Showing posts with label சாயி அனுபவம். Show all posts
Showing posts with label சாயி அனுபவம். Show all posts

Tuesday, April 24, 2018

வேண்டிய வடிவில் வருவார்....


குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.

ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.

சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.

சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.

Thursday, August 4, 2016

சாயி தரிசனமே எனக்கு போதி மரம்….


புத்தர் மகானுக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது என்பார்கள். அந்த ஞானம் என்ன?  பேராசையே மனித குலத்தின் துயரத்திற்குக் காரணம் என்று கண்டறிந்ததுதான் அந்த ஞானம்.  சாயி தரிசனம் எனக்கு என்ன போதித்தது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.
வாழ்க்கையில் இன்பம் துன்பம், ஏற்றம் தாழ்வு, பிறப்பு இறப்பு, வறுமை செல்வம் என எது வந்தாலும், எந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் எதுவும் எனக்குப் பெருந்துன்பத்தைத் தராது. வருவது வந்துதான் தீரும் என்றால், எதைக் கொண்டு இதை மாற்ற முடியும்! நடப்பது நடந்துதான் தீரும். எல்லா காரியங்களுமே நமக்கு முன்னால் விதிக்கப்பட்டவையே என்று அமைதி காத்து பொறுமையோடு இருந்தால் பெரும் மனக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
யாருமே பிறக்கும்போதே எல்லாம் தெரிந்து கொண்டு ஆன்றோராய், சான்றோராய் வாழ்வை வெற்றி கொள்ளும் தீரர்களாகப் பிறப்பதில்லை. நமது வாழ்க்கையில் கற்ற அனுபவங்கள், நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சொல்லிய அறிவுரைகள், சம காலத் தில் நமக்கு உதாரண புருக்ஷர்களாய் இருப்பவர்கள், நல்ல புத்தகங்கள், பெற்றோரின் வளர்ப்பு முறை, நல்லாசிரியர்களின் வழிகாட்டுதல் இவைதான் ஒரு மனிதனை நல்ல மனிதனாக உருவாக்குகிறது.
ஆகவே, நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்தினால் நமக்குப் பெரும்பாலும் நன்மைகளே நடக்கும். இதைத்தான் சாயி வரதராஜனின் எழுத்துக்களிலும் பார்த்தேன். அவருக்குள்ள தெளிவான சிந்தனை, சாயி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக எழுதும் எழுத்தாற்றல், தன் அனுபவங்களை எப்படி சாயிபக்திக்கு கொண்டு வந்தது என்ற விவரங்களைப் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது.
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு தோற்ற காலத்தில் சாயியின்பக்தி அவரை எப்படி உயர்த்தியது. சோதனை காலங்களில் எப்படி சாய் நாதர் அவருக்கு அரணாக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது.
அவர் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தகுதி உடையவராக்கியது அவரது அனுபவப்பாடங்களும், சாயி நாதரின் அருளாசியுமே.
