Showing posts with label shirdibaba. Show all posts
Showing posts with label shirdibaba. Show all posts

Friday, September 19, 2014

எங்கள் வீடு மகான்கள் வந்து அருள் பாலித்த வீடு!

25128

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே என்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றுவேன். அவர்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று நமது சமர்த்த சத்குரு சாயி பாபா வாக்களித்தபடி இன்றும் நிறைவேற்றி வருகிறார்.



அதை அனுபவப்பூர்வமாகவும்,  ஸ்ரீ  சாயி தரிசனம் மூலமாகவும் புரிந்துகொள்ளலாம். பக்தர்களால் நினைக்கப்படும் சாயியின் ஓர் அம்சமாக, மற்றவர்களுக்காகவே தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்,



நம்மிடையே மனித உருவில் நடமாடிக் கொண்டு இருப்பவர் நம் மானசீக குரு  ஸ்ரீ  சாயி வரதராஜன்.  எனக்கு புதுப்பெருங்களத்தூர் வந்து பாபாவிடமும் சாயி வரதராஜனிடமும் ஆசி பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வர முடிவதில்லை.



ஆனால் வீட்டிலிருந்தபடியே, பாபாவை நினைத்துக்கொண்டும், மானசீக குருவான சாயி வரதராஜனை நமஸ்கரித்தும் சாயி நாம ஸ்மரணை செய்து கொண்டே நாளை ஆரம்பிப்பேன். கண் விழித்ததும் அன்றைய நாளை ஆரம்பிக்கும் முன் எனது வாய் தானாகவே சாயி ராம் என்று கூறிய பின்னர்தான் மற்ற ஸ்லோகங்களைக்கூறும். அதன் பிறகே வேலைகளை ஆரம்பிப்பேன்.



சாயி ராம் நாம ஸ்மரணை அந்தளவில் என் இரத்தத்தில் ஊறியிருப்பதற்குக் காரணம் ஸ்ரீ சாயி வரதராஜன்தான். அவருடைய சத்சங்கத்திற்கு என்னால் அதிக அளவு சென்று சேர்ந்துகொள்ள முடிவதில்லை. எனினும் அவருடைய இரண்டு மூன்று சத்சங்கத்தைக் கேட்டிருக்கிறேன். அதுவே என்னை இந்தளவுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்றால், அவரின் தினசரி சத்சங்கங்களில் பங்கேற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.



எளிமையான, ஆடம்பரமில்லாதவராக, எந்த பக்தர் வந்தாலும் அவர்களுக்கு மரியாதைக்கொடுத்து ஆறுதல் அளிப்பவர் அவர் என்பதை அனுபவித்து அறிந்திருக்கிறேன்.



அவர் மூலமாக எங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல என்றாலும், மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக சாயி வரதராஜன் எந்த வீட்டுக்கும்,  யார் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார் என்பதும், தன் சித்தப் போக்கில் போய்க்கொண்டிருப்பார் என்பதும் பலருக்கும் தெரிந்த விக்ஷயம்தான்.



ஒரு சமயம் எனது மாமாவுக்கு முதுகுத் தண்டில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவர் முன்போல நடக்க வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன். அதைத் தொலை பேசியில் சாயி வரதராஜனிடம் தெரிவித்தபோது அழுதே விட்டேன்.



அதுவரை அவரை நேரில் பார்த்திராத போதும் அவர் ஆறுதல்கூறி, பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை என் மாமியிடம் கூறினேன். அவர் புதுப்பெருங்களத்தூர் சென்று, ஸ்ரீ சாயி வரதராஜனிடம், ”நான் உஷாவின் மாமி, என் கணவருக்குத்தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அவர் பழைய நிலைக்கு வர வேண்டும்”  என்று கோரிக்கை வைத்தார்.



அதை செவி கொடுத்து, பாபாவிடம் வேண்டி விபூதி ஜெபித்து அவர் நிச்சயம் விரைவில் நடப்பார் எனக் கூறி ஆசீர்வதித்தார். அதற்கேற்றார் போல், விரைவில் என் மாமா எழுந்து நடக்க ஆரம்பித்தார். சாயி பக்தர்கள் சாயி வரதராஜனை பாபாவாகவே நினைத்துக்கொண்டு (அதில் நானும் ஒருத்தி), அவர் காலடி அவரவர் வீட்டில் பட்டால் வீடே புண்ணிய ஷேத்திரமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைத்து வாழும் ஒரு பக்தரின் நிகழ்ச்சியைக் கூறுகிறேன். அவர் மூலமாக நானும் எங்கள் வீட்டவரும் பாக்கியசாலிகள் ஆனோம்.



எனக்குத் தெரிந்த ஒரு சாயி பக்தர் மிகவும் வயதானவர். மிகவும் முடியாமல், உடம்பு சரியில்லாத தால் அவரும் அவர் மனைவியும் ரொம்ப நாளாகவே சாயி வரதராஜன் நம் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்.



என்னிடம், சாயி வரதராஜனை நம் வீட்டிற்கு வருமாறு பிரார்த்தனை செய்யேன் என்று மிக நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் பாபாவை வேண்டி, இதை தொலை பேசிவாயிலாக சாயி வரதராஜனிடம் தெரிவித்தேன்.



நிலைமையை உணர்ந்துகொண்டு அவர், சரி, நங்க நல்லூர் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டார். இதை நான் நினைத்துக்கூட பார்க்கவே இல்லை. என்ன ஏற்பாடு செய்வது என்பது கூட தெரியவில்லை. அவரிடமே கேட்டபோது, ஒன்றும் செய்ய வேண்டாம், நான் வந்து பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறிவிட்டார்.



எனக்கும் எல்லாம் புதிதானதால், அந்த பக்தர் வீட்டில் பாபாவின் ஒரு சின்ன சிலை வைத்து அதில்



சிறிது பூ வைத்து அலங்கரித்திருந்தார்கள். எனக்குள் ஓர் ஆவல்  ஸ்ரீ சாயி வரதராஜன் வரப்போகிற அந்த பக்தர் வீட்டிலிருந்து நான் வசிக்கும் இடம் மூன்றாம் வீடு. என் தாயாருக்கும் நடக்க முடியாத நிலை. அவருக்கு  ஸ்ரீ  சாயியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அத்தனை வேலை பளுவில் அவர் வருகிறார்.. என் வீட்டிற்கும் வருவாரா? இப்போது வர ஒப்புக்கொண்டதே பெரிய விக்ஷயம்.. அதில் இந்த வேண்டுகோளை ஏற்பாரா என்ற ஐயம். இருந்தும் பாபாவிடம் கூறிவிட்டு, அவரிடம் ஓர் ஐந்து நிமிடமாவது என் வீட்டிற்கு வந்து ஆசி புரிய வேண்டும் என வேண்டினேன்.



