Showing posts with label துவாரகமாயீ. சீரடி சாயிபாபா. Show all posts
Showing posts with label துவாரகமாயீ. சீரடி சாயிபாபா. Show all posts

Wednesday, June 3, 2015

என்னை உணர்ந்து கொள்!

என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன் பாலும், நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம், என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம், உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக, நீங்கள் தொலை தூரமோ, அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வு, நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சி செய்தால், சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.   ஸ்ரீ சாயி பாபா
பாபாவுடன் ஒன்றி அவரைப் போல் ஆனவர்கள் சிவநேசன் சுவாமிகள், நரசிம்ம சுவாமிகள், விபூதி பாபா, கரூர்  நரசிம்ம சுவாமிகள், ஆந்திர மாநிலம் பரத்வாஜ சுவாமிகள் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர்.  இவர்கள் சத்குருக்கள் என அழைக்கப்படும் தகுதியைப் பெற்றிருக் கிறார்கள். இவர்களிடம் வேண்டினாலே மிகப் பெரிய அற்புதங்கள் நடக்கும்.
பாபாவை அனைத்திலும் பார்த்த முதல் மனிதன் நெவாஸ்கர். தனது வீட்டில் நல்லப்பாம்பு ஒன்று வந்து சீறியபோது, அனைவரும் பயந்தார்கள். ஆனால் வந்திருப்பது பாபா என்று கூறி, பாம்புக்குப் பால் வார்த்தார். பாலை அருந்திய பாம்பு மறைந்தது.

Thursday, January 9, 2014

பீமாஜி பாடீல் - 2

நேற்றைய தொடர்ச்சி
      நானா எழுதினார், ''உங்களுடைய கடிதத்திற்குப் பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தைப் பரிந்துரை செய்கிறேன். ஸாயீ பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள்.  அவரே நம் அன்னையும் தந்தையும்,  அவரே அனைவர்க்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். கொடிய குஷ்டரோகம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷயரோகம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் ஸந்தேஹம் வேண்டா; போய் ஸாயீயின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாகச் சென்று ஸாயீ தரிசனம் செய்யவும். மரண பயத்தைவிடப் பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, ஸாயீயின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தைப் போக்கமுடியும்.
       பொறுக்கமுடியாத அவதியாலும் அந்திம காலம் நெருங்கி விட்டதோ என்ற பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், ''நான் எப்பொழுது ஸாயீநாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்குக் காரியசித்தி ஆகும்?
       பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. ''உடனே வேண்டியதையெல்லாம் மூட்டைகட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள்; சீக்கிரமாக சிர்டீக்குப் போவோம்.
      இவ்வாறு திடநிச்சயமாகப் பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஸாயீ தரிசனத்திற்காக சிர்டீக்குப் பயணமானார்.          தம்முடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு, எப்படி சிர்டீக்குப் போய்ச் சேர்வது என்னும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனத்துடன் பீமாஜீ சிர்டீக்குக் கிளம்பினார்.
       பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில் இருந்த சவுக்கத்திற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்துசேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜீயைக் கைகளால் தூக்கிக்கொண்டு வந்தனர்.   நானா ஸாஹேப்பும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்துவைக்கும் மாதவராவும் ஏற்கெனவே அங்கு வந்திருந்தார்.
      பாடீலைப் பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், ''சாமா, இன்னும் எத்தனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?
      பீமாஜீ ஸாயீபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், ''ஸாயீநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள். தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்.
     பாடீலி­னுடைய துன்பத்தைப் பார்த்த ஸாயீநாத் பரிதாபப்பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டதை உணர்ந்தார்.
      பீமாஜீயினுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்த கருணாஸாகரமான ஸமர்த்த ஸாயீ, மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை. சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கட­ல் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். இவ்விடத்திலி­ருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலி­யையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான். 'ஆகவே, நீர் அமைதிகொள்ளும்; பீமாபாயீயின் வீட்டில் தங்கும்; போய்வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்.
        ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது.  ஸாயீயின் திருமுகத்தி­ருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாக்த்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்ததாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.
       ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண் டிருந்தபோது அடங்கிவிட்டது.  பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியினுடைய வேரை அறுத்துவிட்டது.
       அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வஸந்தகாலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும்.

Wednesday, January 8, 2014

பீமாஜீ பாடீல் - 1


புணே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண்காங்வ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜீ பாடீ­லின் காதையைக் கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

                
பீமாஜீ பாடீல் ஒரு தனவந்தர். விருந்தோம்ப­ல்முக்கியமாக அன்னமிடுவதில் உற்சாகம் கொண்டிருந்தவர். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் மலர்ந்த முகமாகவே இருந்தார்.    ஆனால்விதியின் வழிமுறைகள்  விளக்கமுடியாதவை லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறிக் கொடுக்கும்அந்தக் கணக்கு நமக்குப் புரியாது.  கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மைத் துன்புறுத்துகின்றன.