போராட்டமான வாழ்க்கையில் சிறிதளவாவது அமைதி கிடைக்க வேண்டுமானால் கடைப்பிடிக்க வேண்டியவைகளை சாயி தரிசனத்திலிருந்து நான் புரிந்து கொண்டவை என்ன என்பதைப் பற்றி பகிர்ந்;து கொள்கிறேன். கடைப்பிடிக்க நான் முயற்சி செய்கி றேன். நீங்களும் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சமாதானம் கிடைக்கட்டும்.
அன்பு செலுத்து்
எல்லோரிடமும் அன்பு செலுத்து. அன்பு, பாசம், காதல், பக்தி, நேசம் எல்லாமே அன்பின் வடிவங்களே. அன்பு இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவு போர் என்று எதுவும் வராது. முதலில் குடும்பத்தில் எல்லோ ரிடமும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவோம். பிறகு வெளியே வருவோம்.
பிறரிடம் குற்றம் காண்பதை தவிர்:
பிறரிடம் குற்றம் காண்பதைத் தவிர்த்து அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்த் தால் கோபம் வராது. யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரை அவருடைய நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ள முயற்சிப்போம். காரணம், யாருமே முற்றும் நல்லவர்களும் அல்லர், கெட்டவர்களும் அல்லர்.
கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் வேண்டும்:
யாரும் யாருக்காகவும் மாறத் தேவையில்லை. ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டுப் பேசி னாலே பிரச்சினையில்லா வாழ்க்கையை வாழலாம். வாழ்க்கை மிகவும் அழகானது. நீயா நானா என்று மோதல் இல்லாமல் ஈகோ இல்லமல் வாழ்ந்தால் பேரின்பமே! குழந்தைகள் வளர்ப்பிலும் தாய் தந்தை, குடும்பமே முதலிடம். நாம் எப்படி நடந்து கொள்கி றோமோ அப்படித்தான் குழந்தை வளரும். அன்பு கலந்த கண்டிப்பால் குழந்தையை வழிப் படுத்தலாம்.
தொழிலில் நேர்மை தேவை்
செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நமக்கு கை கொடுக்கும். நல்லவனாக வாழவேண்டுமா? வல்லவனாக வாழவேண்டுமா என்றால் வல்லமை பொருந்திய நல்லவனாக இருப்பதே வெற்றிக்கு வழி காட்டும்.
கடவுளை நம்பவேண்டும்:
ஆத்மார்த்த நம்பிக்கையோடு கலந்த வேண்டுதல் செவிசாய்க்கப்படும். இதைத்தான் தன் அனுபவங்களாக, அற்புதங்களாக சாய் பக்தர்கள் உணர்ந்து இருக்கிறோம். சாயி யாரையும் கைவிடுவது இல்லை. ஆனால் நமது நம்பிக்கையின் எல்லைவரை கொண்டு சென்று ஜெயிக்க வைப்பார்.
சேலத்தில் வாழ்கிற நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை கண்டுள்ளோம். தோல்விகளும் நட்டங்களும் வரும் போது கட்டாயம் துவண்டுதானே போவோம். ஆனால் எங்களுக்கு பாபா புகட்டிய பாடம் என்ன தெரியுமா?
தோல்விகளும் நஷ்டங்களும் அப்போதைக்கு மன வருத்தம் வேதனைகளை தரும். ஆனால் அந்தச் சமயத்தில் இதுவும் கடந்து போகும் என்று சமாதானமடைந்தால் ஒரு சிறு கால இடைவெளியிலே அந்த நஷ்டம் பிற்காலத்தில் வரவிருந்த பெரிய நஷ்டத்தை தவிர்த்திருக்கிறது என்பது புரியும்.
