Showing posts with label மகான்கள். Show all posts
Showing posts with label மகான்கள். Show all posts

Monday, May 23, 2016

ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார்



ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்வது "நான் ஒரு பிச்சைக்காரன். நான் என்ன உனக்குக் கொடுக்க முடியும்? என்னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சை கேட்காதே. கடவுளை மறக்காதே, எந்தப் பெயர் வேண்டுமானாலும் சொல். ஆனால் நாமஸ்மரணம் செய். என் அப்பா ராமா உனக்கு அருள் புரிவார், அருணசலேஸ்வர் அருள் புரிவார்."

இவரின் குரு ஸ்ரீ பாப்பா ராம்தாஸ் சுவாமிகள் இவருக்கு ஓதிய மந்திரம் "ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்". இதை 24 மணி நேரமும் ஜபிக்கச் சொன்னார்.

யோகிக்கும் குமாரி நிவேதிதாவுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய உரையாடல்:
குருஜி : "நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நிவேதிதா : "துக்கம், சுகம், இன்பம், துன்பம்  என்பவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் தாங்கள்"
குருஜி : "கல் கூடத்தான் இவைகளால் பாதிக்கப்படாதவை."
நிவேதிதா : "கல் சுத்தியால் தட்டினால் உடைந்துவிடும்"
குருஜி : "என் காலும் அப்படித்தான்"
நிவேதிதா " "நீங்கள் உடல் இல்லை. உங்கள் உடலுக்கு ஒருவிதமான பாதிப்பும் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல் நீங்கள் யார் என்னென்ன உருவத்தை நினைக்கிறார்களோ அந்த அந்த உருவத்திலும் வருவீர்கள்".

வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் யோஹியைப் பற்றி பாடிய பாடல் :

தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ

யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
ஜெய் குருராயா

Tuesday, May 17, 2016

விடு - பிடி. அல்லது பிடி - விடு


பல வருடங்களுக்கு முன் ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் பிரசங்கத்திலிருந்து ஒரு வாரஸ்யமான பகுதியை என் ஞாபகத்திலிருந்து சுருக்கமாக பதிவு செய்கிறேன்:
 
யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம்  வந்தஸார், ான் ட்ரெயினைப் பிடிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள உங்கால பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்ு கேட்கிறார் என்று வத்ுக் கொள்ளங்கள். நங்கள் தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே என்று சொல்லுங்கள். 

 விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் த்க  என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி விட்டு சிரி்த்துக்கொண்டே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார்:
 
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?

கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப் பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும். 

 ற்கஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம் பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இறுக்கம் தளர்ந்து கழன்று விடும்.

உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது. பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.

எவ்வளவு எளிமையான விளக்கம் !!!

ஹரி ஓம் குருதேவ்

Sethuram Krishnamurthy
 அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து

Monday, August 3, 2015

மகான்களை வழிபடலாமா?

