Showing posts with label Sri sai. Show all posts
Showing posts with label Sri sai. Show all posts

Wednesday, July 1, 2015

நில்! கவனி! செல்!



 “சீரடியில் காலை வைத்த சிந்தனையாளர்கள் கவலைப்படுவதில்லை” என்று பாபா அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  மற்ற கோயில்களுக்கும் சீரடியில் அமைந்துள்ள சமாதி மந்திர் என்ற கோயிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் வாழ்ந்து உடலைத் துறந்தவர்களின் சமாதிகளே அமைந்துள்ளன. அதாவது புதைக்கும் இடம் என்று இதனைக் கொள்ளலாம்.
கவலைகள், கஷ்ட நஷ்டங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என எதை அனுபவித்து வந்தாலும் அவற்றை இத்தலத்திலேயே புதைத்துவிட வேண்டும்.. என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
துவாரகாமாயியில் கால் வைத்ததும் உங்கள்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வந்துவிடும் என பாபா உறுதியாகக் கூறியிருக்கிறார். நீங்கள் சீரடியில் அனைத்தையும் புதைத்து விட்டு, ஆனந்த மயமான துவாரகாமாயியில் கால் வைத்து பாபாவை சேவித்துச்செல்லுங்கள், அதன் பின் நிச்சயம் நன்மை மட்டுமே நடப்பதை அனுபவமாக அறிவீர்கள்.

சீரடியில் புனிதத் தலங்களை தரிசனம் செய்ய என்னுடன் வருவோர் தங்களுடைய காலணிகளை அறையிலேயே விட்டுவிட்டுவாருங்கள் என, 2014 நவம்பர் மாதம் தன்னுடன் வந்த பக்தர்களிடம் கூறியிருந்தார் சாயி வரதராஜன். பக்தர்கள் அனைவரும் அவ்வாறே வந்தார்கள்.
ஆனால் சாயி வரதராஜன் மட்டும் காலணிகளுடன் வந்தார். இதை கவனித்த ஒரு பக்தர், ”ஐயா, எங்களை செருப்புகளை அணியவேண்டாம் என்று கூறிய தாங்கள் அதை அணிந்து வந்திருக்கிறீர்களே, இதுதான் வழிகாட்டும் முறையா? என்று கேட்டார்.
லட்சுமி கோயில் பற்றி சாயி பக்தர்களுக்குக் கூறியதுடன், தான் செருப்பு அணிந்து வந்ததன் காரணத்தையும் அங்கே சாயி வரதராஜன் கூறினார்.
“இந்த மண் புனிதமானது. நீங்கள் அனைவரும் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே செருப்பில்லாமல் இந்த மண்ணில் நடக்குமாறு கூறினேன். ஆனால் நான் செருப்பு அணிந்து நடப்பது, இந்த செருப்புகள் புண்ணியத்தை சம்பாதிக்கட்டும் என்பதற்காக.  ஏனெனில், சென்னை குரோம்பேட்டையில் பாபாவின் உயர்ந்த பக்தையான ரமா அம்மையார் வசிக்கிறார். அவர் சீரடிக்கு வந்ததில்லை. நமதுபெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்தால்,  அவர் எனது பாதுகைகளைத் தான் தேடிச் சென்று வணங்குவார். அவரது வணக்கத்திற்கு உரிய புண்ணியத்தை இந்த பாதுகைகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் வரும் அனைத்துப் பலன்களும் அவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவுமே நான் இங்கே செருப்பு அணிந்து நடக்கிறேன்!” என்றார்.  அனைவருக்கும் ஒரே நெகிழ்ச்சி-