எனது கணவர் பி.டபள்யூ.டி காண்டிராக்டர். ஒரு பி.டபள்யூ.டி. வேலையை எடுக்க முதலில் டெண்டர் போடுவோம். யாருடைய டென்டர் தொகை குறை வாக உள்ளதோ அவர்களுக்கே அந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். மிகக் குறைவான தொகை வித்தியாசத்தில் அந்த வேலை வேறு ஒருவருக்குப் போய் விடும். அப்போது வீடே சோகமாகிவிடும். ஆனால் ஆறு மாத காலத்திற்குப் பிறகு பார்த்தால் அந்த வேலையை எடுத்திருந்தால் பெரும் சிக்கலில் சிக்கி பெரு நட்டத்திற்கு ஆளாகியிருப்போம் என்பதை அந்த வேலையை எடுத்து சிக்கியவரைப் பார்த்து தெரிந்துகொள்வோம்..
இது மாதிரி நிறைய அனுபவங்களைப் பார்த்த பிறகு தான் கடவுளின் திருவிளையாடல் புரிந்தது. இப்படி நிறைய காரியங்கள் எல்லா காலத்திலும் நாங்கள் சாயியின் உத்தரவு கேட்ட பின்னரே தொழில் செய்ய முனைவோம். ஆகவே, இன்பம் துன்பம் எது வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற பக்குவத்தோடு இருந்தால் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறலாம்.
எப்போதும் பாசிடிவ்வாகவே எண்ண வேண்டும். அந்த நல்ல எண்ண அலைகள்தான் நம்மை வழிப் படுத்தும். இதையெல்லாம் சாயி தரிசனம் மூலமாக அனுபவமாகப் பெற்று பின்பற்றுபவை.
சாயி தரிசனம் புத்தகம் வந்தால் முதலில் நான் படிப்பது சாய் அப்பா எழுதும் கடிதங்களைத்தான். குழம்பிய மனதில் எழும் வினாக்களுக்கு விடை இருக்கும். நான் படித்தால் என் மனநிலைக்கு ஏற்ற பதிலாய் இருக்கும். நீங்கள் படித்தால் உங்கள் மன நிலைக்கு ஏற்ற பதிலாகவும் இருக்கும்.
எங்கள் வீட்டிற்கு யாராவது வந்துகொண்டே இருப்பார்கள். மனம் வருந்தி பேசும்போது சாயி தரிசனம் புத்தகத்தை அவர்கள் கையில் கொடுத்து உங்கள் கேள்விகளுக்கு இப்போது நீங்கள் இருக்கும் மன நிலைக்கு இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கும் படியுங்கள் என வாழ்த்தி அனுப்புவேன்.
அவர்கள் வீட்டிற்குச் சென்றதும் படித்துவிட்டு, அம்மா, சாய் அப்பாவைப் படித்ததும் குழம்பியிருந்த எனது மனது தெளிந்த நீரோடை போலாகிவிட்டது. வீணாகக் குழம்பித் தவித்துப் போனேன் என்பர்.
நிறைய சமயங்களில், சாயி வரதராஜனால் எப்படி இது போல எல்லோருடைய மனங்களையும் படம் பிடித்து பதில் சொல்லி ஆற்றுப் படுத்தும் விதமாக எழுத முடிகிறது. இந்த வல்லமைமைய அளித்த பாபாவுக்கே நன்றி சொல்லவேண்டும்.
சாயி தரிசனத்தை படிப்பதோடு நிறுத்திவிடாதீர். எழுதியவற்றை உள்வாங்கி வாழ்க்கையிலும் கடைப் பிடித்து அமைதி பெறுங்கள். ஆனந்தமான வாழ்வை பாபா உங்களுக்கு அருள்வார்.  வாழ்க்கை அழகானது. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழும்போது சோதனைகள் வரத்தான் செய்யும்.
விதியை வென்றவர் யார்?
சோதனைகளையெல்லாம் சாதனைகளாய் மாற்றி, வெற்றிப்படிகளில் நடந்து, பிறர் பாராட்டும்படி வாழ உங்கள் அனைவருக்கும் சாயி நாதரின் அருளை வேண்டுகிறோம்.
வாழ்க வளமுடன்!
ஜெய் சாய் ராம்.