ஒரு சாதாரண சாயி பக்தைக்காக மனம் உவந்து எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் ஸ்ரீ பாபா மாஸ்டர் அருணாச்சலம்,  ஸ்ரீ  சாயி கலியன், _ ஸ்ரீ சாயி வீரமணி அவர்களும் வந்து அருள் பாலித்தனர். எனக்கு ஆனந்தத்தில் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.



இன்றும் நினைத்தால் இனிமையாக இருக்கிறது.. எங்கள் வீடு நிஜமாகவே சிறந்த மகான்கள் வந்து அருள் பாலித்த வீடாகக் கருதுகிறேன்.



ஸ்ரீ சாயி வரதராஜன் கீரப்பாக்கம் பாபா கோயில் கட்டுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். முழுக்க முழுக்க அவருடன் இருந்து இந்த சேவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது,



ஆனால் இயலாமையால் முடிந்தவரை வீட்டிலிருந்தே அவருக்காக சேவை செய்கிறேன். அவர் நல்லபடியாக சீக்கிரம் கோயில் கட்ட ஆசி புரிய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறேன்..பாபாவும்  ஸ்ரீ சாயி வரதராஜனும் எனக்கு ஆசி புரிய வேண்டும்.



உஷா ரவிச்சந்திரன்,



நங்கநல்லூர்

Saturday, May 31, 2014

உன் தலையெழுத்து மாறும்!

 25129



சாயி சரித்திரம் அத்தியாயம் பத்து நமது தலையெழுத்தை மாற்றுகிற உபாயத்தைக் கூறுவதிலிருந்து துவங்குகிறது.



”எவர் சகல உலகங்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மத்திலேயே சதா லயித்து இருக்கிறாரோ, அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக.



யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச்சுழலில் இருந்து விடுவிப்பதற்குப் போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீகப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இதற்கு ஒரு பைசாவும் செலவில்லை.



சொற்பப் பயிற்சியால் பெரும் பலன் அனாயசமாக கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.



இதர தேவதைகள் அனைத்தும் மாயை. குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம் தலையெழுத்தையே மாற்றி விடுவார். எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலம் ஆகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாத்திரங்களை படித்துவிட்டு,  ஒரு தலைமுடியை இரண்டாகப்பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திப்பூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.



சத்குரு நாவாயைச் செலுத்தும்போது, ஆதிபவுதிகம், ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம் ஆகிய இன்னல்களில் இருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.



கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின் மீது விசுவாசம் வைக்கவேண்டும். அதுபோலவே, சம்சாரக்கடலைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.



ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்க கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தமது லீலையால், ஆனந்தத்தை லட்சணமாக உடைய மோட்சத்தை அளிக்கிறார்.



எந்த சத்குருவின் தரிசனம் இருதயத்தின் முடிச்சுகளை அவிழ்க்குமோ, புலனடக்கம் கிடைக்கச்செய்யுமோ, முன் ஜென்மங்களில் சேர்த்த பாவ மூட்டைகளையும் இந்த ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ அவருடையப் பெருமையை பாடுவோமாக.. என்று எழுதப்பட்டுள்ளது.



இந்த விக்ஷயங்களை நன்றாக உள்வாங்கி தியானித்தால் போதும்.. அனைத்தும் சரியாக நடக்கும்…..



தியானிக்கலாம் வாருங்கள்..



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பின் வரும் விக்ஷயங்களை  தெளிவாக அறிந்து கடைப் பிடிக்க வேண்டும்.



1) குருவைஎந்நேரமும்நினைக்கவேண்டும்.



அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும்.  குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது.



சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.



என் பிரச்சினை இப்படியிருக்கிறது... குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை.



குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.



அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.



இந்த நினைவை எப்படி உண்டாக்கிக்கொள்வது?



ஓர் இளைஞன் இருக்கிறான். தன் வயதுள்ள பல பெண்களைப் பார்க்கிறான்.. அவர்கள் அனைவரையும் நினைத்து அவன் ஒருபோதும் தூக்கத்தை இழப்பது கிடையாது. அவர்களுள் தன் நடத்தைக்கும், தனது குணத்திற்கும் ஒத்து வருகிற யாரோ ஒருத்தியை மனதில் நினைக்கிறான். அந்த நினைவு அவனை, அவளிடம் நெருங்க வைக்கிறது. பேசவைக்கிறது, அது காதலாக மாறி, சதா அவளது நினைவில் மனம் லயிக்கிறது.



இப்படித்தான்.. பல குருமார்கள், கடவுள்கள் என இருக்கும் நிலையில் இதில் நாம் யாரைத் தேர்வு செய்வது என முடிவு செய்யுங்கள். தேர்வு செய்த பின், அந்த ஒன்றின் மீது மனத்தை முழுமையாகச் செலுத்துங்கள். பிறகு, இரவு பகலாக நீங்கள் அந்த ஒன்றிலேயே லயித்து விடுவீர்கள்.



குருவை எப்போது நினைக்க வேண்டும்?



உடல் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருக்கும் போது எப்போதும் குருவை தியானிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.



வயதாகி, நோய்கள் வந்து, பலம் இழந்து பிறரால் கைவிடப்பட்டு நினைவு தடுமாறி, படுக்கையில் விழுந்துகிடக்கிற நேரத்தில் கடவுளை நினைக்க முடியாது. எனவே, இன்றே, இப்போதே குருவை -  கடவுளை தேர்வு செய்யவேண்டிய நேரம். அதை செய்யுங்கள்.



2. பலதேவதைகள்மாயை



நாம் பல தெய்வ வழிபாடு உள்ளவர்கள். இதை விவேகானந்தர்  மறுத்திருக்கிறார். பல பெயர்களில் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்றார் அவர்.



கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் ஒவ்வொரு ஒரு தனிக்கடவுளாக கும்பிடுகிறோம். அவன் நம் மீது கருணையும், பாசமும், பரிவும் உள்ளவன். வெண்ணையை விட மென்மையானவன் என்பதால் அவனை தாயுமானவன் என்கிறோம்.



அம்பாளாக வழிபடுகிறோம். எங்கும் நிறைந்தவன் என்பதால் விஷ்ணுவாக கும்பிடுகிறோம். அவனே படைக்கிறவன் என்பதால் பிரம்மாவாக வழிபடுகிறோம். எதற்கும் முதன்மையானவன் என்பதால் விநாயகராக,  வெற்றியைத் தருவதால் முருகனாக,  செல்வத்தைத் தருவதால் லட்சுமியாக, கல்வியைத் தருவதால் சரஸ்வதியாக வழிபடுகிறோம்.



