நிமிடங்களில்
நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதிலேயே இறந்து போகும்.
இப்படித்தான்
பிரச்சனைகளும்.
துவக்கத்தில்
பிரச்சனை தெரியாமலேயே காலை விடுவோம். பிறகு சமாளித்துவிடலாம்
என அடி எடுத்து வைப்போம். இறுதியில் அதிலேயே மாட்டிக் கொள்வோம். அதுவரை
நிம்மதியாக போகும் நமது நிலைமை மோசமாகி, உதவிக்கு வேண்டியவர்களை
கூப்பிடுவோம். ஒரு கட்டத்தில் அவர்களும் ஒளிந்துக்கொள்ளுவார்கள். பிறகு கடவுளைக்
கூப்பிடுவோம். நமது கர்மா தீரும் வரை அவரிடம் உதவி பெறமுடியாது. ஏனெனில் கடவுள்
தருவதை கர்மா தடுத்துவிடும். அதன்பிறகு தற்கொலையா? ஊரை விட்டு
ஓடுவதா? என சிந்திக்க வைக்கும். இதுதான்
பிரச்சனையின் இயல்பு.
எப்படியும்
திருப்பித் தந்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அனைவருமே கடன் படுகிறோம். நேரம் சரியில்லாத காலத்தில்தான்
கடன் தொல்லை என்ற ஒன்று நமக்குள் ஊடுருவி விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும், இதனால்
மேற்கொண்டு புதிய முயற்சி எதிலும் ஈடுபடாமலும், மேலும் கடன் பெற
முயற்சிக்காமல், இருப்பதை வைத்து காலத்தை ஓட்டும் முயற்சியிலும்
இருந்தால் நாம் நிச்சயம்
தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாத ஒன்றாகி நமது நேரம் நம்மை வேறு
திசையில் தள்ளிவிடும். அதனால் வட்டிக்கு மேல் வட்டிக்கு வாங்கி, வட்டியைக்கட்ட
தனிக்கடன் வாங்குகிற கதையாக மாறும்போது மனம் சஞ்சலப்பட ஆரம்பிக்கும்.
கடன் மட்டுமல்ல, நமது குழந்தைகள்
நலமாக இருப்பார்களோ மாட்டார்களோ என நினைக்கும்போதே மனம் சஞ்சலப்படுகிறது. அவர்கள்
நம்மை மதிக்காத போதும் கூட மனம் சஞ்சலப்படுகிறது.
நமது செயல்கள்
நமக்கு எதிராக திரும்பிவிடும் போதும், நல்லதைச் செய்து தீமையாக
முடியும் போதும், நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த
பிறகும் மனம் சஞ்சலப்படுகிறது. இப்படி நம்மை மீறிய
செயல்கள் நம் வாழ்வில் குறுக்கிடும்போதும் மனம் இயல்பாகச் சஞ்சலப்படுகிறது.
இந்நிலையில்
இருப்புக்கொள்ளாமல் தவித்து புலம்புகிறோம். இத்தகைய நிலையை
மனதிற்க்குள் வைத்துக்கொண்டு அலைபவனைத்தான் சஞ்சல புத்தியுள்ளவன் என்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...













.jpg)
.jpg)