திருப்பத்தூரிலிருந்து அனந்தராமன் என்ற சாயி பக்தர் போனில் பேசும்போது, ”ஐயா, உங்களிடம் ஒரு விக்ஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் எங்களவர்களைப் போலவே அதாவது பிராமணர்களைப் போலவே சாஸ்திரங்களை எளிமைப்படுத்தி மக்களுக்குத் தருகிறீர்கள். உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்!” என்றார்.
இதுபற்றி எங்களோடு பேசும்போது, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்கள். பிறவியில் எந்த தோக்ஷமும் இல்லை. எந்த இதயத்தில் இறைவன் வசிக்கிறானோ அந்த இதயத்திற்கு எதுவும் மறைபொருளாக இருப்பதில்லை. இறைவனுக்கு கதம்பப் பூக்களால் மாலை சூட்டினால் பார்க்க அழகாக இருக்கும். அதைப் போலவே இறைவன் மேல் பக்தி செய்து சத்விக்ஷயங்களை பல இனத்தாரும் போதிப்பதே சிறப்பு. hதியினால் ஒருவன் பிராமணன் ஆவதில்லை. பிரம்மத்தை அறிவதால் பிராமணன் ஆகிறான்.
நான் பிரம்மத்தை அறிந்திருக்கிறேன். ஆகவே அதைப் பற்றி எளிமையாகக் கூறுகிறேன். அனந்தராமன் எங்களவர் போல என்று கூறினார். உண்மையில் அவர்கள் என்னுடையவர்கள். இதற்காக நான்தான் அவர்களுக்கு நன்றி கூறி, நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். நான் பிராமணர்களால்தான் அறியப்படுவேன் என்று பாபாவே கூறியிருக்கிறார் என்றார்  ஸ்ரீசாயி.

”உங்களைத் தேடி வருவோர் சிலரை மட்டும் உங்கள் பாதங்களைத் தொட அனுமதிக்கிறீர். சிலரை அவ்வாறு அனுமதிப்பது இல்லையே அது ஏன்?” எனக் கேட்டபோது,  ஸ்ரீ சாயி இப்படிச் சொன்னார்.
”எனது மகன் சிறுவனாக இருந்தபோது அவனை நான் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவன் வளர்ந்த பிறகு தானாக நடக்கிறான். அப்படித்தான் பக்தியில் வளராதவர்கள் வரும்போது, அவர்கள் சுமையை நான் சுமப்பதற்காக என்னுடைய பாத நமஸ்காரத்தை அனுமதிக்கிறேன், அவர்கள் வளர்ந்த பிறகு அதற்கு அவசியமில்லாமல் போகிறது. அதற்காகவே அவர்களைத் தவிர்க்கிறேன் என்றார்.

