Showing posts with label சாயி கோயில்கள். Show all posts
Showing posts with label சாயி கோயில்கள். Show all posts

Sunday, August 7, 2016

ஸ்ரீ சீரடி சாயிபாபா தியான பீடம், கொளத்தூர்





கொளத்தூரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அமுதாம்பிகை உடனாய சோமநாதேஸ்வர் திருக்கோயிலில் 2007-ல் இறைப்பணியைத் தொடங்கினேன். நம்மால் இயன்ற இறை சேவையை மக்கள் சேவையாகச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலால் சாயி சேவைக்கு வந்தேன்.
2010-ல் பாபாவின் புகழைப்பரப்பவும், அவரது லீலைகளை வெளிப்படுத்தவும், கூட்டு வழிபாடு நடத்தவும் பாபாவுக்கு தியான பீடம் அமைக்க விரும்பினேன். பல இடங்களில் வாடகை இடம் பிடித்து நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சொந்த இடம் இல்லாத காரணத்தால் பல இடங்களுக்கு இந்த தியான பீடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஏழாவது இடத்தில் இந்த ஆலயத்தை அமைத்திருக்கிறேன்.
தியான பீடத்திற்கு சொந்த இடம் இல்லாததை அறிந்த திருமதி உஷா என்ற சாயி பக்தை, தனது வீட்டு மாடியில் சுமார் இரண்டாயிரம் சதுர அடியை பாபாவுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்.
அவருடைய கைங்கர்யத்தால் அந்த இடத்தில் ஆன்மீக சேவை எவ்விதத் தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிரார்த்தனைக்கு அழைக்கலாம். ஆன்மிகம் தவிர்த்து மனித நேயச் சேவைகளும் இங்கே நடந்துகொண்டிருக்கின்றன. அன்னதானம், மற்ற கைங்கர்யங்கள் அனைத்தும் சாயி பக்த கோடிகள் உதவியுடன் சிறப்பாக நடக்கிறது.
இந்த மையத்திற்கு வருகை தருகிற கோபால கிருஷ்ணன் என்ற சாயி பக்தர், இந்த பீடத்தில் நிறுவுவதற்காக அழகிய சாயி பாபா விக்ரகத்தைத் தருவித்துத் தந்தார். சாயி பக்தர்கள் தங்கள் பங்குக்கு கைங்கர்யம் அளித்தார்கள். இவர்களது ஒத்துழைப்புடன் தியான பீடத்தை உருவாக்கினோம்.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பாரதி பாபா மற்றும் பல சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தந்தனர்.
ஸ்ரீ  சீரடி சாயிபாபா தியான பீடம்,  24/1, செல்வி நகர் மெயின் ரோடு, கொளத்தூர், சென்னை- 99 என்ற விலாசத்தில், வி-4 ராஜ மங்கலம் காவல் நிலையம் அருகில், நீலகிரி சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் அமைந்துள்ளது இந்த தியான பீடம். நிறுவனர்: சாயி பாஸ்கர். மேலதிக தகவலுக்கும் மற்றும் தொடர்புக்கும் 971031933,0 9176519330 என்ற எண்களில் அழைக்கலாம்.

Monday, August 1, 2016

ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில்



திருநெல்வேலி நகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில் அமைந்து வருகிறது. இந்த ஆலயத்தை சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் பார்வதி பவன் ஓட்டல் மற்றும் இனிப்பகங்களை நடத்தி வரும் தோத்தாத்ரி அவர்கள் பெரிய பொருட் செலவில் கட்டி வருகிறார்.
ஏற்கனவே சாலி கிராமத்தில் பார்வதி பவன் அருகில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துள்ளார். இங்கு சீரடியில் நடப்பது போன்ற வழிபாடுகள், அன்னதானம் போன்றவை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதற்காக ப்ரத்யேகமாக சீரடியில் இருந்து குருக்கள் வரவழைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன.
ரெட்டியார் பட்டியில் அமைந்துள்ள பாபா ஆலயத்தில் சேவை சாதிக்கவும் சீரடியில் இருந்து குருக்கள் தருவிக்கப்பட்டுள்ளார்.  சாயி பக்தர்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகிற விழாவுக்கு வருகை தந்து தங்கள் கைகளால் பாபா ஆலயக் கட்டிடப் பணியில் ஆளுக்கு ஒரு செங்கல்லை வேண்டி வைக்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். சாயி தரிசனம் வாசகர்கள், சாயி பக்தர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு பாபாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்: 09789984551

Thursday, May 19, 2016

சித்தர் பாபா ஆலய கும்பாபிஷேகம்


கோயமுத்தூர் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள தொண்டாமுத்தூரில் மருத்துவராகச்சேவையாற்றி வருபவர் டாக்டர் முருகையன்.  சாயி பக்தரான இவர் தன்னுடைய சித்தர் பாபா இயற்கை மருத்துவமனை வளாகத்தில் பாபாவுக்குப்பெரிய அளவில் திருக்கோயில் எழுப்பியிருக்கிறார்.
ஜெய்ப்பூரிலிருந்து அழகிய பாபா விக்கிரகம் தருவிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் இந்த மே மாதம் 20&ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள்ளாக நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு இறையருளைப் பெற பக்தர்களுக்கு டாக்டர் முருகையன் அழைப்பு விடுத்துள்ளார்.

பாண்டிச்சேரி பாபா மாஸ்டர் அருணாசலம் உட்பட ஏராளமான சாயி அடியார்கள் கலந்துகொள்கிறார்கள்.
நீங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாபாவின் அருளைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு டாக்டர் முருகையன் அவர்களை 96889 62222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...