வசந்தா சண்முகம், சேலம்

Thursday, June 23, 2016

முப்பது ஆண்டு நோய் முற்றாகத் தீர்ந்தது

என் வயது 72. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் அடிக்கடி காய்ச்சல் வந்தது. கடையில் மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வேன். இதன் பக்கவிளைவாக நெற்றியில் கட்டிகள் தோன்றின. இதற்கு முன் இடது கைக்குக் கீழ் வேனல் கட்டி ஒன்று முப்பது வருடங்களாக தொல்லை தந்து கொண்டிருந்தது.
எவ்வளவு மருந்து போட்டும் அது போகவில்லை என்பதனால் விட்டுவிட்டேன். அந்தக்கட்டியும் இந்த முறை பெரிதாகி அதிகமாக வலியைக் கொடுத்தது. எல்லோரும் டாக்டரிடம் போகச் சொன்னார்கள். ஏனோ எனக்கு போகத்தோன்றவில்லை.
மயிலாப்பூர் பாபா கோயிலுக்குச் சென்றேன். சில சமயம் அங்கு சந்தனம் தருவார்கள். நான் பாபாவிடம் எனக்கு சந்தனம் தாருங்கள் என வேண்டிக்கொண்டு சென்றேன். பின்னால் இருக்கும் கூடத்தில் அபிஷேகம் முடியவில்லை என்பதால் அந்த நேரத்தில் சந்தனம் கொடுக்கவில்லை, இதனால் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.
கோயிலில் இருந்த ஒரு ஸ்டூலில் உருண்டையாக மஞ்சள் இருந்தது, என்னால் நம்பவே முடியவில்லை. சாயி எனக்காகத்தான் இதை வைத்திருக்கிறார் என்று நினைத்து முக்கால் பாகத்தை எடுத்து வந்துவிட்டேன்.
விளக்கெண்ணெயும் மஞ்சளையும் கலந்து கட்டியின் மீது போட்டேன். கட்டி உடையவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் போட்ட பின்பு, மூன்றாவது நாள் பாபாவிடம், “பாபா எவ்வளவோ பேருக்கு நீங்கள் இரவில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி இருக்கிறீர்கள்; எனக்கு இதுவரை செய்யமாட்டேன் என்கிறீர்கள். இன்று வெறும் மஞ்சள் போட்டுக் கொள்கிறேன் என்ன செய்வீர்களோ செய்யுங்கள் என கூறி மஞ்சளைத் தடவிக் கொண்டு படுத்துவிட்டேன்.
மறுநாள் விடியற்காலை எழுந்து பார்த்த போது ஜாக்கெட் முழுக்க இரத்தமும் சீழும் முழுவதுமாக நனைந்திருந்தது. என்னவென பார்த்தால் உடலில் கட்டிகள் எல்லாம் உடைந்திருந்தன;  இவற்றோடு முப்பது ஆண்டுகளாக உடையாத கட்டியும் உடைந்திருந்தது.
அதன் பிறகு மேற்பூச்சு மருந்து தடவி முற்றிலும் குணமடைந்துவிட்டது. பாபாவின் அருளால் பூரண நலத்துடன் உள்ளேன்.
 சியாமளா ராமநாதன்,
ஆர்.ஏ.புரம், சென்னை  - 28

