என் செல்லக்குழந்தையே!
இன்றைய தினம் உனது இதயம் எதற்காக குழம்பிக் கொண்டிருக்கிறது என்பதை ஊடுருவிப் பார்க்கிறேன். உனக்காக சாப்பிட்டு, உனக்காக வாழ்ந்து உன்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் போராடிப் போராடி ஒரு நிலைக்கு வந்துவிட்ட நீ, இப்போதெல்லாம் உனக்காக சாப்பிடுவதில்லை. உனக்காக வாழ்வதில்லை. உன்னை வளப்படுத்திக் கொள்ளவும் நினைப்பதில்லை. மாறாக, உனது எண்ணங்கள் அனைத்தும் உன் பிள்ளைகளைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்கிறது.