உங்களை நீங்கள் மிகைப்படுத்திக்கொள்வதாக பிறர் சொல்கிறார்களே, இது பற்றி கவலைப் படுவது இல்லையா? எனக் கேட்டோம்.
”சத்சரித்திரத்தை ஒழுங்காகப் படிப்பவன் பாபாவுடன் ஒன்றியவனாக இருப்பான். அப்படி ஒன்றியவன் தான் வேறு அவர் வேறு என்று ஒரு போதும் எண்ணமாட்டான்.
ஒருவன் குருவோடு ஒன்றி நானும் அவரும் வேறு அல்லர் என்பதை உணரவேண்டும். யார் ஒருவன் தன்னை இப்படி உணர்கிறானோ அவன் தன்னைக் கடவுளிடமிருந்து வேறுபடுத்தி அறிவதும் இல்லை. தன்னில் அவர் இருப்பதைப் போல, தானும் அவரில் இருப்பதை அறிகிறான். தன்னில் இருப்பது தானே என்பதையும் அறிகிறான். இதைத்தான் உபநிக்ஷத்துக்கள் போதிக்கின்றன.
இயேசுகூட தானும் கடவுளும் வேறு வேறு அல்லர். ”நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று கூறினார். யோவான் 10 - 30.
அந்த அத்தியாயம் முழுவதும் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்திக் கூறுகிறார். அவரும் நம்மைப் போல சாதாரண குடும்பத்தில் பிறந்து ஞானம் பெற்றவர்தான். இந்த வெளிப்படுத்தலை அவர் வெளியே கூறியபோது அவரை கொலை செய்யமுயன்றார்கள். சிலுவையில் அறைந்தார்கள்.
கிறித்தவர்கள் இப்போதுகூட இயேசு மட்டுமே கடவுளாக இருப்பதாக நம்புகிறார்கள். அதே யோவான் எழுதிய புத்தகம் எப்படி ஆரம்பிக்கிறது என்றால், ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். சகலமும் அவர்  மூலமாய் உண்டாயிற்று....அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாக இருந்தது. உலகத்திலே வந்து எந்த மனிதரையும் பிரகாசிக்கச் செய்கிற அந்த ஒளியே மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை” என்று ஆரம்பிக்கிறது.
அறியாமை உள்ளவர்கள் இது இயேசுவைப்பற்றியது என நம்புகிறார்கள். உண்மையில்இது நம் அனைவர் பற்றிய விக்ஷயமாகும். நாமே அந்த ஒளி. நாமே ஆதியில் இருந்த ஓங்காரமென்கிற வார்த்தை. நாமே தேவனிடத்திலிருந்தோம், தேவனாக இருந்தோம். இதை உணர்ந்துகொள்வதுதான் ஞானம். நான் உணர்ந்திருக்கிறேன்.  நான் தவறாகக் கூறுகிறேன் என யாரேனும் கூறினால், அவர்கள் நமது உபநிக்ஷத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.
தன்னை மேலானவன் என நினைக்கிறவன் அதற்கான தகுதியைப் பெறவேண்டும். தகுதியைப்பெறவில்லை என்பதால், நான் இறைவன் என்கிற ஆசனத்தில் அமராமல் அடக்கமாக இருக்கிறேன்.
முக்தா ராம் என்ற சாயி பக்தர் ஒருவர் இருந்தார். அவர் தன்னை சாயியின் வாரிசு எனக் கூறிக்கொண்டு அவரது ஆசனத்தில் அமர்ந்தார். வாந்தி பேதி ஏற்பட்டு இறந்துபோனார். அவரது சமாதி, சீரடியில் சன்ஸ்தான் புத்தகக்கடை உள்ள இடத்திற்கு எதிரில் உள்ளது. அதே சமயம், தன்னை இறைவனாக உணர்ந்த பாபா இறைவனாக அதே இடத்தில் மக்களின் வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார்..
பாபா மாதிரி உடை போட்டால் பாபாவாகி விடமுடியாது. உள்ளத்தில் அவரைப் போல மாறவேண்டும். எனது இந்த வெளிப்படுத்துதலைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது, மற்றவர்கள் கவலைப்படுவது பொறாமையாலோ, அறியாமையாலோ இருக்கலாம். எனது இந்த வெளிச்சம், சாக்ரடீஸ் கூறிய நான் யார்? என்ற தேடலின் முடிவாகும்..  என்றார்  ஸ்ரீ சாயி வரதராஜன்

சாயி வீரமணி

Friday, February 14, 2014

நீ என்னோடு ஒன்றி விடு !