       1909 ஆம் ஆண்டு பீமாஜீயைப் பீடை பிடித்ததுநுரையீரல்களை க்ஷயரோகம் தாக்கிஜுரம் வர ஆரம்பித்தது.  பிறகுபொறுக்கமுடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது ஜுரம் நாளுக்குநாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது பீமாஜீ இடிந்து போனார்.  வாயில் சதா நுரை கட்டியது கோழையிலும் எச்சி­லிலும் உறைந்த ரத்தம் வெளியாகியதுவயிறு எந்நேரமும்  குமட்டியது ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

      பீமாஜீ படுத்த படுக்கையாகிவிட்டார். எத்தனையோ நிவாரணங்களை முயன்று பார்த்தும் பயனில்லாதுபோயிற்று. உடல் மெ­லிந்துகாய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜீ.   அவருக்குச் சோறோநீரோஎதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும்கூட ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதியிழக்கச் செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்கமுடியாததாக இருந்தது.

     தெய்வங்களைப் பிரீதிசெய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. டாக்டர்களும் வைத்தியர்களும் கைவிட்டுவிட்டனர். பீமாஜீயும்  'பிழைக்கமாட்டேன் என்று நினைத்து விசாரமடைந்தார்.  பாடீல் மனமுடைந்து போனார்உயிர் நாள்கணக்கில்தான் தங்கும் போ­லிருந்தது. நாளுக்குநாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன.  குலதேவதைக்கும் ஆராதனைகள் செய்துபார்த்தார்பயனில்லை.

      குலதேவதை நல்லாரோக்கியத்தை மீட்டுத் தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டுக் கேட்டுஅலுத்துப்போனார்.

      சிலர் கூறினர், ''இதென்ன அங்கரோகம்! இவ்வளவு இன்னலைத் தரும் விதிதான் என்னே!  மானிட யத்தனம் அனைத்தும் வீண்போல இருக்கிறதே?

      டாக்டர்கள் முயன்று பார்த்தனர்யுனானி மருத்துவர்கள்  அழைக்கப்பட்டனர். பீமாஜீக்கு வைத்தியம் செய்வதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லைமுயற்சிகளனைத்தும் வீணாயின.

       பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராகத் தமக்குள்ளேயே  பேசிக்கொண்டார். ''ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டனஇம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்?

     இறைவனின் சிறப்பியல்பு எவ்வளவு விநோதமானது.  சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.

     அவர் வேண்டும்போதுவரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளும்படி செய்துதுயரத்தில், ''ஓ நாராயணா!   என்னைக் காப்பாற்றும் என்று கதறும்படி செய்கிறார்.

       துயரத்தில் பீமாஜீ பாடீல் கதறியதைக் கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார்.  பீமாஜீக்கு திடீரென்று நானாவுக்குக் (நானாஸாஹேப்  சாந்தோர்க்கருக்குக்) கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

       ''மற்றவர்களால் சாதிக்க முடியாததைக் கட்டாயம் நானாவால் சாதிக்கமுடியும். பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.

      இதுவேபாடீலுக்கு ஒரு சுபசகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியது. அவர் நானாவுக்கு ஒரு விவரமான கடிதம் எழுதினார்.

     நானாஸாஹேபைப்பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு ஸாயீநாதரின் உந்துதலேயன்றி வேறெதுவுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உற்பத்தி ஆயிற்று. ஞானிகளின் செயல்முறைகள் அற்புதமானவை.

      காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவேஎவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா.

      நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்அவனே அழிப்பவன்அவன் ஒருவனே செயலாளி.
பாடீல் சாந்தோர்க்கருக்கு எழுதினார், ''எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டதுவாழ்க்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது. இந்த வியாதியைக் குணப்படுத்துவது ஸாத்தியமில்லை என்று டாக்டர்கள்  கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்குங்கூட மேற்கொண்டு  யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. ஆகவேநான் ஒரே ஓர் உதவியை விநயத்துடன் கடைசியாகக் கேட்கிறேன். என்னுடைய மனத்தில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாகச் சந்திக்க வேண்டுமென்பதுதான்.

       கடிதத்தைப் படித்த சாந்தோர்க்கரின் மனம் சோகத்திலாழ்ந்தது. பீமாஜீ  பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால் நானா மனமுருகிப்போனார்.


இதன் தொடர்ச்சி நாளை.....

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...