Monday, June 6, 2016

ஸ்ரீ சாய்யின் அற்புதம்

நாங்கள் 24 பேர் கொண்ட குழு ஸ்ரீ சாய் பாபா தரிசனத்திற்க்காக ஷீரடிக்கு கோவையில் இருந்து ரயில் மூலமாக பயணம் மேற் கொண்டோம், ஷீரடி செல்லும் முன்பு தானே சென்று அங்கு நடைபெறும் ஒரு விழாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஷீரடி செல்ல திட்டமிட்டு இருந்தோம், தானே சென்று அங்கு தங்குவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, தானேவிற்கு காலையில் சென்றடைந்தோம். ஹோட்டலில் குளித்து முடித்த பின் ,தானேவில் நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு என்பதால் தாதர் சென்று துணிகள் கொள்முதல்(Purchase) செய்வதற்க்காக அனைவரும் பயணிகள் மின்சார இரயில் மூலம் தாதர் சென்றடைந்தோம், அங்கு சென்றவுடன் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவில் பெண்கள் அனைவரும், அவர்களுக்கு துணைக்கு இரண்டு ஆண்களையும் சேர்த்து பஜாருக்கு துணிகள் கொள்முதல் செய்வதற்க்காக டாக்சியில் அனுப்பி விட்டு மற்ற ஆண்கள் குழந்தைகளுடன் அங்கு உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் சென்று தரிசனம் முடித்து விட்டு நாங்கள் அனைவரும் தானே சென்று நடைபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்க்காக சென்று விட்டோம்.
பஜாருக்கு சென்றவர்கள் பர்சேஸ் (Purchase) முடித்து விட்டு தாதர் இரயில்வே ஸ்டேசனில் பயணிகள் ரயிலில் ஏறுவதர்க்காக 7 மணிக்கு வந்துள்ளார்கள். பரபரப்பான மாலை வேளை என்பதால் கடுமையான கூட்ட நெரிசல், நாங்கள் நினைத்தது தமிழ்நாட்டில் உள்ளது போல் இருக்கும் என்று, தெரிந்து இருந்தால் நிச்சயமாக சென்று இருக்க மாட்டோம், டாக்சி பிடித்து வந்து விடலாம் என்று பார்த்து இருக்கிறார்கள், அந்த டிராபிக்கில் மூன்று மணிநேரம் ஆனாலும் வந்து சேரமுடியாது என்ற நிலையில், வேறு வழி இல்லாது 13 பேர் கொண்ட நமது குழு அனைவரும் ஒன்றாக ஏற முயன்று உள்ளனர்........
அப்பொழுதுதான் நிகழ்ந்தது அந்த விபரீதம். அந்த இடத்தில் இருந்த அனைவரையுமே கதிகலங்க வைத்த நிகழ்ச்சி நான்கு பெண்கள் ஏற முயர்ச்சி செய்து மூன்று நபர் ஏறிவிட ஒருவர் ஏறும் முன்வண்டி(Electric Train) கண் இமைக்கும் நேரத்தில் மிக வேகமாக கிளம்பி விட அந்த நபர் கம்பியில் இருந்து கையை விட்டு விட்டார்.
அப்படியே மல்லாந்தபடியே பின்நோக்கி கீழே விழுகிறார், வண்டியில் ஏறியவர்களும், கீழே நிற்ப்பவர்களும் செய்வதரியாது பாபா என்று கத்த, விழுந்த சாய் பக்தை நடைமேடைக்கும் டிரெயினுக்கும் இடையில் விழும் தருணத்தில் தான் நடந்தது அந்த அதிசயம்!!!!!!
எவரும் என்ன செய்வதென்றே யோசிப்பதற்க்குகூட கால அவகாசம் இல்லாத ,கண் இமைக்கும் நேரத்தில்....ஆம்! .நமது கருணை கடல்!
ஆபத்த பாந்தவன்! உலகை காக்கும் கலியுக கடவுள்! சற்குரு சாய் நாதனின் சத்திய வாக்காகிய.."எனது பக்தன் உலகில் எந்த மூலையில் இருந்து கூப்பிட்டாலும், கூப்பிட்ட மறு வினாடியே அங்கே தோன்றுவேன்"
என்றும்,  "எனது பக்தனை மரண குழியில் இருந்து தூக்கி விடுவேன்"
என்றும், "எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்". என்று கூறியதை போல் சாய் சற்குருநாதன் அங்கே அனைவரது அரைகூவலை கேட்டவுடன் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்!.
அந்த பெண் கீழே விழும் ஒரு சில வினாடிக்குள் எங்கு இருந்து வந்தார் என எவருக்கும் தெரியாது, ஒரு பெரியவர் நொடிப் பொழுதில் கையில் அந்த பெண்ணை அப்படியே தாங்கி கீழே உட்காரவைத்துள்ளார்.  அந்த நிகழ்வை அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வினாடியே அந்த பெரியவரை காணோம்!!!.
என்ன சொல்வது ஒரு சின்ன கீரல்கூட இல்லைஅவருக்கும் யாரோ ஒருவர் தாங்கி அவரை பிடித்தது போல் இருந்துள்ளது. அனைவரும் ஆச்சரியத்தில் சாய் பாபா, சாய் பாபா என கதறி அழுது அனைவரும் சாய் பாபா செய்த அற்புதத்தை கண்டு பேரானந்த பரவசம் அடைந்தனர்.
இதைவிட வேறு என்ன வேண்டும். சாய்யின் சத்திய ரூபத்தை காண, அவர்களை ஒரு வழியாக சாய் பத்திரமாக அழைத்து வந்து , எங்களிடம் சேர்த்தார். அங்கு நடந்த அற்புதத்தை கேட்டு நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய்விட்டோம். இன்று நினைத்தாலும் சாய்யின் சத்திய சொரூபத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது.
சாய்நானின் ஆசீர்வாதத்தால் சீரடி சாய் தரிசனம் மிக அற்புதமாக அமைந்தது.
இது போன்ற சாய்யின் அற்புதங்கள் எண்ணில் அடங்கா, ஒவ்வொரு சாய் பக்தருக்கும் இது போன்று நிகழ்வுகளை சாயிபாபா நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். தயவு செய்து சாய் அன்பர்கள் தங்களுக்கு நடந்ததை பதிவிடுங்கள் .
இப்படிக்கு சாய் பக்தன். ஓம் சாய் ராம்.
ஸ்ரீ சாய்யின் அற்புதம் தொடரும்....
ஸ்ரீ சாய்யியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.ஓம் ஜெய் சாய்ராம்
ஒரு சாயி பக்தரின் அனுபவம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...