குரு சேவை மிகக்
கடினமானது. ஆகையால் முன்னமே நன்றாக
யோசித்து குருசேவைக்கு முற்பட வேண்டும். கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம்,
அவதூறுகள் முதலியன
வரலாம். ஆனால், மனதை திடப்படுத்திக் கொண்டு,
ஒரே நோக்குடன்
குருசேவை செய்யவேண்டும்.
குரு பக்தியினால் எல்லாமும்
பெற முடியும். சிவனே குருவென்ற திடமான
பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும். ஜபங்கள்,
அனுஷ்டானங்கள் நீண்ட
நாள் செய்தால்தான் பயன் பெற முடியும். ஆனால்
குருபக்தியின் பயன் உடனே கிடைக்கும்.
தவங்கள், அனுஷ்டானங்கள், யக்ஞங்கள், தானங்கள் ஒரு வேளை பயனில்லாமல் போகலாம். ஆனால் குருபக்தி
கண்டிப்பாக பயன் கொடுக்கும்.
அதுவுமில்லாமல் குருவிடம் பக்தி உள்ளவனுக்கு யக்ஞங்கள் தானங்கள் செய்த
பயனும் வரும்.
குருபக்தி சுலபமானது, கடினமில்லாதது. ஆனால் மனதை
திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும்.
ஸ்ரீகுருவிற்க்கு எவன் ஒருவன் குருபக்தியுடன் சேவை செய்வானோ அவன் வீட்டில் ஸ்ரீகுரு கல்ப விருட்சமாய் வேண்டியதை
எல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
குருவை சேவிப்பவனுக்கு நரகமே இல்லாதபோது கஷ்டங்கள் எப்படி வரும். குரு சேவையினால் நான்கு வித புருஷார்த்தங்கள்
கிடைக்கும். குரு சேவை செய்யும் கரங்கள்,
குருவை நாடி வரும்
பாதங்கள், குருவை வணங்கும் சிரம் எவ்வளவோ
புண்ணியம் செய்தவை.-
No comments:
Post a Comment