Showing posts with label சாயி சத்சரிதம். Show all posts
Showing posts with label சாயி சத்சரிதம். Show all posts

Tuesday, May 29, 2018

பாபாவின் வழிகள்..



ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. பாபா பக்தர்கட்கு உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.  
நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் பிரேமையே எனக்கு உணவு. அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் என சத்சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Friday, May 11, 2018

சாயியின் அருள்



ஸாயீயினுடைய அருள், பல ஜன்மங்களில் நாம் முன் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி, தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவது போல் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு, சுவையே அறியாததால், அவருக்கு அந்த உணர்வே கிடையாது.
புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிடமிருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்?
கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.
ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்?
தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது.
அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை.
பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லை.
ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; செயல் புரிபவரைப்பற்றற்றவராகவும், தூயஞானத்தின் உருவமாகவும், தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார்.
உலக விவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் இருந்தார். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை அது.  தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை.
நானாவல்லீ ஆசனத்திலிருந்து எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார். இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை; பரவுலகத்தில் அடைய வேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள் புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை இவ்வாறே.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Thursday, May 3, 2018

இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.



(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கப்படுகிறேன். சிலருடைய தேவை செல்வம், சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்துப்போகிறேன்;  ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன். எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா? என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்: பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா: ஆஹா! உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது. நானும் நீயும் வேறல்ல: கர்மங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தர்க்கம் செய்யவேண்டாம்.
ஜீவர்களுக்கு நன்மை உண்டாக்கவே கர்மங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. யாருக்கு எது நலமோ அது முன்பாகவே தீர்மாணிக்கப்பட்டுள்ளது. நல்ல கர்மங்களை அனுசரிப்பதன் மூலமே கர்மா நிச்சயமாகக் கரைந்து போகிறது. வேதங்களாகட்டும், சாத்திரங்களாகட்டும் , அதிகமாக எதைப்பற்றி விவரமாகக் கூறியுள்ளதோ அவை நன்மையளிப்பவையே என்பதை மறக்க வேண்டாம். அப்படிப்பட்ட கர்மங்களை அனுசரிப்பதில் வெளிமுகமாக நீ கர்த்தா, கர்மா, கிரியா போல தென்பட்டாலும் அந்த திரிகரணங்கள் "நானே" என்பதை மறக்காதே. கர்த்தா, போக்தா, சம்ஹர்த்தா என்ற மூன்று காரியங்களும் நானாகவே இருந்தேன் என்ற விஷயம் உன் மனதில் இருக்கும்போது பலனுக்காக சகஜமாகவே நீ ஆசைப்படமாட்டாய். அந்த பலனும் கூட நானே. ஆகையால் எப்போதும் என்னையே நினைத்து தான் செய்யும் காரியங்களை எனக்கு அர்ப்பணம் செய்து, யார் காரியங்களை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு என் உதவி, கிருபை, ரட்சனை எப்போதும் இருக்கும். இக் காரணத்தால் என்னை ஒவ்வொரு கணமும் ஸ்மரித்து வந்தால், அவர்களுடைய கர்மங்கள் என் பாதங்களில் சரணடைகின்றன. நான் சாயி சொரூபமே என்ற பாவம் வளர்த்துக்கொள். நானும், நீயும் வேறல்ல நீ என்னுடைய பிரதிபிம்பமே. நீ காண்பதெல்லாம் என் சொரூபமே என்ற நம்பிக்கை இருந்தால் நான் உன்னுடையவனே

Thursday, April 26, 2018

நாம் பாபாவை நம்ப வேண்டும்


நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.

Wednesday, April 25, 2018

விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு



விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

Friday, May 27, 2016

நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா)


''இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும்வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள் என்று பாபா கர்ஜித்தார்.
அன்பு பாபாவின் இன்றய அருள்வாக்கு!!! 
இறுதி வரை படியுங்கள் அன்புறவுகளே..நன்மை உண்டாகும்.
முஸ்லீம் என்று நினைத்தால் அவருக்குக் காது குத்தப்பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு ஸுன்னத் செய்யப்பட்டிருந்தது. 

அவதார புருஷரான ஸாயீ ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர். ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்துகொண் டிருக்கிறது.
 
தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை. பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார்.

இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது; சங்கும் மணிகளும் முழங்கின; அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச்சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு சொல்லமுடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு சம்மதம் இல்லாதவை).
 
மசூதியில் ஸதா பஜனை நடந்தது; அன்னதானமும் நடந்தது; ஹிந்துக்கள் அவருக்குப் பாதபூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?
முஸ்லீமாக இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினிஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்

இவ்விதமாக மக்கள் வியந்துபோனார்கள். இது எவ்வாறு நடக்கமுடியும் என்று நேரில் கண்டுகொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே நடந்துகொண்டார்கள்தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப்போனார்கள்.
ஸதாஸர்வ காலமும் ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவென்றோ முஸ்லீமென்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம்; பிற்படுத்தப்பட்டோரிலும் பிற்படுத்தப்பட்டவராகவும் இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம்; ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவுகூடப் பிரமாணம் (மதிப்பிடும் அளவை - சான்று) ஆகாது.
 
.
 
சாயி சத்சரிதத்திலிருந்து

Monday, August 17, 2015

என்னைப் பார்க்க வாரும்!

ராம் லால் மும்பையில் வசித்துவந்த பஞ்சாபி பிராமணர். பாபாவை பார்த்திராத அவரது கனவில் தோன்றி, என்னைப் பார்க்க வாரும் என அழைத்தார் சாயி பாபா.
அந்தக் கனவு அவர் மனதில் பதிந்தது. தன்னை அழைத்தவர் யார்? எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரது குணம் எப்படி? என்னைப்பார்க்க வாரும் என அழைத்தாரே, எப்படி அவரை தரிசிப்பது என நினைத்தார். அவருக்குப் போக விருப்பம்தான். போகும் இடம்தான் தெரியாது.
பிற்பகல் வேளையில் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையில் படம் ஒன்றைப் பார்த்துத் திடுக்கிட்டார். கனவில் பார்த்த அதே உருவம். கடைக்காரரிடம் விசாரித்த போது, அது சீரடியில் இருக்கும் சாயி பாபா என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார். சீரடிக்குப் புறப்பட்டுச்சென்றார். பாபா மகாசமாதி அடையும் வரை அங்கிருந்து, பாபாவுடன் வாழும் பாக்கியம் பெற்றார்.
சீரடிக்குப் பக்கத்தில் ரகாதா என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள குசால் சந்த், சந்த்ரபான் சேட் ஆகியோரை பார்ப்பதற்காக பாபா அந்த ஊருக்கு அவ்வப்போது வருவார். ரகாதா செல்லமுடியாத சூழலில் பாபாவுக்குக்கு சால் சந்தைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
தீட்சிதரிடம்,  “குதிரை வண்டியில் ரகாதாவுக்குச் சென்று குசால் பாவுவை அழைத்து வாரும். அவரை சந்திக்க மனம் ஏங்குகிறது. பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. பாபா உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆகவே, வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்”   எனக் கூறி அனுப்பினார்.
மதிய வேளைக்குப் பிறகு தீட்சிதர் இந்தத் தகவலை ரகாதா சென்று குசால் சந்த்திடம் கூறினார். உடனே குசால் சந்த்,  “இப்போதுதான் தூங்கி எழுந்தேன். எனது கனவிலும் பாபா இதைத்தான் சொன்னார். எனக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. எனது குதிரை வண்டி இல்லாமல் என்ன செய்வது என யோசனையாய் இருந்தேன். இந்த விக்ஷயம் பற்றி இப்போதுதான் என் மகனிடம் கூறி அனுப்பினேன். அவன் கிராம எல்லையைக்கூட தாண்டியிருக்கமாட்டான், நீங்கள் வந்துவிட்டீர்கள்!”  என்றார்.
”நீங்கள் வருவதாக இருந்தால் எனது குதிரை வண்டி தயாராக இருக்கிறதுளூளூ என தீட்சிதர் கூறியதும், மகிழ்ச்சியுடன் குசால்சந்த் சீரடிக்கு வந்தார். பாபாவும், குசால்சந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தப்பட்டார்கள். பாபாவின் லீலையை நினைத்து குசால் சந்த் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உங்களையும் பாபா கூப்பிடுகிறார், செல்லுங்கள்.

Thursday, August 13, 2015

பக்தி

”பகவானே, நண்பர்களும், சொந்தங்களும் போலியானவர்கள். நம்மிடம் இருக்கும் வரை மட்டுமே சொந்தம் பாராட்டுவார்கள். இவர்கள் கையில் சிக்காமல் என்னை காப்பாற்று”  என ஒரு பக்தன் புலம்பினான்.
பகவான் சொன்னார்: ”ஒரு மரம் துளிர்த்து, காய்த்துப் பழுத்து இருக்கும்வரை பட்சிகள் வசிக்கின்றன. பட்டுவிட்டால் பட்சிகள் பறந்து விடுகின்றன. அதே போல் பகவான் வரங்களை தரும் வரை தான்  பக்தர்கள் பூஜிப்பார்கள். பிறகு பகவானே இல்லை என்று சொல்வார்கள். இவர்களிடம் இருந்து என்னை யார் காப்பாற்றுவது”

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...