நீ என்னோடு லயமானால் நான் உன் எல்லாப் பொறுப்புகளையும் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என்று பாபா சொல்கிறாரே, நான் எவ்வளவோ அவரை கும்பிடுகிறேன்.. பக்தியோடு இருக்கிறேன். ஆனால், அவர்பால் லயமாகி, எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைப்பது எப்படி எனக் கேட்கிறார்களே,  அது எப்படி என்று விளக்கமுடியுமா எனக் கேட்கிறார்கள்.
     எல்லா விஷயத்திலும் நம்மை கடவுளாக நினைத்துப்பார்ப்பதுதான் அவர் பால் லயமாவது என்பதற்கான பொருள். இது ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா? எனக் கேட்கலாம். நிச்சயமாக அதிகமில்லை. நமது சாஸ்திரங்கள், வேதங்கள் என அனைத்தும் கூறுகிற உண்மை இதுதான். உபநிஷத்துக்களின் சாராம்சமே தத்வமஸி என்பதுதானே அதற்கு நீயே அது என்றல்லவா பொருள்?  நீ அதுவாக மாறவேண்டும் என்பது லயமாவது என்று பொருள்.
     நான் எப்படி அவரில் லயமாகிறேன் என்பதை சொல்கிறேன், ஏற்புடையதாக இருந்தால் பின்பற்றிப் பாருங்கள், இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். என் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர் பசியோடு இருப்பார் என நினைத்து சாப்பாடு கொடு, காபி கொடு என என் மனைவியிடம் கூறுவேன். சில சமயம் நானே அதைச்செய்வேன். இது எனது சொந்த இயல்பு என பல காலம் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
     இப்போது இது யாருடைய இயல்பு என நினைத்துப் பார்க்கும் போது, இது பாபாவின் இயல்பு. அவர்தான் தன்னிடம் யார் வந்தாலும், ஏழை, பணக்காரன், நோயாளி, அந்நியன் என யாராக இருந்தாலும் அவரை சமநோக்கோடு பார்த்து உணவளித்து திருப்தி செய்து அனுப்புவார்.
     சில சமயம், என்னை மறந்து சுற்றிக்கொண்டும், திரிந்துகொண்டும், கண்டதை சாப்பிட்டுவிட்டு, கண்டவர் சகவாசத்திலும் இருப்பேன். ஆடைகளை சரியாக உடுத்தாமல் கூடத் திரிவேன். அப்போதெல்லாம் என் மனைவி, “மானம் போகிறது எனக் கத்துவாள்..
     எனக்கெங்கே மானம் இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போவேன். போகும்போது, இப்படி செய்கிறேனே இது யாருடைய இயல்பு  என நினைத்துப் பார்ப்பேன். இது பாபாவின் அவதூத இயல்பு. அதாவது தத்தாத்ரேயரின் இயல்பு.
     சில நேரங்களில் என்னிடம் கேட்பவருக்கு இல்லை எனாது கொடுத்து அவர்கள் துயரத்தைத் துடைக்க முன்வருவேன். துன்ப நேரத்தில் ஆறுதல் கூறி தேற்றுவேன். எறும்புகளுக்கும், பறவைகளுக்கும், நாய்களுக்கும், பசுக்களுக்கும் உணவிடுவேன்.
     இது யாருடைய இயல்பு என மனம் கேட்கும். இது பாபாவின் காக்கும் குணம். அதாவது பாபாவின் விசேசத் தன்மை. சில நேரம் முட்டைகளை வாங்கிவந்து சாப்பிடுவதற்கு பதில், அடைகாக்க வைத்து குஞ்சுகளை உருவாக்குவேன்.. அல்லது ஏதேனும் வேலை செய்வேன். பாபா இப்படி செய்கிறேனே.. இது யாருடைய குணம் என மனம் கேட்கும்? இது பாபாவின் படைக்கும் குணம். அதாவது பிரம்ம குணம்.
     இரவில் படுத்துக் கொண்டிருப்பேன். கொசு கடித்தால், உடம்பில் ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கிறது, ஒரு சொட்டுக்கும் குறைவாகத்தானே கொசு குடிக்கப் போகிறது, குடித்துவிட்டுப் போகட்டுமே என நினைக்காமல், உடனே அதை அடித்து விடுவேன்.. அதோடு நிற்காமல் மற்ற கொசுக்களையும் தேடிப்பிடித்துக் கொல்வேன்.
     இப்போது, மனம், “இது யார் இயல்பு எனக் கேட்கும்? இது பாபாவின் ருத்ர குணம் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். யாராவது என்னைப் பார்க்க வந்து, கஷ்ட நஷ்டங்களைச் சொல்லும்போதும், பிரார்த்தனை செய்து அவர்களை திடப்படுத்தும் போதும், எனக்குள் ஒரு குரல் கேட்கும்? இது யார் குணம்?
     இது பாபாவின் குரு தத்துவ  குணம். அதாவது பாபாவின் தட்சிணா்ர்த்தி இயல்பு. பெரியவர்களோ, சிறியவர்களோ எனக்குத் தெரியாத ஒன்றை சொல்லித் தரும் போது, இது யாருடைய இயல்பு எனக் கேட்டுக் கொள்வேன். இது பாபாவின் சிஷ்ய பாவம் அதாவது சீடன், கற்றுக்கொள்பவன் என்கிற மனோபாவம்.  படித்துக்கொண்டிருப்பேன்.. எழுதிக் கொண்டு இருப்பேன். பாபா இது யார் குணம்? பாபாவின் வித்யை குணம். அதாவது சரஸ்வதி என்கிற குணம். இப்படி ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றோடு இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, நான் எதையும் தனியாகச் செய்யவில்லை. அவரே எனக்குள் இருந்து தன் ஒவ்வொரு தன்மையை வெளிப்படுத்துகிறார் என்பது புரியும்.
     அப்போதும் பாபாவிடம் கேட்பேன். பாபா,  எல்லாம் சரி, என் உண்மையான குணம்தான் என்ன? எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் தெளிவு கொள்ளாமல், எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், எல்லாவற்றையும் நானே செய்கிறேன், எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம், நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றெல்லாம் தப்புத் தப்பாக நினைக்கிறாயே அதுதான் உனது உண்மையான குணம்.
     எனது இத்தனை அம்சங்கள் உன்னுள் செயல்படும் நிலையில் இருக்கும் போது, மீதியையும் நான் பார்த்துக்கொள்வேன் என்று நினைக்காமல், நம்பிக்கை கொள்ளாமல் துவண்டு போகிறாயே அதுதான் உன் உண்மையான இயல்பு என்று உள்ளிருந்து பாபா குரல் தருவார்.
     எல்லாம் சரி பாபா, நான் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறேன், பிறர் என்னை துன்புறுத்துகிறார்கள், பிறரிடம் தோற்றுப்போகிறேன், கடனில் சிக்கிக்கொள்கிறேன்.. இப்படியெல்லாம் சிக்கிச் சீரழியும்போது மட்டும் உன்னுடைய இயல்பு எங்கே போகிறது? அப்போது உனது எந்த இயல்பு வேலை செய்கிறது? எனக்கேட்பேன்.
                நீ தோற்கும் நிலை வரும்போது, எதிரே அசுர இயல்பு வேலை செய்கிறது என்று பொருள். தீமை எப்போதும் சுறுசுறுப்பாகத்தான் வேலை செய்யும். அப்போது, நான் அதை எதிர்க்க எனது தேவ பலத்தை உருவாக்கிக் கொள்கிறேன். அதை சமாளிக்கும் வழிகளைத் தேடி கண்டுபிடித்து, எதிர்த்துப் போராடும்போது எனது இந்திர பலத்தைப்பிரயோகிக்கிறேன் என்பார் பாபா. பார்த்தீர்களா?  சாயி பந்துக்களே! என்ன செய்தாலும், எனக்கு என்ன நடந்தாலும் அதைச்செய்பவன் நான் இல்லை. எல்லாம் சாயியே செய்கிறார் என்ற உண்மையை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். இதற்குப் பெயர்தான் அவரில்
லயமாதல். இந்த நிலை வரும்போது, என்ன நடந்தால் என்ன? நடக்காமல் போனால்தான் என்ன என என் பாட்டுக்குப் போவேன். இதை மற்றவர்கள் கடவுள் விட்ட வழி என பாமரத்தனமான பெயரில் சொல்லிவைத்தார்கள். இப்போது உங்களுக்கு லயமாகிற விஷயம் புரியும் என நினைக்கிறேன்.



