Monday, January 20, 2020

இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்

அன்புக் குழந்தையே! 
நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது. என் குழந்தையே உன்னை நான் எனது வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை நீ உச்சரித்துக்கொண்டே இருப்பதால், ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்.

யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து உனது நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவதும் நானே என்று அறிந்துகொள். சோதனைக் காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது. மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும்,  பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானப்பட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?, இனி நான் பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்துத் துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கான  நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................

சாயியின் குரல்🙏🏻

நான் உன் தந்தை










அன்புக் குழந்தையே!
புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளை பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகு தானே உள்ளே வந்து வாழ்க்கையை நடத்துகிறாய். அப்படி தான் குழந்தையே! உனது பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான் உன்னிடம் செயல்படும் போதும்,  உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசுபட்டிருக்கிறாய். உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம் பிரச்சினை என்று பேதலித்து வருகிறாய். அவற்றையெல்லாம் நான் மெதுவாக செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத்தெரிகிறது. சோதனைக்காலம் வரும்போது நீ பயப்படாதே! கலங்காதே! நான் உன் தந்தை! உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதை போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களை கடிந்துகொண்டு நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை என் பொறுப்பில் எடுத்துக் கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.................. 


சாயியின் குரல்

Sunday, January 19, 2020

சமாதி மந்திரின் சக்தி



மும்பையினை சேர்ந்த வியாபரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை.
மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். கண்ணைக்கட்டி காடில் விட்டது போல் அவதிப்பட்டார்.
சில வினைகள், சில பிரச்சனைகளை மனிதன் அனுபவித்துத்தான் தீர வேண்டும். பயந்து ஓடி விட முடியாது. எந்த பிரச்சனை வரும் போதும் எதிர்கொண்டால்தான் தீர்வுக்கு வழி தெரியும்.  ஓடினால் பிரச்சனை விரட்டும். எதிர்த்தால் நின்று பார்க்கும்.  நாம் மீண்டும் மீண்டும் எதிர்த்தால் பின்னோக்கி ஓடப்பார்க்கும்.
தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்த்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார்.
பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றிவந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆகவே சாயியை எப்போதும் நினைவில் கொண்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம்.  மற்றவர்களையும் பெறச் செய்வோம்.
- கு.இராமச்சந்திரன்

ஸ்ரீ சாயி தரிசனம் இதழில் வெளியான கட்டுரை

என் மீது நம்பிக்கை வை

ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்பட வைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!"

 என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். அன்றைக்கும் அழுவீர்கள்...

பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல. .. பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -

—-ஸ்ரீ சாயி-யின் குரல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...