Wednesday, April 25, 2018

!!வெளியே வா..!!

மகனே மகளே, 
உன்னை தேடி நான் வர  போகிறேன் நீ விரும்பும் தோற்றத்தில் இது காலத்தின் கட்டாயம்.  என்னை பார்த்த உடனே ஆனந்தத்தில் அழுவாய் உனது கண்ணிரை நான் சிந்தவிடமாட்டேன்.  என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்..

ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு  வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? 

 !!வெளியே வா..!! 

அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை.  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்.  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.

உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அது போல் எவனது நாவில் சாய்ராம் என்ற உச்சரிப்பு  உயிருடன் கலந்து  எவனது நாவில் வருகிறதோ அப்போதே அவன் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்  நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும்  பரிட்ச்சைதான் நீ படும் வேதனை.

உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு  அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும். யாருக்கும் இல்லை என்று சொல்லாதே.  யாரையும் வெறுத்து ஒதுக்காதே. உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன் நான் உன்னை  பாதுகாப்பேன்..


ஓம் சாய் ராம்..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...