புகழ் பெற்ற வக்கீலான கபர்தே கஷ்ட காலத்தில் பாபாவிடம் தஞ்சமடைந்தார். அறிவாளியான அவர் வாயைத்திறந்துகூட பேச மாட்டார். பாபா முன் மவுனம் சாதிப்பார். அவரிடம் பாபா சொன்னார்:
கடவுள் உனக்கு கொடுத்ததை வைத்து மனநிறைவுடன் இரு.
உனக்கு கிடைக்காதவற்றுக்காக ஏங்காதே.
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டுமே
கடவுளின் கொடை என நினைத்து, சாட்சியாக
அனுபவி. அதில் சிக்கிக் கொண்டவனாக அல்ல, தூரத்திலிருந்து அதை காண்பவன் போல
அனுபவிக்கவேண்டும்.
இதேபோல பாராட்டோ, இகழ்ச்சியோ,
நிந்தனை செய்யப்படுவதோ, அவமதிக்கப்படுவதோ எது வாக இருந்தாலும் அது கடவுளால் வருவதாக நினைத்துச் செயல்படு” என்றார்.
கஷ்டத்தை அனுபவமாக மாற்றிக் கொள்ள வேண்டும்;
மகிழ்ச்சியை அளவீடாக
வைத்துக்கொள்ளவேண்டும். நிந்தனை செய்யப்படும் போது யோசி, புகழப்படும் போது எச்சரிக்கையாக இரு. இதைச் செய்தால் வெற்றி பெறலாம்.
இளம் வயதில் அப்படியாக வேண்டும், இப்படியாகவேண்டும் என்று துடிக்கிறவர்கள் பிற்காலத்தில் போராட்டமான வாழ்க்கையை
வாழ்வதைப்பார்க்கிறோம். அவர்கள் துடிப்பு, ஆசை, லட்சியங்கள் என்ன
ஆனது? ஏன் அவர்களால் வெற்றிபெறுவது இயலாமல் போனது-.
லட்சியம், ஆசை, துடிப்பு இருந்தால் மட்டும் போதாது, செயல்பட வேண்டும். விதைக்கிற காலத்தில் சோம்பேறியாகப் படுத்திருப்பவன் அறுவடைக் காலத்தில் அரிவாளைக் கொண்டு போனால் என்ன கிடைக்கும்?
செயல்படுகிற எல்லோரும் வெற்றி பெற்று விடுகிறார்களா?
ஏன் அப்படியாகிறது?
அதற்கு இறைவனின் கருணை வேண்டும். அவன் நினைத்தால்
ஒருவன் பணக்காரனாகிறான். பணக்காரன் ஏழையாகிறான்.
என்னைப் பற்றி அவன் ஏன் நினைக்கவே இல்லை?
என யோசிக்கலாமே-
கடவுள் கொடுக்க நினைக்கிறார், கர்மா தடுத்து விடுகிறது. கர்ம
வினையைக் கரைக்க கடவுள் காட்டும்
வழிகளில் முக்கியமானவை இரண்டு: நாம ஜெபம்,
அன்னதானம். இந்த
இரண்டையும் செய், பலன் தானாகக் கிடைக்கும்.
கூன் விழுந்து தடியை ஊன்றிய படி வயதான ஒரு கிழவி
நடந்ததைப் பார்த்த இளம் பெண் கேட்டாள்: “ஏ, பாட்டி! ஏதாவது விழுந்துவிட்டதா? அல்லது எதையாவது தொலைத்துவிட்டாயா?” என்று.
பாட்டி சொன்னாள்: “வைரத்தைவிட விலை மதிப்பு மிக்க எனது இளமையைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று.
இளமையின் முக்கியத்துவத்தை இளைஞரை விட முதியவர்கள்தான்
நன்கறிவார்கள். ஆகவே அவர்கள்
இளைஞர்களுக்கு அறிவுரை கூற முற்படுகிறார்கள்.
அதை ஏற்றுக் கொண்டு நடப்பதுதான்
அறிவுடைமை.
குழந்தாய், எதையும் வாங்க
முடியாத பிச்சைக்காரன் ஆடம்பரமின்றி வாழ்வதிலும், ஊனமுற்ற ஒருவன் பணிவோடு
நடப்பதிலும், கிழவி கற்புள்ள கன்னியாக இருப்பதாலும் என்ன பயன்?
பணமிருந்தும் ஆடம்பரமின்றி வாழவேண்டும். கைகால்கள் திடகாத்திரமாக இருந்தும் பணிவுடன் வாழவேண்டும். இளமையிலும் கற்புத் திறனை காக்கவேண்டும். அதில்தானே உயர்வு உண்டு.
இதுவரை உனது பெற்றோர் உனக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
நீ உன் வாழ்வை தேடிக்கொள்ள இன்னும்
கொஞ்ச காலம்தான் உள்ளது. ஆகவே,
அதுவரை அவர்களுக்காகவாழ
இந்த நேரத்தைச் செலவிடு. அவர்கள் மனம்
மகிழ்ச்சியடையும் மார்க்கத்தைத் தேடு. அவர்களுடன் நிறைய
நேரத்தைச் செலவிட ஓய்வான இந்த
நேரத்தைப் பயன்படுத்து.
வேலை, வாழ்க்கை,
வழி போன்ற எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது. திறமை இருந்தும் பாழாய் போகிறதே என பயப்படாதே! சரியான நேரத்தில் சரியான விதத்தில் இதைசாயி
பயன்படுத்தும் வாய்ப்பைத் தருவார். எல்லாம் கடவுள்
செயல் என அமைதியாய்இரு.. மன இறுக்கத்தை
மனதில் இருந்து விரட்டு. இப்போதுள்ள
சூழ்நிலையை அனுபவி. மற்றவை சரியாகும்.
No comments:
Post a Comment