மகான்களை வழிபடுவது சரியா? என்ற கேள்விக்கு எழுத்தாளர் இந்துமதி ஓர் இதழில் கூறியுள்ள பதிலை அப்படியே தந்திருக்கிறேன்.
“மகான்களை வழிபடுவது சரியே!  நான் கூட சீரடி நாதனையே வழிபடுகிறேன். எந்தக் கோயிலுக்குச்சென்று எந்த சந்நிதியில் நின்றாலும், எனக்கு எல்லா தெய்வங்களும் சீரடி சாயி நாதனாகவே தெரிவார். என் மனமும் அப்படித்தான் நினைக்கும்.
சாயி ராமா, சாயி கிருஷ்ணா, சாயி சிவா, சாயி முருகா, சாயி விக்னேஸ்வரா, சாயி ஆஞ்சனேயா, சாயி துர்கா, சாயி காமாட்சி, சாயி கற்பகாம்பிகா என.. எல்லாமே எனக்கு சாயிதான்.
மனித ஆன்மாக்கள் கர்ம வினைகளில் இருந்தும் பல பிறவிகளில் இருந்தும் விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில், மகான்கள் அவர்களை பக்கத்தில் இழுத்து, பலவிதங்களிலும் போதித்து, தவறுகளை திருத்தி, மனதை பக்குவப்படுத்தி ஞானத்தை ஏற்படுத்தி ஒவ்வொருவரையும் ஆன்மீக வழியில் முன்னேற்றமடையச் செய்கின்றனர். இதுவே மகான்களின் மகத்தான பணி.
நம்மைச் சுற்றியுள்ள, நாம் உணரக்கூடிய அல்லது நம் உணர்வுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் இயக்கத்திற்கு பரிபூரணமடைந்த குருவே மையப்புள்ளி ஆவார். இப்பிரபஞ்சத்தின் உயிருள்ள மற்றும் உயிரற்ற ஜடப்பொருட்களின் முன்னேற்றத்திற்காக கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நீண்ட நெடுங்காலமாக பலவித செயல்களை இத்தகைய குருக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைவுடன் செய்து வருகின்றனர்.
காஞ்சி பரமாச்சாரியரிடம் சென்ற பால் பிராண்டனை, அவர் ரமணரிடம் அனுப்பி வைத்தார்.  ரமணரிடம் சென்ற நரசிம்ம சுவாமியை அவர்,  “உன் குரு நானில்லை, வடக்கே இருக்கிறார். அங்கு போ!” என்று அனுப்பி வைத்ததார்.  அக்கல்கோட் மகராஜ் தன்னிடம் வந்த சீடரை,  “நான் உன் குரு அல்ல, சீரடி கிராமத்திலிருக்கும் சாயி பாபாவிடம் செல்” என்றும் கூறினார். இவ்வாறு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு தூரம் தள்ளியிருந்தாலும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாகவும், ஒத்திசைவோடு செயல்படுகிறவர்களாகவுமே இருந்தது தெரிய வருகிறது.
எல்லா உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் ஆன்மா பற்றியும் முழு அறிவும், ஆளுமையும் கொண்டவர்கள் மகான்கள்.
பெரும்பாலோர் மகான்களால் கவர்ந்து இழுக்கப்படும்போது, முன் எப்போதுமில்லாத வழிகளில் நடந்து கொள்வர். அவர்களின் சிந்தனைகள் பெரும் மாற்றத்தை அடையும்.
புராண காலத்தில் கபிலர், வசிஷ்டர், சுகர், விசுவாமித்திரர், தத்தாத்ரேயர் போன்ற ரிஷிகள் அத்தகைய மகான்களாக இருந்தார்கள்.  புத்தர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், ராகவேந்திரர் என்று பல்வேறு கால கட்டங்களில் மகான்கள் தோன்றினர்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், நிக்மானந்தா, லஹரி மகாசாய், யுக்தேஸ்வர், லோக்நாத் பிரம்மச்சாரி, பாமாக்கேபே, ரமணர், சீரடி சாயி பாபா, அக்கல்கோட் மகராஜ், தாஜுதின் பாபா, கஜானன் அவதூத், பாபா ஜான், ஷங்கர் மகராஜ், மெகர்பாபா, உபாசினி பாபா, நாராயண் மகராஜ், காஞ்சி பரமாச்சார்யர், அரவிந்தர், அன்னை என எத்தனையோ மகான்கள் அவதாரம் எடுத்துள்ள புண்ணிய பூமி இது.
லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல், மகான்களிடம் இருந்தே கிடைக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும், கனவுகளின்  மூலமும் கூட அவர்கள் நல்லறிவை போதிக்கின்றனர். இத்தகைய மகான்களை வழிபடுவதில் என்ன தவறு?
எந்த மகானை வழிபட்டாலும் அந்த வழிபாட்டில் நாம் உறுதியோடு இருக்கவேண்டும். நம்பிக்கையும், பொறுமையும் நமக்கு அளிக்கப்பட்ட தாரக மந்திரங்கள். இவற்றைக் கடைப்பிடிப்போமா?
தகவல்:  சாயி கலியன்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...