இறைவனை பெண்ணாக பாவித்து வழிபடுவதன் நோக்கம்.. பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை குணம் அதிகம்..



இரக்க சுபாவம் அதிகம்.. கடுமை முகம் காட்டுவது குறைவு. நம்பினால் உயிரையும் தரும் இயல்பு பெண்ணுக்கு மட்டுமே அதிகம் உண்டு.



எனவே, சுலபமாக அன்பைப்பெறுவதற்காக இறைவனை பெண்ணாக பாவித்து வணங்குகிறோம்.



உடனடியாக உங்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றும்..



சாயி ராம்.. இப்படிச் சொல்கிற நீங்கள்..பரிகாரத்திற்கு இதைச் செய்.. இந்த கடவுளை வழிபடு.. குல தெய்வத்தைக் கும்பிடு என்றெல்லாம் கூறுகிறீர்கள்..



சனிதோக்ஷ யாகம் செய்கிறீர்கள், அது ஏன்? எனக் கேட்கலாம்.



குருவே தெய்வம் என்பதை உணர்ந்தவர்கள் மிகக்குறைவு. என்னை முற்றிலும் அணுகுகிறவர்களுக்கு, நான் இந்த வித்தியாசத்தை உணர்த்தி அவர்களை சாயி பக்தியில் அதாவது குரு பக்தியில் நிலை நிறுத்துவேன்.



ஒன்றில் மனத்தை செலுத்தாமல் அனைத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஓடுகிறவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னால் ஏற்காது. எனவே, அவர்கள் போக்கில் அவர்களை அனுப்பி, படிப்படியாக மாற்ற முயற்சிக்கிறேன்.



முதலில் எல்லா தெய்வத்தையும் கும்பிடு. பிறகு..அவையெல்லாம் ஒன்றே என உணர்ந்திடு. அந்த ஒன்றும் நமது குருவே என்பதைத் தெளிந்திடு..



இதுவே எனது கோட்பாடு. இந்தத் தெளிவு முழுமையாக வந்த பிறகுதான் ஒருவருக்கு ஆணித்தரமாக பாபா மீது நம்பிக்கை வரும். தலையெழுத்து மாறும்.



3. சாஸ்திரஞானம்தேவையில்லாதது..



கடவுளை மனதால் தேட வேண்டும். புத்தகத்தில் தேடக்கூடாது. விஷ்ணு சகஸ்ரநாமத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதால் நீங்கள் விஷ்ணு பக்தர் ஆகி விட முடியுமா?



லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதால் மட்டும் அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகி விடக்கூடுமா? பொருள் தெரியாமல் படிக்கிற எதனாலும் பயன் இல்லை.



மேளங்கள் கூட வித்தியாசத்தைத் தருகின்றன. டும்டும்டும் என்றால் கல்யாணத்திற்கு.. டொண் டொண் டொண் என்றால் கடைசி ஊர்வலத்திற்கு..



ஆனால், பொருள் தெரியாமல் படிக்கிறதால் எதை உணரமுடியும்?



என்ன செய்யலாம்?



மனதில் அந்த இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவனை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால் நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். கடவுள் மீது மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.



4. ஐக்கியபக்திவேண்டும்



இறைவன் எப்போதும் நம்மையே நினைத்துக்கொண்டு இருப்பவன்.. ஆனால், நாமோ அவனைத்தவிர பிறவற்றில் மனதை செலுத்திக் கொண்டு இருப்பவர்கள். இதனால் அவன் மீது நமக்கு அன்பும் வருவதில்லை.. ஐக்கியமும் ஏற்படுவது இல்லை.



நானும் அவனும் மின்சாரமும் மின்கம்பியும் போல.. இரும்பும் காந்தமும் போலடூ மலரும் வாசமும் போல, செடியும் வேரும்போல,  உடம்பும் உயிரும் போல, ஒன்றில் ஒன்று கலந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் பக்தி செலுத்த வேண்டும்.



நான் அப்படித்தான் பக்தி செலுத்துகிறேன்..



ஆனால் என் கஷ்டம் தொடருகிறதே என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், உங்களது பக்தி பொய்யானது என்று பொருள்..



ஐக்கிய உணர்வு வந்துவிட்டால் துன்பமும் இன்பமும் தனித்தனியாகத் தெரியாது. அனைத்தும் சமமாகத் தெரியும். மனம் இறைவனிடம் கெஞ்சிக்கேட்காது.. அதைப் பற்றி நினைக்காமல் நடைபோட ஆரம்பிக்கும்..



சில சமயம், இந்த ஐக்கிய பாவம் நானும் கடவுளும் ஒன்று நினைக்க வைக்கும். உண்மை இதுவானாலும், நாம் இந்த ஜன்மாவில் – சரீரத்தில் -  அஞ்ஞானத்தில் இருக்கிறோம். மாயை வசப்பட்டவர்களாக மயங்கிக்கிடக்கிறோம்.



இந்த நிலையில் நம்மை அவ்வாறு நினைக்கக்கூடாது. அது கர்வமாகும்.



சீதா பிராட்டியாரின் தந்தையார்  ஜனக முனி அனைத்தும் அறிந்தவர். தானே பரப்பிரம்மம் என்பதை அறிந்தவர். இவரது கர்வத்தைப் போக்க ஒருமுறை விநாயகப்பெருமான் தீர்மானித்தார்.



ஒரு பிச்சைக்கார பிராமணர் வடிவில் வந்து, அரசனை சந்தித்து, அரசே எனக்குப் பசிக்கிறது.. சாப்பாடு தரவேண்டும் எனக் கேட்டார்.  தன் மகனை அழைத்து பிராமணருக்கு உணவு தருமாறு கூறினார் ஜனகர். மகனும் பிராமணருக்கு உணவு பரிமாறினார்.  பிராமணரோ பசிக்கிறது.. போடு போடு எனக் கூறி அரசாங்க களஞ்சியத்தில் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டார்.



இந்த விக்ஷயத்தை மன்னரிடம் தெரியபடுத்தி, இனி அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை எனக்கூறினார்கள்.  இவரை எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட வேண்டும் என நினைத்த ஜனகர்,



பிராமணரிடம் வந்து, ஐயா, இங்கு இவ்வளவுதான் முடியும்.. வேறு எங்காவது மிச்சம் மீதியை சாப்பிட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தார்.



பிராமணர், ஒரு பூசாரியின் வீட்டிற்கு வந்து, சாப்பிட ஏதேனும் தாருங்கள் என்றார். நைவேத்தியம் கூட கிடையாது. ஒரு பருக்கையும் இல்லை என அவ்வீட்டார் கூறினார்கள். வேறு என்ன இருக்கிறது பாருங்கள் எனக்கேட்டார் பிள்ளையார்.



பிள்ளையாருக்குப் படைத்ததில் ஒரே ஒரு அருகம் புல் மட்டும் இருக்கிறது என்றார் அந்த பூசாரி.



சரி, அதையாவது கொடு என வாங்கிப்புசித்தார். அவரது பசி அடங்கியது. அது மட்டுமல்ல, ஜனகரின் மிதிலை நகரம் முழுவதும் உடனடியாக செல்வபுரியாக மாறியது.



இந்த மாற்றத்தை அறிந்த ஜனகர், இது எப்படி சாத்தியமாகும் என விசாரித்தார். பக்கத்து வீட்டில் சாப்பிடுகிற பிராமணரால் இது நடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்தார். அவரைப் பார்த்த விநாயகர், ஒருவனுடைய பசியைத்தணிக்கவே முடியாத நீ, எப்படி பரப்பிரம்மம் ஆகமுடியும்? எனக் கேட்டார்.



பரப்பிரம்மம் என்றால் அனைத்தையும் கடந்தது, அனைத்தையும் செய்ய வல்லது என்பது பொருள். நாம் ஜடத்தில் இருப்பதால் பரமாக இயலாது என்பதை உணர்த்தினார்.



ஜனகர் -  தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர, விநாயகர் அவரை வாழ்த்தி மறைந்தார்.



பார்த்தீர்களா? ஐக்கிய பக்தியும் அதிக அறிவும் ஒருவனை கடவுளாக நினைக்க வைத்து, கர்வம் கொள்ள வைத்துவிடுகிறது.



நாம் எப்போதும் கடவுள் பக்தர் என்ற நிலையிலேயே நின்று கொள்வது நல்லது.  நம் தலையெழுத்து மாற, ஐக்கிய பக்தி வேண்டும். கர்வம் கூடாது.



5. இறைவன்புகழைப்பாடவேண்டும்:



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால் இறைவனின் புகழைப்பாட வேண்டும். அதாவது நாம் நம்புகிற நமது குருவின் இயல்பைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்க வேண்டும்.



முதலில் இறைவனாகிய குருவின் இயல்பு -  அவர் செய்த லீலைகள் -  நமக்குச் செய்த அற்புதங்கள் என அவரைப் பற்றி பெருமையாக பிறரிடம் எடுத்துக்கூற வேண்டும். இது இறைவனுக்குச் செய்கிற சேவையாகும்.



இவ்வாறு செய்யும்போது இறைவன் மகிழ்ந்து நம் தலையெழுத்தை மாற்றி விடுவான். நம்மை பிறர் முன்னிலையில் உதாரணமாகவும் வைப்பான்.



 



 



 சாயி வரதராஜன்

எல்லாம் கடந்தவர் பாபா!

DSC_0005



பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.



ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார்.  பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.



பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.



பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை.  ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.



ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.



இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான்,  எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.



பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.



ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.





கு.இராமச்சந்திரன்

Friday, May 30, 2014

பெருங்களத்தூரில் அற்புதம்!

புதுக்கோட்டையிலிருந்து நானும் எனது மனைவியும் சென்னை வந்து பெருங்களத்தூரில் தங்கினோம். எனது மூன்றாவது மகனுக்கு விரைந்து திருமணம் நடக்க பெருங்களத்தூரில் பிரார்த்தனை வைத்தோம்.



பி.ஈ. படித்த வேலை பார்க்கும் பெண் பெருங்களத்தூரில் நிச்சயமாகி திருமணம் நடந்தேறியது. எனது இரண்டாவது மகனுக்கு வீடு கட்ட முயற்சி மேற்கொண்டேன். அந்த கோரிக்கையும் பாபாவின் அருளால் இனிதே நிறைவேறி, பணிகள் துவங்கி யிருக்கின்றன.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபா பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறார். அந்த அற்புதங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



மா மாயனான பாபா, பெருங்களத்தூரில் செய்கிற அற்புதங்களையும், நாள் தோறும் நிறைவேற்றித் தருகிற பிரார்த்தனைகளையும் என்னைப் போல நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



கஷ்டத்தில் இருப்பவர்கள் விரைந்து வந்து பலனடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.



ஸ்ரீநிவாச சுந்தரராஜன்,



புதுக்கோட்டை

ஆன்மீக முன்னேற்றம்!

baba2



அது 1914 ம் ஆண்டு. பாபா என்னிடம் பலமுறை பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர், ”உன்னிடம் பணம் இல்லை என்பது தெரியும். ஆனால், நீ யோக வசிஷ்டம் படிக்கிறாய் அல்லவா? அதிலிருந்து கொடு”  என்றார்.



அதாவது நான் யோக வசிஷ்டத்தில் உள்ள நல்ல போதனைகளை படித்து அதை  நெஞ்சில் நிறுத்திக்கொள்வதே நான் அவருக்குக் கொடுக்கும் தட்சணை.



அவர் என் இதயத்திலேயே நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா?



இராமனையும், கிருஷ்ணரையும் புனிதர்களாகக்கருதினார். ஞானேஸ்வர், துகாராம் போன்ற ஞானிகளையும் வெகுவாக மதித்தார். கடவுளை அடைய நான்குவித மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.



தியானம், கர்மம், ஞானம், பக்தி.



தியானத்தில் ஆசனம், பிராணாயாமம், ஒருமுனைப்படுத்தல், குண்டலினி -  பின் இதன் மூலம் சக்தி பெறுதல். ஆனால் பாபா இதைப் பற்றியெல்லாம் அக்கறை காட்டியதுமில்லை, பிறரைச் செய்யச்சொன்னதும் இல்லை. ஆனால் என்னிடம் ஒருமுறை பிராணாயாமம் செய்கிறவர்கள் எல்லாம் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய என்னிடம் வருவார்கள் என்றார்.





கு.இராமச்சந்திரன்

Thursday, May 29, 2014

உயிர் காத்த பாபா!

25125



எனது மகன் சிவபாஸ்கரன் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்.



நாளுக்கு நாள் அவன் உடல் நலம் குறைந்துகொண்டே வந்தது. உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையும் குறைந்து வந்தது. மருத்துவமனையில் எனது மகனோடு இருந்தபோது, எனது இரண்டாவது மகன் வந்து, வீட்டுக்குப் போகுமாறு என்னை அனுப்பிவிட்டான். வீடு வந்து பாபாவிடம் மன்றாடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.



பத்து  நாட்கள்  பூஜை செய்தேன். அவன் என் மகனில்லை, உங்கள் மகன். நீங்கள் என்ன செய்தாலும் சம்மதம் என்று பாபாவிடம் பொறுப்பை விட்டு விட்டேன். பாபாவின் அற்புதத்தால் எனது மகன் உயிரோடு திரும்பி வந்தான். அது மட்டுமல்ல, அதன் பிறகு அவன் வாழ்வில் நல்ல காலம் பிறந்து, வீடு வாங்கினான். அவனது மகன் பி.ஈ. முடித்தான். குடும்பம் நல்ல நிலையில் உள்ளது.



என் பாபாவின் அற்புதங்களை வார்த்தையாலோ, பேச்சாலோ வர்ணிக்க இயலாது. அவரது கருணை கடலிலும் பெரிது. என் உடல் உயிர் அனைத்தும் அவருக்கே சொந்தம்.



அவருக்கு எனது நமஸ்காரங்கள்.



சகுந்தலா,

சக்திநகர், முடிச்சூர்.

Wednesday, May 28, 2014

தோல்வியை வெற்றியாக்கிய பாபா!

sai-guide-us



என் பெயர் சண்முகம். ஆசிரியராகப் பணிபுரிகிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் வெங்கடேசன் பாபா படம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.



அப்போது மெடிக்கல் வைத்திருந்தேன். அதில் பாபாவை அமர்த்தி வழிபாடு செய்துவந்தேன். டிஆர்பி என்ற தேர்வுக்கு தயாராகி நான்கைந்து முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற இயலவில்லை.



ஐந்தாவது முறை தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்து வருகிற அரசாங்கம் டிஆர்பி தேர்வு முறையை ரத்து செய்துவிடும். ஏற்கனவே உள்ள தொழிலிலும் வருமானம் இல்லை. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.



இச்சூழலில் தேர்வு ஆகாவிட்டால் எதிர்காலம் கஷ்டத் துடன் தொடரும். எனது கஷ்டங்கள் நிவர்த்தியாக வேண்டும் என சாயி பாபாவிடம் வேண்டுதல் வைத்தேன்.



ஒருநாள் இரவு பாபா படத்தைப்பார்த்து எப்படியாவது இம்முறை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என பிரார்த்தித்து மனம் விட்டு அழுதேன். தேர்வு முடிவு வந்தது. எனக்கு அதிர்ச்சி. நான் தேர்வாகவில்லை.



பாபா எனது பிரார்த்தனையை கேட்கவில்லை எனத் தளர்ந்து விரக்தியடைந்து போனேன். ஒரு மாதம் கழித்து இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.



இதில் எனக்கு பாபாவின் அருளால் பணி கிடைத்தது. தோல்வியை வெற்றியாக மாற்றிய பாபா மீது அதிலிருந்து இன்னும் அதிகமான பக்தி ஏற்பட்டது.



எத்தனையோ நிகழ்வுகள் பாபா என்னுடன் இருக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்கிறேன். அவற்றை அனுபவத்தில் மட்டுமே உணரமுடியும். வார்த்தைகளில் எழுத முடியாது.



எப்போதும் பாபா என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு தீவிரமாக இருக்கிறது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றுகிறவர் பாபா.



 சண்முகம் ஆசிரியர்



சின்ன சேலம்.

Tuesday, May 27, 2014

வரன் கொடுத்தார்!

25124



எங்களுக்கு இரண்டு குழந்தைகள். முதலில் பெண், இரண்டாவது பையன். மகளுக்கு வரன் பார்த்து வந்தோம். நல்ல வரனாக அமைவதற்கு பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தோம். எங்கள் வேண்டுதல்படியே, மாப்பிள்ளை குடும்பத்தார் தீவிர சாயி பக்தர்களாக அமைந்தார்கள்.



திருமணம் நல்லமுறையில் நடக்க வேண்டுமே என பிரார்த்தித்தோம். அத்துடன், எனது வேலையிலும் சரிவர சம்பளம் வராத நிலை. என்னால் எந்த வித கடனுக்கும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.



பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி பிரார்த்தனை செய்தோம். அவர் செய்த லீலைகளை நினைத்து இன்றளவும் புல்லரிக்கிறது.



நாங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திலிருந்து எல்லாம் எங்களுக்கு பண உதவியாகவும், பொருள் உதவியாகவும் கிடைத்து நல்ல படியாக மகளின் திருமணம் நிறைவேற உதவியது.



அது மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டார் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நாங்கள் என்ன செய்தோமோ அதையே பெரிதாக நினைத்து மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.



மகளுக்கு வரன் பார்க்க துவங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் பாபா என் மகளுக்கு நல்ல மாமனார் -  மாமியாரைத் தாருங்கள் என வேண்டுவேன்.



அவர் இப்போது அவளுக்கு எங்களை விட நல்ல தாய் - தந்தையரையே தந்திருக்கிறார்.



இதற்கு நன்றி சொல்லவும், என் சம்பந்தி வீட்டார் சகல சவுபாக்கியங்களையும் பாபா அருளால் பெற்று வாழவும், உறவுகள் நல்லமுறையில் தொடர அவர் உறுதுணையாக இருக்கவும் பிரார்த்தனை செய்ய ஜனவரியில் சீரடி சென்றுவந்தோம்.



ராஜேஸ்வரி சீனிவாசன்,



மீனம்பாக்கம்., சென்னை

Sunday, May 25, 2014

உனது பக்தியே சிறந்த பக்தி!

srisai



காகா சாகேப் தீட்சிதர் தினமும் தவறாது பாகவதம் வாசித்து வந்தார். கூடியிருந்தவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



சாமாவும் காகா மகாஜனி என்ற சாயி பக்தரும் கூட இதை ஆர்வத்துடன் கேட்டனர்.



ஏகநாத பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம் வாசிக்கப்பட்டது. அதில் ரிஷப குலத்தில் தோன்றியவர்களான கவி, மூரி, அந்தரிக்‌ஷர், ப்ரபுத்தர், பிப்பலாயனர், ஆவில்ஹோத்ரர், த்ரமீளர், சமஸர், கரபாஜனர் என்ற நவ யோகிகள் பற்றிய பகுதி அது.



தெய்வ ரூபிகளான அவர்கள் எல்லையற்ற பக்தியுள்ளவர்கள். இவர்கள் ஜனக மகரிஷியின் அரசவைக்கு ஒருமுறை சென்று, இறை அடியார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம் பற்றி போதனை செய்தார்கள்.



