Monday, April 30, 2018
Sunday, April 29, 2018
நாம் பாபாவை நம்ப வேண்டும்
நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.
Saturday, April 28, 2018
என் நாமத்தை மறவாதே!
பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும் இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்............................ சாயியின் குரல்
Friday, April 27, 2018
பொறுமை இழக்காதே!
ஆலமரத்தின் மீது அமர்ந்து அதன் பழத்தை சாப்பிடும் பறவைகள், அந்த மரத்தின் மீதுதான் எச்சமிடும். என் மீது எச்சமாகிவிட்டதே என்று மரம் பறவைகளை விரட்டுவது கிடையாது. அப்படியே, துரோகிகள் நம்மிடம் இருந்து கொண்டே துரோகம் செய்யும் போதும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணி முடிந்ததும் சென்று விடுவார்கள். ஒன்று நீங்கள் அனைத்தையும் இழக்கவேண்டும். அல்லது அவர்கள் திருப்தி அடைய வேண்டும். உங்களுக்கு கேடு நினைப்பவர்கள் உங்கள் கர்மாக்களைக் குறைப்பவர்கள். அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்.
ஸ்ரீ சாயி தரிசனம்
Thursday, April 26, 2018
நாம் பாபாவை நம்ப வேண்டும்
நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.
Wednesday, April 25, 2018
!!வெளியே வா..!!
மகனே மகளே,
உன்னை தேடி நான் வர போகிறேன் நீ விரும்பும் தோற்றத்தில் இது காலத்தின் கட்டாயம். என்னை பார்த்த உடனே ஆனந்தத்தில் அழுவாய் உனது கண்ணிரை நான் சிந்தவிடமாட்டேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்..
ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய். இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்?
!!வெளியே வா..!!
அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை. நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார். உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.
உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அது போல் எவனது நாவில் சாய்ராம் என்ற உச்சரிப்பு உயிருடன் கலந்து எவனது நாவில் வருகிறதோ அப்போதே அவன் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில் நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும் பரிட்ச்சைதான் நீ படும் வேதனை.
உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால் உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில் அது உன்னை தேடி வரும். யாருக்கும் இல்லை என்று சொல்லாதே. யாரையும் வெறுத்து ஒதுக்காதே. உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன் நான் உன்னை பாதுகாப்பேன்..
ஓம் சாய் ராம்..
Tuesday, April 24, 2018
வேண்டிய வடிவில் வருவார்....
குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.
சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.
சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.
Sunday, April 22, 2018
கூட்டுப்பிரார்த்தனை விபரம்
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில், மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளிலும், கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வியாழக்கிழமைகளிலும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மதியம் அன்னதானம் நடைபெறுவதால், பக்தர்கள் மதிய உணவினை கோயிலில் சாப்பிடலாம். கண்டிகை வரை திரும்பிச்செல்ல டாக்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகளைப் பற்றி விவரமாக தெரிந்து வருவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
கீரப்பாக்கம் பாபா ஆலயம் வருவதற்கான வழிகள்:
தாம்பரத்திலிருந்து கீரப்பாக்கம் வர பேருந்து எண் 55D உள்ளது. காலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு பேருந்து உள்ளது. பயண தூரம் 17.4 கி.மீ.
வண்டலூர் – கேளம்பாக்கம் வழித்தடத்தில் உள்ள கண்டிகைக்கு, தாம்பரத்தில் இருந்து பல பேருந்துகள் உள்ளன. கண்டிகையில் இருந்து கீரப்பாக்கத்திற்க்கு ஆட்டோ மூலம் வரலாம்.
வாகனங்களில் வருவோர் கண்டிகையில் இருந்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் வழியாக வந்து வலது பக்கம் பார்த்தால் மலையில் பாபா கோயில் தெரியும்.
கூடுவாஞ்சேரியிலிருந்தும் கீரப்பாக்கத்திற்க்கு பேருந்து வசதி உள்ளது. பேருந்து இல்லாதபோது ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அந்த வழியாக கீரப்பாக்கம் வரலாம்.
முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் மாலையில் சென்னை வடபழனி பார்வதி பவன் வளாகத்திலுள்ள குபேர சாயி பாபா ஆலயத்தில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.
Saturday, April 21, 2018
கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட, அவர் பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள், அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.
சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.
சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.
Friday, April 20, 2018
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...