Showing posts with label குரு பக்தி. Show all posts
Showing posts with label குரு பக்தி. Show all posts

Saturday, June 9, 2018

குரு சேவை



குரு சேவை மிகக் கடினமானது.  ஆகையால் முன்னமே நன்றாக யோசித்து குருசேவைக்கு முற்பட வேண்டும். கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம்.  ஆனால், மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும்.
குரு பக்தியினால் எல்லாமும் பெற முடியும்.  சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும்.  ஜபங்கள், அனுஷ்டானங்கள் நீண்ட நாள் செய்தால்தான் பயன் பெற முடியும்.  ஆனால் குருபக்தியின் பயன் உடனே கிடைக்கும்.

தவங்கள், அனுஷ்டானங்கள், யக்ஞங்கள்,  தானங்கள் ஒரு வேளை பயனில்லாமல் போகலாம்.  ஆனால் குருபக்தி கண்டிப்பாக பயன் கொடுக்கும்.  அதுவுமில்லாமல் குருவிடம் பக்தி உள்ளவனுக்கு யக்ஞங்கள் தானங்கள் செய்த பயனும் வரும்.
குருபக்தி சுலபமானது,  கடினமில்லாதது.  ஆனால் மனதை திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும்.
ஸ்ரீகுருவிற்க்கு எவன் ஒருவன் குருபக்தியுடன் சேவை செய்வானோ அவன் வீட்டில் ஸ்ரீகுரு கல்ப விருட்சமாய் வேண்டியதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
குருவை சேவிப்பவனுக்கு நரகமே இல்லாதபோது கஷ்டங்கள் எப்படி வரும்.  குரு சேவையினால் நான்கு வித புருஷார்த்தங்கள் கிடைக்கும்.  குரு சேவை செய்யும் கரங்கள், குருவை நாடி வரும் பாதங்கள்குருவை வணங்கும் சிரம் எவ்வளவோ புண்ணியம் செய்தவை.- 

Tuesday, May 20, 2014

குருவை எந்நேரமும் நினைக்கவேண்டும்.

25121



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால்  குருவைஎந்நேரமும்நினைக்கவேண்டும்.



அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும்.  குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது.



சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.



என் பிரச்சினை இப்படியிருக்கிறது... குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை.



குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.



அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...