கடவுளை வணங்காதவர்கள் சர்வ நாசம் அடைவார்கள் என்றும், எந்த யுகத்திற்கு எப்படி கடவுளை வணங்க வேண்டும் என்றும் அவர்கள் ஜனகருக்கு சொல்லிக் கொடுக்க, இதை ஆச்சரியத்தோடு ஜனகர் கேட்டுக்கொண்டிருந்தார். நவயோகிகளில் கடைசியானவரான கரபாஜனர், கலியுகத்தில் ஹரி பாதத்தையும், குரு பாதத்தையும் மனத்தில் இருத்துவது ஒன்றே பிறவி பயத்தை அழிக்கும் என்று போதித்தார்.



இந்தப் பகுதியை படித்து முடித்த தீட்சிதர், சாமாவை நோக்கி, ”அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானது. மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்!  ஓ, எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவது இல்லை. புகழ் பெற்றவர்களாகிய நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாவிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன?



சத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தார் போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள். அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்கு உண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜன்மம் எடுத்து என்ன பிரயோஜனம்?”  என்று கேட்டார்.



பாபா மீது மிகவும் அன்புள்ள பக்தரான தீட்சிதர் இவ்வாறு சொல்வது சாமாவுக்குப் பிடிக்கவில்லை. சாயியைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்?



அவர் உயிரோடு இருப்பது வீண். சாயி பாதங்களில் அமோகமாக சிரத்தை இருக்கும் போது மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்?



நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாகக் கொண்டது அன்றோ? இறைவன் நாமத்தையும் குருவின் நாமத்தையும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பது பாபா உங்களுக்கு இட்ட கட்டளையல்லவா? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என்றார்.



இதைக் கேட்டு தீட்சிதர் ஆறுதல் அடைந்தார்.



நீங்கள் மற்றவர்களுடைய பக்தியைப் பார்த்தோ, நினைத்தோ கலக்கம் அடையாதீர்கள். எங்கே பக்தியுடன் பாசம் கலந்திருக்கிறதோ, அங்கே பகவான் இருக்கிறான். எங்கே சடங்காச்சாரங்களுடன் அன்பற்றத் தன்மை இருக்கிறதோ, அங்கு இறைவன் இருக்கமாட்டான்.



எனவே, இப்போதுள்ள உங்கள் பக்தியே உயர்வான பக்தி. இதுவே போதுமானது. நீங்கள் முடிந்தவரை எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக்கொண்டிருங்கள். சாயி மீது அன்பு செலுத்துங்கள். சாயியைப் போலவே மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். உங்கள் பாக்கியத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்ற அளவில் நீங்கள் உயர்வீர்கள்.

Saturday, May 24, 2014

முழு இதயத்தோடு சரணடை!

12



பாபா சொன்னார்:  ”நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்காதீர்.  தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகா பாக்கிய சாலி.”



இந்த வார்த்தைகளை சாயிபாபா உங்களுக்காக சொன்னார்.



என்ன சாயி ராம்- ஒரு இடத்தில் நாமஸ்மரணம் செய்யுங்கள் எனக்கூறுகிறீர்கள். இன்னொரு இடத்தில் அது கூட தேவையில்லை, பக்தி செய்ய வேண்டாம், சடங்குடன் வழிபட வேண்டாம் என்கிறீர்கள்..எதைச் செய்வது? எதை ஏற்றுக்கொள்வது? குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா!  நாம் செய்கிற பக்தி முழுமையானதுதானா? வழிபாட்டை பாபா ஏற்றுக்கொள்கிறாரா? என்று சந்தேகப்படலாம்.



கொஞ்ச நேரம் அவரது நாமத்தை சொல்கிறேன், உடனே மனம் வேறு ஒரு எண்ணத்தை நோக்கிச் சென்றுவிடுவதால் கவனம் சிதைகிறது.  ஒருமையான மன உணர்வு இல்லாமல் இறைவனை மன உணர்வு இல்லாமல் இறைவனை அடைய முடியாது என்பது எனக்கே தெரிவதால், நான் திகைக்கிறேன்.



மாதக் கணக்கில் எனக்கு இந்தப்பிரச்சினை உள்ளது என்று நினைப்பவர்களுக்குக் கூட எளிமையான வழியை சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயம் சொல்லித்தருகிறது.



நீங்கள் ஒரு ஞானியை சரணடைந்துவிடுங்கள். அப்போது மேற்சொன்ன பக்தி, வழிபாடு, நாமஸ்மரணம் ஆகியவை செய்த பலன் கிடைக்கும்.



நீங்கள் ஒரு மகானைச் சென்று சந்திப்பது என்பது, நீங்களாக எடுத்த முடிவு அல்ல. கடவுளின் அருளாகும். கடவுள் உங்களுக்கு நன்மை செய்யத் தீர்மானித்து விட்டால், உடனடியாக ஒரு அடியாரின் நினைவை உண்டாக்கி, அவரைப் போய் பார். உன் பிரச்சினை சரியாகும் அல்லது உனக்குத் தெளிவு கிடைக்கும் என மனதில் எண்ணத்தை தருவார். இப்படி கடவுள் அனுப்பிய பிறகுதான் நாம் ஒருவரைச் சென்று தரிசிக்க முடியும்.



சத்சரித்திரம் குறிப்பிடுகிற ஞானிகள் என்பவர்கள் என்னைப்போன்று பக்தியைப் பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் கிடையாது. நாங்கள் யாரைப் பற்றி கூறுகிறோமோ அவர்கள்...



நான் சாயியைப் பற்றிக் கூறுகிறேன்.. என் நண்பர் பகவான் ரமணரைப் பற்றிக் கூறுவார். இன்னொருவர் மந்த்ராலய மகான் பற்றி சொல்வார். வேறு ஒருவர் பகவான் ராமகிருஷ்ணரைச் சுட்டிக்காட்டுவார்.. விவேகானந்தரைக்காட்டுவார். இவர்கள்தான் மகான்கள், ஞானிகள் என சொல்லப்பட தகுதியானவர்கள்.



நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இவர்தான் பாபா என ஓடி வருகிறீர்கள். காசிலியில் இருந்து சுப்ரமண்யம் சுவாமி கூப்பிட்டால் அவரை தரிசிக்க வேண்டும் என ஓடுகிறீர்கள்..இது தவறு..



