ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க,
போட்டிகளில் வெற்றி
பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர்
வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது.
ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர்
மற்றும் துறவிகளின் உருவச்சிலை முன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு
நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனையே ஆரத்தி எனப்படும்.
பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்க விட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ்
ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும்
மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள்
ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment