Showing posts with label சாயியின் குரல். Show all posts
Showing posts with label சாயியின் குரல். Show all posts

Wednesday, May 9, 2018

கவலை வேண்டாம் குழந்தையே!



அன்பு குழந்தையே.. !
ஏன் இப்படி  இருக்கிறாய்? வருத்தப்படாதே. பல சோதனைகளை கடந்த போதிலும், ஒரு நிரந்தர  தீர்வு இல்லாமல் தினமும் அவதிபட்டு, நீ செல்லும் இடமெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி பெரும் வேதனையில் உள்ளாய். குழந்தாய்! இவை அனைத்தில் இருந்தும் நீ விடுபடப்போகிறாய் கவலைப் படாதே! துவண்டு போகாதே! இத்தனை காலமும் நீ பட்ட கஷ்டங்கள் அனைத்தும் உன்னை விட்டு  ஓடி  ஒளியும். அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்க்கையில் உன்னை  உயர்த்தப் போகிறேன்.
இனி உன் நாவில் இருந்து வரும் வார்த்தைகளால்  உன்னைத் தேடி மற்றவர்கள் வரும் நேரம் வந்துவிட்டது. எவன் ஒருவன் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை மட்டுமே சந்திக்கின்றானோ, அவன் கோழை அல்ல. அவன் வெற்றி  என்னும் இலக்கை  விரைவில் அடையப் போகிறான் என்று அர்த்தம். குழந்தாய்! கவலையை விடுத்து நித்தமும் என் நாமத்தை உச்சரி. எவன் ஒருவன் உதவி நாடி வருகிறானோ, அவனைத் தேடிச் சென்று  உதவி செய். பசி என்று எவன் வினவுகிறானோ,  அவனது பசியை உடனே போக்க முயற்சி செய். அப்பா நான் இருக்கிறேன் சிறிதளவும் கவலை வேண்டாம்..."!

Tuesday, July 4, 2017

ஆனந்தமே பிரம்மம்


அன்புக் குழந்தையே!

வாழ்வில் எதையெல்லாம் நீ நிரந்தரம் என நினைத்துக்கொண்டிருந்தாயோ அவையெல்லாம் நிதர்சனம் இல்லாத பொய்கள் என்பதை புரிந்து கொள்ளவே உனக்கு சோதனைகள் தரப்பட்டன.

யாரை நம்பி உன் உடமைகளை ஜாமீன் கொடுத்தாயோ, அவர்கள் உண்மை இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே பிரச்சினையில், உன்னை சிக்க வைக்க அனுமதித்தேன்.

அடுத்தவர்களால் உனக்கு ஒருபோதும் நன்மையில்லை என்பதை உணர்த்தவே அவர்களின் சுயரூபத்தை உனக்கு வெளிபடுத்தினேன்.

ஆனால் நீயோ வெகுளியாக இருந்துவிட்டாய். உனது அன்பு குணத்தை, அப்பாவி தனத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.

பொருளையும் நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாய், அவமானமும் பட்டாய், அந்த கெட்ட காலங்களை நினைத்துப் பார்க்கவேண்டாம். அவையெல்லாம் பஞ்சு மெத்தையில் உனக்காக வைக்கப்பட்ட பெரிய முட்களை போலக் குத்திக்கொண்டிருந்தவை. இந்த காலங்கள் மாறிவிட்டன குழந்தையே!

இனி வருவதெல்லாம் உனக்கு வசந்தகாலங்கள், இதோ நான் உனது வலது கையைப்பிடித்து தூக்கி நிறுத்தினேன். இந்த உலகில் என்னைவிட உனக்கு உண்மையான உறவுகள் யாருமில்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, பொய்யான உறவுகளை உன்னிடமிருந்து விலக்கி வைத்தேன்.

என் குழந்தை ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்தேன். "ஆனந்தமே பிரம்மம்" என்பதை நீ உணர்ந்து கொள்வதற்காக செய்தேன். ஆனந்தம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லவா வருகிறது? மன மகிழ்ச்சி எப்போது வருகிறது? உன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகுதானே வருகிறது? அதனால் உனது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி உன்னை ஆனந்தமாக வைத்துக்கொள்ளவே இவ்வளவு நேரமும் முயன்று கொண்டிருக்கிறேன்....; என் மடியில் கவலைகளை மறந்து ஓய்வெடு குழந்தாய்....!!!!!

சாயியின் குரல்

Saturday, March 11, 2017

சாயியின் குரல்


அன்புக்குழந்தையே! 

*நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது.

*என் குழந்தையே உன்னை வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பதால் ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்.

* யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவது நானே என்று அறிந்துகொள்.

*சோதனை காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது.

*மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும்,  பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானபட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?,

* இனி பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்து துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கு நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................ சாயியின் குரல்🙏🏻

Friday, January 13, 2017

அப்பாவிடம் இருந்து மகனுக்காக

பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும்  இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்...........................
  அப்பா

Wednesday, January 11, 2017

நீயும் நானும்....

அன்புக் குழந்தையே!
நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது. என் குழந்தையே உன்னை வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பதால்,  ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன். யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவது நானே என்று அறிந்துகொள். சோதனை காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது. மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும்,  பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானபட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?, இனி பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்து துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கு நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................ சாயியின் குரல்🙏🏻

Sunday, January 8, 2017

அன்புக் குழந்தையே!

அன்புக் குழந்தையே!
புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளை பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகுத்தானே உள்ளே வந்து வாழ்க்கையை நடத்துகிறாய். அப்படித்தான் குழந்தையே! உனது பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான்  செயல்படும் போதும் உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசுபட்டிருக்கிறாய். உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம், பிரச்சினை என்று பேதலித்து வருகிறாய். அவற்றையெல்லாம் நான் மெதுவாகச்செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத்தெரிகிறது. சோதனைக்காலம் வரும்போது நீ பயப்படாதே! கலங்காதே! நான் உன் தந்தை! உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளைக்கண்டித்து நடத்துவதைப்போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக்கடிந்து நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நீ நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.................. சாயியின் குரல்

Friday, January 6, 2017

நான் சத்திய தேவன்.

என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான்.

நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.

Wednesday, January 4, 2017

காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்பட வைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -
—-ஸ்ரீ சாயி-யின் குரல்

Sunday, July 31, 2016

நான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்!

Srishirdisaibaba Trust Sskottai's photo. அன்புக் குழந்தையே!
நான் அனைத்தையும் கவனித்துத்தான் வருகிறேன். என் கண்களில் இருந்து எது தப்ப முடியும்? ஆனால் உங்கள் தவறுகளை கனிவுடன் மன்னிக்கிறேன். ஆரம்ப காலம் முதல் நீங்கள்  என் மீது உண்மையான அன்பு வைத்து என்னை உங்களது குழந்தை போல பாவித்ததை நான் மறந்துபோகவில்லை, உங்கள் மீது நான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்.

 நீ என்றைக்கோ முன்னேறி வாழ்வின் உச்சத்தை தொட்டு இருக்க வேண்டும். உனது பிடிவாத குணம், முரட்டு சுபாவம் ஆகியவை நிம்மதியற்ற வாழ்வை தந்துவிட்டது. சொர்க்கத்தை உருவாக்க நினைத்த நீ சந்தர்ப்பவாத குணத்தால் ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்.  அதை நினைத்து என் மனம் பதைக்கிறது. கெட்டவர்கள் கெடுபலனை அனுபவிப்பார்கள் ஆனால் நல்லவர்களாகிய நீங்களும் கெடுபலன் அனுபவிப்பது ஏன்?
இந்த வாழும் காலத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள். கவலைகளை தூக்கி எறி.  எதை எடுத்துக் கொண்டு போகப்போகிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் என் போக்கில் விடு. சிந்தனையை என் பக்கம் திருப்பு. செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...................... சாயியின் குரல்

சாயியின் குரல்

வெயில் அடிக்கிறது என்று நிழலுக்காக மரத்தடியில் ஒதுக்கினால், மரம் முறிந்து மேலே விழுவது போல எல்லா இடங்களிலும் துரதிருஷ்டம் உன்னை துரத்துகிறது. நமது தேவைகளும் ஆசைகளும் நம்மை இப்படி பட்ட நிலைக்கு இழுத்து சென்றுவிட்டன. இதனால் நாம் சிக்கலில் சிக்கிக்கொண்டோம், ஆகவே விதியை நொந்துகொள்வானேன். மதி சரியாக இருந்திருந்தால் இந்த கதிக்கு ஆளாயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! குழந்தையே உனக்கு இளைப்பாறுதல் என்பதே இல்லை, எந்த பக்கத்தில் இருந்து எப்போது திகில் தரும் நிகழ்வுகளும் செய்திகளும் வருமோ என்கிற பயம் உன்னை சூழ்ந்து இருக்கிறது. உறவினர்களோ வாழ்வில் பொறுப்பு அற்றவர்களாக நடந்துகொண்டு இதோ உன் உள்ளத்தை காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறார்கள். உன் கண்ணீரின் வலிமை அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இதோ நான் சீரழிந்து நிற்கும் உன் வாழ்க்கையை மாற்ற உன்னை தேடி வந்திருக்கிறேன். வெகு காலமாக நான் உன் பக்தியை கண்டு வியந்து மெச்சி வருகிறேன். நான் அன்பும் கருணையும், இரக்கமும் உருக்கமும் உள்ளவன் என்று உன்னால் கொண்டாடப்படுவேன்................................                                                . சாயியின் குரல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...