என்னிடம் சரணாகதி அடைந்தால், என் சொத்துக்களை எழுதிக்கொடுத்துவிடுவேனா, என்ன? நீங்கள் பட்ட கடனை நான் அடைத்துவிடுவேனா? செய்யமாட்டேன். காசிலி சுவாமி செய்வாரா? யார் ஒருவர் தனது பக்தர் நலனுக்காகத் தியாகம் செய்யாமல் இருக்கிறாரோ அவர் ஞானியல்ல. யார் ஒருவர் தன் பக்தனுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறாரோ அவரே ஞானி. அவர் லட்சத்தில் ஒருவராக -  கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.



தற்போது உள்ளவர்களில் அவர்களை அடையாளம் காண்பது கடினம். அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் வரும்போது நாம் இவரையா நம்பினோம் என நினைத்து வருந்துவோம்.இந்த மாதிரி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் அப்பழுக்கற்ற மகான்களை இறைவன் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறான்.



நாம் சாயி பக்தர்கள். இறைவன் நமக்கு சாயி என்ற ஞானியை - குருவை நமது வழித்துணையாக அனுப்பியிருக்கிறான்.அவர் என்ன சொல்கிறார்..



உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்க வேண்டாம்..என்கிறார். இப்படிப்பட்ட நினைப்பு, உறுதி எப்போது வரும். அவரை முழுமையாக நம்பினால்தானே வரும்?



அப்படி முழுமையாக நம்புவதற்குத் தயாராகுங்கள் என்றுதான் சொல்லித் தருகிறேன்…எனக்கு சாயியை பிடிக்காது, ராகவேந்திரரை வழிபடுவேன்.. ரமணரைத் தான் கும்பிடுவேன்...இப்படி எதைச் சொன்னாலும் சரி.. அதை மட்டும் செய்யுங்கள்.ஒருவரை தாழ்த்தி, இன்னொரு மகான் பற்றி உயர்த்திப் பேசிட வேண்டாம்.



எங்கள் வீட்டில் எல்லோரது போட்டோவையும் மாட்டி வைத்திருக்கிறேன்.. அவர்களை கும்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வேன் என தத்துவம் பேசாதீர்கள்.யாரேனும் ஒருவரை பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு பெயரை உங்களுடைய மந்திரமாக ஏற்று அதை உச்சரிக்க ஆரம்பியுங்கள்.



ஒருவரை மட்டும் குருவாக ஏற்றுக்கொண்டு முழுமையாக சரண் அடையுங்கள். அப்போது உங்களுக்கு அனைத்தும் சித்தியாகும்.ஒருவரை பிடித்துக்கொண்டு மற்றவரை எப்படி தள்ள முடியும்? அவரும் மகான்தானே என்ற இன்னொரு கேள்வி எழும்பும்.



உனது பார்வைக்கும், சிந்தனைக்கும்தான் அவர்கள் வேறு வேறு பெயர் உள்ள மகான்களாகத்தெரிகிறார்கள். உண்மையில் அவர்கள் தனித்தனியானவர்கள் கிடையாது. ஒரே இறைவன் பல ரூபங்களில் -  பல பெயர்களில் உங்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி வந்திருக்கிறான்.



தகுதிக்கு ஏற்ப பலன் தருவதற்காக எளிய வழியை போதித்து, தன்னிடம் சேர்த்துக்கொள்ள, அவன் இப்படி பல ரூபங்களில் வருகிறான் என்பதை உணருங்கள்.



நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். காரணம், உங்களைப் போல நானும் ஒரு பக்தன். இறைவன் மகான்கள் வடிவில் அமர்ந்து தன்னை நாடி வருவோருக்கு நன்மை செய்கிறான்.அவன் எதிர்பார்ப்பது உங்களிடம் முழுமையான சரணாகதி.



இதைச் செய்வதற்கு தைரியம் தேவை. இந்த தைரியம்,  நம்பிக்கை இருந்தால்தான் வரும். நம்பிக்கை என்பது ஒரே நாளில் வராது.. பொறுமையோடு காத்திருந்தால்தான் வரும்..இதை வைத்துக்கொண்டு செயல்படுங்கள், அனைத்திலும் ஜெயித்தவர்கள் ஆவீர்கள்.



ஜெய் சாய் ராம்.;. 

Friday, May 23, 2014

எங்கும் நிறைந்தவர் பாபா!

ac821-sridisaibaba



பாபா இந்த பூலோகத்தில் மட்டுமல்ல, மற்ற உலகத்திற்கும், பூலோகத்தில் வெகு தூரத்திற்கும் சென்று வந்துள்ளார். காலை வேளையில் துனியிடம் அமர்ந்திருக்கும்போது, மற்ற பக்தர்களிடம் நேற்று இரவு, தான் எங்கெங்கு சென்றேன், என்ன செய்தேன் என்பது பற்றி சொல்வார். ஆனால் மசூதியிலும் சாவடியிலும் அவரோடு தூங்கியவர்கள் இரவு முழுவதும் பாபா அங்கேயே தூங்கினார் என்பார்கள்.



அந்தந்த இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை, பாபாவுடைய பேச்சுடன் வைத்து சோதித்துப் பார்த்தால் பாபா சொல்வது சரியாக இருக்கும்.



ஒருநாள் சீரடியில் மார்வாடி ஒருவரின் மகன் இறந்து விட்டான். ஈமச்சடங்கு முடித்துவிட்டு சோகத்துடன் மசூதிக்கு வந்தனர். அப்போது பாபா அந்தப் பையன் நதிக்கு அருகில் செல்கிறான், நதியைக் கடந்து விட்டான் என்றார். அவர் குறிப்பிட்டது, நரகத்தின் பக்கத்திலுள்ள வைதாரணி நதியைத்தான்.



பாபா, பக்தர்கள் சூழ்ந்திருக்கும்போது யாராவது ஒருவருக்கான செய்தியைச் சொல்வார். மற்றவருக்குப்புரியாது. ஆனால், யாருக்காக சொல்கிறாரோ அவருக்குத்தெரிந்துவிடும். அப்படித்தான் எனது நான்கு முந்தைய பிறவி பற்றியும், அதில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் கூறினார். எனக்கு மட்டுமே புரிந்தது. அவருடைய சொல்லும் செயலும் நிறைய பேருக்கு நன்மையையே செய்தது.



திடீரென்று என்னிடம், ”நீ எங்கே இருக்கிறாய்?  நான் எங்கே இருக்கிறேன்? இந்த உலகம் எங்கே உள்ளது ” எனக் கேட்பார். சில சமயம், தனது உடலைக் காட்டி, “இதுதான் எனது வீடு. நான் இங்கு இல்லை. எனது குரு மௌர்ஷாத் என்னை எடுத்துச் சென்று விட்டார்” என்பார்.