அன்புடன் சாயி வரதராஜன்

Friday, January 31, 2014

குணங்களற்ற பிரம்மம்


குணங்களற்ற  பிரம்மம் எப்படி குணங்களோடு கூடிய விஷயமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?

கே.சூரிய நாராயணன், சென்னை – 45.

காரண காரியத்திற்க்காக பரப்பிரம்மம் சத் – சித் - ஆனந்தம் என்கிற சச்சித்தானந்தமாக மாறும்போது, மாயை செயலாற்ற ஆரம்பித்து சத்துவ குணம் , ராஜஸ குணம், தமோ குணம்  ஆகிய குணங்களுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  தமோ குணத்தால் ஜடப்பொருட்களும், ரஜோ குணத்தால் ஜீவராசிகளும், சத்துவ குணத்தால் புத்தியும் தோன்றியது என்பார்கள் ஞானிகள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

Thursday, January 30, 2014

பிரார்த்தனையின் சக்தி


பிரார்த்தனையின் சக்தி பற்றிக் கூறுங்கள்    - கே காந்திமதி, கோவை

இறைவனிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்வதுதான் உண்மையான பிரார்த்தனை.  நம்பிக்கை என்பது ஒரு உண்மையான சக்தியை, அதனுடைய கருணையை அறிந்து கொள்வதாகும்.  உன்னத சக்தி என்பது ஒரு பக்தனைப் பொறுத்தவரை மிகவும் அந்தரங்கமான சமாச்சாரம்.

அவன் எத்தனைக்கு எத்தனை நம்பிக்கை வைக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதில் ஆர்வமுடையவனாகிறான்.

அவனுடைய சரணாகதி முழுமையடைகிறது.  பக்தனின் அகந்தை முற்றாக நீங்குகிறது.  எல்லாம் அவன் சித்தம் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறது.


இப்படித் தன்னை ஒப்புவித்துக்கொள்கிற நிலையில் விண்ணப்பம் கிடையாது.  பேரம் கிடையாது.  அது சுயநலத்தை ஒரேயடியாக அழித்துப் போடுகிற காரியமாகும்.

பிரார்த்தனை என்பது விருப்பங்கள் பற்றிய சிந்தனை அல்ல.  அது நமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை மேலே கொண்டு வருவதும், அதன் மூலம் நமக்கு வலிமையளிப்பதும் ஆகும்.  அந்த வலிமை நமது சோம்பலைப் போக்கும்.  தடைகளை அகற்றும். ஆன்மீகப் பாதையில் தென்படும் அத்தனை எதிர்ப்புச் சக்திகளையும் ஓசைப்படாமல் வென்று விடும்.  இதுவே பிரார்த்தனையின் சக்தி

தேவநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் இருந்து

சாயி புத்ரன் பதில்கள்



சாயிதரிசனம் இதழிலிருந்து

ஆன்மீக ஞானம்


பாபாவிடம் நான் ஆன்மீக ஞானம் கேட்கிறேன். அவர் அதைத் தாமதப்படுத்துகிறார்.  ஞானத்தைப் பெற வழி சொல்லுங்கள்.

பா.கேசவன்  புலியூர்

ஆன்மீக ஞானம் என்பது வெளியில் இருந்து அறிந்து கொள்வதால் வருவதல்ல.  தன்னைப் பற்றிய சிந்தனையே ஆன்ம ஞானத்தைத் தரும்.  அதை அனுபவமாக்கிக்கொள்ளவேண்டும்.

ஞானத்தை விட தியானமே சிறந்த்து என்று பகவத் கீதை கூறுகிறது. ஞானத்தைப் பெறுவதற்க்கு முன்பு பாபாவை தியானித்துப் பழகுங்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, மனம் ஒன்ற ஒன்ற உங்களுக்கு ஞானம் வந்துவிடும்.  ஆன்மாவை வேண்டுகிறவன் ஆத்ம ஞானம் அடைகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. முயற்சி செய்யுங்கள்


சாயி புத்ரன் பதில்கள்

Wednesday, January 29, 2014

வில்வ மரம்

வீட்டில் வில்வ மரம் நல்லதா?

எங்கள் வீட்டில் பூஜைக்காக விலவ மரம் வைத்து பெரிய மரமாக வளர்ந்துள்ளது.  தேக்கு மரம் ஒன்றும் உள்ளது. வில்வ மரமும் தேக்கு மரமும் வீட்டிலிருப்பது நல்லது இல்லை என்று கூறி வீட்டினை விற்க இயலாமல் தடை ஏற்படுகிறது. இது உண்மையா? எங்கள் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்....

ஏ.பத்மினி வேலூர்

எங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படித்தான் வில்வ மரம் வளர்கிறது என வீட்டை விற்றுவிட்டார்கள்.  அந்த வீட்டின் முகப்பில் ஒரு சிறிய கடை வைத்திருந்தவர் அந்த வீட்டினை வாங்கினார்.  சில காலத்திற்க்குள் கடையும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. வில்வ மரத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தில் மிகப் பெரிய பிளாட் கட்டியுள்ளார்.. அதாவது அந்த அளவிற்க்கு அவருக்கு வசதியும் வந்திருக்கிறது.

ஆகவே, வீட்டை விற்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உங்கள் மகனின் விருப்பப்படி பிளாட் கட்டுங்கள்.  கடனும் அடையும்.  பொருளாதாரமும் மேலோங்கி வளரும்.  ஒரு வேளை கண்டிப்பாக அந்த மரத்தை எடுத்தே ஆகவேண்டும் என்றால் இன்னொரு வில்வக்கன்றை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தபிறகு இதை எடுக்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.  அருகில் உள்ள சிவன் கோயிலில் கேட்டு செயல்படுங்கள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...