பெரும் உண்மை என்னவென்றால், சாய் பாபா இன்றும் வாழ்கிறார். அன்று எங்கிருந்தாரோ, இன்றும் அங்கே வாழ்கிறார். அன்றும் வாழ்ந்தார், இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். இவ்வுலகிலும் மற்ற உலகிலும் தனது செயல்பாடு என்ன.. தான் இறந்து போன ஆன்மாவின் விதியை எப்படி கட்டுப்படுத்தினேன் எனக் கூறுவார்.



பாபாவின் வார்த்தைகள் என்றும் பொய்த்தது இல்லை. புரியாத -  அர்த்தமற்ற வார்த்தைகளையும் பேசியதில்லை. இது எல்லோருக்கும் புரியாது, நான் புரிந்துகொண்டேன்.





கு.இராமச்சந்திரன்

Wednesday, May 21, 2014

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபா -      ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி

அவர் அமர்ந்துள்ள சிம்மாசனம்-      சாந்தி

இரண்டு சாமரங்கள்-     அபேத பக்தி, சகஜ சமாதி

இரண்டு விசிறிகள் - ஆத்மானுபூதி, கைமேல் பலன்

தலைக்கு மேலுள்ள குடை - ஆத்மானுபூதியில் லயித்து இருத்தல்

கட்டியக்காரர் கையிலுள்ள கோல்கள் - சாந்தி, நல்லுணர்வு, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள்- அரசவைப் புலவர்கள்.

அவருக்குப் பின்னால் இருக்கும் பிரபை- சுத்த ஞானத்தின் ஒளி. பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், திரும்பத் திரும்பச் செய்யப்படுகிற தியானம், இறை தரிசனம்-எட்டுப் பிரதான மந்திரிகள்

கழுத்தில் அணியும் மாலைகள் - சாந்தியும், புலன் அடக்கமும்

அவரது பேச்சு- வேதாந்தக் கடல்.

பாபாவின் வார்த்தைகளின் அர்த்தம்

DSC_0005



1914ல் மூர்தாவிலிருந்து காச நோயால் அவதிப்பட்ட ஒரு பணக்கார முதியவர் சீரடி வந்தார். சீரடியில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம். ஆகவே, சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார். இரண்டாம் மாதம் முடிவில் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.



இதைக் கண்ட அவர் வீட்டார், என்னிடம் பாபாவிடம் சென்று உதி வாங்கி வரச் சொன்னார்கள். நானும் பாபாவிடம் கேட்டேன்.  “உதி என்ன செய்யும்? அவன் இந்த உலகை விட்டு செல்வதே நல்லது. சரி, உதி எடுத்துச் செல்!”  என்றார் பாபா. நானும் அவ்வீட்டில் உதியைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், பாபா சொன்னதைச்  சொல்லவில்லை.



ஷாமா பாபாவிடம் வந்து, முதியவர் இறந்து விட்டதைக் கூறினார். உடனே பாபா, அவன் எப்படி இறக்க முடியும்? காலையில் உயிர் பிழைப்பான் என்றார். இதைக் கேட்ட உறவினர்கள் -  முதியவரின் உடலைச்சுற்றி விளக்கேற்றி வைத்தனர். மதியம் வரை பிழைக்கவில்லை. பின் அடக்கம் செய்தனர்.



பாபா பொய் கூறிவிட்டதாக கோபம் கொண்டு உறவினர்கள் குடும்பத்தோடு மூர்தா சென்று விட்டார்கள். மூன்று ஆண்டுகள் சீரடிக்கு வரவேயில்லை.



ஒருநாள் இரவு முதியவரின் உறவினர் கனவு கண்டார். இறந்த முதியவரின் தலையோடு பாபா தோன்றினார். நுரையீரலைத் திறந்து காட்டினார். அழுகியிருந்தது.



”இந்த கொடுமையிலிருந்து நான் அவனை காப்பாற்றினேன்” என்றார் பாபா. பின் அவர்கள் சீரடிக்கு வரஆரம்பித்தனர்.



அவன் எப்படி இறப்பான்? காலையில் பிழைத்துக்கொள்வான் என்பதை தவறாகப் புரிந்துகொண்டனர். அந்த முதியவர் காலையில் மறுபிறவி எடுத்துவிடுவார் என்பதைத்தான் பாபா இப்படி கூறினார். ஆகவே, பாபாவின் எந்த வார்த்தையையும் சரியாக உள்வாங்கி அர்த்தம் காண வேண்டும்.  



கு.இராமச்சந்திரன்

Monday, May 19, 2014

மாறாத நம்பிக்கை!

baba



மனதில் இறைவன் அல்லது குருவின் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவரை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் தெய்வம் அல்லது குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால், நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். இவ்வளவு படித்தும் கஷ்டம் போகவில்லையே என புலம்புவதும் அறிவீனம். கடவுள் மீது என்றும் மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.

Sunday, May 18, 2014

பல தேவதைகள் மாயை!

25124

நாம் பல தெய்வ வழிபாடு உள்ளவர்கள். இதை விவேகானந்தர்  மறுத்திருக்கிறார். பல பெயர்களில் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்றார் அவர்.

கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் ஒவ்வொரு ஒரு தனிக்கடவுளாக கும்பிடுகிறோம். அவன் நம் மீது கருணையும், பாசமும், பரிவும் உள்ளவன். வெண்ணையை விட மென்மையானவன் என்பதால் அவனை தாயுமானவன் என்கிறோம்.

அம்பாளாக வழிபடுகிறோம். எங்கும் நிறைந்தவன் என்பதால் விஷ்ணுவாக கும்பிடுகிறோம். அவனே படைக்கிறவன் என்பதால் பிரம்மாவாக வழிபடுகிறோம். எதற்கும் முதன்மையானவன் என்பதால் விநாயகராக,  வெற்றியைத் தருவதால் முருகனாக,  செல்வத்தைத் தருவதால் லட்சுமியாக, கல்வியைத் தருவதால் சரஸ்வதியாக வழிபடுகிறோம்.



இறைவனை பெண்ணாக பாவித்து வழிபடுவதன் நோக்கம்.. பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை குணம் அதிகம்..



இரக்க சுபாவம் அதிகம்.. கடுமை முகம் காட்டுவது குறைவு. நம்பினால் உயிரையும் தரும் இயல்பு பெண்ணுக்கு மட்டுமே அதிகம் உண்டு.



எனவே, சுலபமாக அன்பைப்பெறுவதற்காக இறைவனை பெண்ணாக பாவித்து வணங்குகிறோம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...